Jun 23, 2010

விசம் கக்கும் ஜெயா டிவி

நிஜாம் கான் @ 9:04 AM
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு உலகத்தமிழர்கள் ஆவலோடு எதிர்நோக்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் இன்றுமுதல் கோலாகலமாகத் துவங்குகிறது. அதிகபட்சமாக 50 நாடுகளில் இருந்து தமிழ்அறிஞர்கள், கவிஞர்கள், சொற்பொழிவாளர்கள், தமிழார்வலர்கள் என லட்சக்கணக்கான தமிழர்கள் கூடும் இடமாக இன்றைய செம்மொழி மாநாட்டுத் திடல் அமைந்துள்ளது. கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ள இந்த தமிழ் மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் பலவிதமான கசப்புகளை மறந்து தமிழை மட்டுமே கருதி இன்றைக்கு குவிந்துள்ளனர். இந்த செம்மொழி மாநாட்டினை தமிழக அரசு தான் நடத்துகிறதே தவிர வேறு யாரும் தனியார் அமைப்பினர் நடத்தவில்லை. அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவருமே தாங்கள் முதலமைச்சர்களாக இருந்த போதும் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார்கள் தான். அதை அன்றைக்கு இருந்த எதிர்கட்சித் தலைவர்கள் யாரும் எதிர்க்கவில்லை, விமர்சனம் செய்யவில்லை. அது தான் அன்றைய எதிர்கட்சித் தலைவர்களின் நாகரீகமாக இருந்தது.



ஆனால் இன்றைக்கு நிலமை தலைகீழ். தமிழகத்தில் இருக்கும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் செம்மொழி மாநாடு குறித்த தகவல்கள், அழைப்புகள் வந்து கொண்டிருக்க, வழக்கம் போல ஜெயா குழுமம் புழுதி வாரி தூற்றும் வேலைகளில் இறங்கியது. கடந்த சில நாட்களாக ஜெயா டிவி, ஜெயா பிளஸ் தொலைக்காட்சிகளில் முழுக்க முழுக்க செம்மொழி மாநாட்டை இழிவுபடுத்தியே செய்திகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. குழாயடி சண்டையில் அதிமுக வார்டு உறுப்பினரின் தண்ணீர் குடத்தை திமுகவைச் சேர்ந்த அந்தப் பகுதி செயலாளர் உடைத்துவிட்டாலே அதை பிளாஸ் நீயூஸ் போட்டு கொண்டாடும் ஜெயா குழும தொலைக்காட்சிக்கு, இப்போதைக்கு கிடைத்துள்ள 24 மணி நேர சந்தோசம் இந்த செம்மொழி மாநாட்டைப் பற்றி இழிவான செய்திகளை பரப்பி அதிலே அற்ப சந்தோசம் அடைவதாகும்.  தமிழுக்காக எடுக்கப்படும் ஒரு விழாவை இவ்வளவு கேவலப்படுத்தி செய்திகளை வெளியிட்டு மகிழ்ச்சியடையும் இவர்களை என்னவென்று சொல்வது? இவர்களின் வாறித்தூற்றும் இதுபோன்ற செயலைக்கண்டு தான் இந்த மாநாட்டில் திமுக கொடிகளையோ, திமுக தலைவர்களின் பதாகைகளையோ வைக்கக்கூடாது என கலைஞர் கட்டளையிட்டார்.


ஆனாலும் வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்த கதையாக‌ கடந்த 10 நாட்களாக ஜெயாடிவியின் செம்மொழி எதிர்ப்பு கோசம் அதிக அளவில் இருந்ததைக் கண்டவர்கள் முகம் சுழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்கட்சித் தலைவர்களை விமர்சிப்பதற்கு இருக்கும் அளவையும் நாகரீகத்தையும் மீறி ஜெயா குழுமம் நடந்து கொண்டது. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மண் அள்ளி வீசி சாபம் தரும் ஜெயாடிவியில் வந்த ஜெயா செய்திகள், இப்போது 24 மணி நேரமும் வசைபாடும் ஜெயா பிளஸ் மூலம் தங்களின் ஆதங்கத்தினைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.  பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் இறுதியில் மண்ணை அள்ளிவீசி சாபம் கொடுப்பார்கள், அதேபோலத்தான் எப்போது ஜெயா செய்திகளைப் பார்த்தாலும் அந்த காட்சி நினைவுக்கு வந்து சிரிப்பு வந்து விடுகிறது.  இத்தனை நாளாக அவர்கள் செம்மொழி மாநாட்டினை இழிவுபடுத்தி பலவிதமான செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். தன்னல தம்பட்ட மாநாடு என்றும், கருணாநிதி குடும்ப மாநாடு எனவும் ஏகப்பட்ட இழிபழி சொற்களைக் கூறி மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் இது ஜெயா டிவியின் வழக்கமான பணி என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால்..,




நேற்று முன்தினம் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ரபிபெர்னாட்டின் கேள்விக்கணை நிகழ்ச்சி இழிவுபடுத்துதலின் உச்சமாக அமைந்திருந்தது. அதிலே கலந்து கொண்டு தமிழ் மொழியாற்றிய கோவை அதிமுக பிரமுகர் செல்வம் தேவையற்ற விசயங்களை பேசி வெறுப்பேற்றினார். ஒரு கட்டத்தில் பேசிய செல்வம் இது செம்மொழி மாநாடல்ல கனிமொழி மாநாடு என பேசி தன்னை ஒரு அதிமுகவின் எஜமான விசுவாசி என்பதைக் காட்டிக்கொண்டார்.  இப்படியே பேச்சு தொடர்ந்து கொண்டிருக்க ரபிபெர்னாட்டும் வழக்கம் போல தனது ஜால்ரா தட்டும் பணியை செவ்வனே செய்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ரபிபெர்னாட் கூறிய ஒரு விசயம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.அதை பதிவின் இறுதியிலே சொல்கிறேன்.

இப்போது நாம் இங்கே சிந்திக்க வேண்டியது,

* தமிழ்மொழி செம்மொழியாக கலைஞரின் ஆட்சிக்காலத்தில் தான் அறிவிக்கப்பட்டது. எனவே அந்த செம்மொழிக்கு கலைஞர் விழா எடுப்பதில் என்ன தவறு? அவரின் தனிப்பட்ட விழா அல்ல இது. தமிழக அரசின் விழா.

* 1995 ல் தஞ்சையில் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா உலகத்தமிழ் மாநாடு நடத்திய போது அங்கு நடந்தவைகள் குறித்தோ, அதை நடத்தியவர்கள் குறித்தோ எந்தவிதமான விமர்சனமும் செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு அம்மையாருக்கு எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் முறையான அழைப்பு விடுத்தும் அதைப் பற்றி பேசாமல் இருக்காமல் தேவையற்ற அவதூறுகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார். ஊடகப் போர்வாளாக ஜெயா டிவி செயல்படுவதைப் போல பத்திரிகை கொ.ப.செ.வாக மக்கள் குரலும் மண்வாரித் தூற்றுகிறது.

* ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவரே இந்த மாநாட்டினை இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சிப்பதைக் கானும் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் தமிழகத்தின் அரசியல் குறித்து என்ன நினைப்பார்கள்?

* உலகத் தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்தான் என்று ஜெயலலிதா தற்போது குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் 8 வது உலகத் தமிழ் மாநாடுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட தன்னிச்சையான அறிவிப்பு தான். அதுமட்டும் சரியாம் இது தவறாம். இதை எங்கு போய் சொல்வது???

இனி ரபிபெர்னாட் சொன்ன ஏற்றுக் கொள்ளக்கூடிய விசயம்:

அதே நிகழ்ச்சியில் ரபிபெர்னாட் ஒரு சுற்ற‌றிக்கையை வாசித்தார். அது தமிழக டாஸ்மாக் நிறுவனம் கோவையைச் சுற்றியுள்ள டாஸ்மாக கடைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை. அதன் விபரம் பின்வருமாறு...

* தங்களுக்கு தேவையான சரக்குகளை 20ஆம் தேதிக்குள்ளே வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்
* வியாபார பணத்தை, வசூலுக்கு வரும் டாஸ்மாக் சிறப்பு பார்வையாளரிடம் உடனுக்குடன் ஒப்படைத்து விட வேண்டும்.
* குவியும் காலி அட்டைப்பெட்டிகளை தேங்கவிடாமல் உடனுக்குடன் அதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்
* வாடிக்கையாளர்களிடம் இல்லையென்று சொல்லாமலும் ,இருப்பு குறையாமலும் சரக்கு இருப்புகளை கையாள வேண்டும்

என ஒரு சிறப்பு மிகுந்த அறிக்கையை வெளியிட்ட டாஸ்மாக் நிர்வாகம் செய்த செயல், சாதாரணமாக வாய்புளிக்கும் ஜெயா டிவிக்கு மாங்காய் வாங்கி கொடுத்த கதையாக ஆக்கிவிட்டது.   
already seen this

5 Response to "விசம் கக்கும் ஜெயா டிவி"

  1. Robin said...

    ஜெயா செய்திகளையெல்லாம் வெறும் காமெடியாகத்தான் பார்க்கவேண்டும்.

  2. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    தனி நபரை அல்லது கட்சியை
    ஏசுவதும் பேசுவதும்கூட
    அது அவர்களுக்கு வாய் வந்த
    கலை என்று விட்டுவிடலாம்.
    தமிழ் மொழியையுமா?
    ஜெயா (ட்டீவீ) தன்னை
    மாற்றிக் கொள்ளட்டும்.

  3. ELANGO T said...

    நல்ல பதிவு.நடுவுநிலையான கருத்துக்கள்.கருணாநிதி எதிர்ப்பு அரசியல் பண்ணுவோர்கள் இப்போது பிடித்து கொண்டு தொங்கும் விஷயம் ஈழத்தமிழர் பிரச்சினை.இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் மட்டும் இதனை தீர்த்து இருப்பர்களா?

  4. AkashSankar said...

    ஜெயா டிவி = சன் டிவி எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை...கருணாநிதி = ஜெயலலிதா

  5. Azhagan said...

    I heard that in TASMAC the goods are all from MIDAS, is it true?. In that case, Jaya should be more than happy isn't it?

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,