அதேபோல மாதச்சம்பளம் 850 சவூதிரியால்கள் (கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்) எனவும் உணவு, தங்குமிடம் இலவசம் என்றெல்லாம் கூறி இவர்களை பணிக்குச் சேர்த்து இருக்கிறார்கள் அந்த தரகு நிறுவனத்தினர். இவர்களோடு சென்றவர்களுக்கு சரியான படிப்பறிவு இல்லாத காரணத்தால் அவர்களை அங்கே தெரு கூட்டும் வேலையில் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டார்கள். வளைகுடா நாடுகளைப் பொருத்தவரை தெருக்கூட்டும் வேலை என்பது சாதாரணமானது அல்ல. நமது ஊரில் நகரசுத்தி தொழிலாளிகள் குப்பைகளோடு போராடினாலும் மற்ற விசயங்களில் அவர்களுக்கு தொந்தரவு இல்லை. ஆனால் சவூதியைப் பொருத்தவரை அங்கே சாதாரணமாக காலை 8 மணிக்கே 100 டிகிரி வெயில் தலைதூக்கிவிடும். செருப்பு போடாமல் தெருக்களில் நடக்க இயலாது. அடிக்கும் வெயிலில் 10 நிமிடம் தொடர்ந்து நின்றால் கூட தலைவெடிப்பது போலாகிவிடும்.
அந்த அளவிற்கு மிக மோசமான பருவ நிலையைக் கொண்டவை தான் வளைகுடா நாடுகள். இந்த நிலையில் அவர்களைத் தெருக்கூட்டும் பணியில் அமர்த்தியதும் இவர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை. மருத்துவமனை பணி என அழைத்து வந்து விட்டு இப்படி தெருக்கூட்ட சொல்கிறீர்களே என கேட்ட பொழுது அவர்களுக்கு மிஞ்சியது அடியும் உதையும் தான். அவர்களின் கடவுச்சீட்டு மற்றும் இக்காமா என்னும் அடையாள அட்டையை அவர்கள் பறித்து வைத்துக் கொண்டு தான் அவர்களை வேலைக்கு அனுப்புவார்களாம். அவர்கள் தூய்மைத் தொழிலாளர்கள் என்பதால் அவர்களை காவல்துறையினரும் விசாரிக்க மாட்டார்கள். தங்குவதற்கு ஒரே ஒரு அறையும், ஒரு அடுப்பும் மற்றும் சில பாத்திரங்களையும் கொடுத்து விட்டு அவர்களை சமைத்து சாப்பிடச்சொல்லி இருக்கிறார்கள். அவர்களும் தங்கள் கையில் இருந்த மீதிப்பணத்தை ஒன்றுதிரட்டி மளிகைப் பொருட்கள் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்.
இப்படியே ஒரு மாத காலம் வேலை செய்துவிட்டு அறிவித்த சம்பளம் 850ம் உணவுக்கு 300 ரியாலாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் இவர்கள் காத்திருக்க, இவர்கள் அறைக்கு வந்த அவர்களின் கம்பெனியைச் சார்ந்த சிலர் இவர்களிடம் வலுக்கட்டாயமாக சில தாள்களில் கையெழுத்து வாங்கி விட்டு வெறும் 200 ரியால்களைக் கொடுத்து விட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் கவலையடைந்த இவர்கள் செய்வதறியாது அந்த வேலையையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார்கள். அந்த நாட்டு பருவநிலை அவர்களைப் பாடாய்படுத்த சில நாட்களில் உடல்நிலை மோசமாகி படுத்துவிடுவார்களாம். வழக்கமாக சோதனைக்கு வரும் இவர்களின் நிறுவனத்தினர்,அவர்கள் அறையில் படுத்திருந்தால் அவர்களை அடிப்பார்களாம்.
சமபளத்தைக் கேட்டால் நீ ஊருக்கு போகும் போது தருவோம் என சொல்வார்களாம்.இவர்களை சவூதியின் ஒரு கிராமத்திற்குள் வைத்து வேலை வாங்கியதால் இவர்களுக்கு வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழைத் தவிர வேறு எதையுமே அறிந்திராத இவர்களால் எதுவுமே செய்ய இயலாமல் போயிற்று. மாதம் வெறும் 200 ரியால் சம்பளத்தில் எப்படியோ இரண்டு வருடங்களைத் தள்ளிவிட்டார்கள் அந்த ஊழியர்கள்.
இப்படி தன் குடும்பத்திற்கு பைசா அனுப்பாமல் செய்யும் இந்த வேலையே தேவையில்லை என முடிவு செய்த அவர்கள் தங்கள் உயிர்போனாலும் சரி என்ற நோக்கில் போராட முடிவு செய்து அடுத்த நாள் முதல் வேலையை புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். எத்தனையோ துன்பங்கள் எவ்வளவோ அடி உதைகளைத் தாங்கிக் கொண்டு கடைசியாக இவர்களை ஊருக்கு அனுப்ப முடிவு செய்தது அந்தக் கம்பெனி நிர்வாகம். இவர்களுக்கு டிக்கெட் எடுத்து கடவுச்சீட்டை கையில் கொடுத்து விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அங்குவைத்து சம்பளத்தை கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். விமான நிலையம் வந்தவுடன் இவர்களை இமிக்ரேசன் வரை ஒப்படைக்க வேண்டியது கம்பெனியின் பொருப்பு.
எனவே அவர்களை அங்கேயே விட்டுவிட்டு ஓடமுடியவில்லை. எல்லா வேலையும் முடிந்து அவர்களை உள்ளே போகச்சொல்ல, இவர்கள் சம்பளம் கொடுத்தால் தான் போவோம் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ஆளுக்கு 5000 ரியால்களைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். இந்தப் பணமாவது கிடைத்ததே என்ற மகிழ்யோடு விமான நிலையத்திற்குள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அப்போது தான் தெரிந்தது இவர்களுக்கு கொடுத்த டிக்கெட் சென்னைக்கு அல்ல மும்பைக்கு என்று.
சரி நம் நாடு தானே! எப்படியாவது சமாளித்து போய்விடலாம் என கருதி இருவரும் மும்பை சத்ரபதி விமானநிலையத்தில் வந்து அடுத்த நாள் காலை இறங்கிவிட்டார்கள். என்னதான் தாய்நாடு வந்து சேர்ந்தாலும் அவர்களுக்கு மும்பை கூட ஒரு வேறு நாடாகவே தெரிந்திருக்கிறது. ரயிலில் போய் விடலாம் என கருதி டிக்கெட் கேட்டால் அது பள்ளி விடுமுறை நேரமாதலால் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் இல்லை. செய்வதறியாது வெளியே வந்து அறைகுறை ஹிந்தியை வைத்து எந்த முடிவுமில்லாமல் விமான நிலைய வாசலிலியே சுற்றித்திரிந்தார்கள்.
சரி நம் நாடு தானே! எப்படியாவது சமாளித்து போய்விடலாம் என கருதி இருவரும் மும்பை சத்ரபதி விமானநிலையத்தில் வந்து அடுத்த நாள் காலை இறங்கிவிட்டார்கள். என்னதான் தாய்நாடு வந்து சேர்ந்தாலும் அவர்களுக்கு மும்பை கூட ஒரு வேறு நாடாகவே தெரிந்திருக்கிறது. ரயிலில் போய் விடலாம் என கருதி டிக்கெட் கேட்டால் அது பள்ளி விடுமுறை நேரமாதலால் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் இல்லை. செய்வதறியாது வெளியே வந்து அறைகுறை ஹிந்தியை வைத்து எந்த முடிவுமில்லாமல் விமான நிலைய வாசலிலியே சுற்றித்திரிந்தார்கள்.
விளையாடிய விதி:
விமான நிலையத்தில் நிராதரவாய் சுற்றித் திரிந்த இவர்களிடம் ஒரு மளையாளி வந்து விசாரித்திருக்கிறான். தங்கள் டிராவல்ஸ் பஸ் சென்னை செல்வதாக சொல்லி அவர்களை ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்றிருக்கிறான். விமான நிலையம் அருகே மேம்பாலம் ஒன்று வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்திலே இடதுபுறம் ஒரு சிறிய கடையின் வாசலில் அந்த ஆட்டோ நிற்க, இருவரும் இறங்கியிருக்கிறார்கள். ஸ்டார் டிராவல்ஸ் என பெயருள்ள அந்த சிறிய கடையில் இவர்களைப் போல நிறைய பயணிகள் தங்கள் உடமையோடு காத்திருக்க, இவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. உடனே நபர் ஒருவருக்கு 1,400 செலுத்தி டிக்கெட்டை வாங்கிக்கொண்டார்கள். மதியம் 12.30க்கு பஸ் புறப்படும் என இவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது. மதியம் 12 மணிமுதல் அங்கே காத்திருந்த ஒவ்வொரு பயணிகளாக பக்கத்திலே தடுப்பு போடப்பட்ட அறைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் முறை வரவே இவர்களைத் தனித்தனியாக அழைத்திருக்கிறார்கள். உள்ளே சென்றவுடன் இவரை அமரச்சொல்லி இருக்கையைத் தர, எதிரிலே ஒருவனும், இடதுபுறம் ஒருவனும் உக்கார்ந்து இருக்க வாசலை அடைத்துக்கொண்டு ஒருவன் காவல்போல நின்றிருக்கின்றான். முதலில் இவர் டிக்கெட்டை வாங்கி அதில் பாதியைக் கிழித்து அவர்களிடம் உள்ள ஏதோ பேப்பர் சேர்ந்து பின் செய்திருக்கிறார்கள். மீதமுள்ள பாதி டிக்கெட்டுடன் 200 ரூபாயை திருப்பிக் கொடுத்து பெங்களூர் சென்னை எல்லையில் கேட்பார்கள், அதனால் தான் இதை உங்களுக்குத் தருகிறோம் என திருப்பிக் கொடுக்க இவருக்கு மகிழ்ச்சியாகி அவர்கள் மீது இவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அடுத்து அவர்கள் கேட்ட கேள்வி, உங்களிடம் வெளிநாட்டுப் பணம் இருந்தால் அதை பாதுகாத்துக் கொள்ளுங்கள். காரணம் எல்லையில் முழு உடல் பரிசோதனை இருக்கிறது என்று சொல்ல இவருக்கு அதிர்ச்சியாகி விட்டது.
நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டுவந்த பணத்தை ஊருக்கு கொண்டு போய் சேர்க்க முடியுமா என்ற சந்தேகத்தில் அவர்களிடம் வினவ, உடனே அவர்கள் அதற்கு ஒரு யோசனை சொல்லியிருக்கிறார்கள்.அதாவது கார்பன் தாளுக்குள் வைத்து மடித்தால் அது ஸ்கேனில் தெரியாது எனச்சொல்லி அவரிடம் இருந்த பணத்தை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் முன்னால் ஒரு கட்டு கார்பன் தாள் இருந்திருக்கிறது. அதிலே இரண்டு தாள்களை எடுத்து வைத்து அதன் மீது பணத்தை வைத்து மடித்திருக்கிறார்கள். இவர் தன் காசின் மீது குறியாக இருந்து வைத்த கண் வாங்காமல் அதைப் பார்த்திருக்கிறார். இவர் கண்முன்னே மடிக்கப்பட்டு மீண்டும் அதன் மீது ஒரு கார்பன் தாளை வைத்து சுற்றி ரப்பர் பேண்ட் மூலம் கட்டப்பட்டு அவரின் கைகளிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை பத்திராமாக துணிக்குள் வைத்து சுற்றிக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள்.
பணத்தைக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் இவரும் அதை பெட்டிக்குள் வைத்து பூட்டிக் கொள்ள இதே போல இவர் நண்பருக்கும் செய்து இவர்களை ஒரு வேனில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள். எங்கேயோ அழைத்துச் சென்று அங்கு வந்த பெங்களூர் பஸ்ஸில் இவர்களை ஏற்றி அனுப்பிவிட்டார்கள். இவர்கள் பயணச்சீட்டில் கொடுத்த எண் 12. ஆனால் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையோ கடைசிவரிசை. இதிலேயே அவர்களுக்கு சந்தேகம் வந்து அந்த பஸ் எங்கே செல்கிறது என அருகில் இருந்தவரிடம் கேட்க, பெங்களூர் வரை தான் செல்லும் என அவர் சொல்லியிருக்கிறார். ஆக தங்களிடம் இருக்கும் பணத்தை அடிக்க குறிவைத்திருக்கிறார்கள் என கவனமாக இருவரும் பயணம் செய்திருக்கிறார்கள். பெங்களூரில் பஸ் நின்றவுடன் அவசரமாக இறங்கி அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்கள். பின்னர் சிலரிடம் விசாரித்து ஹோசூர் வழியாக சேலம்,திருச்சி என ஊர் வந்து சேர்ந்து விட்டார்கள்.
கடும் அதிர்ச்சி:
ஊருக்கு வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் தங்கள் மனைவி குழந்தைகளைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட, தன் குழந்தைக்கோ, மனைவிக்கோ எந்த பொருளும் வாங்கிவராத துயரத்துடன் பணமாவது மிஞ்சியதே என நினைத்து அவர்கள் கார்பனில் கட்டித்தந்த பொட்டலத்தைப் பிரித்துப்பார்த்தால் ஒரு நிமிடம் இதயமே நின்றுவிடும் அதிர்ச்சி. அந்தப் பொட்டலத்திற்குள் இவர் கண்முன்னால் வைத்துக் கட்டிய பணம் இல்லை. அதற்குள் இருந்தது பணஅளவில் வெட்டப்பட்ட காகிதங்கள். இதைக் கண்டு ஆற்றாமல் அழுது கண்ணீர் வடித்திருக்கிறார் அவர். கடைசிவரை தன்னால் தன் குடும்பத்திற்கு சல்லி காசு கூட தரமுடியவில்லையே என தன் விதியை நொந்து அழுதிருக்கிறார். நீங்கள் உயிரோடு வந்ததே போதும் என அவர்களின் குடும்பத்தார் தேற்ற அவரின் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னை ஏமாற்றிய அந்த மும்பை மளையாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை அப்பாவிகளை ஏமாற்றுகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்? அவர்களுக்கு எதிராக தன்னால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையே எனவும், அதற்கு காரணம் ஒன்று மொழி, அடுத்து பொருளாதாரம் என்றும் கூறி அழுதார்.
அதுமட்டுமின்றி அவர்கள் தங்கள் மேசையின் மீது கட்டுக்கட்டாக கார்பன் தாள்களை வைத்திருத்தில் இருந்து அவர்கள் தினமும் இதுபோல பலரை ஏமாற்றிவருகிறார்கள் என்பதும், இதற்கு அந்தப் பகுதி காவல்துறை முழுஉடந்தை என்பதும் நன்கு புலனாகிறது.இறுதியாக அவர் சொன்ன ஒரே வார்த்தை, தம்பி நீங்கள் தமிழுக்கு நன்கு மரியாதை செய்யுங்கள் அதேநேரம் முதலில் ஹிந்தியை தெளிவாக கற்றுக்கொள்ளுங்கள். காரணம் ஹிந்தி தெரியாவிட்டால் உங்களுக்கு தமிழகம் தாண்டிய மாநிலங்கள் கூட அயல்நாடு தான் என்று. அவர் சுட்டிக்காட்டிய பிறகு எனக்கு காலம்காலமாய் இருந்து வந்த ஹிந்தி எதிர்ப்பு இப்போது கொஞ்சம் குறைய ஆரம்பித்து விட்டது.
already seen this


வேதனையான அனுபவம்.
பாவம் அவர்கள்.
நமக்குத் தெரிந்து இத்தனை,
தெரியாமல் என்னன்ன நடக்குமோ
அடப்பாவிகளா. இவங்க கிட்ட அடிச்சா பிழைக்கணும்.:(
படித்ததும் மனம் கனத்துவிட்டது, நிஜாம்.
பாவம் அந்த பரிதாபத்திற்குரிய தொழிலாளர்கள்.
எமாற்றுக்காரர்களுக்கு நிச்சயம் இறைவன் தரும்
தண்டனை இருக்கிறது.
அடப்பாவிகளா... இப்படியுமா செய்வாங்க....
//ஹிந்தி எதிர்ப்பு இப்போது கொஞ்சம் குறைய ஆரம்பித்து விட்டது.//
எனக்கு எப்பவோ போச்சு.
இப்படியும் நூதன திருட்டு. இப்போ மனிதாபிமானம் போய் பணம்தான் வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது உலகம்
//goma said...
வேதனையான அனுபவம்.
பாவம் அவர்கள்.
நமக்குத் தெரிந்து இத்தனை,
தெரியாமல் என்னன்ன நடக்குமோ//
கருத்துக்களுக்கு நன்றி தோழரே! தொடர்ந்து இணைந்திருங்கள்
// வானம்பாடிகள் said...
அடப்பாவிகளா. இவங்க கிட்ட அடிச்சா பிழைக்கணும்.:(//
ஆமாம் அண்ணே! யாரு கேட்பது?
//NIZAMUDEEN said...
படித்ததும் மனம் கனத்துவிட்டது, நிஜாம்.
பாவம் அந்த பரிதாபத்திற்குரிய தொழிலாளர்கள்.
எமாற்றுக்காரர்களுக்கு நிச்சயம் இறைவன் தரும்
தண்டனை இருக்கிறது..//
நிச்சயமாக!
///Sangkavi said...
அடப்பாவிகளா... இப்படியுமா செய்வாங்க.//
நமக்குத் தெரிந்து இவ்வளவு தான்! தெரியாமல் எவ்வளவோ??
//அபுஅஃப்ஸர் said...
//ஹிந்தி எதிர்ப்பு இப்போது கொஞ்சம் குறைய ஆரம்பித்து விட்டது.//
எனக்கு எப்பவோ போச்சு.
இப்படியும் நூதன திருட்டு. இப்போ மனிதாபிமானம் போய் பணம்தான் வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது உலகம்//
நிச்சயமாக அஃப்ஸர்! இனி அதிகரிக்குமே தவிர குறையாது. ஹிந்தி அவசியம் கற்க வேண்டும்
ஒரு மொழி அதிகம் தெரிந்துகொள்வதில் தவறு ஒன்றுமேயில்லை; ‘திணிக்கிறார்கள்’ என்பதே காரணம் என்றாலும், அது அறிவுத் திணிப்புதானே?
என்றாலும் இந்தத் தொழிலாளர்களின் விஷயத்தில், அவர்கள் பள்ளியே சென்றிருக்க மாட்டார்கள் என்பதால் இது செல்லாது. ஒரு புது இடத்திற்குச் செல்லுமுன், அங்குள்ள மொழியின் சில வார்த்தைகளாவது தெரிந்துகொண்டு செல்லும் பழக்கம் வந்தால் ஒருவேளை நல்லது நடந்திருக்கலாம்!! (இலங்கையில் இப்படியான பணிகளுக்கு வருபவர்களுக்குக் கட்டாயப் பயிற்சி உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்)
என்ன சொன்னாலும், மனசு ஆறாது...
நிஜாம் பதிவு ரொம்ப நல்லா இருக்கு!
ஹிந்தி அவசியம் என்பது என் கருத்து. தமிழ் மீது பற்று இருக்கணும் அதற்காக ஹிந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்று அர்த்தம் அல்ல.
இதுமாதிரி நிறைய நடக்குது.வருபவர்கள்தான் ஜாக்கிரதையா இருந்துக்க வேண்டியிருக்கு.இதுல, நம்மவர்களே ஏமாத்துறதுதான் பெரியகொடுமை.