Jun 12, 2010

தண்டவாளம் தகர்ப்பு- புலிகள் செய்த பயங்கர சதி(யாம்)

நிஜாம் கான் @ 4:00 PM

இன்று அதிகாலையில் சேலத்தில் இருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 2.15 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் தண்டவாளம் சற்று குலுங்கியதாகவும்,பள்ளத்தில் இறங்கி செல்வது போலவும் அந்த ரயில் டிரைவருக்கு தோன்றியதால், அவர் அடுத்து வந்த ரெயில் நிலையத்தில் வண்டியை நிறுத்தி அந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் தண்டவாளத்தில் ஏதோ பழுது ஏற்பட்டிருப்பதாக‌ தெரிவித்தார்.

உடனடியாக இந்த தகவல் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கும், ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிவிக்கப்பட்டது.அப்போது திருச்சியில் இருந்து சென்னைக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. உடனே முந்தைய ரயில் நிலையத்தில் மலைக்கோட்டை ரயில் நிறுத்தப்பட்டு அந்த ரயிலின் ஓட்டுனருக்கு மெதுவாக ஓட்டிச் செல்லுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது….

இதனால் உசாரான‌ மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் ரெயிலை மிக மெதுவாக‌ ஓட்டிச் சென்றார். நள்ளிரவு நேரத்திலும் தண்டவாளத்தை கூர்ந்து பார்த்தப்படி அவர் ரெயிலை செலுத்தினார்.அப்போது சிறிது தூரத்தில் தண்டவாளம் தகர்க்கப்பட்டு இருப்பதை பார்த்து அவசரமாக‌ பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். தண்டவாளம் தகர்க்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 200 அடி தூரத்தில் ரெயில் நின்று விட்டது.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்தனர்.தண்டவாளம் தகர்க்கப்பட்ட சுற்று பகுதி முழுவதையும் போலீசார் ஆய்வு செய்த போது தண்ட வாளத்தின் ஓரங்களில் துண்டு பிரசுரங்கள் கிடந்தன. அதில் ராஜ பக்சே வருகையை கண்டித்து குண்டு வெடிப்பை நடத்தியதாக எழுதி இருந்தனர்.குண்டு வெடிப்பை நடத்தியது மேதகு பிரபாகரனின் தம்பிகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்ப சில கேள்விகள் தங்களுக்கு எழலாம்:

1) முந்தி சென்ற சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது தண்டவாளம் நன்றாக இருந்திருக்கிறது.

2) பின்னால் வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரசுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.

3) இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

4) அதிகாலை நேரத்திலும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் டிரைவருக்கு நன்றாக தண்டவாளம் தெரிந்திருக்கிறது.

5) தமிழனைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இங்கிருக்கும் தமிழர்கள் நம் தமிழர்களையே அதாவது கிட்டத்தட்ட 2000 தமிழ் பயணிகளை கொல்ல முயற்சி செய்வார்களா?

6)" தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் கைவரிசை" என இனிக்க இனிக்க தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு வம்பில் மாட்டிக்கொள்ளாமல் பேசாம படிச்சமா, போனமான்னு இருக்கனும்..

already seen this

5 Response to "தண்டவாளம் தகர்ப்பு- புலிகள் செய்த பயங்கர சதி(யாம்)"

  1. goma said...

    இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு வம்பில் மாட்டிக்கொள்ளாமல் பேசாம படிச்சமா, போனமான்னு இருக்கனும்.

    காலம் காலமா அதானே பண்ணிட்டு இருக்கோம்

  2. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    இதையே சன் நியூசில் ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னால் தான் பார்த்தேன்... இந்த இரண்டு செய்திகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்?

    அதில்..., கடைசி பெட்டியில் வந்த மும்பை எக்ஸ்ப்ரசின் ரெயில்வே கார்ட் பின்னால் மறையும் தண்டவாலத்தையே பார்த்துக்கொண்டு வந்ததாகவும், அந்த ரயில் கடந்த சில வினாடிகளில் தண்டவாளத்தில் பலத்த சபதத்துடன் குண்டு வெடித்ததை பார்த்ததாகவும், உடன் அதை அடுத்த ரயில் நிலைய அதிகாரியிடம் தெரிவித்து சென்றதாகவும், உடன் முந்தைய ரயில் நிலைய அதிகாரிக்கு விஷயம் தெரிவிக்கும் முன்பே மலைகோட்டை எக்ஸ்ப்ரெஸ் சென்றுவிட்டதாகையால், டிரைவருக்கு ரேடியோவில் தகவல் அனுப்பி உடனே நிருத்தச்சொன்னதாகவும் அவர் வண்டியை நிறுத்திவிட்டு வெளியே வந்து டார்ச் அடித்து பார்த்தால் ரயில் என்ஜினுக்கு பத்து அடிக்கு முன்னால் தண்டவாளம் கானாததை கண்டு அதிர்ந்ததாகவும்....

    நானே சன் டிவியில் பார்த்தேன். ரயில் என்ஜின் உடைந்த தண்டவாளத்திலிருந்து பத்து அடிக்கு முன்னாலதான் நின்று கொண்டு இருந்தது.

    இவ்வளவு முரண்பாடுகள் இருக்கும் இந்த விஷயத்தில் வேறு என்ன சொல்ல?

    தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை எதிர்க்க அவனைப்போலவே தமிழர்களை கொள்பவன் ஒரு வடிகட்டின முட்டாளாக கூட இருக்க முடியாது. ஒண்ணுமே புரியல இந்த உலகத்திலே...

  3. அப்துல்மாலிக் said...

    இவ்வளவு விசயங்கள் இருக்கா, அப்போ என்னென்னவோ யூகிக்க முடியுதே

  4. Anonymous said...

    அடப்பாவிகளா, அப்போ இதுவும் உங்க ஆளுங்க கை வரிசை தானா?!

  5. நிஜாம் கான் said...

    கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.. தொடர்ந்து இணைந்திருங்கள்

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,