ஸ்தம்பித்த அண்ணா சாலை:
இன்றைக்கு மதியம் 1.30 மணியளவில் அண்ணாசாலையில் ஜெமினி மேம்பாலத்திற்கும், ஆனந்த் தியேட்டருக்கும் இடையே கூடிய 50க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் திடீரென சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கோசம் போட்டபடி அந்த கொதிக்கும் வெயிலிலும் அமர்ந்து விட்டனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறை அவர்களை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ளவில்லை. மாற்றுத்திறன் படைத்தோர் என்பதற்காக காவல்துறையினர் மிகவும் சாந்தமாக நடந்து கொண்டனர். இந்த நிலையில் ஜெமினியிலிருந்து தேனாம்பேட்டை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அங்கிருந்த காவல்துறையினர் தங்களின் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எவ்விதமான முடிவும் எடுக்க முடியாமல் தினறிக்கொண்டு இருந்தனர். ஆனால் மற்றவர்களிடம் நடந்து கொள்வதைப் போல கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பின்னர் நைசாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபடியே ஒரு பஸ் போகும் அளவிற்கு கூட்டத்தை ஒதுக்கி வாகனங்களை அனுப்பிவைத்தவாறு இருந்தனர். என்னதான் பார்வையற்றோராக இருந்தாலும் அவர்கள் செய்த மறியல் பொதுமக்கள் மத்தியில் கோபத்தையே ஏற்படுத்தியது. லாட்டரி சீட்டுகள் நடைமுறையில் இருந்த போது அதைவிற்று தங்கள் வாழ்க்கையை நடத்திய பார்வையற்றோர், அதற்கு தடைவிதிக்கப்பட்டதிலிருந்து வேறு என்ன வேலை செய்வது என தெரியாமல் தங்கள் பிழைப்பை இழந்து நிற்கிறார்கள் என அரசு உணர்ந்து அவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட முன்வர வேண்டும்.

மீண்டும் வெடித்தது ஏர் இந்தியா டயர்கள்:
இன்றைக்கு காலை மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் ஐசி 113 தரையிறங்கும் போது அதன் இடது பக்கத்தின் 2 டயர்களும் வெடித்தன. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் விமானிக்கு தகவல் தர அவர் லாவகமாக விமானத்தை நிறுத்தினார். டயர்கள் வெடித்ததால் தீப்பொறி கிளம்பியது. உடனே அங்கிருந்த தீயணைப்பு வண்டிகள் விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தன. அவசர வழிகள் திறக்கப்பட்டு உடனடியாக 102 பயணிகளும், 6 விமான சிப்பந்திகள் வேகமாக வெளியேறினார்கள். இது செய்தி
இந்திய அரசு எவ்வாறு நமது அரசு பேரூந்துகளை பராமரிக்கிறதோ அதே போலத் தான் விமானங்களையும் பராமரிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அதாவது எவ்வாறு பேரூந்துகளின் இயக்க நிலைகள் குறித்து கண்டுகொள்வதே இல்லையோ அதே போல விமானங்களும் பராமரிக்கப்படாமல் இருக்கிறது போலிருக்கிறது. உதாரணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பும் ஒரு அரசுப் பேரூந்து நேராக கோயம்பேடு பேரூந்து நிலைத்திற்குள் சென்று அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் மதுரைக்கு கிளம்பிவிடும். இது சாதரண நாட்களில் மட்டுமே! வாரக் கடைசி நாட்களில் உடணடியாக திருப்பி அனுப்பி விடுவார்கள். கிட்டத்தட்ட 12 மணி நேரம் பேரூந்தை இயக்கிய அதே ஓட்டுனர் தான் மீண்டும் பேரூந்தை இயக்குவார். எந்த விதமான பாதுகாப்பும் இன்றி செயல்படுகிறது அரசு போக்குவரத்து கழகங்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயிர் பிழைக்கலாம் என்றே பயணங்கள் துவங்குகின்றன. அதே போலத் தான் இனி விமானப் பயணங்களும் அமைந்து விடுமோ என எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் இந்திய விமானத்துறை இது போன்ற செய்திகள் காரணமாக மொத்தமாக மூடு விழா கண்டுவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.
விழுப்புரம் அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு அருகிலே ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு என துண்டுபிரசுரங்கள் கிடந்தன.உடனடியாக ராஜபக்சேவின் எஜமான விசுவாச பத்திரிகைகள் விதவிதமாக செய்தி போட்டு மகிழ்ந்தன. முதலில் நெல்லை எக்ஸ்பிரஸ் கடந்து சென்ற போது ஜெர்க்கிங் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அடுத்து நெல்லை எக்ஸ்பிரஸ் கார்டு குண்டு வெடிப்பதை கண்ணால் பார்த்து தகவல் கொடுத்ததாக் செய்திகள் வெளியாயின. நெல்லை ரயில் கடந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருந்தால் அதை உடனே சோதிக்காமல் ஏன் மலைக்கோட்டை ரயிலை 10 கிமி வேகத்தில் வரச்சொல்லியிருக்க வேண்டும் என ஏகப்பட்ட கேள்விகள் எழும்பின. இதிலே கூர்ந்து நோக்கும் போது ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழமைப்புகளின் வீரியத்தை குறைக்க ராஜபக்சே விசுவாசிகளின் சதியாக இருக்கலாம் என யூகித்த விழுப்புரம் வழக்கறிஞர்கள் இன்றைக்கு மாவட்ட டிஐஜி மாசன முத்துவிடம் புகார் அளித்தனர். அத்தோடு ராஜபக்சேவின் ஒன்றுவிட்ட பங்காளியும், வன்னி போர்களத்தில் வீரியமாக செயல்பட்டவருமான காங்கிரஸ் சமஉ அசன்அலி மீதும் ஒரு புகாரை கொடுத்துவிட்டார்கள். பார்க்கலாம் என்ன முடிவு வருமென்று...!

//மாற்றுத்திறன் படைத்தோர் என்பதற்காக காவல்துறையினர் மிகவும் சாந்தமாக நடந்து கொண்டனர்//
இவங்ககிட்ட மட்டும் இல்லீங்க அரசியல்வாதிகளாக இருந்தாலும் சாந்தமாகத்தான் சென்றிருப்பார்கள்.. பொதுமக்கள் தண்ணீர் வரைவில்லை என்று சாலை மறியல் செய்யட்டும் தடியடி வரை செல்வார்கள்...
இந்த மறியலால ஏதாவது நடந்திருக்கா. அதிகபட்சம் உயர் அதிகாரிகள் வந்து பேசுவாங்க. இதுக்கு சம்பந்தபட்ட அலுவலகத்தில் பண்ணா போதாதா?
//இந்திய அரசு எவ்வாறு நமது அரசு பேரூந்துகளை பராமரிக்கிறதோ அதே போலத் தான் விமானங்களையும் பராமரிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.//
சரியாகத்தான் சொன்னீங்க நிஜாம். அது ரோட் பஸ்;
இது ஏர் பஸ். அப்ப பராமரிப்பு இரண்டுக்குமே ஒரே
மாதிரிதானுங்களே இருக்கணும்???
This Hasan ali and Rajabakshe pic is real one or computer graphics. Have they met in real, if so its very sad
//Sangkavi said...
//மாற்றுத்திறன் படைத்தோர் என்பதற்காக காவல்துறையினர் மிகவும் சாந்தமாக நடந்து கொண்டனர்//
இவங்ககிட்ட மட்டும் இல்லீங்க அரசியல்வாதிகளாக இருந்தாலும் சாந்தமாகத்தான் சென்றிருப்பார்கள்.. பொதுமக்கள் தண்ணீர் வரைவில்லை என்று சாலை மறியல் செய்யட்டும் தடியடி வரை செல்வார்கள்..///
அவர்களும் பொதுமக்கள் தானே சார்!
//வானம்பாடிகள் said...
இந்த மறியலால ஏதாவது நடந்திருக்கா. அதிகபட்சம் உயர் அதிகாரிகள் வந்து பேசுவாங்க. இதுக்கு சம்பந்தபட்ட அலுவலகத்தில் பண்ணா போதாதா?//
சரியான வழிகாட்டுதலும், பின்புலமும் அவர்களுக்கு இல்லையண்ணே!
//NIZAMUDEEN said...
//இந்திய அரசு எவ்வாறு நமது அரசு பேரூந்துகளை பராமரிக்கிறதோ அதே போலத் தான் விமானங்களையும் பராமரிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.//
சரியாகத்தான் சொன்னீங்க நிஜாம். அது ரோட் பஸ்;
இது ஏர் பஸ். அப்ப பராமரிப்பு இரண்டுக்குமே ஒரே
மாதிரிதானுங்களே இருக்கணும்???//
நல்ல காமெடி நிஜாம் பாய்!
// ராம்ஜி_யாஹூ said...
This Hasan ali and Rajabakshe pic is real one or computer graphics. Have they met in real, if so its very சட்//
திரு ராம்ஜி! இது கிராபிக்ஸ் அல்ல. வன்னி போர் சமயத்தில் 2 முறைக்கும் அதிகமாக சத்தமேயில்லாமல் ராஜபக்சேவுக்கு தூது போனவர் இந்த ஹசன் அலி...,