
இந்த செய்தியை பத்திரிகைகளில் பார்த்தவுடன் கோபம் தான் வருகிறது. காரணம், நித்யா ஒரு பச்சைப் பொருக்கி எனத் தெரிந்தும் கூட அவன் நடத்தும் யாகத்தில் இன்னமும் அந்த ஆசிரம் பிரம்மச்சாரினிகள் கலந்து கொள்கிறார்கள் என நினைக்கும் போது இதை எங்கே சென்று புலம்புவது ?அதுமட்டுமின்றி நித்யா தன் ஆசிரமத்தில் இணையும் ஆண்கள் மற்றும் பெண்களிடம், தான் நினைத்த நேரத்தில் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும் என கையெழுத்து வாங்கிய அந்தப் பத்திரங்களையும் தக்க ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார் லெனின். இவ்வளவு நடந்தும் அந்த ஆசிரமத்தில் ஆண்கள் இருப்பதே தவறு. இன்னமும் நித்யாவை கடவுள் என நினைத்து தன் கற்புக்கு என்னேரமும் ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் அங்கிருக்கும் பெண்களை என்னவென்று சொல்வது? பெண்களுக்கு உயிரை விட கற்பு தான் பெரிது என்று சொல்வார்கள். ஆனால் அந்த கற்பை காத்து பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும் யார் பிரச்சாரம் செய்கிறாராரோ அவரே அதை அழிப்பவராகவும் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவலாக இருக்கும் போது அந்தப் பெண்களின் நிலை என்னவாகும்? பாவம் அந்த பெண்கள் அவர்களுக்கு செய்யப்பட்ட மூளைச் சலவை இவ்வளவு ஆதாரங்கள் வெளியான போதும், தான் கடவுளாக மதித்த தன் ஆசான் உள்ளாடையோடு சல்லாபிப்பதை பார்த்த பின்பும் அவனை இன்னமும் கடவுளாக நினைக்கும் அந்த அப்பாவிகளைக் காப்பது யார் தான் என்பது தெரியவில்லை.

எந்த பிரச்சனையும் இல்லாமல் வியாபாரம் சூடுபிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இதுபோன்ற ஆப்பு வீடியோ வெளியாகும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் நித்யா. இனிமேல் பழையபடி வியாபாரத்தை துவக்க முடியுமா என்பதும், பழையபடி மக்கள் குவிவார்களா என்பதும் இன்னமும் நித்யாவுக்கு சந்தேகம் தான். இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது வெளி நாடுகளுக்கு சென்று குஜால் செய்து வந்த சுவாமிஜியுடைய கடவுச்சீட்டை நீதிமன்றம் முடக்கி வைத்திருப்பதில் அவருக்கு ரொம்பவும் சிரமம் தான். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களின் மன இருக்கத்தைப் போக்குகிறேன் எனச்சொல்லி அவர்களைக் கட்டியணைத்து அவர்களின் கன்னத்தோடு கன்னம் உரசி அவர்களைத் தடவி கட்டிப்புடி வைத்தியம் செய்ததை எத்தனை கணவன்மார்கள் அருகிலே நின்று பக்தி பொங்க வேடிக்கை பார்த்தார்கள்? அவர்கள் இனிமேலும் தன் மனைவியை அழைத்து நித்யாவிடன் தங்க வைப்பார்களா? பிரம்மச்சாரினிகள் முழுமையடைந்து விட்டார்களா என சோதிப்பதற்காக அவர்களைத் தழுவி,தடவி அவர்களுக்கு காம சிகிச்சை கொடுத்து அவர்கள் சிலிர்த்து எழும் நேரத்தில், அவர்கள் இன்னமும் முழுமையடையவில்லை என மீண்டும் பயிற்சிக்கு அனுப்பும் இந்தக் கொடுமையை அறிந்துமா இன்னமும் பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை அங்கே தங்கவைத்திருக்கிறாளே! அவர்களுக்கு அறிவு எப்போது தெளிந்து அவர்கள் தங்களின் பிள்ளைகளை மீட்கப் போகிறார்கள்?

இது போன்ற காமக்காவிகள்கிகள் இன்னமும் தங்களை கடவுளாக அறிவித்துக் கொண்டு தங்களின் வழக்கமான பணிகளை தொடர்ந்து கொண்டிப்பார்கள் நம் மக்களும் அவனின் காலைத் தொட 5 ஆயிரத்தையும், ஆசி வாங்க 25 ஆயிரத்தையும் கொண்டு போய் கொட்டிக் கொண்டிப்பார்கள். 5000 கோடி ரூபாய் சொத்துக்கள் 50 ஆயிரம் கோடியாக உயர்த்தி விடுவார்கள் நம் மக்கள். உலகத்தில் எவ்வளவோ உயிரினங்கள் இருந்தும் மனித இனத்துக்கு மட்டுமே சிந்திக்கும் திறனும், அறிவும் ஆற்றலும் இருக்கிறது. மற்ற விசயங்களில் தங்கள் அறிவை சரியாக பயன்படுத்தும் நம் மக்கள் இதுபோன்ற சாமியார் விசயத்தில் தங்களின் அறிவை பயன்படுத்துவதேயில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
சீதையின் கற்பைச் சோதிக்க தீயிலே இறங்க ராமன் சொன்னதாக இராமாயண காவியத்தில் வரும் செய்தி சொல்கிறது. அதையே பின்பற்றி தான் நித்யானந்தா நெருப்பு வளையம் அமைத்து யாகம் செய்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் 3 அடி சுற்றளவில் வளையம் அமைத்து குழந்தை கூட யாகம் செய்யுமே! நித்யா, தான் களங்கமற்றவர் என நிறுபிக்க எண்ணினால் ஒரு பெரிய குழியை வெட்டி அதல் முழுவதும் விறகை அடுக்கி அதிலே தீயை வைத்து கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அமர்ந்து இந்த யாகத்தை செய்து, தான் குற்றமற்றவர் என நிறுபித்தால் அது அவரின் சக்தியை இந்த மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு நல்ல சந்தர்பமாக அமையும்.
கோவில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோவில்கள் கயவர்களின் கூடாராமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத் தான் என்ற பராசக்தியின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.


இந்த மனுஷனுக்கு காதல் மன்னன்னு பட்டம் வேற இவன என்ன பண்ணலாம் பாஸ்...........
இப்புடி வித்தை காட்டியே கவுத்துப்புடறானுவ. எவ்வளவு பட்டாலும் நம்மளுக்கு உறைக்கறதில்லை:(
உங்களுடைய விரச வரிகளால் எழுதப்பட்ட இந்த பதிவு படிக்க நன்றாக இருந்தது.மித மிஞ்சிய பக்தி ‘மீள முடியாத போதை‘...நித்யாவின் கொக்கோக காட்சிகள் உலகமே(நீங்களும் நானும்)தான் பார்த்து ரசித்தோம்.பிறகு மேலும் சட்டம்,தீர்ப்பு,தண்டனை அரசின் செயல்பாடுகள். அசிங்கத்தை கிளறி இங்கே பார் அசிங்கம் என்று ஊரை அழைத்து சுட்டிக்காட்டுவதில் என்ன சந்தோஷம் நன்பரே?தற்காலம்
மீடியாக்கள் கேமராவை துடைத்து வைத்துக்கொண்டு எவன்டா மாட்டுவான் என்று அழைகிறது..புத்தி உள்ளவன் திருந்தட்டும்.don't mistake me just like that put my view thats it?
// Jeyamaran said...
இந்த மனுஷனுக்கு காதல் மன்னன்னு பட்டம் வேற இவன என்ன பண்ணலாம் பாஸ்...........//
ஒன்னுமே செய்ய வேண்டாம் நண்பரே! சாதாரணமாக் புறக்கணிச்சாலே போதும்
//வானம்பாடிகள் said...
இப்புடி வித்தை காட்டியே கவுத்துப்புடறானுவ. எவ்வளவு பட்டாலும் நம்மளுக்கு உறைக்கறதில்லை:(//
ஆமாண்ணே! இன்னொருத்தன் புதுசா வந்து சொன்னாலும் நம் மக்கள் அவனையும் கடவுளாக்கி விடுவார்கள்.
// Arise said...
உங்களுடைய விரச வரிகளால் எழுதப்பட்ட இந்த பதிவு படிக்க நன்றாக இருந்தது.மித மிஞ்சிய பக்தி ‘மீள முடியாத போதை‘...நித்யாவின் கொக்கோக காட்சிகள் உலகமே(நீங்களும் நானும்)தான் பார்த்து ரசித்தோம்.பிறகு மேலும் சட்டம்,தீர்ப்பு,தண்டனை அரசின் செயல்பாடுகள். அசிங்கத்தை கிளறி இங்கே பார் அசிங்கம் என்று ஊரை அழைத்து சுட்டிக்காட்டுவதில் என்ன சந்தோஷம் நன்பரே?தற்காலம்
மீடியாக்கள் கேமராவை துடைத்து வைத்துக்கொண்டு எவன்டா மாட்டுவான் என்று அழைகிறது..புத்தி உள்ளவன் திருந்தட்டும்.don't mistake me just like that put my view thats இட்?//
நண்பர் அரைஸ்! ஒரு சின்ன திருத்தம் இது விரச வரிகள் அல்ல! ஒரு ஏமாற்றுக்காரன் மீதுள்ள கோப வரிகள். நித்யாவின் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பட்ட போது உங்களுக்கு ரசிப்புத்தன்மையா வந்தது? கோபம் வரவில்லை! சினிமாவில் ஒரு கற்பழிப்பு காட்சியைக் கானும் போது அதை ரசிப்பீர்களா அல்லது அந்த செயலை செய்பவன் மீது கோபப்படுவீர்களா?
நம்ம மக்களுக்கு எதையும்(?) மறக்கும்/மறைக்கும் சக்தி அதிகம் பாஸ்.. எப்படி கத்தினாலும் வீம்புக்காகவாது செய்யும் ஜடம் இன்னும் இருக்கத்தான் செய்யுது...
இன்னும் எத்தனை சாமியார்கள் என்ற போர்வையில் என்னனென்ன கூத்து நடக்குதோ?????? மீடியாவுக்கே வெளிச்சம்
//நம்ம மக்களுக்கு எதையும்(?) மறக்கும்/மறைக்கும் சக்தி அதிகம் பாஸ்.. எப்படி கத்தினாலும் வீம்புக்காகவாது செய்யும் ஜடம் இன்னும் இருக்கத்தான் செய்யுது...
இன்னும் எத்தனை சாமியார்கள் என்ற போர்வையில் என்னனென்ன கூத்து நடக்குதோ?????? மீடியாவுக்கே வெளிச்சம் //
நல்ல கருத்துக்கள் அஃப்ஸர். தொடர்ந்து இணைந்திருங்கள்
ematru pervali