கல்பாக்கம் அணுவிஞ்ஞானியின் சில்லறை வேலை:
கல்பாக்கம் இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருந்த 37 வயதுடைய ராதாகிருஷ்ணன் என்னும் விஞ்ஞானியை கடந்த 4 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி காவல்துறையிடம் ஒரு புகார் மணு அளித்தார். விஞ்ஞானியை காணவில்லை என்றதும் பரபரப்பான காவல்துறை 10 தனிப்படைகள அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கியது. தீவிரவாதிகள் யாரேனும் கடத்திவிட்டார்களா எனவும் பரபரப்பு நிலவியது. அவரது புகைப்படங்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் பல்லாவரம் காவல் டிவிசனில் இருந்து இந்த புகைப்படத்தைப் பார்த்து இது போன்ற ஒருவரை பாலியல் புகார் வழக்கில் கைது புழல் சிறையில் அடைத்திருப்பதாக தகவல் வர, பறந்து போனது காவல்துறை.விஞ்ஞானி சிறைக்கு வந்த கதை குறித்து விசாரித்த போலிசாருக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்ததாம்.

அதாவது பல்லாவரத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் என்ற பெண் வீட்டு வேலைக்கு பெண்களை அனுப்பும் தொழில் செய்து வந்தாராம். அவரின் தொடர்பு எண் எப்படியோ ராதாகிருஷ்ணனுக்கு கிடைக்க அவருக்கு தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் கொடுக்கவே வெறுத்துப் போன ஷாநவாஸ் பல்லாவரம் காவல்துறையில் புகார் செய்ய விஞ்ஞானியை பொறிவைத்துப் பிடித்தது காவல்துறை. தன் பெயரை ஷியாம் சுந்தர் எனவும் முகவரியை மாற்றியும் கொடுத்தும் புழல் சிறையில் சத்தமில்லாமல் ஐக்கியமாகி விட்டார் விஞ்ஞானி. இவ்வளவு சீரியஸாக விஞ்ஞானியை தேடி அலைந்து அது கடைசியில் புழல் சிறையில் போய் காமெடியாக முடிந்து போனதை நினைத்தால் சிரிப்பாகத் தான் வருகிறது.
ஆங்கில சீடியா ஆபாச சீடியா?:
சிவகங்கை மாவட்டத்தில் எஸ்புதூர் என்ற ஊரில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் சார்பாக ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியின் முடிவில் ஸ்போக்கன் இங்கிலீஸ் செய்முறை டிவிடிகள் வழங்கப்பட்டன. அதைக் கொண்டு போய் அந்தந்த பகுதி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு போட்டுக்காட்டி விளக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஆங்கில பேச்சு பயிற்சி டிவிடிக்களில் இருந்த படங்கள் மாறி மளையாளக் கரையோர மசாலா படங்கள் ஓட ஆரம்பித்தன. இதைக் கண்ட ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சியடைய, அவசர அவசரமாக டிவிக்களை அணைத்து விட்டு தலைமையாசிரியரிடம் புகார் செய்தார்கள் ஆசிரியர்கள். உடனடியாக இந்த தகவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட, உசாரான அதிகாரிகள் அத்தனை பள்ளிகளுக்கும் வழங்கப்பட்ட டிவிடிகளை பறிமுதல் செய்து போட்டுப் பார்க்கவே அனைத்து டிவிடிகளிலும் அதே படங்கள் தான் ஓடியதாம். இந்த மானங்கெட்ட விசயத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்களாம். கல்விதான் ஒரு நாட்டு முன்னேற்றத்தின் அடித்தளம். ஆனால் அதுவே இவ்வளவு மோசமாக கேவலமாக இருக்கிறதென்றால் வரும் எதிர்காலம் எப்படி உருப்படப் போகிறதோ தெரியவில்லை

பட்டையை கிளப்பும் ஜீ தமிழ் செய்திகள்:
எத்தனையோ செய்திச் சேனல்கள் இருந்தாலும், முக்கிய தொலைக்காட்சிகளில் செய்திகள் ஒளிபரப்பட்டாலும் அனைத்துமே அனைவரையுமே கவருவதில்லை. ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10 மணிக்கு வரும் டாப் 10 செய்திகள் அனைத்து தரப்பு மக்களையும் நன்றாக கவர்ந்து விட்டது என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அளவிற்கு அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் பாராட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு என 5 பிரிவுகளில் சும்மா அதிவேகமாக பாஸ்ட் போஸ்ட் செய்திகளை சுவாரஸ்யமாக வழங்குகிறது ஜீ தமிழ். அரை மணி நேரம் போவதே தெரியவில்லை. நேரமிருந்தால் நீங்களும் பாருங்கள். நான் சொன்னது உண்மை என தெரியும். என்ன இருந்தாலும் இவ்வளவு போராடியும் ஜீ தமிழில் இந்த நிகழ்ச்சி மட்டும் தான் வித்தியாசமாக இருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் கலக்கும் போஸ்டர்கள்:
தேர்தல் போஸ்டர்களையே கண்டு புளித்துப் போன மக்களுக்கு இந்த போஸ்டர்கள் கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. என்ன தான் போஸ்டரை ஒட்டி ஓட்டுக் கேட்டாலும் போட்டியில் 25 லட்சம் மதிப்புடைய வீட்டை பரிசாக யாருக்கு கொடுக்க வேண்டும் என விஜய் டிவி நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. அந்த வகையில் அல்கா அஜீத் அல்லது ஷ்ரவனுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் என அந்த உறுதிசெய்யப் படாத செய்தி கூறுகிறது..

சூப்பர் கலெக்ஷன் .அணுவிஞ்ஞானிக்கு அணு அளவு கூட விவஸ்தை இல்லையே...இத்தனை மதிப்பிற்குறிய பதவியில் இருந்து கொண்டு....
எல்லாம் கலிகாலம்
எதிரொலி நீயூஸ் போதும் நம்மளுக்கு:) பட்டைய கெளப்புது
//goma said...
சூப்பர் கலெக்ஷன் .அணுவிஞ்ஞானிக்கு அணு அளவு கூட விவஸ்தை இல்லையே...இத்தனை மதிப்பிற்குறிய பதவியில் இருந்து கொண்டு....
எல்லாம் கலிகாலம்//
நன்றி கோமா .. தொடர்ந்து வாங்க
//வானம்பாடிகள் said...
எதிரொலி நீயூஸ் போதும் நம்மளுக்கு:) பட்டைய கெளப்புது//
நன்றியண்ணே! தொடர்ந்து வாங்க
//beer mohamed said...
விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ//
வீடியோ பார்த்தேன். நல்லா இருக்கு பீர்..