ஏர்டெல் சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டி - முழு அலசல்:
ஒய்.எம்.சி.ஏ மைதானம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட மேடை. விதவிதமாக மின்னும் அலங்கார லேசர் விளக்குகள், சுற்றிலும் கூடிய எல்சிடி திரைகள், எங்கு நோக்கிலும் கேரவேன் மற்றும் லைட்வேன்கள் என இன்றைக்கு களை கட்டிவிட்டது விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 லைவ் நிகழ்ச்சி. எதிர்பார்த்த அளவு கூட்டம் என பட்டையை கிளப்பிவிட்டது நிகழ்ச்சி. உடம்பெல்லாம் சில்வர் பூசிய நடனக்குழுவினருடன் அருமையாக அமைக்கப்பட்ட நடனத்துடன் இனிதே துவங்கியது நிகழ்ச்சி. அடுத்ததாக நிகழ்ச்சியின் நடுவர்கள் சித்ரா, மனோ, சுபா என மூவரும் வந்து ஆளுக்கொரு சரணம் பாடி நிகழ்ச்சியை துவக்கி வைக்க அடுத்ததாக களமிறங்கினார்கள் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 5 பேரும்.

முதல் சுற்று:
முதலில் நிகழ்ச்சியின் நட்சத்திர போட்டியாளர் ஸ்ரவன் களமிறங்கி நான் கடவுள் படத்தில் இடம்பெற்ற "ஓம் சிவோகம்" பாடலை பாட அரங்கமே களைகட்டியது. உண்மையிலே அவர் மீது இருந்த எதிர்ப்பார்ப்பை அருமையாக பூர்த்தி செய்தார். ஸ்ரவன் பாடுவதைப் பார்த்து அனேகமாக வெற்றிபெறப்போவது இவராகத்தான் இருக்கும் என்ற எண்ணம் எழுந்தாலும், மீதமுள்ள நான்கு பேரும் குறிப்பாக அல்காமீது இருந்த எதிர்பார்ப்பு ஸ்ரவனை பெண்டிங்கில் வைக்க வைத்தது. ஸ்ரவன் பாடிய முதல்பாடலே நிகழ்ச்சியைப் பார்க்கும் ஆவலைத் தூண்டி இருக்கும்.ஸ்ரவனைப் பொருத்தவரை எல்லா சுற்றிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விசயம்.
அடுத்ததாக களமிறங்கினார் அந்த குழுவிலேயே மிகக்குறைவான வயதுக்காரரும் சின்ன வாண்டுவுமான ஸ்ரீகாந்த். போன ஒயில்டுகார்டுசுற்றில் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை பாடலை பாடி ஒரு பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். உண்மையிலேயே அந்த பாடலை பாடுவதற்கு முழு தம் வேண்டும்.அந்தப் போட்டியின் சிறப்பு நடுவராக கலந்து கொண்ட பாடகி ஜானகியே நிரம்ப பாராட்டி இருந்தார். இந்த முறை அவர் தேர்ந்தெடுத்த பாடல் "இருமலர்கள்" படத்தில் இடம்பெற்ற மாதவி பொன்மயிலால் தோகை விரித்தாள் என்ற பாடல். இதுவும் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடவேண்டிய பாடல் தான். ஆனால் வழக்கம் போல தன் பாணியில் ஊதித் தள்ளிவிட்டார். இருந்தாலும் அவர் பாடிய விதம் போட்டிக்கு ஏற்றதாக அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து வந்தவர் எல்லாரும் செல்லக்குரலாக பார்க்கும் ரோசன். அந்த கண்ணாடிக்குள் சிரிக்கும் குட்டிப்பையன். இவரும் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கு உதயா படத்திலிருந்து உதயா உதயா உளறுகிறேன் பாடலை பாடினார். ஆனாலும் அவர் குரலை மிஞ்சி இசை கேட்டதால் ரோசன் இந்தப் போட்டியில் நீடிப்பது கடினம் என்றே தோன்றியது. பாடல் தேர்வில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அடுத்து எல்லோராலும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டு களமிறங்கியவர் நித்யஸ்ரீ. வழக்கம் போலவே ஆடலுடன் பாடலைக் கொண்டு வந்தார். குரு படத்திலிருந்து நான் முத்தம் தின்பவள் பாடலை பாடினார். அவரோடு வந்த வாண்டு குழுவினர் சேர்ந்து நடனமாடினார்கள்.ஆனாலும் இன்றைய நித்யஸ்ரீயின் பாடல் தேர்வு சரியாக அமையவில்லை என தோன்றியது. எல்லார் முகத்திலும் ஏமாற்றத்தையே காணமுடிந்தது. நித்யஸ்ரீ நன்றாகப் பாடியது போலவே தோன்றினாலும் ஸ்ரவன் தான் முன்னனியில் இருப்பதாக கணிக்க முடிந்தது. நித்யஸ்ரீயும் ஒயில்டுகார்டு சுற்றில் தான் மீண்டும் உள்ளே நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த நிகழ்ச்சியின் அடுத்த நட்சத்திர போட்டியாளர் அல்கா அஜீத் வழக்கம் போல சாதாரணமாகவே களமிறங்கினார். அவர் வருவதற்கு முன்னதாக நாதஸ்வர கலைஞரும, தவில் வித்வான் ஒருவரும் அமர்ந்தார்கள். யாருமே நினைக்காத நிலையில் கொஞ்சும் சலங்கை படத்தில் வரும் சிங்கார வேலனே தேவா என்ற பாடலை பாட ஆரம்பித்தார். உண்மையிலேயே ஒரு கணம் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள் .இது அல்கா பாடுகிறாரா? அல்லது ஒரிஜினல் பாடலை யாராவது இயக்குகிறார்களா என்ற சந்தேகத்துடன் மிக அற்புதமாக பாடி முடித்தார். அல்கா பாடிய இந்த பாடல், முன்பு பாடி முடித்த ஸ்ரவன் உள்ளிட்ட அனைவரது பங்கேற்பையும் தகர்த்து விட்டு மேலே ஏறி அமர்ந்தது. இந்த பாடல் முடிந்ததும் அங்கே அமர்ந்திருந்த பி.பி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட அனைத்து விஐபிகளும், பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டிய விதம் நிச்சமாக அல்கா தான் வெற்றியாளர் என்ற கணிப்பை உண்டாக்கியது.

இரண்டாம் சுற்று:
முதல் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று துவக்கப்பட்டது. இதிலே முதல் போட்டியாளராக அல்காவே பங்கேற்று சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா பாடலை பாடி முடித்தார். ஆனால் இந்த முறை அவர் பாடிய விதம் சொல்லிக் கொள்ளும் படியில்லை. மைனஸ் பாயிண்டுகளை சேர்த்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. அடுத்து களமிறங்கிய ரோசன், ஜோடி படத்தில் இடம்பெற்ற ஒரு பொய்யாவது சொல் கண்ணே என்ற பாடலை பாடினார். இந்த முறையும் அவரது குரலை இசை மிஞ்சிவிட இதுவும் ஏமாற்றமாய் முடிந்தது. ரோசனுக்கு நல்ல குரல்வளம், ஆனால் சரியான பாடல் தேர்வு இல்லை.
அடுத்து களமிறங்கியது நித்யஸ்ரீ. பிரம்மா படத்தில் இடம்பெற்ற இவள் ஒரு இளம் குருவி என்ற பாடலை பாடினார். பிரமிக்க வைத்தது அவரின் பாடல். ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்த பார்வையாளர்கள் மொத்தமாக அமைதியாகி விட்டனர். அற்புதமாக பாடி முடித்தார் நித்யஸ்ரீ. நிச்சயமாக நித்யஸ்ரீ முதலிடம் அல்லது இரண்டாவது இடமாவது பிடிப்பார் என கருதவைத்தது இந்தப் பாடல்.
அடுத்து வந்த குட்டிப்பையன் ஸ்ரீகாந்த் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் நம்ம ஊரு சிங்காரி பாடலை பாடி அரங்கையே அதிரவைத்தான். ஆங்காங்கே ரசிகர்கள் ஆடத்துவங்கியிருந்தனர். ஆனாலும் இது வெற்றியைத் தேடித்தராது என்ற பாணியிலேயே இருந்தது அவரின் நடை. இறுதியாக களமிறங்கிய ஸ்ரவன், பவித்ரா படத்தில் இடம்பெற்ற உயிரும் நீயே, உடலும் நீயே பாடலை பாடினார். இந்தப் பாடல் அவரின் முந்தைய சாதனைகளை பின்னுக்குத் தள்ளி மொக்கையாக்கி விட்டது.
ஸ்ரவன் பாடி முடித்த பிறகு 5 நிமிடம் கழித்து வாக்களிக்கும் நேரம் முடிவடைந்தது. போட்டிகள் முடிந்த நிலையில் நம்மாள் ஓரளவுக்கு முடிவுகளை கணிக்க முடிந்தது. ஸ்ரீகாந்த்,ரோசன் ஆகியோர் இறுதி இடத்திலும், அல்கா,ஸ்ரவன், நித்யஸ்ரீ ஆகிய மூவரில் ஒருவர் முதல் இடம் பெறுவார்கள் என்றும் இன்னும் சொல்லப்போனால் அல்காவிற்கு முதலிடம் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் எனவும் கணிக்க முடிந்தது. இறுதியாக சூர்யாவின் தம்பி கார்த்தி மேடைக்கு வந்து முடிவுகளை அறிவித்தார். அதன்படி குறைந்த வாக்குகள் பெற்ற ரோசனும், நித்யஸ்ரீயும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். இவர்களுக்கு தலா 2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அடுத்த இடமான இரண்டாவது இடத்தை ஸ்ரீகாந்த் வென்றார். அவருக்கு 3 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. கடைசியாக ஸ்ரவனும் அல்காவும் மீதமிருக்க யாருக்கு முதல் பரிசு என பரபரப்பு நிலவியது. அதிரடியாய் அல்காவின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஸ்ரவன் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிகழ்ச்சியின் ஹைலைட் சில:
* நிகழ்ச்சிக்கான ஆயத்தப்பணிகள் துவக்கப்பட்டதிலிருந்து மழை வருவது போன்ற அறிகுறி நிலவியது.ஆனால் தூறலோ மழையோ பெய்யவில்லை.
* அரங்கம் நிறைந்திருந்த போதும் வாசலில் கூடியிருந்த ரசிகர்களை ஒரு நேரத்தில் இலவசமாக அனுமதித்தினர். வந்தவர்கள் மைதானத்தின் பின்புறம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
* ராயப்பேட்டை பாலத்தின் மேல் நிறைய ரசிகர்களை காண முடிந்தது. ஆனால் அங்கிருந்து பார்த்தால் எந்த அளவிற்கு தெரியும் என்பது தெரியவில்லை.
* நிகழ்ச்சி துவங்கி அரை மணிநேரம் கழித்து தான் விஜய் டிவி அதை ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்திருந்தது. நேரம் ஆக ஆக விளம்பரங்கள் அதிகமாகி கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை இடைவெளி விழ ஆரம்பித்திருந்தது.
* நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஆரவாரமாக நிகழ்ச்சியை ரசித்தனர். தொலைக்காட்சி ஒளிபரப்பு தாமதமாய் போய்க்கொண்டிருந்ததால் பலரும் அவர்கள் நண்பர்களுக்கு, குடும்பத்தாருக்கு வெற்றி குறித்த செய்திகளை மொபைல் வழியாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பிய படி இருந்தனர்.
* போட்டியாளர்கள் அனைவரும் பாடி முடித்த பின்னர் சில பாடகர்கள்,பாடகிகள் தங்கள் பாடிய பாடலை ஆட்டத்துடன் அறங்கேற்றினார்கள்
* ஒரு நேரத்தில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தை அழைக்க, அவர் கங்கை அமரனையும் மிஞ்சும் அளவிற்கு மைக்கை கடித்து குதறிவிட்டார். பலருக்கு அவர் செய்த ஓவர் ஆக்சன்கள் கோபத்தை வரவழைக்க சத்தமிட்டபடி இருந்தார்கள். இப்படியே அதிகமாக பின்பக்க ரசிகர்கள் சிலர் சப்தத்துடன் சிலர் செருப்புகளையும் தூக்கிக் காட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் அடங்காத தேவிஸ்ரீபிரசாத் பல பாடல்களை கடித்து குதறி விட்டுத்தான் சென்றார்.
* நிகழ்ச்சிகளை எந்த தொய்வும் இன்றி திவ்யாவும், சிவகார்த்திகேயனும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள்
* நிகழ்ச்சியின் இறுதியில் முந்தைய சூப்பர் சிங்கர்களும், இன்றைய ஜூனியர்களும், பாடகர் ஸ்ரீநிவாஸோடு இணைந்து சூப்பர் சிங்கர் பாடலை பாடினார்கள்.
* விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கார்த்தி பேசும் போது, இனிமேல் முதல்பரிசு இரண்டாம் பரிசு என பிரிக்காமல் அனைவரையும் வெற்றியாளர்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
* முதல்பரிசாக 25 லட்சம் மதிப்புடைய வீடு பரிசாக அல்காவிற்கு வழங்கப்பட்டது. இது ஏற்கனவே பேசிவைத்து தான் செய்கிறார்கள் என ரசிகர்கள் சிலரின் முனகளையும் கேட்க முடிந்தது.
* இந்த இறுதிப்போட்டிக்கு மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சத்து 64 ஆயிரம் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. ஒரு குறுஞ்செய்திக்கு ரூ 3 கட்டனமாக பிடிக்கிறது ஏர்டெல். வாழ்வு தான்.


Alkha deserves...Srikanth being a little boy, they did unjustice to others..Esp Priyanka should have been a finalist...Too many biased judgement...Before this program, I was a die-hard fan of Chitra..But, I will never be hereafter....Mano and Suba are the worst judges I have ever seen.. Just google 'Injustice to Priyanka'...u can see more details...
எனக்கு பிடித்த நிகழ்ச்சி...பாக்க முடியாத குறைய இந்த பதிவு போக்கிருச்சு...
Alkaa deserves it. Best wishes to Alka and Airtel super singer team.
நல்லாயிருக்கு.
நாளைக்கு அரசியல், உலக நடப்புகள்
பற்றி சில, பல குறிப்புக்கள்
இடுகை போடுங்கள்.
சிங்காரவேலனே தேவா இடம் பெற்ற திரைப்படம் கொஞ்சும் சலங்கை.
தில்லானா மோகனாம்பாள் x
மிகவும் அருமையான நிகழ்ச்சி...சூப்பப்ர்...
வர்ணனை அருமை, நேரில் பார்த்த திருப்தி கிடைத்தது. சின்னப்பயன் என்று ஞிகாந்த தேர்வு செய்துடுவாங்களோ இதன் மூலம் நல்ல போட்டியாளர் தூக்கியெரிபபடுவர்ர்கள் என்று மனதுக்கு தோன்றியது. இருந்தாலும் மனோ வின் திரும்ப வலியுருத்திய திறமையானவரை தேர்ந்தெடுங்க என்ற கூற்றும் இதற்காகவேண்டிதான் தோன்ரியது.
// Janaki said...
Alkha deserves...Srikanth being a little boy, they did unjustice to others..Esp Priyanka should have been a finalist...Too many biased judgement...Before this program, I was a die-hard fan of Chitra..But, I will never be hereafter....Mano and Suba are the worst judges I have ever seen.. Just google 'Injustice to Priyanka'...u can see more details...//
Thanks for your comment. Stay tuned
//ராசராசசோழன் said...
எனக்கு பிடித்த நிகழ்ச்சி...பாக்க முடியாத குறைய இந்த பதிவு போக்கிருச்சு...//
நன்றி ராசராசசோழன். தொடர்ந்து இணைந்திருங்கள்
// ராம்ஜி_யாஹூ said...
Alkaa deserves it. Best wishes to Alka and Airtel super singer team.//
Thanks Ramji..
// NIZAMUDEEN said...
நல்லாயிருக்கு.
நாளைக்கு அரசியல், உலக நடப்புகள்
பற்றி சில, பல குறிப்புக்கள்
இடுகை போடுங்கள்.//
கருத்துக்கு நன்றி நிஜாம் பாய். உங்களுக்காக ஒரு சிறப்பு இடுகை பாருங்கள்
// துளசி கோபால் said...
சிங்காரவேலனே தேவா இடம் பெற்ற திரைப்படம் கொஞ்சும் சலங்கை.
தில்லானா மோகனாம்பாள் க்ஷ்//
தெரியப்படுத்தியதற்கு நன்றி கோபால். மாற்றிவிட்டேன்
//அபுஅஃப்ஸர் said...
வர்ணனை அருமை, நேரில் பார்த்த திருப்தி கிடைத்தது. சின்னப்பயன் என்று ஞிகாந்த தேர்வு செய்துடுவாங்களோ இதன் மூலம் நல்ல போட்டியாளர் தூக்கியெரிபபடுவர்ர்கள் என்று மனதுக்கு தோன்றியது. இருந்தாலும் மனோ வின் திரும்ப வலியுருத்திய திறமையானவரை தேர்ந்தெடுங்க என்ற கூற்றும் இதற்காகவேண்டிதான் தோன்ரியது.//
ஆமாம் அப்ஸர். கருத்துக்கு நன்றி!