
சினிமா சூட்டிங்குக்கு பயன்படுத்தப் படும் லைட் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேரடி ஒளிபரப்புக்கான வேலைகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஆனால் அங்கே பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு டெக்னீசியன்கள் முகத்திலும் ஒரு சோகத்தை காணமுடிந்தது. ஆமாம். சென்னையில் இன்று காலை 11 மணியிலிருந்து தற்போது வரை வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. அத்தோடு லேசான தூறல் போட்டுக் கொண்டும் இருக்கிறது. கேராளா,மஹாராஷ்டிராவில் பெய்யும் கனமழையின் சாரல் இங்கேயும் தாக்கினால் இன்றைக்கு சூப்பர் சிங்கர் ஜூனியரில் சங்கீத மழையுடன் வான் மழையும் சேர்ந்து வண்ணமயமாக்கிவிடும். பார்க்கலாம்..
சுட்டுக்கொல்லப்பட வேண்டிய பயங்கரவாதிகள்:

சென்னை நகரம் வரவர ரவுடிகளின் கோட்டையாக மாறி வருவதை யாராலும் மறுக்க முடியாது. சாதாரண ரவுடிகளாக இருக்கும் இவர்கள் குழு அமைத்து கூலிப்படையாக மாறிவிடுகின்றனர். கூலிக்கு கொலை செய்வது என்பது தான் இவர்களுடைய பிரதான தொழிலே. ஆளைப் பொருத்து கூலி வேறுபடுகிறது. இப்போது சாதாரணமாக ஒரு அசால்டு செய்வதற்கு குறைந்தபட்ச கூலி 1 லட்சம் ரூபாய். ஆளைப்பொருத்து இது 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை நீளும். இதுபோன்ற ரவுடிகள் அரசியல் கட்சிகளுக்கு அடியாளாகவும் செயல்படுகிறார்கள். அரசியல் கொலைகளும் இவர்கள் மூலம் தான் நடத்தப்படுகிறது. சமீபத்தில் ராயப்பேட்டையில் நடந்த கவுன்சிலர் கொலையும் இவர்களைப் போன்றவர்கள் தான நடத்தினார்கள். கொலை செய்து விட்டு உடனடியாக தலைமறைவாகி விடுவார்கள். இவர்களை போலீஸ் வலைவிரித்து தேடும். ஆனால் இவர்கள் சாவகாசமாக ஏதாவது ஒரு கோர்ட்டில் சரணடைந்து விடுவார்கள். இவர்களுக்கு அரசியல் பலமிருப்பதால் அடுத்த 15வது நாளில் வெளிவந்து விடுவார்கள். வெளிவந்தவுடன் அடுத்த அசால்ட்டுக்கு தயாராகிவிடுவார்கள்.

இப்போது இங்கே ஒரு அப்பாவியை கொலை செய்தவர்களின் நோக்கம் ஒரு பெண்ணின் கற்பை சூறையாடுவதாக இருந்திருக்கிறது. தன் கண்முன்னே தன் காதலியை மானபங்கப்படுத்துவதை தாங்காமல் தான் சரவணன் போராடி தன் உயிரை விட்டிருக்கிறார். இந்த ரவுடிகள் இப்போது சாவகாசமாக சரணடைந்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் ஏதாவது ஒரு பெண்ணின் மானத்திற்கு கேடு விளைவிப்பார்கள். தட்டிக்கேட்டால் கொலை செய்வார்கள். பிறகு சரணடைவார்கள். இவர்களுக்கு தனி சிறை. வெளியே கிடைப்பதை விட நல்ல சாப்பாடு. காவலுக்கு போலீஸ். கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல தனி வாகனம் என ராஜ வாழ்க்கை. இதைத் தான் வலியுறுத்துகிறது நமது உளுத்துப் போன சட்டமும் நீதியும். 50 ரூபாய் திருடினால் அவனுக்கு அடியும் உதையும், அதையே 5 கோடி திருடினால் பாதுகாப்பும் பராமரிப்பும். என்னத்தை சொல்வது? இது போன்ற ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். ஆனால் இப்போது இருக்கும் சட்டமும்,சாப்பாடும் குற்றவாளிகளை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதைப் போன்றதாகும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். என்றைக்கு ஒரு பெண் கழுத்து நிறைய நகைகள் அணிந்து நடுஇரவிலும் பாதுகாப்பாய் செல்கிறாளோ அன்றைக்குத் தான் உண்மையான சுதந்திரம் என்ற காந்தியின் கனவு கடைசிவரை கனவாகவே போய்விடும்....


|இது போன்ற ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். |
அத்வானி கூட சவூதியில் நடைபெருவது போல் தப்பு செய்தவர்களை பொது இடத்தில் சுட்டுதள்ளவேண்டும் என்று சொல்லிருக்கிறார். இது மாதிரி ஒன்னு நடந்தாலே கொஞ்சமேனும் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புள்ளது
விஜய் டிவி பிரமண்டமான சண்டிவியை தோற்கடிக்க உதவிய நிகழ்ச்சி
wish Alka should win
மிகவும் அருமையான நிகழ்ச்சி...சூப்பர்ப் சிங்கர்...குழந்தைகள் அருமையாக படுவாங்க...உங்கள் ப்ளாகில் செம்மொழி கீதம் மிகவும் அருமை...பகிர்வுக்கு நன்றி....
//ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். ஆனால் இப்போது இருக்கும் சட்டமும்,சாப்பாடும் குற்றவாளிகளை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதைப் போன்றதாகும்//
குற்றவாளிகளைக் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வது - இது அழகான எதுகை மோனை!
ஆனால், சு(க)டும் வேதனையான உண்மை!
//அபுஅஃப்ஸர் said...
|இது போன்ற ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். |
அத்வானி கூட சவூதியில் நடைபெருவது போல் தப்பு செய்தவர்களை பொது இடத்தில் சுட்டுதள்ளவேண்டும் என்று சொல்லிருக்கிறார். இது மாதிரி ஒன்னு நடந்தாலே கொஞ்சமேனும் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புள்ளது//
நிச்சயமாக அஃப்ஸர். கருத்துக்கு நன்றி!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
விஜய் டிவி பிரமண்டமான சண்டிவியை தோற்கடிக்க உதவிய நிகழ்ச்சி//
கருத்துக்கு நன்றி சதீஷ் சார். தொடர்ந்து வாங்க
//ராம்ஜி_யாஹூ said...
wish Alka should win//
You r correct.. Thanks
//GEETHA ACHAL said...
மிகவும் அருமையான நிகழ்ச்சி...சூப்பர்ப் சிங்கர்...குழந்தைகள் அருமையாக படுவாங்க...உங்கள் ப்ளாகில் செம்மொழி கீதம் மிகவும் அருமை...பகிர்வுக்கு நன்றி....//
நன்றி கீதா! தொடந்து இணைந்திருங்கள்
//NIZAMUDEEN said...
//ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். ஆனால் இப்போது இருக்கும் சட்டமும்,சாப்பாடும் குற்றவாளிகளை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதைப் போன்றதாகும்//
குற்றவாளிகளைக் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வது - இது அழகான எதுகை மோனை!
ஆனால், சு(க)டும் வேதனையான உண்மை!//
நன்றி நிஜாம் பாய்! தொடர்ந்து இணைந்திருங்கள்