வர வர நமது தமிழகத்தில் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆங்கில ஆண்டு வருடப்பிறப்பான ஜனவரி மாதக் கொண்டாட்டம் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே உரியதாகும். ஆனால் நாமும் ஆங்கிலத் தேதிகளைப் பின்பற்றுவதால் அதை புத்தாண்டாக எடுத்துக்கொண்டு கொண்டாட ஆரம்பிக்கிறோம். பின்பற்றுவது தவறல்ல, ஆனால் கொண்டாட்டம் நம்மைச் சார்ந்தது அல்ல. ஆங்கிலேயே அடிமைத்தனத்தின் எச்சமே இந்தப் புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் அது மிகையாகாது.
இந்தியர்களின் சிறந்த பழக்கமான சேமிப்பிற்கு ஆப்பு வைக்க உருவாக்கப் பட்ட கொண்டாட்டங்களில் இந்த புத்தாண்டும் ஒன்று. இதற்கென புத்தாடை முதல் டிவி மிக்ஸி கிரைண்டர் வரை செலவுப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். இது திட்டமிட்டே சமீபத்தில் நுழைக்கப்பட்ட ஒரு சதியாகும். 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் இதை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாத நம் மக்கள் இன்றைக்கு மீடியாக்களின் தாக்கத்தால் இதையும் ஒரு விழாவாக சேர்த்துக்கொண்டு விட்டனர். புத்தாண்டு கொண்டாடங்களுக்கும் கிருத்தவ மதத்திற்கும் சம்மந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஆங்கியலேயர்கள் கொண்டாட்டம் அவ்வளவே. ஆனாலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுசரிக்கும் கிருத்தவ நண்பர்கள் அனைவரும் இந்த நேரத்தில் ஜெபம் தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ பெரும் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்.

45 ஹோட்டல்களில் குத்தாட்டம்:
நேற்றைய புத்தாண்டு தினத்தில் சென்னையில் மட்டும் 45 நட்சத்திர விடுதிகள் மற்றும் பண்ணைவீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாதாரண வகுப்புக்கட்டணம் ஒரு நபருக்கு 1250 ரூபாய். இந்த வகுப்புக் கட்டணத்திற்கு அன்லிமிட் சாப்பாடும் தண்ணியும் இலவச ரெக்கார்டு டான்சும் பார்த்துக்கொள்ளலாம். அடுத்த அடுத்த வகுப்புக்கட்டணங்களின் விலையும் அதிகம் அதற்கு கொடுக்கப்படும் வசதிகளும் அதிகம். நேற்றைக்கு சினிமா துணை நடிகைகள் முக்கால்வாசி பேர்களுக்கு இந்த விடுதிகளில் தான் கால்சீட். இதேபோல நட்சத்திர குத்தாட்டம் சென்ற 2009ம் ஆண்டில் நடைபெற்று நீச்சல் குளத்திற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மேடை சரிந்து நீச்சல் குளத்திற்குள் ஒரு மாணவர் மூழ்கி இறந்தது ஞாபகம் இருக்கலாம். அவர் போதையில் இருந்ததால் வெளிவரமுடியாமல் உயிரைவிட்டார்.
கேக் வெட்டிய சென்னை காவல்துறை:
மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டிய காவல்துறையினரே சென்னை காமராஜர் சாலையருகே வைத்து 12 மணிக்கு கேக் வெட்டி புத்தாண்டினைக் ஆரவாரமாகக் கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி இருசக்கர வாகன அலப்பறை வீரர்கள் சாகசம் செய்வதை இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டனர். பின்னர் அதே இரவில் 2 சாகசவீரர்கள் விபத்தில் பலியான செய்தி வந்ததும் உசாராகியது காவல்துறை. அவசரஅவசரமாக சாகசவீரர்களைப் பிடிக்க உத்தரவிட, சாந்தோம் அருகிலே அணிவகுத்த காவல்துறையினர் சரக்கடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களையும், சாகசம் செய்பவர்களையும் பிடிக்கத் தயார் நிலையில் நின்றது. பீச் ரோட்டில் தாறுமாறாக வண்டிஓட்டி வந்த வீரர்களை பிடித்து அமுக்கியது. இதைக்கண்ட பலர் வண்டியை திருப்பிக்கொண்டு ஓட முயல அவர்கள் மீது லத்தியை வீசியடித்தது காவல்துறை. அதுமட்டுமன்றி பிரைவேட் செக்யூரிட்டிகள் சிலரும் இந்தப் பணியில் ஈடுபட்டனர். பைக் சாகச வீரர்களை பிடித்து அவர்களை சராமாரியாக தாக்கி தானும் ஒரு போலீஸ் மாதிரி என நிறுபித்தனர் சில பிரைவேட் செக்யூரிட்டிகள். பொதுமக்களை அடிக்க போலீஸுக்கே உரிமையில்லாத போது இந்த பிரைவேட் செக்யூரிட்டிகளுக்கு பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தார் என தெரியவில்லை. சில இடங்களில் வாகனங்கள் சில குடிமகன்களின் மகிழ்ச்சி காரணமாக அடித்து சேதப்படுத்தப்பட்டன.

வழக்கம் போல மெரீனா நோக்கி சிறப்புப் பேரூந்துகள் இயக்கப்பட்டன. கொஞ்ச நேரம் கைக்கட்டி குத்தாட்டங்களை வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் அதன்பிறகு எல்லை மீறவே தங்களின் பணிகளைச் செய்ய ஆரம்பித்தனர்.ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. நேற்றைக்கு முன்இரவு வழக்கம் போலவே கடும்போதையுடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. சந்திர கிரகணம் நிகழ்ந்ததால் அனைத்துக் கோயில்களும் புத்தாண்டு இரவு மூடப்பட்டு அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனால் அர்ச்சகர்களுக்களின் வருமானம் பாதிக்கப்பட்டது.
புத்தாண்டும் சோகமும்:
புத்தாண்டு என்பது நாம் முந்தைய ஒருவருடத்தை இழந்துவிட்ட ஒரு சோகமான நிகழ்வாகும். முந்தைய வருடத்தில் நாம் செய்த நற்காரியங்களையும் தீயவற்றையும் பட்டியலிட்டுப் பார்த்து எது அதிகமென அதை திருத்திக்கொள்வதில் முனைப்புக் காட்டலாம். அதுமட்டுமின்றி புத்தாண்டு என்பது நம் வாழ்நாளில் 365 நாட்களை இழந்து விட்டோம் என புரிந்து கொண்டால் இதுபோன்ற வீண்விரயக் கொண்டாட்டங்கள் நம்மைவிட்டு ஒழிந்துவிடும்.இந்த புத்தாண்டு தினத்தில் ஒரே இரவில் பல்லாயிரக்கணக்கில் வீண்விரயம் செய்பவர்களும் ஆடம்பர கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கே அடுத்தவர் கையை எதிர்பார்த்து தினம் தினம் காத்திருக்கும் முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோர்களும், அனாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகளின் நினைவுகள் வந்தால் அந்த காசுகள் வீண்விரயம் ஆகாது.
1200 ரூபாய் வாங்கும் விடுதிக்காரனுக்கு 1100 ரூபாய்க்கு மேல் லாபம். ஆனால் அதைக்கொடுத்தவனுக்கு 1200ம் நஷ்டம். உடலுக்கும் கேடு, சில நேரங்களில் சாவு அல்லது காயம். புத்தாண்டை நாம் வரவேற்காவிட்டால் அது வராதா? புத்தாண்டில் பொருட்கள் வாங்கினால் தான் வளம் பெறுகும் என எவனோ அவனுடைய தொழில்வளர கிளப்பிவிட்டதை நம்பி அன்றைக்கு நம் பொருளாதாரத்தை இழப்பது ஏன்? அட்சயதிருதியைக்கு நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் என நகைக்கடைக்காரன் கிளப்பிய புரளி வருடா வருடம் மெறுகேறுவதும் எப்படி? இது போன்ற ஆடம்பர கொண்டாட்டங்களைத் தவிர்த்து எவ்வளவோ ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு நம் சக்தியை செலவிட்டால் அன்னிய சக்திகளின் ஆதிக்க சகதிகளை நாம் முறியடிக்க இயலும்.
டாஸ்மாக் செய்திகள்:
புத்தாண்டு இரவு முழுவதும் 2 மணிவரை டாஸ்மாக்குகளில் சரக்குகள் விற்பனை செய்யப்பட்டன. சிலகடைகள் வெளியே மூடப்பட்டிருந்தாலும் கிடைக்கவேண்டிய இடத்தில் சரக்குகள் கிடைத்தன. மொத்த கலெக்சன் 47 கோடியாம். ஆனால் தீபாவளிக்கு 250 கோடி கலெக்சன் காட்டிய நிர்வாகம் அந்த சாதனையை முறியடித்து விடலாம் என நினைத்தால் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது இந்தப் புத்தாண்டு. பாவம்.


47 கோடிதானா?
ரொம்ப கம்மியா இருக்கே.
திருந்தவே மாட்டானுங்களா:))
அருமையா கவரேஜ் பண்ணியிருக்கீங்க நிஜாம்.
///இருசக்கர வாகன அலப்பறை வீரர்கள் சாகசம் செய்வதை இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டனர். பின்னர் அதே இரவில் 2 சாகசவீரர்கள் விபத்தில் பலியான செய்தி வந்ததும் உசாராகியது காவல்துறை///
எல்லாம் முடிஞ்ச பின்னாடி வருவது படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும்தான் போல.
உணர்ந்தும் உணரமறுக்கும் கூட்டங்களாகிவிட்டோமோ என்று தோன்றுகிறது நிஜாம்.
நல்லகவரேஜ் எதிரொலி என்பதற்கேற்ப
சரியாய் செயல்படுகிறீர்கள்..
47 கோடி தானா?
அப்ப 2010ல நிறைய பேர் திருந்திட்டாங்கன்னு சொல்லுங்க.......
//ஷாகுல் said...
47 கோடிதானா?
ரொம்ப கம்மியா இருக்கே//
திருந்திட்டாங்க போல சாகுல்
// வானம்பாடிகள் said...
திருந்தவே மாட்டானுங்களா:))//
அண்ணே! மேலே உள்ள பதில பாருங்க
//S.A. நவாஸுதீன் said...
அருமையா கவரேஜ் பண்ணியிருக்கீங்க நிஜாம்.
///இருசக்கர வாகன அலப்பறை வீரர்கள் சாகசம் செய்வதை இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டனர். பின்னர் அதே இரவில் 2 சாகசவீரர்கள் விபத்தில் பலியான செய்தி வந்ததும் உசாராகியது காவல்துறை///
எல்லாம் முடிஞ்ச பின்னாடி வருவது படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும்தான் போல.//
ஆமா நவாஸ்..:))
//அன்புடன் மலிக்கா said...
உணர்ந்தும் உணரமறுக்கும் கூட்டங்களாகிவிட்டோமோ என்று தோன்றுகிறது நிஜாம்.
நல்லகவரேஜ் எதிரொலி என்பதற்கேற்ப
சரியாய் செயல்படுகிறீர்கள்..//
நன்றி மலிக்கா தொடர்ந்து வாங்க
// Sangkavi said...
47 கோடி தானா?
அப்ப 2010ல நிறைய பேர் திருந்திட்டாங்கன்னு சொல்லுங்க........//
ஆமாண்ணே! ஒரு வேள பாண்டிச்சேரி சரக்கு இறக்குமதி ஆகியிருக்குமோ??