Jan 23, 2010

சாயம் வெளுத்துப் போன பேராண்மை

நிஜாம் கான் @ 4:48 PM

ஆங்கிலப் படத்துக்கு இணையாக இருக்கிறது, அத்தோடு உயர்ஜாதி அரசியலையும் நன்றாகச் சொல்லியிருக்கிறார் ஜனநாதன் எனச் சொல்லி என் நண்பர் பேராண்மை டிவிடியைக் கொடுத்தார். திருட்டு டிவிடி இல்லை, ஒரிஜினல் இமேசன் கம்பெனியின் டிவிடி தான். அருமையான பிரிண்ட். சரி அப்படி என்ன தான் விசயம் இருக்கும் என அதை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்ப காட்சியே ஒரு எருமை மாட்டிற்கு பிரசவம் பார்க்கும் துருவன் என்ற ஜெயம் ரவி ஒரு பழங்குடி இனத்தில் பிறந்தவர் . அடுத்த நாள் அங்கே NSS கேம்பிற்கு அவரே பயிற்சியாளராகவும் வந்து நிற்கிறார். அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று வர அவரால் தான் முடியுமென்பதால் அந்த பயிற்சியாளர் பதவிக்கு அவரை நியமித்திருப்பதாக சொல்கிறார் உயரதிகாரி பொன்வண்ணன் . ஆக பொன்வண்ணன் உயர்சாதி உயரதிகாரி, ஜெயம்ரவி பழங்குடி இனத்தவர். எனவே அவர் ஒரு நல்ல பொறுப்பிலே இருந்தாலும் அவரை டீ வாங்குவது, தன் ஷூ துடைப்பது என எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.

அதுமட்டுமின்றி அவர் மீது வரும் சிறிய புகார்களுக்கெல்லாம் கடுமையான நடவடிக்கை எடுக்கிறார். அவர் மீது பழி சுமத்தப்படும் போது அவரைத் தேடி அவரின் கிராமத்திற்குள் நுழையும் காட்டிலாகா அதிகாரிகள் அவர்களின் வீடுகளையும் பொருட்களையும் அடித்து துவம்சம் செய்யும் போதும், ஜெயம் ரவியின் புத்தக அலமாரியைக் கீழே கொட்டி அதற்குத் தீவைத்து விட்டு,"ஏன்டா இதப் படிச்சதுக்கே இந்த ஆட்டம் போடுறீங்க, இன்னும் கொஞ்சம் படிச்சிருந்தா எங்களையே இந்த நாட்ட விட்டு தொறத்திடுவீங்கடா" என கோபத்தில் கத்தும் போதும் அவரின் மேலதிக ஜாதி வெறி வெளிப்படுகிறது. நாட்டுக்குள்ளே பிரவேசித்த அன்னிய சக்திகளை ஜெயம் ரவி கொலை செய்து ஏவப்படும் ராக்கெட்டை காப்பாற்றினால் அதை தான் செய்ததாக அரசிடம் விருது வாங்குகிறார் பொன்வண்ணன். இதைப்போல‌ வெளியே வராத பல விவகாரங்களுக்கு இதை ஒரு உதாரணமாக காட்டுகிறார் இயக்குனர். இது தான் பேராண்மை படத்தில் சொல்லப்படும் கருத்துக்கள்.

உண்மையிலே தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மீது பல இடங்களில் நிகழ்த்தப்படும் வன்முறைகளை மிகச் சிறப்பாக பதிந்திருப்பது நல்ல விசயமே. திரைப்படத்தின் முதல் பகுதியையும் இறுதி பகுதியையும் சொல்லிவிட்டேன். ஆனால் ஆங்கிலப்படத்திற்கு நிகராக காட்சியமைப்புகளைக் கொடுத்துள்ளதாகவும் அத்தோடு ஹாலிவுட் நடிகர் ரோலன்ட் கிக்கிங்கெர் நடித்துள்ளதாகவும் பிரம்மாண்ட விளம்பரம் செய்த அந்த நடுப்பாகம் தான் சாண்ட்விச் பிரட்டுக்கு இடையே வைக்கப்பட்ட மசாலாவாக அதாவது திருடப்பட்ட மசாலாகவாக மாறிப்போயிருக்கிறது.

அந்த நடுப்பகுதியியில் அப்படி என்ன காட்சிகள் வருகின்றன? அந்த கேம்பிலிருந்து காட்டுக்குள்ளே பயிற்சிக்காக அழைத்துச் செல்லும் பட்டியலில் தன்னைத் தொடர்ந்து அவமானம் செய்யும் ஐந்து பெண்களைத் தேர்வு செய்கிறார் ஜெயம் ரவி. அவர்களை அழைத்துக்கொண்டு ஜீப்பிலே பயணிக்கும் போது வேண்டா வெறுப்பாக வந்த அந்த மாணவிகளின் விளையாட்டால் ஜீப் மலையிலிருந்து விழுந்து விடுகிறது. ஐந்து மாணவிகளும் இவரும் நட்ட நடுக்காட்டில் மாட்டிக்கொள்கின்றனர். தங்கள் கேம்பிற்கு திரும்பி விடலாம் என நடக்க ஆரம்பிக்கிறார்கள். மாலை நேரமாகி இருட்டாகி விட ஒரு இடத்தில் தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என முடிவு செய்து கூடாரம் அடிக்கிறார்கள். நள்ளிரவில் அந்தக் குழுவில் இருந்து ஒரு பெண் ஒன்பாத் ரூம் செல்ல விளக்கோடு வெளியேறி ஓர் மரத்தடியில் ஒதுங்க, திடீரென யாரோ அந்தப்பக்கம் நடந்து வரும் சப்தம் கேட்டு விளக்கை அணைத்துவிடுகிறார். கூர்ந்து பார்க்கும் போது இரண்டு வெளிநாட்டினர் தங்கள் கையில் துப்பாக்கியோடு நடந்து செல்கின்றனர். யாருமே நுழையமுடியாத காட்டில் இவர்கள் யார் என இந்தப்பெண் ஜெயம் ரவியிடம் சொல்ல அத்தோடு ஆரம்பிக்கிறது பரபரப்பு.

அவர்களின் சூழ்ச்சியை உணரும் ஜெயம் ரவி அவர்களின் முன்னேற்றத்தை முறியடிக்க‌ தன் குழுவினரோடு எதிர் திசையில் வந்து முகாமிட்டு அவர்களைக் கண்கானிக்கிறார். அங்கே இரண்டு பேர் அல்ல, மொத்தம் 16 பேர் ஆயுதங்களோடு வந்திருக்கிறார்கள். தமிழ்மலையில் இருந்து ஏவும் ராக்கெட்டை அழிக்க வந்தவர்கள் என கணித்து அவர்களை அந்த ஆற்றைக்கடக்க விடாமல் செய்ய இக்கரையில் மரங்களை வரிசையாக வெட்டி ஒரே நேரத்தில் சரியவிட்டு நிறையபேர் இருப்பதாகக் காட்டிக்கொள்ள திட்டமிட்டு அதை நிறைவேற்றுகிறார்கள். அதிலே ஒரு பெண்ணை படையினரை அழைத்துவர கேம்பிற்கு அனுப்புகிறார். ஆனால் அவர் போகும் வழியிலேயே புதை சேற்றில் சிக்கி இறந்து விடுகிறார். இவர்கள் ஐந்து பேர் மட்டுமே இருந்து போராடி அதிலே இரண்டு பெண்கள் இறந்து விட கடைசியில் ஜெயம் ரவியும் மற்ற இரண்டு பெண்களும் அந்த சதியை முறியடித்து ராக்கெட்டை காப்பாற்றுகிறார்கள். கதை திரைக்கதை வசனம் இயக்கம் SP. ஜன‌நாதன். இயற்கை மற்றும் ஈ திரைப்படங்களை இயக்கிய ஜனநாதன் இந்தப் படம் தன்னுடைய கதை என கதை விட்டுருக்கிறார்.

இது முழுக்க முழுக்க சுட்ட பழம் தான். ரஷ்ய திரைப்படமான “THE DAWNS HERE ARE QUIET” ஐ சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் "விடியல் இங்கே அமைதியாகத் தான் இருக்கிறது" என தமிழ் பெயர்த்து ஒளிபரப்பினார்கள். அதிலே கதை நகர நகர ஆகா! இது நம்ம பேராண்மை படத்தோட கதையாச்சே, இதை ரஷ்யக்காரர்கள் சுட்டுவிட்டார்களா என நினைக்க முடியாத அளவிற்கு அது அதறப்பழசான கருப்பு வெள்ளைத் திரைப்படம். இதிலேயும் 5 பெண்கள் ஒரு வயதான கதாநாயகன். ரஷ்யாவில் சாதாரண விவசாயியாக இருக்கும் ஒருவர் புரட்சியில் பங்கேற்றுப் பிறகு ராணுவத்தில் ஒரு படை பிரிவுக்கு தலைமை ஏற்கிறார். அவரிடம் பயிற்சி பெற வரும் 5 மாணவிகள் அவரது தோற்றத்தைப் பார்த்து இழிவுபடுத்துகிறார்கள். இரண்டாம் உலகப்போர் நடக்கும் சமயம் ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் உள்ள காட்டிற்குள் அத்துமீறி நுழையும் ஜெர்மானியப் படை வீரர்களை எதிர்த்து அவர்களை துவம்சம் செய்வது தான் இந்தப் படத்தின் கதை.

பேராண்மையில் வருவது போலவே காட்டிற்குள்ளே ஜெர்மானியர்கள் 16 பேர் நுழைகிறார்கள். அவர்களை அந்த ஆற்றைக்கடக்க விடாமல் தடுக்க மரங்களை வரிசையாக‌ வெட்டி சாய்க்கிறார்கள் இந்தப் போராளிகள். இதேபோல போராடுகிறார்கள். தகவல் சொல்ல அந்தக் குழுவிலிருந்து ஒரு பெண் கேம்ப் நோக்கிச் செல்லும் வழியில் புதை சேற்றில் சிக்கிக் கொண்டு தன் உயிரை விடுகிறாள். கடைசியில் பெண்கள் அனைவரும் இறந்து விட கதாநாயகன் மட்டுமே மிஞ்சியிருக்கிறார். இது தான் அந்த ரஷ்யத் திரைப்படத்தின் கதை.

ஜனநாதனைப் பொருத்தவரை அவரிடம் மததுவேசம் கிடையாது. கம்யூனிச மற்றும் பெரியாரிச கொள்கைகளில் கொஞ்சமாக நாட்டம் உடையவர். அவர் இயக்கிய முந்தைய திரைப்படமான ஈ மிக பிரம்மாண்ட வெற்றியடைந்தது. தேவிபாலா தியேட்டரில் கூட ஒரு மாதம் கழித்தும் 20 ரூபாய் டிக்கெட்டை 50 ரூபாய்க்கு விற்றார்கள். அந்த அளவிற்கு அதிலே செய்திகள் இருந்தது. வெளி நாடுகளின் மரண வியாபாரிகள் தங்கள் மருந்துகளைச் சோதிக்க இந்தியாவின் சேரி ஜனங்கள் மீது ஏவும் பரிசோதனையை தோலுரித்துக் காட்டியிருந்தார்.

ஆனால் பேராண்மை திரைப்படம், எண்ணெய் தடவுன தாளை மேல வச்சி படம் வரைஞ்சது மாதிரி ரஷ்யக்கதைய முழுசா சுட்டுப் படமெடுத்து விட்டு அதிலே ஒரு ஹாலிவுட் நடிகரையும் நடிக்க வைத்து, வெளி நாட்டுக் காரர்களையும் இந்தப் படத்தைப் பார்க்க வைத்து தமிழ் சினிமாவின் தரத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கும் கொண்டு சென்றுவிட்டார் நம் இயக்குனர். இது வெளிவந்த சேதி. இன்னமும் வெளிவராத அட்டுக்காப்பிகள் எத்தனையோ! யாரு பார்த்தா? வாழ்க தமிழ்சினிமா, வளர்க திருட்டு டிவிடி.

THE DAWNS HERE ARE QUIET லிருந்து சாம்பிள் காட்சி ஒன்று :

already seen this

23 Response to "சாயம் வெளுத்துப் போன பேராண்மை"

  1. goma said...

    இனிமே படம் எடுப்பவர்கள்
    ரசிகர்களே!உங்களுக்கு , சுட்ட படம்
    சுடாத படம் வேண்டுமா “ன்னு கேட்டு படம் எடுத்தால் நல்லது

  2. vasu balaji said...

    இவங்க எடுத்த படத்த டிவி போட்டா அது திருட்டு டிவிடி. வேறு மொழி படத்த இவங்க எடுத்தா அதுக்கு பேரு படம்.:)

  3. S.A. நவாஸுதீன் said...

    அடச்சே. சென்ற வருடத்தின் மிகச்சிறந்த படமா என்னோட லிஸ்ட்ல அதத்தான் வச்சிருந்தேன். அதுவும் சுட்ட படம்தானா. இருந்தாலும் படம் சூப்பர் சும்மா சொல்லக்கூடாது. ஆனால் தழுவல்னு எதாவது ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாலே போதுமானது. யாரும் அதுக்காக அவரை கொலை பண்ணப்போறது கிடையாது. மாறாக நல்ல படத்தைதான் எடுத்திருக்கிறார் என்ற நல்ல பெயரும் கிடைத்திருக்கும். ஜனநாதன், மிஸ் பண்ணிட்டீங்களே.

  4. S.A. நவாஸுதீன் said...

    ////வானம்பாடிகள் said...
    இவங்க எடுத்த படத்த டிவி போட்டா அது திருட்டு டிவிடி. வேறு மொழி படத்த இவங்க எடுத்தா அதுக்கு பேரு படம்.:)////

    எழுத்தும், ஆக்கமும்

  5. sathishsangkavi.blogspot.com said...

    நல்ல படங்கள், நல்ல விமர்ச்சனம்..

  6. ஷாகுல் said...

    நிஜாம், அந்த ரஸ்ய படத்தை தழுவிதான் எடுக்கப்பட்டது. படம் வந்தவுடன் அனைவரும் சொன்னாங்க. ஆணா காட்சிக்கு காட்சி அப்படி இருக்கா?
    ரொம்ப தழுவிட்டாங்க போல இருக்கு.

  7. சூர்யா ௧ண்ணன் said...

    //வானம்பாடிகள் said...

    இவங்க எடுத்த படத்த டிவி போட்டா அது திருட்டு டிவிடி. வேறு மொழி படத்த இவங்க எடுத்தா அதுக்கு பேரு படம்.:)
    // அதேதான்!..,

  8. sarvan said...

    நீங்க "title" சரியாய் பாக்கலன்னு நினைக்கிறேன். பரிஸ் வசிலியவ்வின் " அதிகாலையின் அமைதியில்" நினைவுகளுடன் என்று படம் துவங்கும்

  9. அப்துல்மாலிக் said...

    இருந்தாலும் பரவாயில்லை ஒரு தரமான படம் பார்த்த திருப்தி.. மன்னிச்சி விட்டுட்டு எடுக்கப்பட்ட விதத்தை பார்ப்போம்

  10. siva said...

    nowadays I am totally pissed off ,sorry for the language,but nowadays almost everyone in Tamil cinema are copying and stealing from someone,and most of the times they don't even declare they are copying from somewhere.
    The great Tamils have lost their creativeness and originality.They are now only interested in making few quiick bucks by stealing somebody elses work and pretending to be genuine artists.
    Tamils used to be good story tellers full of creative talent .now we don't see many of them.
    They remake the film or remix the songs .
    They recycle the title of old Tamil films.Rehash the same old story.
    Thank god we still have creaters like director Bala and few others.

  11. நிஜாம் கான் said...

    // goma said...

    இனிமே படம் எடுப்பவர்கள்
    ரசிகர்களே! உங்களுக்கு , சுட்ட படம்
    சுடாத படம் வேண்டுமா “ன்னு கேட்டு படம் எடுத்தால் நல்லது//

    அவ்வையார் மாதிரியா ஹோமா? கருத்துக்கு நன்றி

  12. நிஜாம் கான் said...

    // வானம்பாடிகள் said...

    இவங்க எடுத்த படத்த டிவி போட்டா அது திருட்டு டிவிடி. வேறு மொழி படத்த இவங்க எடுத்தா அதுக்கு பேரு படம்.:)//

    அண்ண்! திருட்டு டிவிடிக்கு போராட்டம் நடத்துபவர்கள் திருட்டு கதைக்கும் போராட்டம் நடத்துவார்களா?

  13. நிஜாம் கான் said...

    // S.A. நவாஸுதீன் said...

    அடச்சே. சென்ற வருடத்தின் மிகச்சிறந்த படமா என்னோட லிஸ்ட்ல அதத்தான் வச்சிருந்தேன். அதுவும் சுட்ட படம்தானா. இருந்தாலும் படம் சூப்பர் சும்மா சொல்லக்கூடாது. ஆனால் தழுவல்னு எதாவது ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாலே போதுமானது. யாரும் அதுக்காக அவரை கொலை பண்ணப்போறது கிடையாது. மாறாக நல்ல படத்தைதான் எடுத்திருக்கிறார் என்ற நல்ல பெயரும் கிடைத்திருக்கும். ஜனநாதன், மிஸ் பண்ணிட்டீங்களே.//

    என்ன செய்யறது நவாஸ். சிறந்த இயக்குனர்களில் ஒருவர் நம்ம ஜனநாதன் அவர்கள். என்ன செய்யறது?

  14. நிஜாம் கான் said...

    // Sangkavi said...

    நல்ல படங்கள், நல்ல விமர்ச்சனம்..//

    எந்த படத்த சொல்றீங்கண்ணே! ரெண்டு படமும் நல்ல படமுமே!

  15. நிஜாம் கான் said...

    //ஷாகுல் said...

    நிஜாம், அந்த ரஸ்ய படத்தை தழுவிதான் எடுக்கப்பட்டது. படம் வந்தவுடன் அனைவரும் சொன்னாங்க. ஆணா காட்சிக்கு காட்சி அப்படி இருக்கா?
    ரொம்ப தழுவிட்டாங்க போல இருக்கு.//

    இது தான் ஆரத்தழுவுதல் என்பதோ ஷாகுல்??

  16. நிஜாம் கான் said...

    /சூர்யா ௧ண்ணன் said...

    //வானம்பாடிகள் said...

    இவங்க எடுத்த படத்த டிவி போட்டா அது திருட்டு டிவிடி. வேறு மொழி படத்த இவங்க எடுத்தா அதுக்கு பேரு படம்.:)
    // அதேதான்!..,

    வருகைக்கும், புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றிண்ணே!

  17. நிஜாம் கான் said...

    // sarvan said...

    நீங்க "title" சரியாய் பாக்கலன்னு நினைக்கிறேன். பரிஸ் வசிலியவ்வின் " அதிகாலையின் அமைதியில்" நினைவுகளுடன் என்று படம் துவங்கும்//


    சரவன் அண்ணே! படம் அப்படித் தான் தொடங்குது அதிலே மாற்றமில்லை. அதிகாலை அமைதியில் என்பது ஒரு நாவல். அது தான் மூலக்கதை. ஆனால் கதை ஜனநாதன் என டைட்டில் போடுவது தான் பிரச்சனையே!

  18. நிஜாம் கான் said...

    //அபுஅஃப்ஸர் said...

    இருந்தாலும் பரவாயில்லை ஒரு தரமான படம் பார்த்த திருப்தி.. மன்னிச்சி விட்டுட்டு எடுக்கப்பட்ட விதத்தை பார்ப்போம்//

    அப்ஸர்! நாம யாரையும் குறை சொல்லவும் இல்லை. மன்னிக்கும் தகுதி நமக்கும் இல்லை. ஆனால் யாராய் இருந்தாலும் அடுத்தவர் படைப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  19. நிஜாம் கான் said...

    siva said...

    nowadays I am totally pissed off ,sorry for the language,but nowadays almost everyone in Tamil cinema are copying and stealing from someone,and most of the times they don't even declare they are copying from somewhere.
    The great Tamils have lost their creativeness and originality.They are now only interested in making few quiick bucks by stealing somebody elses work and pretending to be genuine artists.
    Tamils used to be good story tellers full of creative talent .now we don't see many of them.
    They remake the film or remix the songs .
    They recycle the title of old Tamil films.Rehash the same old story.
    Thank god we still have creaters like director Bala and few others.
    //

    Thanks for your comments. Stay tuned.

  20. Anonymous said...

    The film E also a copy of the film
    The constant gardener.But jananathan fraudulently telling his film E is the first film about bio-war.

  21. Anonymous said...

    இப்படித் தான் தமிழனின் மானத்தை வாங்கிவிடுகிறார்கள். ஜனநாதன் ஒரு உண்மையான மனிதராக இருந்திருந்தால் இது ஒரு ரஷ்ய படத்தின் தழுவல் என்று அறிவித்திருக்கவேண்டும். இப்போதெல்லாம் பெரியாரிஸம், பகுத்தறிவு என்று வெறும் விளம்பரதிற்காக தான். ஜனநாதனும் ஒரு சாதாரண அடுத்தவர் கற்பனையை திருடுபவர் என்று நிருபித்துவிட்டார்.

  22. நிஜாம் கான் said...

    // Anonymous said...

    The film E also a copy of the film
    The constant gardener.But jananathan fraudulently telling his film E is the first film about bio-war.//

    Thanks Anoy. Stay tuned

  23. நிஜாம் கான் said...

    // Karthik said...

    இப்படித் தான் தமிழனின் மானத்தை வாங்கிவிடுகிறார்கள். ஜனநாதன் ஒரு உண்மையான மனிதராக இருந்திருந்தால் இது ஒரு ரஷ்ய படத்தின் தழுவல் என்று அறிவித்திருக்கவேண்டும். இப்போதெல்லாம் பெரியாரிஸம், பகுத்தறிவு என்று வெறும் விளம்பரதிற்காக தான். ஜனநாதனும் ஒரு சாதாரண அடுத்தவர் கற்பனையை திருடுபவர் என்று நிருபித்துவிட்டார்.//

    கருத்துக்கு நன்றி கார்த்திக். ஆனாலும் ஜனநாதன் சிறந்த இயக்குனர் தான்

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,