இன்றோடு சேர்த்து மூன்றாம் நாள் கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொங்கல் பண்டிகை, யார் கொண்டாட வேண்டுமோ அவர்களிடத்திலே உற்சாகமில்லாமல் போய் நீண்ட நாளாகிவிட்டது. நகரத்திற்கு தீபாவளி, கிராமத்திற்கு பொங்கல் என்பார்கள். வழக்கமாக கிராமங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை இப்போது வலுவிழந்துவிட்டது. பிள்ளை இல்லாதவள் அம்மிக்குழவியை தொட்டியில் போட்டு ஆட்டுவதைப் போல, கற்பனை கதைகளைக் கொண்ட பண்டிகைகளுக்கு மத்தியிலே தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்தி கொண்டாட வேண்டியது இந்த பொங்கலைத் தான் என தந்தை பெரியார் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு பண்டிகை கொண்டாடும் சூழ்நிலையில் விவசாயியும் இல்லை, விவசாய நிலங்களும் இல்லை.
தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்:
கிராமப்புறங்களில் தீபாவளியை விட பொங்கலை அதிகம் எதிர்பார்பார்கள். தை'யிலே அறுவடை செய்து அவர்கள் பட்ட கடனையெல்லாம் போக்கி புத்தாடை அணிந்து மகிழ்வார்கள். ஆனால் பருவநிலை மாற்றம் , விளைச்சலின்மை, கந்துவட்டி என ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு எங்கிருந்து வரும் மகிழ்ச்சி? . 3 நாட்கள் தொடர்ந்த விடுமுறை, போனஸாக ஒரு மாத சம்பளம், தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள் வெளியீடு தியேட்டர் தியேட்டராக சுற்றி வந்து உல்லாசப் பொங்கலை நகரவாசிகள் அனுபவிக்க, இவர்களுக்காக உழைத்து உணவு தயாரித்த உழவன் அங்கே தலையிலே துண்டைப்போட்டுக் கொண்டு நிற்கிறான்.
இடைத்தரகர்கள்:
அவனின் உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றுவரை கிடைக்கவில்லை. அவன் விளைவிக்கும் பொருளுக்கு எவனோ விலை நிர்ணயிக்கிறான். இடைத்தரகர்கள் கோரப்பிடியிலே சிக்கி அவர்கள் நிர்ணயிப்பதே விலை என இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறான்.தங்கம் விலை உயர்ந்தால் விவசாயியை விட மகிழ்ச்சி கொள்பவன் யார்? காரணம் இவனின் நகைகளெல்லாம் வங்கிகளிலே அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. தங்கம் விலை ஏறினால் அதன் மதிப்பும் அதிகமாகி வட்டி குறையும் அல்லது இல்லாமல் போகும் என சொற்பமாக எதிர்பார்க்கிறான். விவசாயியின் ஓலம் பேரூந்து ஓடாத அவனின் கிராமத்தைத் தாண்டுவது இல்லை.
5 ரூபாய்க்கு விற்ற கரும்புக்கட்டு இன்றைக்கு 100 ரூபாய், 15 ரூபாய்க்கு விற்ற சர்க்கரை இன்றைக்கு 50 ரூபாய். நாணய விகிதத்தில் ஏறுமுகமும் காணப்பட்டால், பொருட்களின் விலை குறைவது தான் உண்மையான பொருளாதாரம். ஆனால் நமது ஊரில் நாணய மதிப்பும் விலைவாசியும் ஒரு சேர உயர்வது தான் ஆச்சரியம். கரும்புக்கு அவன் கேட்கும் விலையைக் கொடுக்க அரசுக்கு மனம் வரவில்லை. நாட்டுக்கே சோறு போடும் விவசாய மக்களின் விளைபொருட்களுக்கு சரியான விலை இன்று வரை நிர்ணயமில்லை. ஆனால் சமுதாயத்தை சீர் கெடுக்கும் சினிமாகாரர்களுக்கு விதவிதமான சலுகைகள், அறிவிப்புகள். தமிழில் பெயர் வைத்தால் அவர்களுக்கு வரிவிலக்கு. கரும்புக்கு கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தால் குடிமூழ்கிவிடும் என நினைக்கும் அரசு, கருப்புப் பண முதலைகளுக்கு கருனையோ கருனை காட்டுகிறது. திரையிலே கருப்புபணத்தைப் பற்றி சொல்லி தங்களை யோக்கியர்களாகக் காட்டிக்கொண்டு நிஜத்தில் இருட்டு வாழ்க்கை வாழும் கோடியில் புரளும் இவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள்? திருட்டி விசிடி பிரச்சனை தான் நாட்டிற்கு மிக முக்கிய பிரச்சனையா. அதை ஒழித்துவிட்டால் நாட்டின் உணவுப்பிரச்சனை தீர்ந்துவிடுமா? எவனெவன் திருட்டு விசிடி விற்கிறான், எங்கெங்கு கிடைக்கிறது என எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் அதிலும் அறுவடை இருப்பதால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.
ஆசைகாட்டும் இடைத்தரகர் கும்பல்:
திருட்டு விசிடி பிரச்சனையை பிரதானமாகப் பார்க்கும் நாம் இன்னொரு பிரச்சனை குறித்து கண்டுகொள்வதேயில்லை. நாடு தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அபாயமே விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவருவது தான். நிலத்தில் முதலீடு செய்யுங்கள் என ரியல் எஸ்டேட்காரர்கள் கூவிக்கூவி அழைக்கிறார்கள். விவசாய நிலங்களை விற்பதற்கு விவசாயிகளுக்கு ஆசைகாட்டும் இடைத்தரகர் கும்பல் செயல்படுகிறது. திருட்டு விசிடி பிரச்சனையால் நாட்டுக்கு ஒன்றும் இழப்பு வராது. ஆனால் இந்த திருட்டு தரகர்கள் விவசாய நிலங்களை வாங்கி அதை மனைகளாக மாற்றி விற்க ஆரம்பித்துவிட்டார்களே இதனால் நாட்டுக்கு கடும்பாதிப்பு வராதா? பல இடங்களில் விவசாயத்தின் மீதுள்ள விரக்தியில் விவசாயிகளே அதை விற்றுவிட்டு நகரப்பகுதிகளில் செட்டிலாகிவிடுகிறார்கள். சில இடங்களில் விவசாயிகளை மிரட்டி நிலங்கள் பலவந்தமாக வாங்கப்படுகின்றன. இதெல்லாம் அரசின் கவனத்துக்குச் சென்றாலும் அது நேராக குப்பைக்கூடைக்குச் சென்றுவிடும். காரணம் சினிமா துறைபோல இதற்கு கவர்ச்சி கிடையாதே.
விவசாயிகள் சந்திக்கக் கூடிய மற்றொரு முக்கியப்பிரச்சனை விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை . 100 ரூபாயாக இருந்த விவசாய கூலி இன்றைக்கு 300 ரூபாய். ஆனால் கரும்புக்கு நிர்ணய விலை இன்றைக்கும் 2500 சொச்சம் தான். இதிலே நாம் தமிழக அரசை குறை சொல்ல இயலாது. காரணம் மத்திய அரசு இதிலே பாராமுகம் காட்டிவருகிறது. எவ்வளவோ சாதனைகள் இருந்தும் உணவு உற்பத்தியில் பெரிய சாதனை புரிந்துவிட்டோம் என இன்றைக்கும் தூர்தர்சனில் விளம்பரம் செய்யும் மத்திய விவசாயத்துறை பிறகு ஏன் சர்க்கரையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்திருக்கிறது. இந்தியாவில் பெரிய சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் பெரிய பெரிய பணமுதலைகளாக இருப்பதால் இந்த பதுக்கல் மற்றும் விலை உயர்த்தும் வேலையா? மத்திய உணவுத்துறை அமைச்சருக்கே பல சர்க்கரை ஆலைகள் செயல்படுகின்றவே!
சிங்கப்பூரை போல:
கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள் என விவசாயிகளிடம் கூறும் இவர்கள் இந்த பதுக்கல் விசயத்திலோ விலையேற்ற விசயத்திலோ கொஞ்சம் கூட யோசிப்பதே கிடையாதே! விவசாயிகளின் கடன் தள்ளுபடி என அரசு அறிவிக்கிறது. அதிலே பயன்பெறுபவர்கள் யார் எனப் பார்த்தால் டிராக்டர் வாங்கிய பெரிய பண்ணையார்களும், இரால் வளர்ப்பு மற்றும் மீன் வளர்பு பண்ணை அமைத்த முதலாளிகளும் தங்களின் லட்சக்கணக்கான கடனை வட்டியோடு தள்ளிவிட்டார்கள். ஆனால் உரம் வாங்க கடன்வாங்கிய விவசாயியின் பெயரை பத்திரிகையிலே வெளியிட்டு நாறடிக்கிறார்கள். நாம் கடைசியாக கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். வெறும் பொழுதைப் போக்கக் கூடிய கனவுத் தொழிலுக்கு ஒதுக்கும் நிதியும், சலுகைகளும் விவசாயத்திற்கும்,விவசாயிகளுக்கும் ஒதுக்கப்படவில்லையென்றால் உழவர் திருநாளைக் கொண்டாட ஒரு விவசாயி கூட மிஞ்சியிருக்க மாட்டான். விவசாய நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டால் பிறகு சிங்கப்பூரை போல அனைத்தையுமே இறக்குமதி செய்ய வேண்டியது தான். அன்றைக்கே சொன்னானே பட்டுக்கோட்டை கவிஞன்
காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சமென்று.
இனியாவது உழைப்பவர் வாழ்வு செழிக்கட்டும். அன்றைக்குத் தான் பொங்கும்
உண்மையான மகிழ்ச்சிப்பொங்கல்.


mm சொல்லி என்ன பயன்
superb analysis. i like this post very much. Thank you nizam.
முத்திரை பதிக்கும் இடுகை நிஜாம். அருமையான அலசல்.
//////3 நாட்கள் தொடர்ந்த விடுமுறை, போனஸாக ஒரு மாத சம்பளம், தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள் வெளியீடு தியேட்டர் தியேட்டராக சுற்றி வந்து உல்லாசப் பொங்கலை நகரவாசிகள் அனுபவிக்க, இவர்களுக்காக உழைத்து உணவு தயாரித்த உழவன் அங்கே தலையிலே துண்டைப்போட்டுக் கொண்டு நிற்கிறான்.///////
இதில் தவறோ/மிஸ் மேனேஜ்மெண்ட்டோ எதுவாயினும் அது அரசு தரப்பில் இருந்துதான்.
நன்றாக அலசி இருக்கிறீர்கள்
முந்தாநாள், என் வீட்டிற்கு பொங்கல் பதார்த்தங்களை கொண்டுவந்த பக்கத்து வீட்டு மூன்றாவது படிக்கும் சிறுவனிடம் கேட்டேன்: 'பொங்கல்னா என்னப்பா?'
அதற்கு அந்த சுட்டியின் பதில்:
"புது குக்கரில் அம்மா பொங்கல் சமைப்பார்கள், எல்லாருக்கும் புது டிரஸ், இன்னிக்கு ஸ்கூல் லீவு, அப்புறம் டிவியில் இன்று முழுசும் நிறைய ஸ்பெஷல் ப்ரோகிராம்ஸ். நோ சீரியல்ஸ்" என்றான். அவன் சொன்னதில் ஒன்று கூட பொய் இல்லை.
//அன்றைக்கே சொன்னானே பட்டுக்கோட்டை கவிஞன் காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சமென்று// -=- ஆனால்
இன்று அது பொருந்தாது.
"காடும் விளையலே மச்சான் நமக்கு கையும் காலும் கூட இல்லை மிச்சம்"
---என்றுதான் பாட வேண்டும்.
//வெறும் பொழுதைப் போக்கக் கூடிய கனவுத் தொழிலுக்கு ஒதுக்கும் நிதியும், சலுகைகளும் விவசாயத்திற்கும்,விவசாயிகளுக்கும் ஒதுக்கப்படவில்லையென்றால் உழவர் திருநாளைக் கொண்டாட ஒரு விவசாயி கூட மிஞ்சியிருக்க மாட்டான்.//
புரியாத ஆளா இருக்கீங்க.
எந்த விவசாயியாவது எலெக்ஷன் பூத்ல உக்காரானா? இல்ல எவனாவது பாராட்டு விழா நடத்தி பத்து பக்கத்துல கவிதை படிப்பானா?
விவசாயி எக்கேடு கேட்டா என்ன. அத ஒரு ரூவாய்க்கு அரிசி போடுறாங்கல்ல.
செல்லாது செல்லாது ....
/யார் கொண்டாட வேண்டுமோ அவர்களிடத்திலே உற்சாகமில்லாமல் போய் நீண்ட நாளாகிவிட்டது. /
சிறுவயதில் பொங்கல் வந்தால் வீட்டில் என் தாத்தா ஒரு பெரிய அடுக்காக வேட்டி, துண்டு, புடவை என்று வாங்கிவைத்து உழைப்பாளர்களுக்குக் கொடுப்பார்கள். பொங்கலன்று எங்கள் வீடுகளில் அவர்கள் அன்போடு கொண்டுதரும் பண்டங்கள்தான் உணவே. அதெல்லாம் நினைவுகளாக மட்டுமே இன்று!!
நல்ல அலசல்.
//பிரியமுடன் பிரபு said...
mm சொல்லி என்ன பயன்//
இருந்தாலும் சொல்ல வேண்டியது நம் கடமை தானே பிரபு சார்
//வானம்பாடிகள் said...
superb analysis. i like this post very much. Thank you nizam.
January 16, 2010 6:53 ப்ம் //
நன்றியண்ணே!
//S.A. நவாஸுதீன் said...
முத்திரை பதிக்கும் இடுகை நிஜாம். அருமையான அலசல்.
January 16, 2010 7:05 ப்ம் //
நன்றி நவாஸ்! தேவையான இடுகையும் கூட..
//goma said...
நன்றாக அலசி இருக்கிறீர்கள்
January 16, 2010 9:36 ப்ம் //
நன்றி கோமா! தொடர்ந்து வாங்க
//Muhammad said...
முந்தாநாள், என் வீட்டிற்கு பொங்கல் பதார்த்தங்களை கொண்டுவந்த பக்கத்து வீட்டு மூன்றாவது படிக்கும் சிறுவனிடம் கேட்டேன்: 'பொங்கல்னா என்னப்பா?'
அதற்கு அந்த சுட்டியின் பதில்:
"புது குக்கரில் அம்மா பொங்கல் சமைப்பார்கள், எல்லாருக்கும் புது டிரஸ், இன்னிக்கு ஸ்கூல் லீவு, அப்புறம் டிவியில் இன்று முழுசும் நிறைய ஸ்பெஷல் ப்ரோகிராம்ஸ். நோ சீரியல்ஸ்" என்றான். அவன் சொன்னதில் ஒன்று கூட பொய் இல்லை.
//அன்றைக்கே சொன்னானே பட்டுக்கோட்டை கவிஞன் காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சமென்று// -=- ஆனால்
இன்று அது பொருந்தாது.
"காடும் விளையலே மச்சான் நமக்கு கையும் காலும் கூட இல்லை மிச்சம்"//
உண்மைதான் முகமத்! முற்றிலும் உண்மை . நன்றி
// அஹோரி said...
//வெறும் பொழுதைப் போக்கக் கூடிய கனவுத் தொழிலுக்கு ஒதுக்கும் நிதியும், சலுகைகளும் விவசாயத்திற்கும்,விவசாயிகளுக்கும் ஒதுக்கப்படவில்லையென்றால் உழவர் திருநாளைக் கொண்டாட ஒரு விவசாயி கூட மிஞ்சியிருக்க மாட்டான்.//
புரியாத ஆளா இருக்கீங்க.
எந்த விவசாயியாவது எலெக்ஷன் பூத்ல உக்காரானா? இல்ல எவனாவது பாராட்டு விழா நடத்தி பத்து பக்கத்துல கவிதை படிப்பானா?
விவசாயி எக்கேடு கேட்டா என்ன. அத ஒரு ரூவாய்க்கு அரிசி போடுறாங்கல்ல.
செல்லாது செல்லாது ....//
நன்றி அஹோரி சார், நல்ல காமெடி பின்னூட்டம்,
// ஹுஸைனம்மா said...
/யார் கொண்டாட வேண்டுமோ அவர்களிடத்திலே உற்சாகமில்லாமல் போய் நீண்ட நாளாகிவிட்டது. /
சிறுவயதில் பொங்கல் வந்தால் வீட்டில் என் தாத்தா ஒரு பெரிய அடுக்காக வேட்டி, துண்டு, புடவை என்று வாங்கிவைத்து உழைப்பாளர்களுக்குக் கொடுப்பார்கள். பொங்கலன்று எங்கள் வீடுகளில் அவர்கள் அன்போடு கொண்டுதரும் பண்டங்கள்தான் உணவே. அதெல்லாம் நினைவுகளாக மட்டுமே இன்று!!
நல்ல அலசல்.//
நன்றி ஹூசைனம்மா தொடர்ந்து வாங்க