பர்தாவும் பெண் அடிமைத்தனமும்
இஸ்லாமியப் பெண்கள் நல்ல முறையில் உடையணிந்து விட்டு அதன் மீது ஒரு கருப்பு நிற ஆடையைப் போட்டு மூடிக்கொள்ளும் எக்ஸ்ட்ரா ஆடை தான் பர்தா . இந்த பர்தா பெண் அடிமைத்தனத்தின் சின்னம் என பல புதுமைப்பெண்களும், புதுமை ஆண்களும் பேசி வருகிறார்கள். பெண்கள் தங்களின் மானத்தையும், அழகையும் அன்னிய ஆண்களிடமிருந்து காத்துக்கொள்ள இஸ்லாமிய சமூகம் அணியும் ஆடைதான் இந்த பர்தா. அப்படியானால் பர்தா போடாத மாற்றுமத சகோதரிகள் எல்லாம் மானமில்லாதவர்களா? என்ற கேள்விக்கு இடமேயில்லை. காரணம் பெண்கள் அணியும் சுடிதார் கூட ஒரு வகையில் பர்தா தான். இஸ்லாமியப் பெண்கள் கொஞ்சம் அதிகமாக தலையையும் சேர்த்து மறைத்துக்கொள்கிறார்கள். ஆனால் முகத்தை மறைப்பது யார் கற்றுக்கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. பர்தா இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு எவ்வித சட்டமும் இல்லை.

அனைத்திலும் சமஉரிமை கோரும் பெண்கள் சமூகம் உடையில் மட்டும் சம உரிமை கோர இயலாது. காரணம் ஒரு ஆண் வெறும் ஜட்டியுடன் நடு ரோட்டில் நின்று தன் பணியில் ஈடுபட்டாலும் அதை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு பைத்தியக்கார பெண்ணின் ஆடை நழுவினாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டமே கூடிவிடும். இது ஆண்களைச் சொல்லிக்குற்றமில்லை. பெண்களின் உடலமைப்பு அப்படி. அதுமட்டுமின்றி பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தி சமூகத்தை சீரழிக்கும் சினிமா உலகம் கற்றுத்தந்த பாடம். எனவே தான் பெண்கள் தங்கள் உடலமைப்பை காமுகர்களின் பார்வையில் இருந்து தற்காத்துக் கொள்ள கொஞ்சம் கூடுதலாக உடையணிய வேண்டியிருக்கிறது. சேலை லேசாக விலகினாலும் அதைக்கூட தன் மொபைலில் படமெடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் இன்றைய நவீன உலகத்தில் பெண்களின் மானத்திற்கு கவச உடை தான் இந்தப் பர்தா.
மலேசிய பாரம்பரிய உடையும், கலாச்சார சீரழிவும் :

மேற்கண்ட படத்தில் இருப்பது மலேசியர்களின் பாரம்பரிய ஆடை. ஆனால் இப்போது ஐரோப்பிய கலாச்சாரம் அங்கே தொற்றிவிட்டதால் இப்போது இதை ஏதாவது விசேசங்களுக்கு மட்டுமே மலேயப் பெண்கள் அணிகின்றனர். இந்த மலேசிய பாரம்பரிய உடையும் ஒரு வகை பர்தா தான். என்றைக்கு மலேசிய பெண்கள் தங்கள் பாரம்பரிய ஆடையை கைவிட்டு ஐரோப்பிய கலாச்சார இறக்குமதி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்களோ அன்றைக்கே ஆரம்பமாகிவிட்டது மலேசிய கலாச்சார சீரழிவு. அந்தப் பெண்கள் தங்கள் பாரம்பரிய ஆடையை மறந்து எப்போது இறுக்கமான முன்னழகுகளை எடுப்பாகக் காட்டக்கூடிய டி.சர்ட்டுகளை அணிய ஆரம்பித்தார்களோ அன்றைக்கே துவங்கிவிட்டது சர்வநாசம். முஸ்லீம்கள் பெறும்பான்மையாக வாழும் மலேசியாவின் ஆடைக்கலாச்சாரம் அவர்களைப் படுகுழியில் தள்ளிவிட்டது. ஆடையின் சீரழிவால் பல பெண்கள் அங்கே கிவ் அன் டேக் பாலிசியில் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும்.
தன் மனைவிகள், தன் சகோதரிகளை மட்டும் யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துவிடக்கூடாது என நினைக்கும் பல முற்போக்குவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் மற்ற பெண்கள் மட்டும் எப்படி மூடிமறைக்கலாம்? இது அடிமைத்தனம் என கூவுகின்றனர். அவர்கள் தங்கள் மனைவிகளையும், சகோதரிகளையும் சினிமாவில் வருவது போன்ற கவர்ச்சி உடையில் வெளியே அழைத்து வருவார்களா? பர்தா என்பது மிக கனமான உடை, அதை எப்படித் தான் பெண்கள் அணிகிறார்களோ? எனவே அதை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என ஆடு நனைய ஓநாய் அழுவதைப் போல கதறும் சிலர் மழைக்கு குடை பிடிப்பதை கனம் என்று நினைப்பார்களோ? அல்லது காலுக்கு பாதுகாப்பாக அணியும் ஷூ'வை பாரமாக நினைப்பார்களோ? ஐரோப்பிய நகரங்களில் ஏன் தற்சமயம் நம் வட மாநிலங்களில் வாட்டி எடுக்கும் குளிருக்கு அதிகமாக ஒரு கனமான ஓவர்கோட்டை ஏன் அணிகிறார்கள்? அதிலெல்லாம் எவ்வாறு ஒரு பாதுகாப்பு நிலவுகிறதோ அதே போல இந்த பர்தாவிலும் ஒரு பாதுகாப்பு இருக்கிறது.

கருப்பு தான் பர்தாவின் கலரு:
எப்படித்தான் இந்த கருப்பு நிறம் பர்தாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறமாக மாறியதோ தெரியவில்லை. ஆனால் இப்படி கருப்பில் தான் பர்தா அணிய வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. சென்னை மண்ணடி பகுதியில் போரா வகை முஸ்லீம் பெண்கள் பல நிறங்களில் பூக்கள் டிசைன் செய்த பர்தாக்களை அணிகின்றனர். அதுமட்டுமின்றி நம் கன்னியாஸ்திரி சகோதரிகள் அணியும் வெள்ளை நிற அங்கியும் ஒரு வகை பர்தாவே ஆகும்.
கருனையின் மறுஉருவாய் மக்கள் சேவைக்காக தன் வாழ்க்கையையே சமர்ப்பித்த அன்னை தெரசா அவர்கள் அணிந்திருந்த உடையும் பர்தா தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அணிந்திருக்கும் உடையைக்கூட ஒரு வகையிலே பர்தாவாக சேர்த்துக்கொள்ளலாம். பர்தா பெண்களை கண்ணியப்படுத்துகிறது. அவர்களை பாதுகாப்பது மட்டுமின்றி ஆண்களின் சபலத்திலிருந்தும் தடுத்துவிடுகிறது.

விஜய் டிவி நீயா நானாவில் பர்தா சர்ச்சை:
கடந்த வாரம் விஜய்டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பர்தா கண்ணியப்படுத்துகிறதா?இழிவுபடுத்துகிறதா? என்ற ஒரு தலைப்பில் ஒரு நிகழ்ச்சியும் தயாராகி அதிலே கலந்துகொண்ட இஸ்லாமிய பெயர் தாங்கி பெண்ணொருத்தி பர்தா எங்கள் பெற்றோர்கள் வற்புறுத்தி தான் அணியச்சொல்கிறார்கள் என்றும், நாங்கள் எங்கள் அழகை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறோம் என்றும் பேசிய பேச்சுகள் முன்னோட்டத்தில் ஒளிபரப்பாகியது. இதைக்கண்டு வெகுண்டெழுந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு விஜய் டிவியைத் தொடர்பு கொண்டு கண்டிக்க அவர்கள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதை நிறுத்திக்கொண்டார்கள். அதுமட்டுமின்றி டி.என்.டி.ஜே அமைப்பினர் உங்களுக்கு பர்தா குறித்த சந்தேகங்கள் இருந்தால் எங்களோடு விவாதம் நடத்தி ஒளிபரப்புங்கள்.பெயரில் மட்டுமே இஸ்லாமியர்களாக இஸ்லாமிய கோட்பாடுகளை அறியாதவர்களிடம் விவாதம் நடத்தி இழிவுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் பர்தா இழிவு படுத்துகிறது என்று கருத்து சொல்ல அந்த ஒரு பெண் மட்டுமல்ல ஏகப்பட்ட இஸ்லாமிய பெண்கள் இருக்கிறார்கள். ஷகீலா, மும்தாஜ், ஷர்மிலி, முமைத் கான், ஃபாராகான், தபு,குஷ்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வகையைச் சார்ந்த ஒருத்தியின் கருத்துக்களை பலமாக ஒளிபரப்பி ஒட்டுமொத்த இஸ்லாமிய பெண்களும் பர்தாவை வெறுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? எத்தனையோ முஸ்லீம் பெண்கள் காதலில் விழுந்து யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள்.அந்த வகையைச் சார்ந்த ஒரு பெண்ணின் கருத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாக எப்படி எடுத்துக்கொள்வது?
இஸ்லாமிய பெண் முற்போக்கு பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஷ்ரீன் மிகவும் விரும்பிக்கேட்ட கர்ப்பப்பை சுதந்திரத்தை அதாவது யாருடைய/எத்தனை பேருடைய கருவை வேண்டுமானாலும் சுமக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்ற கருத்தைக் கொண்டு நீயா நானா நடத்தினாலும் அதற்கும் கூட பரிந்து பேச சிலர் வரத்தான் செய்வார்கள்.அதேபோல திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்துக்கொள்ளலாம் ஆனால் அது பாதுகாப்பான உறவாக இருக்க வேண்டும் என தலைப்பு வைத்தாலும் அதற்கும் பரிந்து பேச குஷ்பு போன்ற சிலர் வரத்தான் செய்வார்கள். பெண்கள் தங்களின் முகம், முன்னங்கை தவிர மற்ற அனைத்தையும் அந்நியர்கள் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ளட்டும் என சொல்லும் இந்த இஸ்லாமியக் கோட்பாட்டிலே என்ன தவறு இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் தன் உயிர்கொடுத்தேனும் இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என பிறப்புக்கொள்கைகளாக உடைய மைக்ரோ பாயிண்டினர் சிலர் நாம் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
விபச்சாரிகளும் அணியும் பர்தா :
பர்தாவை முஸ்லீம் பெண்கள் மட்டுமல்ல, போதைப்பொருள் கடத்துபவர்கள், விபசாரிகள் என சட்டவிரோத கும்பல்கள் தங்களைக் காத்துக்கொள்ள பர்தாவைப் போர்த்திக்கொண்டு உலவுவதும்,மாட்டிக்கொண்ட சினிமா விபச்சாரிகள் நீதிமன்றம் வரும் போது பர்தா அணிந்து வருவதும் என சட்டத்தின் பார்வையில் தங்களை மறைத்துக்கொள்ளவும் பர்தா நன்றாக உதவுகிறது. கிழக்குக் கடற்கரை சாலையில் சில பெண்கள் தங்கள் காதலர்களுடன் உல்லாசமாக மோட்டார் பைக்கில் செல்வதற்கும் தங்களை மறைத்துக்கொண்டு செல்வதற்கு பர்தா ஒரு சிறந்த ஆயுதம்.

இதே பிரச்சசை பிரான்ஸில் எழுந்ததால் அங்கே இனி இஸ்லாமிய பெண்கள் முகங்களை மறைத்துக் கொண்டு பர்தா அணியக்கூடாது என அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது பிரான்ஸ் அரசாங்கம். எனவே பர்தா அணியும் நமது சகோதரிகளும் இறைத்தூதர் சொன்னதன் படி முகத்தை மறைக்காமல் பர்தா அணிய ஆரம்பித்தால் முகத்தை மறைத்திருக்கும் விபச்சாரிகளும், சட்ட விரோதிகளும் பர்தா உபயோகிப்பதை நிறுத்திவிடுவார்கள். மற்றபடி பர்தா அணியக்கூடாது என்று சொல்வதற்கோ, அதைத் தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையும் இல்லை.
ஒரு முக்கிய அறிவிப்பு: இங்கே சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் இஸ்லாமிய சமூக பெண்களை மட்டுமே குறிக்கக்கூடியதாகும். அதைவிடுத்து மற்றைய எந்த சகோதரிகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. அப்படி ஏதேனும் கருத்துக்கள் தவறாக இருந்தால் தாராளமாக தெரிவியுங்கள்.


நல்ல வாதம்..
நிஜாம் இப்பத்தான் எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்காங்க...
நீங்க மறுபடி ஏன் இதனை விவாதம் ஆக்குகிறீர்கள்.
இந்த பதிவை நீக்கினால் மகிழ்ச்சி
ஏனெனில் இதுகுறித்து நடக்கும் விவாதங்களில் இரு தரப்பிலும் சில பேரால் வரும் தரம் குறைந்த வார்த்தைகள் சகிக்க முடியாததாக இருக்கிறது.
mika sirappaana pathivu.vazthukal nizam.muslimkal thangalai patri solli kolvathil enna thavaru.ithil thevai illaamal aduththavarkal mookkai nuzaikkum pothu thaan piratchinai.
PLEASE CLICK AND READ THE LINKS BELOW
இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
"நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?
"நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
//இனி இஸ்லாமிய பெண்கள் முகங்களை மறைத்துக் கொண்டு பர்தா அணியக்கூடாது என அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது பிரான்ஸ் அரசாங்கம். எனவே பர்தா அணியும் நமது சகோதரிகளும் இறைத்தூதர் சொன்னதன் படி முகத்தை மறைக்காமல் பர்தா அணிய ஆரம்பித்தால் முகத்தை மறைத்திருக்கும் விபச்சாரிகளும், சட்ட விரோதிகளும் பர்தா உபயோகிப்பதை நிறுத்திவிடுவார்கள். மற்றபடி பர்தா அணியக்கூடாது என்று சொல்வதற்கோ, அதைத் தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையும் இல்லை.//
நல்லதொரு முடிவு.
நாகரிக வளர்ச்சி , பெண்களையும் அடைய வேண்டும் . காலத்தின் மர்ற்றங்களை , அவர்களுக்கும் அளிக்க வேண்டும் .
ஸலாமலைக்கும் நிஜாம் பாய்.
அருமையான எழுத்துக்களுக்கு நன்றி
நான் ‘பர்தா’ அணிவது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்
http://nagoreismail786.blogspot.com/2009/12/blog-post_31.html
எனக்கு உமர் (ரலி) அவர்கள் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது,
“நாங்கள் இஸ்லாமியர்கள். எங்களுக்கு இறைவன் இஸ்லாத்தின் மூலமாக கண்ணியத்தை கொடுத்தான். நாங்கள் வேறு எங்கே போயும் கண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று மிக அற்புதமாக சொன்னார்கள்
இஸ்லாம் ஆண்களுக்கு சரி, பெண்களுக்கும் சரி கண்ணியத்தையே கொடுத்திருக்கிறது.
அவசியமான நல்ல பதிவு நிஜாம்.
பெண்களை ஊருக்கு எல்லாம் உலகுக்கெல்லாம் பொது போகப்பொருளாக கவர்ச்சி சின்னமாக, தன் வக்கிர வடிகாலாக, ஆபாச சின்னமாக உருவாக்க ஒரு ஆணாதிக்க வல்லாதிக்கம் பல ஆண்டுகளாய் பல உத்திகளை கையாண்டு வருகின்றது.
அந்தப்புரம், அடிமைப்பெண்கள், தேவதாசி, உடன்கட்டை, நாட்டியம், நடனம், காபரே, கவர்ச்சி குலுக்கு டான்ஸ், அழகிப்போட்டிகள், மாடலிங், டேடிங்-பார்ட்டி, ஜன்னல் ஜாக்கட், லோகட், லோஹிப், ஸ்லீவ்லெஸ், சீதுரு டிரஸ், டைட் பிட் ட்ரெஸ் ... இத்யாதி...இத்யாதி..
என்று பெண்களை கிட்டத்தட்ட வெற்றிகரமாக ஆண்களின் போகப்பொருளாய் ஒரு வக்கிரத்துடன் ஆண்களின் நுகர்பொருளாய் மாற்றிய "முற்போக்கு நாகரிக பன்னாட்டு பின்நவீனத்துவ வல்லாதிக்க சக்தி"களுக்கு 'இஸ்லாமிய பர்தா' என்ற இரும்புத்திரை பெரிய அரணாய் இருந்து கொண்டு இவர்களின் வியாபாரத்தை தடுத்துக்கொண்டு இருக்கிறது. அதனை உடைக்க பலவாறு பலமாய் போராடி வருகிறார்கள். இருந்தும் இந்த வலையில் சிக்காமல் பெருவாரியான முஸ்லிம் பெண்கள் தப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தடம்புரண்ட பலர் பட்டுத்தெரிந்து கொள்கிறார்கள்(எனினும் இழப்பு இழப்புதானே).
ஒருகாலத்தில் பெண்களுக்கு மாராப்பு கேட்டு(கேரளா) போராடி வெற்றிபெற்று ஆபாச சுவரொட்டிகளை கருப்படித்து பெண்ணியத்தை காப்பாற்றிய நிஜ பெண்ணியவாதிகள் இன்றில்லை.
ஆணாதிக்கவாதிகளிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு பர்தாவை 'பெண்ணடிமைத்தனம்' எனவும் 'ஆணாதிக்கம்' எனவும் கூக்குரலிடும்- 'குறி'களை பற்றி கவிதைபாடும் போலி பெண்ணியவாதிகளே மலிந்துள்ளனர். இவர்கள்,
தன் பாதுகாப்புக்காகவும் தன் கண்ணியத்துகாகவும் இஸ்லாம் கூறிய அறிவுரையை விரும்பி பெண்கள் தேர்ந்தேடுத்துக்கொண்டதை வலுக்கட்டாயமாக களைந்து துகிலுரிக்க முயல்வதுதானே ஆணாதிக்கம்? அதுதானே பெண்ணடிமைத்தனம்? இதைத்தானே எதிர்க்க வேண்டும்?
பெண்விடுதலை என்பது பெண்களுக்கா அல்லது அவர்களின் உடல்களுக்கா?
என்னத்த சொல்ல? எல்லாம் தலைகீழா போச்சு.
//இந்த பர்தா பெண் அடிமைத்தனத்தின் சின்னம் என பல புதுமைப்பெண்களும், புதுமை ஆண்களும் பேசி வருகிறார்கள்//
இன்று மட்டும் அல்ல. காலம் காலமாக பலர் பேசி வந்துள்ளனர். இசுலாமிய நாடுகளில் இல்லாமல், பிற் நாடுகளில்.
அவர்கள் எல்லாரும் சாதாரணமானவர்களே.
இசுலாமியர் அல்லாத ஒருவன் அப்படி நினத்தால், அல்லது பேசிக்கொண்டால், உடனே, ‘புதுமை ஆண்’, ‘புதுமைப்பெண்’ என்று சொல்லிவிடலாமா?
புதுமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு உங்களுக்குப்பிடித்தவாறு பொருளா?
//பெண்கள் தங்களின் மானத்தையும், அழகையும் அன்னிய ஆண்களிடமிருந்து காத்துக்கொள்ள.../
அன்னிய ஆண்கள் சரி. அபபடியென்றால் உடன்பிறந்த ஆண்கள், பெற்றெடுத்த தந்தை இவர்க்ளுடன் இருக்கும் போது பர்தா தேவையில்லை என்று இசுலாம் சொல்கிற்தா என்று எனக்குத் தெரியாது.
Mr Nijam சொனனால் நன்றியுடையவனாயிருப்பேன்.
//மானம்..அழகு//
இவையும் பிரச்சனைக்குறிய சொற்களே.
வயதான பெண்கள் - 80யும் தாண்டிய கிழவிகள் - பர்தாவில் இருக்கக் காண்கிறோம். எதற்காக மிஸ்டர் நிஜாம்?
//ஆனால் முகத்தை மறைப்பது யார் கற்றுக்கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை//
நண்பரே...அத்வும் சரியே, பர்தா சரியென்றால்.
அன்னிய ஆண்கள் - இவர்கள்தானே பிரச்ச்னை.
முகத்தை மறைத்தல், இவர்களின் கண்களை நேருக்குனேர் பார்க்காமலிருக்க உதவும்.
பர்தா பெண்ணடித்தனம் இல்லயென்றால், முகத்தை மறைத்தல் மிகவும் சரியே.
நேருக்கு நேர் அன்னிய ஆடவனைன் கண்ணடி படுதல் பொதுவாகப்பெண்கள் விரும்புவதில்லை அவ்வாடவன் ஒரு பொருக்கி என்று ஊரறிந்த கதையாக இருக்கும்பட்சத்தில்.
பெண் உள்ளத்தைப் புரிந்த பின்னரே, இப்படிப்பட்ட பதிவுகள் எழுதத்துணிவது நலம்.
//பர்தா இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு எவ்வித சட்டமும் இல்லை//
Not fully correct. In certain places, there are prescriptions of what type to wear.
You cant write in common terms please
//சமஉரிமை கோரும் பெண்கள் சமூகம் உடையில் மட்டும் சம உரிமை கோர இயலாது. காரணம் ஒரு ஆண் வெறும் ஜட்டியுடன் நடு ரோட்டில் நின்று தன் பணியில் ஈடுபட்டாலும் அதை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்//
தவறுதலான புரிதல்.
சம உரிமை என்றால் என்ன என்று ஆராய்ந்தீர்களா?
உடையில் பெண்கள் சம உரிமை கேட்கவில்லை.
ஜீன்ஸ் போடுகிறார்கள் அஃது அவர்களுக்கு வசதியாக இருப்பதால்.
அது கவர்ச்சியாக இருக்கிற்து என்றால், பர்தாவைக்கூட கவர்ச்சியாக அணியமுடியும் - தையல்காரர் தன் திறமையைக்காட்டசொன்னால் செய்வார்.
ஆண் ஜட்டி போட்டு நிற்கிறான். பெண் அந்த உரிமையைக் கேட்கிறாள் என்று நீங்கள் நினைத்து எழுதுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
பெண்கள் எவ்வளுவு தூரம் போக வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி போகமுடியவில்லை என்பது பெண்களுக்கு இழப்பல்ல. ம்ற்றும், அதற்கும் சம உரிமைக்கும் ச்மபந்தமில்லை.
நண்பரே...சித்தாள், சித்தாளி. இவர்களில் நாட்கூலி தெரியுமா.?
சித்தாளிக்கு ரொம்ப குறைவு. ஏனெனின், ஆணுக்கு அவர் ஆண் என்ற ஒரே காரணத்துக்காக கூலி அதிகம். ஆனால், பெண் (சித்தாளி) ஆணைவிட கடுமையாக சுமப்பாள்.
இது கீழ்த்தட்டு. இது போல் மேல்தட்டு வாழ்க்கையிலும் பல்வுண்டு.
இங்குதான் சம உரிமை. இதற்கு இசுலாம் என்ன செய்கிறது என்று கேட்கவில்லை. ஏனெனில், சித்தாள், சித்தாளி, இவர்களிலும் இசுலாமியருண்டு. அங்கு மாற்றமுண்டா சகோதரா?
வரிக்குவரி எழுதிக்கொண்டே போவேன். ஆனால் அஃது உங்களை சலிப்படையச்செய்யும்.
உங்கள் ப்திவின் தலைப்புக்கேள்விக்கு பதிலை, இன்னொரு இசுலாமியப்பதிவாளர் வலைப்பூவில் இட்டுவிட்டேன். அவர் பெயர் நினைவில்லை.
இங்கே சுட்ட விரும்புவது ஒன்றே ஒன்று.
பர்தா பெண்ணுக்குக்கண்ணியம் கொடுக்கிறது என்று சொல்லும் இசுலாமியர் தங்கள் பெண்களையெல்லாம் கண்ணியத்தோடு நடாத்துகிறார்கள் என்று ஆணித்தரமாக சொல்லமுடியுமா?
முடியவே முடியாது.
எல்லாப்பெண்களும் ஒரே வெள்ளத்தில்தான் எதிர் நீச்சல் போட்டு வாழ்கிறார்கள்.
அவ்வெள்ளத்தின் பெயர் ஆணாதிக்கம்.
அதில், இசுலாமிய ஆண், பிற ஆண் என்றில்லை. எல்லா ஆண்களும் ஆதிக்க மனப்பான்மையுடைய்வரே.
வெறும் பர்தா அணிந்து என்ன செய்ய?
ஆணாதிக்கம் பலவழிகளில் உண்டு. அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டனரா இசுலாமியப்பெண்கள்?
இதுவே என் கேள்வி.
தமிழ்மணத்திலே நம்பர் ஒன்னாக்போய் விடும் உங்கள் பதிவு...பின்னூட்டங்கள் கூடிக்கொண்டே போகிறதே...!
குட் பை
@ அன்பின் நிஜாம் கான்,
மிக அருமையான பட விளக்கத்துடன் கூடிய இடுகை. இதற்கும் மேல் இந்த ஹிஜாப்பை விளங்காமல் கேள்வி கேட்பவர்களை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருக்கிறது. பாவம் நமது "சளக், புளாக்கர்கள்" !!!
முதல் படத்தில் தொழுகையில் தஷ்ஹது (அமர்ந்திருத்தல்) நிலையில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளின் உடையே ஹிஜாப் என்பது என்னவென தெளிவாகவும், அதன் பயனையும் அழகாக விளக்கிவிடுகிறது. பொதுவிடத்தில் இந்த ஹிஜாப் என்னும் மேலாடை எந்தளவு பெண்களின் இயல்பான நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கிறது என தெளிவாக உணர்த்த இதை விட சிறந்த படம் கிடையாது.
பிறகு கிறிஸ்தவ சகோதரிகளின் உடையும், ஹிஜாபும் எந்தளவிற்கு பொருந்தி வருகிறது என கண்ணுடையவர்கள் பார்த்து விளங்கி கொள்ளட்டும். சிந்தனை "மூடி முத்திரை" இடப்பட்ட நபர்களிடம் நாம் வாதாடி வெற்றி பெற இயலாது. அது நமக்கு தேவையும் கிடையாது.இந்த பொன்மொழிப்படி ' கழுதையை பின்னாலிருந்து அணுக கூடாது, காளை மாட்டை முன்னாலிருந்து அணுக கூடாது. முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் அணுக கூடாது' என்பது தான் எனது வாழ்க்கை முறை.
இறுதியாக உள்ள புவனேஷ்வரியின் உடையானது மற்ற உடைகளின் கண்ணியத்தையும், இதன் அசிங்கத்தையும் அழகாக படம்பிடித்து காட்டி விட்டது. அம்மணி அணிந்த உடையானது அரை குறையான நிக்காப் (http://en.wikipedia.org/wiki/Niq%C4%81b - Niqab) ஆகும். அதன் பெயர் அது தான். இது குர் ஆனில் வழிகாட்டப்படாத ஆடை முறையாகும். ஆனால் இதைத்தான் விளங்காமல் உபயோகித்து கொண்டுள்ளார்கள்.
இதே நிக்காபை முழுமையாக அணிவித்து புவனேஷ்வரியை நான் "தள்ளிக்கொண்டு" சென்றாலும் அனைவரும் எனது வாழ்கைத்துணைவி என கருதி சம மரியாதை தருவார்கள். கண்டிப்பாக என்னயும், என் மனைவியும் நெருக்கமாக அறிந்த நபர்களைத்தவிர யாரலும் அடையாளம் காண இயலாது. ஆக இந்த நிக்காப் என்பது இறைவன் தந்த வழிமுறை அல்ல எனபது இதிலிருந்தே அறிவுள்ள அனைவரும் விளங்க இயலும். உண்மையில் நிக்காப் என்பது குர் ஆன் குறிப்பிடும் ஆடை அல்ல. அது பாரசீகர்களின் ஆடை முறையாகும்.
ஹிஜாபே (http://en.wikipedia.org/wiki/Hijab - Hijab)சரியான, கண்ணியம் காக்கும் உடை. அதில் முகமும், முன் கைகளும் சரியாக அடையாளம் தெரியவேண்டும். முகத்தைப் பார்த்தாலே மூடு வந்து ஆடுபவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள் முதல் பார்வையிலேயே எதிரில் பேசுபவர்களின் கண்களை சந்திக்க இயலாமல் உடலின் மற்ற பாகங்களில் பார்வைகள் மேய விடும் மேய்ச்சல்காரர்கள். அவர்களின் கண்ணிலிருந்து தப்பவைக்கத்தான் இந்த ஹிஜாப். சிங்கையில் உள்ளவருக்கு ஏர்போர்ட் x-ray படத்தில் உள்ள பெண்ணை பார்த்தாலும் மூடு வருமாம். ரொம்ப கொடுமையான வியாதி இது. :-((
ஒரு சுவராசியமான விஷயம். நான் தற்போது வசிக்கும் காரைக்காலில் உள்ள கிறிஸ்தவ சகோதர,சகோதரிகளால் நடத்தப்படும் ஓர் பெண்கள் பள்ளியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஹிஜாபானது கருப்பு நிறத்தில் இல்லாமல் தனிப்பட்ட நீல நிறத்தில் உள்ளது. காரணம் இஸ்லாமிய மாணவிகளில் சிலர் பள்ளி செல்வதற்கு பதிலாக அந்த நேரத்தில் தங்களுடைய ஆண் நண்பர்களுடன் வெளியே செல்வதை தடுக்க தலைமையாசிரியையின் சிறந்த கண்டுபிடிப்பு தான் அந்த தனிப்பட்ட நீல நிற ஹிஜாப். பள்ளி நடக்கும் நேரத்தில் அந்த நிற ஹிஜாபுடன் யாரையும் வெளியே பார்க்க இயலாது. இந்த விஷயம் தெரியாமல் நாங்கள் அங்கு குடி வந்த புதிதில் என் மனைவி அதே போல் நிறத்தினாலான ஹிஜாபை என்னிடம் வாங்கி கேட்டாள். காரணம் அது வித்தியாசமாக இருக்கிறதாம். நானும் அதை வாங்குவதாற்காக காரைக்காலில் அலைந்த போது தான் இந்த விவரங்கள் எனக்கு கிடைத்தது. இஸ்லாமிய மாணவிகள் பள்ளி செல்லும் போது மட்டுமே அதை உபயோகித்து வருகிறார்கள். மற்ற நேரத்தில் கருப்பு அல்லது மற்ற நிற ஹிஜாப் தான். நல்ல வேளை விவரம் தெரியாமல் அந்த நிற ஹிஜாபை நான் சென்னையில் வாங்கி வந்து அதை அணிந்து பள்ளி நேரத்தில் என் மனைவியும் என் கூட வந்து யாரிடமாவது தேவையில்லாமல், விஷயமே புரியாமல் விவாத பொருளாகி இருப்பேன். படைத்தவன் பாதுகாத்துவிட்டான். பிறகு எந்த இஸ்லாமியரும் இந்த வித்தியாச ஹிஜாப் முறைக்கு அங்கே மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம் அதில் உள்ள நன்மையை கருதித்தான். யாரும் எவன்டா அது, எங்களின் பெண்களைப்பற்றி தவறாக சொல்வது என முண்டா தட்டவில்லை. காரணம் படிக்கும் வயதில் ஏற்படும் தேவையற்ற தொடர்புகளில் இருந்து பெண்ணினத்தை ஆண் நாய்களிடம் இருந்து காக்க ஓர் அற்புதமான திட்டம் தான் அது. இது பெண்ணுரிமைக்கு எதிரானதா என்னருமை சகோதர, சகோதரிகளே ?
தொடர்ச்சி....
@ கண்ணா,
மற்ற இடுகைகளுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரவில்லையா ? அவைகளை அனைத்து 'சளக், புளக்' ரகத்தை சார்ந்தவை. வெறும் முன்னூற்றி சொச்சம் பேர் உள்ள தமிழ் இணைய உலகத்தில் ஹிட் அரிப்பை தீர்க்க இடப்பட்ட சருகுகள் அவைகள். இந்த சளக், புளாக்கர்களால் வேறோரு விபரீதமும் ஆரம்பித்து விட்டது. அலுவலக நேரத்தில் இணையத்தில் இது போன்ற குப்பைகளை கொட்டி அதற்கு பின்னூட்டத்தை எதிர்பார்த்து தேமேவென பிளாக்கரில் கிடப்பதால் மற்ற பணிகள் பாதிக்கப்படுவதாக தற்போதைய தகவல்கள் அறிவிக்கின்றன. ஆதலால் இணைய வல்லுனர்களான எங்களிடம் தற்போது தரப்படும் வேலையே அலுவலகங்களில் உள்ள இணைய இணைப்புகளில் பிளாக்கர் போன்ற தளங்களை தடை செய்ய சொல்வது தான். இது 100% உண்மை. மேலும் வேலையாட்களின் கணனிகளும் மேலதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. அதற்கான ஆதாரம் இங்கே http://wiki.pkp.in/forum/t-204176/#post-655183 இதன் வாயிலாக மேலதிகாரி உங்களின் இணைய நடவடிக்கைகளை 'ஸ்கிரின் ஷாட்' எடுத்து அதைக்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும். அதிகமாக பிளாக்கரே கதி என கிடந்தால் வேலைக்கே ஆப்பு ஆக வாய்ப்பு அதிகம். ;-)
@ துரை(nagoreismail),
சிங்கையில் தானே உள்ளீர்கள். ஊருக்கு எப்போது வருவதாக உத்தேசம்? அங்கே விமான தளத்தில் சோதனைக்கு எடுக்கப்படும் X-Ray படத்தையும் ஒரு நபர் விட்டுவைப்பதில்லையாம். ஆகவே அங்கே ஹிஜாபில் காரீயத்தை தேய்த்து உபயோகப்படுத்த சொல்லவும்? காரீயத்தை X-Ray ஆல் ஊடுருவ இயலாது. என்னக் கொடுமை இது?
தொடர்ச்சி ....
@ Muhammad,
இவர்களுக்கு இப்படி சொன்னாலு விளங்காது. நாய் இனத்தில் ஆண் நாயானது கார்த்திகை மாதத்தில் 'வேலை' முடிந்தவுடன் உருவிக்கொண்டு ஓடிவிடும். பிறகு பொட்டை நாய் தான் 'நாய் படாத பாடுபட்டு' குட்டிகளை வளர்க்கும்.யாராவது தனது வாரிசுகளை பராமரிக்கும் ஆண் நாயை காட்ட இயலுமா ? சின்ன சிட்டுக்குருவி கூட ஆணும், பெண்ணும் கூட்டு முயற்சியாகத்தான் வாரிசுகளை பராமரித்து வளர்க்கும். ஆனால் ஆண் நாயோ சுயநலமானது. ஆதலால் தான் நாயானது தனக்கு உணவிட்டு வளர்க்கும் மனிதனிடத்தில் இந்த அளவு நன்றி பாராட்டுகிறது. அப்பன் நாய் சரியாக இருந்தால் நாயை யாரும் நன்றிக்கு உதாரணமாக காட்ட இயலாது !!!. தகப்பன் பேர் தெரியாத குழந்தையின் தாய்க்கு கொடுக்கப்பட்ட பெயர் ஆங்கிலத்தில் 'Bitch" அதாவது பொட்டை நாய். தஸ்லீமா, ஷரீபா வகையாறாக்கள் இவற்றை போன்றவர்களே.
@ ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ,
// அன்னிய ஆண்கள் சரி. அபபடியென்றால் உடன்பிறந்த ஆண்கள், பெற்றெடுத்த தந்தை இவர்க்ளுடன் இருக்கும் போது பர்தா தேவையில்லை என்று இசுலாம் சொல்கிற்தா என்று எனக்குத் தெரியாது.//
தெரியாதவற்றை தெரியவில்லை என ஒப்புக் கொண்ட நேர்மைக்கு வாழ்த்துக்கள். நல்ல வேளை. குளிக்கும் போதும் இஸ்லாமிய சகோதரிகள் ஹிஜாபுடன் தான் இருப்பார்களா? என யாரும் கேட்கவில்லை.;-) பிறகு எனது மனைவி மற்றும் சகோதரிகள் அனைவரும் வெளியே செல்லும் போது தான் இந்த ஹிஜாபை கையிலெடுப்பார்கள். மற்ற நேரங்களில் என உம்மா (தாய்) சொல்வது போல வசதிக்காக பெரிய தலையணை உறை (நைட்டி) தான். வீட்டில் விஷேச நேரத்தில் மட்டுமே நைட்டிக்கு விடுமுறை. இதனால் ஒரு பிரச்சினையை நாங்கள் சந்திக்க வேண்டி வருகிறது. நாங்கள் வெளியே செல்ல ஏற்படும் போது இந்த நைட்டியின் மீது சட்டென இந்த ஹிஜாபை அணிந்து கொண்டு உடனே தயாராகிவிடுகிறார்கள். ஆதலால் ஆண்களாகிய நாங்கள் தயாரவதற்கு முன்பே பெண்கள் தயாரகிவிடுகின்றார்கள். அதனால் வெளியே செல்ல வேண்டி வந்தால் முதலில் நான் தயாரகிவிட்டு பிறகு அவரகளுக்கு தகவல் தருவது தான் இந்த பிரச்சினையிலிருந்து நான் தப்பிக்க கண்ட வழிமுறை. யாரால் திட்டு வாங்க இயலும் ? இதை வைத்து காலங்காலமாக பெண்ணினத்தை கிண்டலடித்த ஆணினம் இப்போ வசமாக மாட்டிக்கொண்டுவிட்டது. வேறு நல்ல தீர்வு யாரிடமாவது இருக்கா?
//
//மானம்..அழகு//
இவையும் பிரச்சனைக்குறிய சொற்களே.வயதான பெண்கள் - 80யும் தாண்டிய கிழவிகள் - பர்தாவில் இருக்கக் காண்கிறோம். எதற்காக மிஸ்டர் நிஜாம்? //
வார்த்தைகளை பிடித்து தொங்கி விவாதம் செய்யும் நண்பரே, நீங்கள் பூமியில் தானே வாழ்கிறீர்கள்? வயதான பெண்மணிகள் 'ஆண் நாய்களால்' தொல்லைக்கு ஆளான செய்திகளை தாங்கள் செய்தி தாள்களில் படித்தது இல்லையா? தவறை இழைத்து விட்டு அந்த ஆண் நாய்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே தான் புரிந்த குற்றத்தை திசை திருப்பி விட்டு தப்பிப்பதையும் தாங்கள் அறிந்து இருப்பீர்கள் தானே? ஹிஜாப் அணிந்த பெண்ணை சீண்டிய ஆண் நாய்க்கு ஆதரவாக யாரும் பரிந்து பேச வாய்ப்பு இல்லை. மேலும் அந்த பெண்ணின் ஆடை, அல்ங்காரம் தான் தன்னை தவறு செய்ய வைத்துவிட்டது என குற்றத்தை அந்த ஆண் நாயும் திசை திருப்ப இயலாது. இந்த குற்றத்திற்கு கண்டிப்பாக அந்த ஆண் நாயானது இஸ்லாமிய சட்டதிட்டம் பின்பற்றப்படும் ஒரு நாட்டில் அந்த ஆண் நாயின் தலை வெட்டப்படும். இன்னும் விளக்கம் வேண்டுமா?
with care & love,
Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogpspot.com
பக்காவா சொல்லியிருக்கீங்க நிஜாம்.
ஆனா எப்படி நீங்க சொன்னீங்கனாலும் இங்க பல பேரு புரியாத மாதிரியே நடிப்பாங்க..அதெல்லாம் கண்டுக்காதீங்க..!!!
Good writeup. as usual Nizam Stuff. congrats nizam.
That smily for syed
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ, அருமையான உண்மைகளுக்கு நன்றி.
1+ போட்டாச்சு
------------------------
பதில் கருத்து சொல்வதில் இன்னும் தெளிவு தேவை படுது,
சொல்லப்படும் எதுவும் சொல்லம்புகளாக இல்லாமல் - கேட்ப்பவருக்கு விளங்கிடும் வகையில் சொல்லுதல் நலம் - அப்படி சொல்லத்தெரியாட்டி - துவா செய்வது மிக்க நலம் - நான் துவா செய்கிறேன் எனக்கும் இன்னும் தெளிவா பதில் சொல்ல தெரியலை.
//
மற்றபடி பர்தா அணியக்கூடாது என்று சொல்வதற்கோ, அதைத் தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையும் இல்லை
//
//
அதிலே கலந்துகொண்ட இஸ்லாமிய பெயர் தாங்கி பெண்ணொருத்தி பர்தா எங்கள் பெற்றோர்கள் வற்புறுத்தி தான் அணியச்சொல்கிறார்கள் என்றும், நாங்கள் எங்கள் அழகை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறோம் என்றும் பேசிய பேச்சுகள் முன்னோட்டத்தில் ஒளிபரப்பாகியது. இதைக்கண்டு வெகுண்டெழுந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு விஜய் டிவியைத் தொடர்பு கொண்டு கண்டிக்க அவர்கள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதை நிறுத்திக்கொண்டார்கள்.
//
ஆக, இஸ்லாமிய ஜமாத்துக்கு எல்லா உரிமையும் உண்டு...மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை! அப்ப மீதி பேர் எல்லாம் சுய உரிமையுடன் இருப்பதா இல்லை இஸ்லாமிய ஜமாத்த்துக்கு அடிமையாக இருப்பதா???
//
ஷகீலா, மும்தாஜ், ஷர்மிலி, முமைத் கான், ஃபாராகான், தபு,குஷ்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வகையைச் சார்ந்த ஒருத்தியின் கருத்துக்களை பலமாக ஒளிபரப்பி ஒட்டுமொத்த இஸ்லாமிய பெண்களும் பர்தாவை வெறுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
//
முடியாது...அதே சமயம் எல்லா இஸ்லாமிய பெண்களும் விரும்பித் தான் அணிகிறார்கள் என்று சொல்ல முடியுமா??
//
மலேசிய பெண்கள் தங்கள் பாரம்பரிய ஆடையை கைவிட்டு ஐரோப்பிய கலாச்சார இறக்குமதி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்களோ அன்றைக்கே ஆரம்பமாகிவிட்டது மலேசிய கலாச்சார சீரழிவு.
//
ஆக, ஒரு வித ஆடை அணிந்தால் அது கலாச்சாரம்...இல்லாவிட்டால் சீரழிவு...
இப்பொழுது அடிமைப் படுத்துவது யார்??? நீங்களா இல்லை வேண்டாம் என்று சொல்பவர்களா???
பிரச்சினை என்ன உடை அணிய வேண்டும் என்பது அல்ல...இன்ன வித உடை தான் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், அப்படி அணியாதவர்கள் ஏதோ விபச்சாரிகள் என்ற பேச்சும் தான்... அப்படி கட்டாயப்படுத்துவது யாராக இருந்தாலும், அது கடவுளாகவே இருந்தாலும் சரி, எதிர்க்கவே முடியும்!
தவிர, உடை மதம் சார்ந்து இருக்கும் போது வரும் விமர்சனங்களை தவிர்க்க முடியாது...முகம் மறைக்கும் உடைகள் அது எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக பொது இடங்களில் அணிவது தடை செய்யப்பட வேண்டும்...
இந்த வகையில் ஃப்ரான்ஸின் நடவடிக்கையை முற்றிலும் வரவேற்கிறேன்...
//
பெண்களின் உடலமைப்பு அப்படி. அதுமட்டுமின்றி பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தி சமூகத்தை சீரழிக்கும் சினிமா உலகம் கற்றுத்தந்த பாடம்.
//
முகமது எந்த சினிமாவை பார்த்து பர்தா அணிவது பற்றி உபதேசித்தார்???
//
பெண்களின் உடலமைப்பு அப்படி. அதுமட்டுமின்றி பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தி சமூகத்தை சீரழிக்கும் சினிமா உலகம் கற்றுத்தந்த பாடம். எனவே தான் பெண்கள் தங்கள் உடலமைப்பை காமுகர்களின் பார்வையில் இருந்து தற்காத்துக் கொள்ள கொஞ்சம் கூடுதலாக உடையணிய வேண்டியிருக்கிறது. சேலை லேசாக விலகினாலும் அதைக்கூட தன் மொபைலில் படமெடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் இன்றைய நவீன உலகத்தில் பெண்களின் மானத்திற்கு கவச உடை தான் இந்தப் பர்தா.
//
ஆக, ஒரு பெண்ணைப் பார்த்தால் உங்களுக்கு எல்லாம் வேறு எதுவுமே தோன்றாது...செக்ஸை தவிர...இல்லையா???
//
தன் மனைவிகள், தன் சகோதரிகளை மட்டும் யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துவிடக்கூடாது என நினைக்கும் பல முற்போக்குவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் மற்ற பெண்கள் மட்டும் எப்படி மூடிமறைக்கலாம்? இது அடிமைத்தனம் என கூவுகின்றனர். அவர்கள் தங்கள் மனைவிகளையும், சகோதரிகளையும் சினிமாவில் வருவது போன்ற கவர்ச்சி உடையில் வெளியே அழைத்து வருவார்களா?
//
மொக்கையான கேள்வி....பர்தாவை எதிர்ப்பவர்கள் பெண்கள அம்மணமாக வெளியே வர வேண்டும் என்று சொல்லவில்லை...அவர்களும் மற்றவர்களை போல உடை அணியலாமே என்று தான் சொல்கிறார்கள்...
பி.ஜே. ஆன்லைன் என்றொரு வெப்சைட்டில் படித்தது...அதில் முதல் வரியே "பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இடுகிறது"...
அதாவது, அறிவுரை கூட இல்லை...கட்டளை!!!
//
Muhammad Ismail .H, PHD, said...
@ Muhammad,
இவர்களுக்கு இப்படி சொன்னாலு விளங்காது. நாய் இனத்தில் ஆண் நாயானது கார்த்திகை மாதத்தில் 'வேலை' முடிந்தவுடன் உருவிக்கொண்டு ஓடிவிடும். பிறகு பொட்டை நாய் தான் 'நாய் படாத பாடுபட்டு' குட்டிகளை வளர்க்கும்.யாராவது தனது வாரிசுகளை பராமரிக்கும் ஆண் நாயை காட்ட இயலுமா ? சின்ன சிட்டுக்குருவி கூட ஆணும், பெண்ணும் கூட்டு முயற்சியாகத்தான் வாரிசுகளை பராமரித்து வளர்க்கும். ஆனால் ஆண் நாயோ சுயநலமானது. ஆதலால் தான் நாயானது தனக்கு உணவிட்டு வளர்க்கும் மனிதனிடத்தில் இந்த அளவு நன்றி பாராட்டுகிறது. அப்பன் நாய் சரியாக இருந்தால் நாயை யாரும் நன்றிக்கு உதாரணமாக காட்ட இயலாது !!!. தகப்பன் பேர் தெரியாத குழந்தையின் தாய்க்கு கொடுக்கப்பட்ட பெயர் ஆங்கிலத்தில் 'Bitch" அதாவது பொட்டை நாய். தஸ்லீமா, ஷரீபா வகையாறாக்கள் இவற்றை போன்றவர்களே.
//
ஆஹா...பெண்ணினத்திற்கு என்ன ஒரு பெருமை சேர்க்கிறீர்கள்....
இப்பொழுது எல்லாருக்கும் தெரியும்....ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாய் எது என்று!
#அதுசரி:
//....பர்தாவை எதிர்ப்பவர்கள் பெண்கள அம்மணமாக வெளியே வர வேண்டும் என்று சொல்லவில்லை...அவர்களும் மற்றவர்களை போல உடை அணியலாமே என்று தான் சொல்கிறார்கள்...//
யார் இந்த //மற்றவர்கள்//..?
உங்களின் //உடை// என்றால் என்ன?
#அதுசரி:
//ஆக, ஒரு பெண்ணைப் பார்த்தால் உங்களுக்கு எல்லாம் வேறு எதுவுமே தோன்றாது...செக்ஸை தவிர...இல்லையா???//
--முஸ்லிம்களுக்கு மட்டும்தான் ஆண்மை உள்ளதா?
//உங்களுக்கு எல்லாம்//
--இதில் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனரா? மற்றவர்கள் இல்லையா? ஏன்? நீங்கள் இல்லையா? சில்க் சிமிதாவையும் மதர் தெரசாவையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்ப்பீர்களா?
#அதுசரி:
//முகமது எந்த சினிமாவை பார்த்து பர்தா அணிவது பற்றி உபதேசித்தார்???//
--கேள்வி குழந்தைத்தனாமா? அல்லது தூங்குவது போன்று நடிப்பா? சினிமா-இது இன்றைய ஒரு எடுத்துக்காட்டு.
#அதுசரி:
//..அப்படி அணியாதவர்கள் ஏதோ விபச்சாரிகள் என்ற பேச்சும் தான்...//---இப்படி சொல்லவே இல்லை. அப்படி சொல்வது நீங்கள்தான். பெண்களை பாதுகாத்து கண்ணியம் தரவே ஹிஜாப் என்றுதான் கூறப்படுகிறது. திரிக்காதீர்கள்.
#அதுசரி:
//அதே சமயம் எல்லா இஸ்லாமிய பெண்களும் விரும்பித் தான் அணிகிறார்கள் என்று சொல்ல முடியுமா??// --விரும்பாதவர்கள் பட்டியல் தந்தாயிற்று. இதுபோல பிரபலம் ஆகாத விரும்பாதோர் பட்டியல் ஒவ்வொரு ஊரிலும் இருக்கலாம். நம் நாட்டில் பர்தா அணியும் அனைவரும் விரும்பித்தான் அணிகிறார்கள். நீங்கள் சூரியன் கிழக்கில் மறையும் என்றால், உங்களுக்கு கிழக்கு-மேற்கு தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.
#அதுசரி:
//ஆக, ஒரு வித ஆடை அணிந்தால் அது கலாச்சாரம்...இல்லாவிட்டால் சீரழிவு...
இப்பொழுது அடிமைப் படுத்துவது யார்??? நீங்களா இல்லை வேண்டாம் என்று சொல்பவர்களா???// -- சாரிங்க..இதுக்கு மேல இனால முடியாது...ஏன்னா... நீங்க உக்காந்துகிட்டே நிக்கறீங்க...
ஆஹா பேஸ் பேஸ்
ஆயிரம் வரிகள் புரியவைக்க முடியாத விஷயத்தை ஆறு புகைப்படங்கள் மிக எளிதாய் விரைவாய் அழுத்தமாய் சொல்லி விடும். அந்த வகையில் மிக சிறப்பான பதிவு, நிஜாம் பாய்.
ஏன் மேல்நிலை பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் ஏன் புருக்கா பற்றி கேட்டபோது சரியான பதில் சொல்லத்தெரியாது. "எங்க வீட்ல சொல்றாங்க சார்.." என்றால், "சோ, யு டோன்ட் லைக் இட், கரெக்ட்?" என்பார்கள், "நோ சார், ஐ ஆல்சோ லைக் இட்" என்று தான் சொல்லத்தெரியுமே அன்றி விளக்க எல்லாம் தெரியாது.
பிற்காலத்தில் கல்லூரி தோழிகள் கேட்டபோது புருக்கா தேவை என்று ஒப்புக்கொள்வார்கள், ஆனால், இதன் பெருமைகளை சொன்னால், "அப்போ நாங்களெல்லாம்" என்ற கேள்வி தானாக இவர்களிடமிருந்து வரும். இவர்களுக்கு ஏன் இப்படி சிந்திக்க தோன்றுகிறது என்று புரியாது. ஆனால், சமீபத்தில் இங்கு சவூதியில் அந்த உணர்வை புரிந்து கொண்டேன்.
இந்தியாவில் நான் என்றுமே முகத்தை மறைத்தது கிடையாது. ஆனால், இங்கே கண்கள் மட்டும் தெரிய முழு முக்காடு போடுபவர்களைப்பார்த்தால், ஏதோ 'நாம் ரொம்ப மோசம்' என்று சொல்லாமல் சொல்வதை போல தோன்றும். இந்த உறுத்தல் இல்லையென்றால் ஒரு பிரச்சனயும் இல்லை. இஸ்லாத்தில் முகம் மறைக்காதது குற்றம் ஆகாது எனினும், முகம் மறைத்தல் என்பது கட்டாய சவூதி சட்டம் இல்லையெனினும் 'நாம் மட்டும் இவர்களுக்கு குறைச்சலா என்ன' என்று நானும் முகமூடி உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன்--சவூதியில் மட்டும்தான்.! ஆனால், அந்த சவூதி பெண்களை முகம் திறக்க சொல்லி எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. நான் மாறிக்கொண்டேன், அவ்வளவுதான். இந்த புரிதல் நிறைய பேரிடம் இல்லை. அதுதான் இங்கு பிரச்சினை.
என் புருக்கா பற்றி என் கல்லூரி தோழி ஒருத்தி கேட்டபோது, 'எனக்குபிடித்திருக்கிறது' என்று மட்டும் சொல்லிவைத்தேன். பின்னொரு நாளில் அவள் வீட்டில் ப்ராஜக்ட் ஒன்று பத்தி டிஸ்கஷனுக்கு சென்று அதை முடித்து கிளம்பும் போது, அவங்க வீட்டு ஆல்பத்தில் கண்ட ஒரு கன்னியாஸ்திரி போட்டோவை காட்டி, "உங்க மதத்தில் எதற்கு இவர்களுக்கு மட்டும் இப்படி ஒரு ட்ரஸ்?" என்றேன். அதற்கு அவள், "இப்போ நீ போட்டிருக்கும் இந்த ட்ரஸில் சில வக்கிர புத்தி ஆண்கள் சில்மிஷம் செய்வார்களா இல்லையா? இந்த தாவணி விலகாதா? இந்த இடுப்பை கிள்ளினா? இந்த பாவாடை காற்றில் பறந்தால்? இதெல்லாம் அவங்களுக்கு அவமானமாகிவிடாதா? கன்னியாஸ்திரிகளுக்கு அப்படி ஒரு கேவலம் வரலாமா? அவர்கள் ஆண்டவருக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்பவர்கள் அல்லவா? அதெல்லாம், அவர்களுக்கு ஒரு கண்ணியம், மரியாதை, சிறப்பு, பாதுகாப்பு, உயர்வு... என்று சொல்லிக்கொண்டே போனவள் என் செய்கையை பார்த்து சற்று நிறுத்தினாள். ஏனென்றால், என் புருகாவை அணிந்து கொண்டிருந்த நான் அதை முழுமையாக அணிந்து விட்டு, சொன்னேன், "கன்னியாச்திரிகளுக்கு மட்டும் என்று நீ சொன்ன அந்த பெருமைகள் எல்லாம், அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் உண்டாகட்டும் என்றுதான் இஸ்லாம் விரும்புகிறது" என்று பதில் சொல்லிவிட்டு கிளம்பினேன். அதன் பிறகு அவளிடத்தில் நிறைய மாறுதல். ஜீன்/டிஷர்ட், ஷார்ட் மிடி, எல்லாம் காணோம். சுடிதார்/சல்வார் கமீஸ் போன்றவற்றை வித்தியாசமாய் முழு சால்வையுடன் அணிந்து வர ஆரம்பித்து விட்டாள். என் புருக்கா பற்றி மற்றவர்கள் பேசினால், என் சார்பாய் என் தோழி பதில் சொல்லிக்கொண்டு இருப்பாள்.
ஆக, இந்த பர்தா பற்றிய விஷயங்களை அதன் அவசியத்தை பெண்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆண்கள், இதனை புரிந்து கொள்ளவே முடியாது.
என் பள்ளி/கல்லூரி வாழ்வில்...
எந்த முஸ்லிமல்லாத பெண்ணும் என்னிடத்தில் இதை தேவையில்லை/கழட்டு என்று சொன்னது கிடையாது.
எந்த முஸ்லிமல்லாத ஆணும் இதை தேவை/அணி என்று சொன்னது கிடையாது.
ஆ..ஆ....ஆ, திரும்பவும் மொதல்ல இருந்தா...! இப்பத்தான் ஒன்னு முடிஞ்சது அதுக்குள்ள இன்னொன்னா!.
ஆடை என்பது ஆண் பெண் இருவரும் மானத்தை மறைக்க இலைகளை கொண்டு ஆரமித்ததில் இருந்து இண்டுவரை அது பொது இடத்தில் மானத்தை மறைக்க மட்டுமே.
(நான் ஆடை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பை படித்து அத்துறையில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தவன்.)
இதில் இனம், ஜாதி, மதம் இத்தியாதி..இத்தியாதி கொண்டு வந்தது மனிதனின் கீழ்தர அல்லது சுயநல புத்தி.
இதை இதோடு விட்டு விடுங்கள் பதிவர்களே. யாருக்கு என்ன உடை பொருத்தமோ (உடல் அமைப்புக்கு) அல்லது பிடிக்குமோ, அந்த உடையை அணிந்து சந்தோசமாக இருங்கள் மக்களே.
ஏன்? என்றால்! நாளை நாம் அனைவரும் செத்து மண்ணோடு மண்ணாகி விடுவோம் :-).
//ராஷா said...
நல்ல வாதம்..//
நன்றி ராஷா.., தொடர்ந்து வாங்க
//கண்ணா.. said...
நிஜாம் இப்பத்தான் எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்காங்க...
நீங்க மறுபடி ஏன் இதனை விவாதம் ஆக்குகிறீர்கள்.
இந்த பதிவை நீக்கினால் மகிழ்ச்சி
ஏனெனில் இதுகுறித்து நடக்கும் விவாதங்களில் இரு தரப்பிலும் சில பேரால் வரும் தரம் குறைந்த வார்த்தைகள் சகிக்க முடியாததாக இருக்கிறது.//
கருத்துக்கு நன்றி திரு கண்ணா! தேவையில்லாத வாதங்களுக்கு முற்றுப்புள்ளி தான் இந்த விளக்கம். இது விளக்கமே தவிர விவாதம் அல்ல.
//Barari said...
mika sirappaana pathivu.vazthukal nizam.muslimkal thangalai patri solli kolvathil enna thavaru.ithil thevai illaamal aduththavarkal mookkai nuzaikkum pothu thaan piratchiநை.//
உண்மை திரு பாரி . கருத்துக்கு நன்றி
// VANJOOR said...
PLEASE CLICK AND READ THE LINKS Bஏளோந்/
நன்றி ஐயா! உங்கள் லிங்குகளை மேலேற்றிவிட்டேன்
//வெ.இராதாகிருஷ்ணன் said...
//இனி இஸ்லாமிய பெண்கள் முகங்களை மறைத்துக் கொண்டு பர்தா அணியக்கூடாது என அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது பிரான்ஸ் அரசாங்கம். எனவே பர்தா அணியும் நமது சகோதரிகளும் இறைத்தூதர் சொன்னதன் படி முகத்தை மறைக்காமல் பர்தா அணிய ஆரம்பித்தால் முகத்தை மறைத்திருக்கும் விபச்சாரிகளும், சட்ட விரோதிகளும் பர்தா உபயோகிப்பதை நிறுத்திவிடுவார்கள். மற்றபடி பர்தா அணியக்கூடாது என்று சொல்வதற்கோ, அதைத் தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையும் இல்லை.//
நல்லதொரு முடிவு.//
நன்றி திரு.இராதாகிருஷ்ணன்.., உங்கள் புரிதல் அனைவருக்கும் வரவேண்டும்
// gumi said...
நாகரிக வளர்ச்சி , பெண்களையும் அடைய வேண்டும் . காலத்தின் மர்ற்றங்களை , அவர்களுக்கும் அளிக்க வேண்டும் .//
நாகரீகம் வளர்கிறது என்பதற்காக பெண்கள் மேலாடை இல்லாமல் உலா வர அனுமதிக்கலாமா சகோதரரே! நாகரீகம் என்ன தான் வளர்ந்தாலும் பெண்கள் என்றைக்குமே பெண்கள் தான்.
//தமிழ் பிரியன் said...
நல்ல பகிர்வு.//
நன்றி திரு தமிழ்ப்பிரியன். உங்களின் புரிதலுக்கும், கருத்துக்கும்.
// nagoreismail said...
ஸலாமலைக்கும் நிஜாம் பாய்.
அருமையான எழுத்துக்களுக்கு நன்றி//
வஅலைக்கும் திரு இஸ்மாயில். மஹாத்மா காந்தியே சொன்னார். நான் உமருடைய ஆட்சியை போல இங்கே அமைக்க விரும்புகிறேன் என்று.
//Muhammad said...
அவசியமான நல்ல பதிவு நிஜாம்.//
நன்றி முகமத் உங்கள் கருத்துக்கு..,
//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
//இந்த பர்தா பெண் அடிமைத்தனத்தின் சின்னம் என பல புதுமைப்பெண்களும், புதுமை ஆண்களும் பேசி வருகிறார்கள்//
இன்று மட்டும் அல்ல. காலம் காலமாக பலர் பேசி வந்துள்ளனர். இசுலாமிய நாடுகளில் இல்லாமல், பிற் நாடுகளில்.
அவர்கள் எல்லாரும் சாதாரணமானவர்களே.
இசுலாமியர் அல்லாத ஒருவன் அப்படி நினத்தால், அல்லது பேசிக்கொண்டால், உடனே, ‘புதுமை ஆண்’, ‘புதுமைப்பெண்’ என்று சொல்லிவிடலாமா?
புதுமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு உங்களுக்குப்பிடித்தவாறு பொருளா?//
சகோதரரே பெண்கள் உடை விசயத்தில் இவ்வளவு அக்கறை காட்டும் நான் பொருள் கொண்ட புதுமை ஆண்கள் தங்கள் மனைவிக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுத்தார்களா? நான் குறிப்பிட்ட புதுமைப் பெண்கள் தங்களின் பொருப்புக்களை நிறைவேற்றினார்களா! அதை முதலில் சிறப்புற செய்து விட்டு வரட்டும் அடிமைத்தனம் தலைப்புக்கு.உங்களுக்கே புரியும் என நினைக்கிறேன்
//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
//பெண்கள் தங்களின் மானத்தையும், அழகையும் அன்னிய ஆண்களிடமிருந்து காத்துக்கொள்ள.../
அன்னிய ஆண்கள் சரி. அபபடியென்றால் உடன்பிறந்த ஆண்கள், பெற்றெடுத்த தந்தை இவர்க்ளுடன் இருக்கும் போது பர்தா தேவையில்லை என்று இசுலாம் சொல்கிற்தா என்று எனக்குத் தெரியாது.
Mr Nijam சொனனால் நன்றியுடையவனாயிருப்பேன்.//
சகோதரரே உடன்பிறந்த ஆண்கள், தந்தை மட்டுமல்ல.. அன்னிய ஆண்கள் என்பது தன் சொந்த பந்தங்கள் அனைவரையும் தவிர்த்து தான். தன் பெரியப்பா, சித்தப்பா, மாமா, இவர்களின் பிள்ளைகள், தன் சகோதரியின் கணவன்கள் என தன் சொந்தபந்தங்களின் முன்னிலையில் பர்தா தேவையில்லை என்று நிஜாம் சொல்ல வேண்டாம். இஸ்லாமே அடித்துச்சொல்கிறது. இஸ்லாமிய பெண்கள் வெளியே வரும் போது மட்டும் தான் பர்தா அணிகிறார்கள் . வீட்டிற்குள் அல்ல. சகோதரரே! நீங்கள் இன்னமும் முழுமையாக இஸ்லாமை அறியவில்லை. நீங்கள் விரும்பினால் என் மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். அது மட்டுமின்றி ஒரு கிருத்தவ சகோதரி சாதாரணமாக செல்வதற்கும், வெள்ளை நிற அங்கி அணிந்து செல்வதற்கும் வித்தியாசம் கவனியுங்கள். வெள்ளை அங்கி அணிந்தால் சிஸ்டர் என்ற வார்த்தை அன்போடு வந்து விடுகிறது.
// ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
//மானம்..அழகு//
இவையும் பிரச்சனைக்குறிய சொற்களே.
வயதான பெண்கள் - 80யும் தாண்டிய கிழவிகள் - பர்தாவில் இருக்கக் காண்கிறோம். எதற்காக மிஸ்டர் நிஜாம்?//
வயதான பெண்களுக்கு மானம் இல்லை என்கிறீர்களா? அவர்களின் வெட்கமும் அழகுதான். நாங்களும் அன்போடு அழைக்கும் அன்னை தெரசாவும் கடைசிவரை எப்படி இருந்தார்கள் சகோதரரே!
//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
//ஆனால் முகத்தை மறைப்பது யார் கற்றுக்கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை//
நண்பரே...அத்வும் சரியே, பர்தா சரியென்றால்.
அன்னிய ஆண்கள் - இவர்கள்தானே பிரச்ச்னை.
முகத்தை மறைத்தல், இவர்களின் கண்களை நேருக்குனேர் பார்க்காமலிருக்க உதவும்.
பர்தா பெண்ணடித்தனம் இல்லயென்றால், முகத்தை மறைத்தல் மிகவும் சரியே.
நேருக்கு நேர் அன்னிய ஆடவனைன் கண்ணடி படுதல் பொதுவாகப்பெண்கள் விரும்புவதில்லை அவ்வாடவன் ஒரு பொருக்கி என்று ஊரறிந்த கதையாக இருக்கும்பட்சத்தில்.
பெண் உள்ளத்தைப் புரிந்த பின்னரே, இப்படிப்பட்ட பதிவுகள் எழுதத்துணிவது நலம்.//
முகம், முன்னங்கை தவிர மற்ற அனைத்தையும் மறைத்துக் கொள்ளுங்கள்
என இஸ்லாம் தான் கட்டளையிடுகிறது. இறைவனின் வார்த்தைகளை மாற்றுவதற்கோ, அதிலே மனித சரக்குகளைச் சேர்ப்பதற்கோ இஸ்லாத்தில் என்றைக்கும் இடமில்லை.அதே நேரம் உங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என பெண்களுக்கு இறைவன் கட்டளையிடுவதையும் இங்கே குறிப்பிடுகிறேன்
//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
//பர்தா இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு எவ்வித சட்டமும் இல்லை//
Not fully correct. In certain places, there are prescriptions of what type to wear.
You cant write in common terms please
//
அதாவது நிறம். டிசைன். போன்றவை.அதிலே டெர்ம்ஸ் அன்டு கண்டிசன்கள் எப்படி எழுதுவது?
//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
//சமஉரிமை கோரும் பெண்கள் சமூகம் உடையில் மட்டும் சம உரிமை கோர இயலாது. காரணம் ஒரு ஆண் வெறும் ஜட்டியுடன் நடு ரோட்டில் நின்று தன் பணியில் ஈடுபட்டாலும் அதை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்//
தவறுதலான புரிதல்.
சம உரிமை என்றால் என்ன என்று ஆராய்ந்தீர்களா?
உடையில் பெண்கள் சம உரிமை கேட்கவில்லை.//
அது ஒரு உதாரணம் தான். ஆடையில் பெண்கள் சம உரிமை கோர இயலாது என நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்களே!
//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
வரிக்குவரி எழுதிக்கொண்டே போவேன். ஆனால் அஃது உங்களை சலிப்படையச்செய்யும்.
உங்கள் ப்திவின் தலைப்புக்கேள்விக்கு பதிலை, இன்னொரு இசுலாமியப்பதிவாளர் வலைப்பூவில் இட்டுவிட்டேன். அவர் பெயர் நினைவில்லை.
இங்கே சுட்ட விரும்புவது ஒன்றே ஒன்று.
பர்தா பெண்ணுக்குக்கண்ணியம் கொடுக்கிறது என்று சொல்லும் இசுலாமியர் தங்கள் பெண்களையெல்லாம் கண்ணியத்தோடு நடாத்துகிறார்கள் என்று ஆணித்தரமாக சொல்லமுடியுமா?
முடியவே முடியாது.
எல்லாப்பெண்களும் ஒரே வெள்ளத்தில்தான் எதிர் நீச்சல் போட்டு வாழ்கிறார்கள்.
அவ்வெள்ளத்தின் பெயர் ஆணாதிக்கம்.
அதில், இசுலாமிய ஆண், பிற ஆண் என்றில்லை. எல்லா ஆண்களும் ஆதிக்க மனப்பான்மையுடைய்வரே.
வெறும் பர்தா அணிந்து என்ன செய்ய?
ஆணாதிக்கம் பலவழிகளில் உண்டு. அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டனரா இசுலாமியப்பெண்கள்?
இதுவே என் கேள்வி.//
மறுக்கவில்லை. நிச்சயம் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் 1430 ஆண்டுகளுக்கு முந்தைய காட்டுமிராண்டி காலத்திலேயே பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என எழுதப்படிக்கத் தெரியாத முகமது சொல்லிவிட்டாரே!
//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
தமிழ்மணத்திலே நம்பர் ஒன்னாக்போய் விடும் உங்கள் பதிவு...பின்னூட்டங்கள் கூடிக்கொண்டே போகிறதே...!
குட் பை//
நாம் புகழுக்காக எழுதவில்லை சகோதரரே! உண்மைகள் வெளியே தெரிய வேண்டும். புரிந்துணர்வுடன் கூடிய நல்லிணக்கம் வேண்டும். என் முந்தைய பதிவுகளைப் பாருங்கள். நன்றி உங்களது கருத்துக்களுக்கு!
//Muhammad Ismail .H, PHD, said...
@ Muhamமட்,//
மிகச்சிறந்த மற்றும் நகைச்சுவையான விளக்கம் . உங்க காரைக்கால் பிரிண்சிபல் மாதிரி இந்தியா முழுவதும் வேனும்.
// அ.மு.செய்யது said...
பக்காவா சொல்லியிருக்கீங்க நிஜாம்.
ஆனா எப்படி நீங்க சொன்னீங்கனாலும் இங்க பல பேரு புரியாத மாதிரியே நடிப்பாங்க..அதெல்லாம் கண்டுக்காதீங்க..!!!//
அட நீங்க வேற செய்யத்! நாம் என்ன சொன்னாலும் ஒத்துக்கவே மாட்டாங்க அப்பறம் எங்க நடிக்க.
// வானம்பாடிகள் said...
Good writeup. as usual Nizam Stuff. congrats nizam.
//
எங்க அண்ணனுக்கு நடு நிலையான விசயங்களை புரிய வைக்க நான் வேண்டாம். அண்ணனுக்கே புரியும். அண்ணன் போல அனைவரையும் எதிர்பார்கிறேன்.
வால்பையன் said...
That smily for syed
//
நன்றி வாலண்ணே! சிம்பிளா முடிச்சிட்டீங்க
// செல்வன் said...
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ, அருமையான உண்மைகளுக்கு நன்றி.//
அந்த சகோதரருக்கு நான் அளித்துள்ள உண்மைகளுக்கு உண்மைகளையும் பாருங்க சகோதரரே!
//நட்புடன் ஜமால் said...
1+ போட்டாச்சு
------------------------
பதில் கருத்து சொல்வதில் இன்னும் தெளிவு தேவை படுது,
சொல்லப்படும் எதுவும் சொல்லம்புகளாக இல்லாமல் - கேட்ப்பவருக்கு விளங்கிடும் வகையில் சொல்லுதல் நலம் - அப்படி சொல்லத்தெரியாட்டி - துவா செய்வது மிக்க நலம் - நான் துவா செய்கிறேன் எனக்கும் இன்னும் தெளிவா பதில் சொல்ல தெரியலை.//
பரவாயில்ல ஜமால்! புரிபவர்களுக்கு புரிந்தால் போதும்
//அது சரி said...
ஆக, ஒரு வித ஆடை அணிந்தால் அது கலாச்சாரம்...இல்லாவிட்டால் சீரழிவு...
இப்பொழுது அடிமைப் படுத்துவது யார்??? நீங்களா இல்லை வேண்டாம் என்று சொல்பவர்களா???//
சகோதரரே! கலாச்சார சீரழிவின் ஆரம்பம் ஆடைக்குறைப்பு தானே! நான் சொல்லிய கருத்துக்களை மீண்டும் படியுங்கள். அது ஒரு வித ஆடை அல்ல. எல்லாவிதமான காப்புள்ள உடை
// அது சரி said...
பிரச்சினை என்ன உடை அணிய வேண்டும் என்பது அல்ல...இன்ன வித உடை தான் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், அப்படி அணியாதவர்கள் ஏதோ விபச்சாரிகள் என்ற பேச்சும் தான்... அப்படி கட்டாயப்படுத்துவது யாராக இருந்தாலும், அது கடவுளாகவே இருந்தாலும் சரி, எதிர்க்கவே முடியும்!
தவிர, உடை மதம் சார்ந்து இருக்கும் போது வரும் விமர்சனங்களை தவிர்க்க முடியாது...முகம் மறைக்கும் உடைகள் அது எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக பொது இடங்களில் அணிவது தடை செய்யப்பட வேண்டும்...
இந்த வகையில் ஃப்ரான்ஸின் நடவடிக்கையை முற்றிலும் வரவேற்கிறேன்...//
நானும் வரவேற்று தானே இருக்கிறேன்,. மட்டுமன்றி நமது ஊரிலும் அமுல்படுத்த்ச் சொல்கிறேன்..
பர்தா என்பது தான் பிடித்துவைத்துள்ள செக்ஸ் அடிமைகள் பிற ஆண்கள் புணரக்கூடாது என்பதற்காக முகம்மது கண்டுபிடித்த ஒன்று.
அதை அணிவதால் பெண்கள் தங்களைத் தாங்களே இழிவு படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் செக்ஸ் அடிமைகள் என்று ஊருக்குப் பரை சாற்றுகிறார்கள்.
கேவலம் பிடித்த அந்த அரபு காட்டுவாசி நாடோடிக் கலாச்சாரத்திற்கு வெட்கம் மானம் சூடு சொரணையுள்ள தமிழர்கள் வக்காலத்து வாங்குவதற்குப் பதிலாக பர்தாவையே கிழித்து தூக்குல தொங்கலாம்.
// அது சரி said...
//
பெண்களின் உடலமைப்பு அப்படி. அதுமட்டுமின்றி பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தி சமூகத்தை சீரழிக்கும் சினிமா உலகம் கற்றுத்தந்த பாடம்.
//
முகமது எந்த சினிமாவை பார்த்து பர்தா அணிவது பற்றி உபதேசித்தார்???//
இதை முகமது உபதேசிக்கவில்லை. அடியேன் உபதேசிக்கிறேன். அப்படியானால் சினிமா போஸ்டர் மீது தார் பூசும் போராட்டம் பெண்கள் அறிவித்தால் அதை நீங்கள் எதிர்ப்பீர்களா? செக்ஸ் பட போஸ்டர்கள் கும்பலாக ஒட்டப்பட்டுள்ள பகுதியை உங்கள் தாய் மற்றும் சகோதரிகளுடன் கடக்கும் போது உங்கள் மனம் சஞ்சலமே படாதா?
//அது சரி said...
//
பெண்களின் உடலமைப்பு அப்படி. அதுமட்டுமின்றி பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தி சமூகத்தை சீரழிக்கும் சினிமா உலகம் கற்றுத்தந்த பாடம். எனவே தான் பெண்கள் தங்கள் உடலமைப்பை காமுகர்களின் பார்வையில் இருந்து தற்காத்துக் கொள்ள கொஞ்சம் கூடுதலாக உடையணிய வேண்டியிருக்கிறது. சேலை லேசாக விலகினாலும் அதைக்கூட தன் மொபைலில் படமெடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் இன்றைய நவீன உலகத்தில் பெண்களின் மானத்திற்கு கவச உடை தான் இந்தப் பர்தா.
//
ஆக, ஒரு பெண்ணைப் பார்த்தால் உங்களுக்கு எல்லாம் வேறு எதுவுமே தோன்றாது...செக்ஸை தவிர...இல்லையா???///
அப்படி தோன்றாவிட்டால் அப்பறம் எப்படி இவ்வளவு ஹைட் கேமிராக்கள்? ஏன் இவ்வளவு மானபங்க வழக்குகள். மற்ற பெண்களையும் தன் சகோதரிகளா நினைக்க வேண்டும் சகோதரரே ! அப்போது கெட்ட எண்ணத்திற்கு வாய்ப்பேயில்லை.
//அது சரி said...
//
தன் மனைவிகள், தன் சகோதரிகளை மட்டும் யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துவிடக்கூடாது என நினைக்கும் பல முற்போக்குவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் மற்ற பெண்கள் மட்டும் எப்படி மூடிமறைக்கலாம்? இது அடிமைத்தனம் என கூவுகின்றனர். அவர்கள் தங்கள் மனைவிகளையும், சகோதரிகளையும் சினிமாவில் வருவது போன்ற கவர்ச்சி உடையில் வெளியே அழைத்து வருவார்களா?
//
மொக்கையான கேள்வி....பர்தாவை எதிர்ப்பவர்கள் பெண்கள அம்மணமாக வெளியே வர வேண்டும் என்று சொல்லவில்லை...அவர்களும் மற்றவர்களை போல உடை அணியலாமே என்று தான் சொல்கிறார்கள்...
பி.ஜே. ஆன்லைன் என்றொரு வெப்சைட்டில் படித்தது...அதில் முதல் வரியே "பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இடுகிறது"...
அதாவது, அறிவுரை கூட இல்லை...கட்டளை!!!//
பர்தா அணிய வேண்டும் என்ற கட்டளையில்லை. ஆனால் முகம் கைகள் தவிர மற்ற அனைத்தையும் மறைத்துக்கொள்ள கட்டளை. உங்களிடமும் கேட்கிறேன். உங்களது மனைவி அல்லது சகோதரியை டூ பீஸ் உடையில் வெளியே அழைத்துவருவீர்களா?
//UFO saiட்...//
அருமை பதில்கள் நன்றீ சகோதரரே!
// thendral said...
ஆஹா பேஸ் பேஸ்
//
விவதாமா? அல்லது கேள்விகளா? நன்றீங்க
//Anonymous ரேஹான்னிசா said...
ஆயிரம் வரிகள் புரியவைக்க முடியாத விஷயத்தை ஆறு புகைப்படங்கள் மிக எளிதாய் விரைவாய் அழுத்தமாய் சொல்லி விடும். அந்த வகையில் மிக சிறப்பான பதிவு, நிஜாம் பாய்.//
நன்றி சகோதரி
//சிங்கக்குட்டி said...
ஆ..ஆ....ஆ, திரும்பவும் மொதல்ல இருந்தா...! இப்பத்தான் ஒன்னு முடிஞ்சது அதுக்குள்ள இன்னொன்னா!.
ஆடை என்பது ஆண் பெண் இருவரும் மானத்தை மறைக்க இலைகளை கொண்டு ஆரமித்ததில் இருந்து இண்டுவரை அது பொது இடத்தில் மானத்தை மறைக்க மட்டுமே.
(நான் ஆடை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பை படித்து அத்துறையில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தவன்.)
இதில் இனம், ஜாதி, மதம் இத்தியாதி..இத்தியாதி கொண்டு வந்தது மனிதனின் கீழ்தர அல்லது சுயநல புத்தி.
இதை இதோடு விட்டு விடுங்கள் பதிவர்களே. யாருக்கு என்ன உடை பொருத்தமோ (உடல் அமைப்புக்கு) அல்லது பிடிக்குமோ, அந்த உடையை அணிந்து சந்தோசமாக இருங்கள் மக்களே.
ஏன்? என்றால்! நாளை நாம் அனைவரும் செத்து மண்ணோடு மண்ணாகி விடுவோம் :).//
நல்லது நண்பரே! நன்றீ
நல்ல இடுகை நிஜாம். புரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. புரியாத, ஆனால் புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஓரளவு விளக்கமும் இருக்கிறது. ஆனால் நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக விதண்டாவாததிற்காக மட்டுமே எதிர்ப்பவர்களிடம் சொல்லிப்பயனில்லை நிஜாம்.
நல்ல பதிவு நிஜாம்.
இஸ்லாம் பென்களுக்கு மட்டுமா உடை கட்டுப்பாடு உள்ளது ஆண்களுகும் தான்.
ஒரு ஆண் தன் தொடை தெரியும் அளவுக்கு உடை உடுத்தக் கூடாது.
ஒரு ஆண் திறந்த மார்புடன் அன்னிய பென்களின் முன்னால் செல்வதும் தடுக்கப் பட்டுள்ளது.
இது ஏண் அவர்களின் கண்களில் படுவதில்லை.
பெண்னுரிமை என குதிக்கும் அவர்கள் ஆனுரிமை என இனி குதிப்பார்களா?
// S.A. நவாஸுதீன் said...
நல்ல இடுகை நிஜாம். புரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. புரியாத, ஆனால் புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஓரளவு விளக்கமும் இருக்கிறது. ஆனால் நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக விதண்டாவாததிற்காக மட்டுமே எதிர்ப்பவர்களிடம் சொல்லிப்பயனில்லை நிஜாம்.//
நன்றி நவாஸ்! தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குகிற மாதிரி நடிப்பவர்களை
//ஷாகுல் said...
நல்ல பதிவு நிஜாம்.
இஸ்லாம் பென்களுக்கு மட்டுமா உடை கட்டுப்பாடு உள்ளது ஆண்களுகும் தான்.
ஒரு ஆண் தன் தொடை தெரியும் அளவுக்கு உடை உடுத்தக் கூடாது.
ஒரு ஆண் திறந்த மார்புடன் அன்னிய பென்களின் முன்னால் செல்வதும் தடுக்கப் பட்டுள்ளது.
இது ஏண் அவர்களின் கண்களில் படுவதில்லை.
பெண்னுரிமை என குதிக்கும் அவர்கள் ஆனுரிமை என இனி குதிப்பார்களா?//
முதலில் பெண்கள் பிரச்சனை தீரட்டும் சாகுல். கருத்துக்கு நன்றி
@ நிஜாம் கான்,
இதில் சில திருத்தங்கள் தேவை. முதலாவதாக ...
1. // முகம், முன்னங்கை தவிர மற்ற அனைத்தையும் மறைத்துக் கொள்ளுங்கள்
என இஸ்லாம் தான் கட்டளையிடுகிறது. இறைவனின் வார்த்தைகளை மாற்றுவதற்கோ, அதிலே மனித சரக்குகளைச் சேர்ப்பதற்கோ இஸ்லாத்தில் என்றைக்கும் இடமில்லை.அதே நேரம் உங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என "பெண்களுக்கு" இறைவன் கட்டளையிடுவதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.
அது பெண்களுக்கானது அல்ல. மாறாக "ஆண்களுக்கு" இடப்பட்ட கட்டளை. அதாவது கவனக்குறைவாக பெண்ணின் ஆடையானது விலகி இருந்தாலும் அதையே வெறித்துப்பார்க்காமல் ஆணிண் பார்வையை தாழ்த்தி பெண்மையை உயர்த்துவது.
2. தற்போது ஐரோப்பிய நாடுகளில் விவாதப்பொருளானது நிக்காப் மட்டும் அல்ல. அதனுடன் ஹிஜாப் மற்றும் சீக்கிய சகோதரர்கள் அணியும் டர்பனும் தான். அதாவது மத ரீதியாக அடையாளப்படுத்தப்படும் உடைகளை பாதுகாப்பை கருதி, பொதுமக்கள் கூடுமிடங்களில் அணியத்தடை. இதுவரை தான் எனக்கு புரிபட்டது. கீழுள்ள படங்கள் அவற்றை விளக்கும்.
i).Hijab ban @ France
ii).Turban ban @ France
இதில் சீக்கியர்களும் போராடுவதால் முகம் மறைத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. டர்பன் தலைமுடியை மட்டும் தான் மறைக்கும்.ஆனால் இதே கட்டுப்பாடு ஏனைய மார்க்கத்தினரான யூதர்களில ஆண்கள் அணியும்Kippah மற்றும் பெண்கள் அணியும் Tichel அல்லது கிறிஸ்தவர்களில் ஆண்கள் அணியும் Stole_(vestment) மற்றும் பெண்கள் Wimple அணியும் இந்த ஆடைகளும் இதில் சேர்த்தி தானா என்பது சரியாக தெரியவில்லை. காரணம் எனக்கு கிடைத்த அந்த சட்ட வரைவானது ப்ரெஞ்ச் மொழியில் உள்ளது. ஆகவே இதை மொழி மாற்றினால் தான் முழுமையாக விளங்கும். இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) அதையும் கூடிய விரைவில் செய்வோம். பிரச்சினைக்கு தீர்வு காண முயலுவோம். இந்த பிரச்சினையை நமது இப்ராஹிம் நபி (ஆப்ராஹம்) பார்த்தால், தனது வழி வந்த கூட்டம் இவ்வாறு மற்ற தலையாய பிரச்சினைகளை விட்டு விட்டு தலைக்கு அணியும் சிறு ஆடையை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு வல்ல இறைவனிடம் முறையிட்டு இருப்பார்கள் !!!.
இதைப்பார்க்கும் போது எனக்கு முஹம்மது நபியவர்களின் முன்னறிவிப்பான "இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது.அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும்
ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள் நூல் : புகாரி 3609, 7121, 6936" என்பது தான் நினைவிற்கு வருகிறது. இறைவனே முற்றும் அறிந்தவன்.
with care & love,
Muhammad Ismail .H, PHD,
"இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது.அவர்களுக்கிடையே மகத்தான
யுத்தம் நடக்கும்.
//
kandippaga nadakkum. ellarum anu kundu pottu sethuppovaarkal.
vaazka abrakamiya mathangal.
// kandippaga nadakkum. ellarum anu kundu pottu sethuppovaarkal.
vaazka abrakamiya mathangal. //
@ அன்பின் அனானி,
ஆப்ரஹாமிய மதங்களுக்கு முன்னரும் அணுகுண்டுகளும், ஏவுகணைகளும் இப்பூமிப்பந்தில் உருண்டு விளையாடி அதனை பெருங்காயப்படுத்தி உள்ளது.
வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் -3 (முற்றும்)
மேலுள்ள இடுகையையும் , அதற்கான எனது பின்னூட்டத்தையும் படித்து பாருங்கள். விவரம் புரியும். பிறகு தற்போது அணுகுண்டுகள் ஆப்ரஹாமிய மார்க்கத்தினரிடம் மட்டுமல்ல, முண்டக உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்ட ஸ்லோகமான "ஸத்யமேவ ஜயதே" எனும் சத்தியத்தை வாழ்வியல் அடிப்படையாக கொண்ட நம்மிடமும் உண்டு.
நம்மிடம் போரில் நிதானமிழந்து குழந்தைகளையும், பெண்களையும், முதியோர்களையும் தார்மீக நெறிகளுக்கு எதிராக கொன்று குவிக்கிற அஸ்வத்தாமன்கள் கிடையாது. ஆனால் பழைய ஒரே ஒரு அஸ்வத்தாமன் உலகில் இன்னும் உயிருடன் தான் உள்ளான். மாறாக அர்ஜூனர்கள் மட்டுமே நம்மிடம் உண்டு. இன்னொரு குருக்ஷேத்திரம் நடந்தால் தப்பி பிழைக்கப்போகிற பரிட்சித்து யார் என்பது உங்களுக்கு தெரியுமா ? இன்னொரு குருக்ஷேத்திரம் நடந்தால் இந்த பூவுலகில் என்ன நடக்கும் என அறிவீர்களா ? தெரிந்து கொள்ள ஆசையா? கீழே உள்ள சுட்டியில் கொஞ்சம் விவரம் கிடைக்கும். முயன்றுதான் பாருங்களேன்.
"அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -5"
அந்த இறை நாடினால் மீண்டும் சந்திப்போம். நன்றி வணக்கம்.
Muhammad Ismail .H, PHD,
நன்றி இஸ்மாயில் பாய்! உங்கள் கருத்துக்கள் அருமை! நான் சொல்வதில் தவறுகள் இருந்தால் உங்களின் திருத்தக் கருத்தை தொடர்ந்து படிப்பவர்கள் ஆமோதிக்கட்டும். தொடர்ந்து இணைந்திருங்கள்.