Jan 27, 2010

வடிவேலுவுக்கு ஒரு சிச்சுவேசன் சாங் - 100% காமெடி

நிஜாம் கான் @ 5:17 PM

திரைப்படங்களில் எல்லாரிடமும் அப்பாவியாக அடிவாங்கும் நடிகர் வடிவேலு நிஜத்திலும் அதே போல ஏமாந்த சம்பவம் கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த நேரமும் வடிவேலுவைச் சுற்றி இருக்கும் சக காமெடி நடிகர்களே அவருக்கு ஆப்பு வைத்த சம்பவம் அவரைப் பார்த்து சிரித்தவர்களைக் கூட பரிதாபப் பட வைத்துள்ளது. சொந்தமாக காமெடி டிராக்குகளைக் கொடுக்கும் வடிவேலு தனக்கென ஒரு குழுவையே வைத்து கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் இத்தனைக் காலமும் நல்ல நண்பராக இருந்த‌ ஒருவரே இப்போது வடிவேலுக்கு வேட்டு வைத்துவிட்டார்.

ஒரு காலத்தில் கவுண்டமனியின் அட்டகாசம் தலைவிரித்து ஆடிய போது அவரை ஓரம் கட்டுவதற்காக வடிவேலுவை முன்னிருத்தி அவருக்கு நிறைய வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தது சினிமா உலகம். தனக்கு வந்த வாய்ப்புகளை செம்மையாக பயன்படுத்திக் கொண்ட வடிவேலு மிக வேகமாக முன்னேறினார். அதுமட்டுமின்றி தனக்கென ஒரு குழுவையே உருவாக்கி சொந்தமாக நகைச்சுவை டிராக்குகளை அமைத்துக்கொண்டார். ரிலீசாகும் படத்தில் கதாநாயகனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் வடிவேலுவுக்கும் கிடைக்க ஆரம்பித்தது.

எப்போதும் தன் குழுவுடனே வலம் வரும் வடிவேலு நன்கு சம்பாதித்தார். ஆனால் படிக்காத காரணத்தால் சேர்த்த பணத்தை எப்படி செலவளிப்பது என்று தெரியாமல் இருந்த வடிவேலுவிடம் அவரை பல நேரங்களில் அடிக்கும் மற்றும் சில நேரங்களில் அடிவாங்கும் அந்த நடிகர் ஏமாற்றி விட்டார் என்பது தான் இப்போதைய கோடம்பாக்க ஹைலைட்.

பணத்தை சும்மா வைத்திருப்பதை விட எதிலாவது முதலீடு செய்யுங்கள், அத்தோடு இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் தான் சிறந்த தொழில் எனவும் அவரிடம் எக்குத்தப்பான யோசனை சொல்லி அவரிடமிருந்து பணத்தை அபகரிக்கத் திட்டம் போட்ட சக நடிகர் கிட்டத்தட்ட 7 கோடிக்கும் மேல் பணத்தை வாங்கிக்கொண்டு அரசாங்கம் சுடுகாட்டுக்கு ஒதுக்கிய நிலத்தை பல விதமான போலி டாக்குமெண்டுகள் தயாரித்து அதை வடிவேலுவிடம் விற்று ஏமாற்றியிருப்பது இப்போது வடிவேலுக்கு தெரியவந்து கோபமடைந்த வடிவேலு இனி என் முகத்திலே முழிக்காதே என அவரை விரட்டிவிட்டார். விரட்டப்பட்ட அந்த‌ நடிகர் இவரைப் பழிக்குப் பழி வாங்க அவரின் சக எதிர்கலைஞரான சின்னக்கலைவாணர் வீட்டுக்கதவைத் தட்டி அவரோடு ஐக்கியமாகிவிட்டதாகவும், இனி அவருடன் ஜோடி போடப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமாற்றிய அந்த காமெடி துணை நடிகர் தன் மகனை வைத்து முத்தமிழ் நகர் பெயர் கொண்ட ஒரு படத்தை கோட்டைக்குமார் என்பவரோடு சேர்ந்து தயாரித்திருக்கிறார். ஏன்டா நான் தாகமா இருக்கேன்னு கூல்டிரிங்க்ஸ் வாங்கிக் குடிச்சா, நீ 4 பேரு மூத்தரத்த வாங்கி குடிக்கச்சொல்றே! இனிமே கூல்டிரிங்ஸ் குடிச்சா மூத்தர ஞாபகம் தானடா வரும் என வசனம் பேசிய அந்த Lion Pearl நடிகர் இனிமேல் சின்னக்கலைவாணர் குழுவில் சேர்ந்து கலக்கப் போகிறாராம். அங்கேயும் ஆப்பு வைக்காமல் இருந்தா சரி..

சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் இப்படி அப்பாவியாக அடிவாங்கும் நமது வடிவேலுவின் மனதைரியத்தைப் பாராட்டி இந்த‌ வெண்ணைக் கவுண்டர் என்ற குரும்(பு) படத்தை அவருக்காக சமர்ப்பிக்கிறோம். தயவு செய்து கடைசிவரை பொருமையாக சீன் பை சீனாக ரசியுங்கள். 100 சதவிகித காமெடிக்கு உத்திரவாதம்..

already seen this

11 Response to "வடிவேலுவுக்கு ஒரு சிச்சுவேசன் சாங் - 100% காமெடி"

  1. vasu balaji said...

    பாவம். ஆனாலும் வீடியோ பார்த்து சிரிக்காம இருக்க முடியல.

  2. S.A. நவாஸுதீன் said...

    அந்த ஆளா நிஜாம். ஒரு படத்துல பஸ்ல உக்காந்துகிட்டு செம புளுகு புளுகுவாரே. நிஜத்திலும் அப்படித்தானா.

    வடிவேல் சார். நீங்க ரொம்ப.............. நல்லவர்னு சொன்னது நிஜமாயிடுச்சே. இனிமேலவாவது சுதாரிப்பா இருங்க.

  3. மகா said...

    nice video track.......

  4. Jawahar said...

    வருமான வரி துறைக்கு தகவல் தந்து ஆப்பு வெச்சதும் அவரேதானோ?

    http://kgjawarlal.wordpress.com

  5. நிஜாம் கான் said...

    // வானம்பாடிகள் said...
    பாவம். ஆனாலும் வீடியோ பார்த்து சிரிக்காம இருக்க முடியல.//

    உண்மைதாண்ணே! வடிவேலு நிஜத்தில் அடிவாங்குனாலும் சிரிப்புதான் வருது

  6. நிஜாம் கான் said...

    //S.A. நவாஸுதீன் said...
    அந்த ஆளா நிஜாம். ஒரு படத்துல பஸ்ல உக்காந்துகிட்டு செம புளுகு புளுகுவாரே. நிஜத்திலும் அப்படித்தானா.

    வடிவேல் சார். நீங்க ரொம்ப.............. நல்லவர்னு சொன்னது நிஜமாயிடுச்சே. இனிமேலவாவது சுதாரிப்பா இருங்க.//

    அவரே தான் நவாஸ். நீங்க சொன்ன அட்வைஸை வடிவேலுக்கே அனுப்பிச்சாச்சி!! ஹிஹிஹி

  7. நிஜாம் கான் said...

    // மகா said...
    nice video track.......//

    Thanks Maha.., Stay tuned

  8. நிஜாம் கான் said...

    //Jawahar said...
    வருமான வரி துறைக்கு தகவல் தந்து ஆப்பு வெச்சதும் அவரேதானோ?

    http://kgjawarlal.wordpress.சொம்//

    இல்ல ஜவஹர்! அது வேற மேட்டர்..,

  9. நிஜாம் கான் said...

    வாக்களித்து வெற்றியளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

  10. ஜிஎஸ்ஆர் said...

    சூப்பர் எடிட்டிங் எப்படி இப்படியெல்லாம் யோசிச்சு அதை செயல்படுத்தவும் முடியுது.



    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

  11. ஷாகுல் said...

    உடன் இருந்தவர்களை முழுவதுமாக நம்பி விட்டர் போல் இருக்கிறது. எல்லா பேமண்டையும் கேஷா வாங்கி பெட்டுக்கு கீழ வச்சிருப்பாராம் புயல். வருமான் வரி துறையை ஏமாற்ற நினைத்தார். எல்லாம் போச்சி.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,