நம் தேசத்தில் சட்டமும் நீதியும் எல்லாருக்குமே பொது என்றால் அவனை ஏற இறங்க பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது தற்போதைய நீதியின் நிலை. சட்டம் ஒன்று தான் ஆனால் அதை வளைக்கும் வல்லமை ஏழைகளுக்கு ஒன்று பணக்காரர்களுக்கு ஒன்று. அதிகாரவர்க்கத்திற்கு ஒன்று பாமர வர்க்கத்திற்கு ஒன்று என ஏகப்பட்ட வேறுபாடுகள் நிலவுவதைக் கண்கூடாக காணலாம். அந்த வகையில் 19 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு இன்றைக்கும் கூட கடமைக்கு சொல்லப்பட்டுள்ள தீர்ப்பு தான் இந்த ருச்சிகா தற்கொலை வழக்கு.
யார் இந்த ருச்சிகா?
ஹரியான மாநிலம் சண்டிகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியான ருச்சிகா டென்னிஸில் ஆர்வம் கொண்டு தன் தோழி ஆராதனாவுடன் அந்தப் பகுதியில் இருந்த டென்னிஸ் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ருச்சிகாவின் அழகில் மயங்கிய அன்றைய காவல்துறை ஐஜியும், அந்த கிளப் தலைவருமான ரத்தோர் ருச்சிகாவை தனியாக வரவழைத்து அவளை மானபங்கம் செய்ய முயல அந்த மிருகத்தின் பிடியில் தன் தோழியின் உதவியோடு தப்பித்து விடுகிறார் ருச்சிகா.

அடுத்த நாளும் இவர் பலாத்காரத்திற்கு முயல ருச்சிகா மறுத்து தன் தந்தையின் உதவியோடு அன்றைய முதல்வருக்கு புகார் அளிக்க, அன்றைய டிஜிபியான ஆர்.ஆர். சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரனைக்கு உத்தரவிட்டார். ஆனால் அங்கும் அதிகார பலம் மேலோங்க அந்த அறிக்கையோடு சேர்த்து வழக்கும் கிடப்பிலே போடப்பட்டது., உடனடியாக அந்த கிளப்பில் இருந்தும், அவள் பயின்ற பள்ளியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்படுகிறார் ருச்சிகா. மற்ற பள்ளிகளும் இவருக்கு இடம் கொடுக்க மறுக்கின்றன. இந்த நிலையில் அவர் அண்ணன் ராகுல் மீது 6 திருட்டு வழக்குகள் (தமிழகமாக இருந்தால் கஞ்சா வழக்கு போட்டிருப்பார்கள்) போட்டு சிறையிலே சித்ரவதை செய்யப்படுகிறார்.
ருச்சிகாவின் தற்கொலை முடிவு:
மூன்று வருடங்களாக ருச்சிகாவின் குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். இதனால் மனம் உடைந்த ருச்சிகா 1993 ஆம் ஆண்டு விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன் அந்த மாநில முதல்வரிடம் கொடுக்கப்பட்ட மணு கிடப்பில் போடப்படுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளி ரத்தோர் டிஜிபியாக பதவி உயர்வு பெறுகிறார். ருச்சிகாவின் மரணத்தால் அவர் தந்தை சுபாஸ் செய்வதறியாது நிற்கும் போது ருச்சிகா தோழி ஆராதனாவின் பெற்றோர் பிரகாஷ் தம்பதியினர் இந்த வழக்கை கையிலெடுக்கின்றனர். எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் சுமார் 7 வருடங்களுக்கு பிறகு 2000 ஆம் ஆண்டில் அந்த பழைய ஆர்.ஆர்.சிங்கின் அறிக்கை இவர்களுக்கு கிடைக்க மீண்டும் களமிறங்குகிறார்கள். ஹரியான நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. ஆனால் இதன் பாதிப்புகள் துளியுமின்றி 2002 ஆம் ஆண்டு ரத்தோர் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் எவ்விதமான நிலுவையுமின்றி பெற்று ஓய்வு பெறுகிறார்.

ஆயிரம் ஓவாயும் ஆறு மாதமும்:
சைக்கிள் திருடியவனை ரவுண்டு கட்டி அடித்து துவைத்து அவனுக்கு 5000 ரூபாயும் ஒரு வருட சிறையும் விதிக்கும் நமது நீதித்துறையினர் பாலியல் குற்றவாளியான இந்த ரத்தோருக்கு ஆயிரம் ரூபாயும் ஆறுமாத சிறை தண்டனையும் விதித்து தன் தீர்ப்பை சர்வதேச தரத்தில் அளித்திருக்கிறது. இவர் மீது போடப்பட்ட தற்கொலைக்கு தூண்டும் பிரிவு வழக்கு முன்னரே சத்தமில்லாமல் நீக்கப்பட்டு விட்டது. சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு கண்கூடாக நடந்த ஒரு நிகழ்விற்கு நீதிமன்றம் அளித்த அதிகபட்ச தண்டனை ஆறுமாதம் மட்டுமே அதுவும் உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டு விட்டது. இதுவே ஒரு சாமானியனாக இருந்திருந்தால் அவனுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைத்திருக்கும்.

ரத்தோருக்காக வாதாடிய பெண் வழக்கறிஞர்:
ஒரு எதிர்கால வீராங்கனையின் வாழ்க்கையை அழித்த இந்த காம மிருகத்திற்கு ஆதரவாக வாதாடியது ஒரு பெண் வழக்கறிஞர் என்பது தான் மானக்கேடான விசயமே. இவரது மகளுக்கு இது போன்ற ஒரு கொடுமை நடந்திருந்தால் அதற்கு ஆதரவாக வாதாடியிருப்பாரா இவர்? காசுக்காக சட்டத்தின் ஓட்டைகளை அடைப்பவர்களை விட காசுக்காக கற்பை விற்கும் விபச்சாரிகள் எவ்வளவோ மேல். இந்த வழக்கறிஞர்கள் நினைத்தால் தேசத்தந்தை காந்தியை கொலை செய்தவனைக் கூட நிரபராதியாக்கி காந்தி கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றிவிட இயலும். ஆக நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது இது போன்ற கொடுமைகளை பார்கக்கூடாது என்பதால் தானா?

பெரிய பதவிகளில் இருந்து கொண்டு உள்ளுக்குள்ளே காமகளியாட்டம் ஆடும் இது போன்ற மிருகங்களை நாடு கடத்த வேண்டும். இவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் சொத்துக்களும் பறிக்கப்பட்டு நடுத்தெருவிலே விட வேண்டும். அப்போது கூட இவர்கள் திருந்த மாட்டார்கள்.

நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா,
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா?
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே,
நீதியென்றும் நேர்மையென்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே!
என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. வாழ்க ஜனநாயகம்.


ரத்தம் கொதிக்கிறது
Welldone Nizam,
Please be careful about yourself. You have entered into sanctum sanctorium of judgement portal. One cannot say anything about the judiciary. Else, you shall be sentenced into jail.
"All are Equal, but SOME are MORE EQUAL than others". The 'SOME' should be ruling-politician or bureaucrat or rich or policeman.
இந்தமாதிரி ஆளுங்களுக்கு மரணதண்டனை தான் சரியான தீர்ப்பாக இருக்க முடியும்.
இப்பொழுது மீடியாக்கள் காட்டும் இதே இண்ட்ரெஸ்ட் அப்பொழுதே காட்டியிருந்தால் கேஸ் எப்பவோ முடிந்திருக்கும். நம்ம மீடியாக்களுக்கு அதுக்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது.
இவனுங்கள என்ன பண்ணா தகும். தப்புன்னு ருசுவான பிறகு அதிகபட்சம் தரவேணாமா? போற போக்குல தத்கல் ஸ்கீம் கேப்பானுங்க போல. பணம் கட்டிட்டு முடிச்சிக்கிறம். அப்புறம் பார்க்கலாம்னு.பரதேசி நாயிங்க.:(
Hi some lady argue to that case know, She wife of him.
nice post,
Through this blog we avoid cyber cheaters.
http://cyberfraudidentifier.blogspot.com/
If you have any experience or you know like that information mail me.
thank you
நாம் நாட்டில் பண பலம், அதிகாரம், உள்ளவர்கள் சொல்வதை நீதித் துறை செய்யும். வசதி இல்லாத சாதாரண மக்களுக்கு இந்தியாவில் ஏதையா நீதியும், நியாயமும்?
its really true....
@goma
@ELIYAVAN
@ S.A. நவாஸுதீன்
@வானம்பாடிகள்
@cyber cheating
@அழகன்
@மகா
கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி