ஸ்வீட்***காரம்***காபி***04/01/2010
காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி
பல இடங்களுக்கும் கங்காரு போல தாவித்தாவி அலுத்துப்போய் விட்டார் மருத்துவர் ராமதாஸ். இவர் போய்ச் சேரும் கூட்டணி ஜெயிக்கும் என்ற டாக் இப்போது சுத்தமாக அடிபட்டுப் போய்விட தனிமரமாகி விட்டார் மருத்துவர் அய்யா. இந்த நிலையில் மருத்துவர் அய்யாவின் அடிப்பொடிகள் ரொம்ப நாளாக எழுப்பிவந்த கோசம் தனியாக நிற்பது என்பது. ஆனால் காலத்தின் சூழ்நிலை கருதி அதை முற்றிலும் மறுத்துவந்தார் மருத்துவர். இந்த நிலையில் பென்னாகரம் இடைத்தேர்தலை பாமகவுக்கு ஒரு சோதனைக் களமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது பாமக செயற்குழு. சமீபத்தில் தைலாபுரத்தில் கூடிய செயற்குழுவில் இந்த தேர்தலில் பாமக போட்டியிடலாமா என்ற விவகாரம் அலசப்பட்டு அதிகபட்சமாக பாசிடிவ் ரிசல்ட்டே கிடைத்திருக்கிறது.
இந்த செயற்குழுவிற்கு முன்னதாக மருத்துவர் அய்யா பல முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதாவது வன்னியர்கள் வாக்குவங்கி இன்னமும் நமக்குத்தான் இருக்கிறதா அல்லது சிதைந்துவிட்டதா என்பதை இந்த பென்னாகரம் தேர்தல் மூலமாக சோதித்துக் கொள்ள ஏற்பாடே இந்த போட்டியிடும் முடிவாம். அதாவது எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அதிகபட்சம் 10 முதல் 15 வரை சீட் கிடைக்கிறது என்றும் இதிலே நம் வன்னியமக்கள் வாக்குவங்கியுள்ள பகுதிகள் எப்படியும் 14 தொகுதிகள் தேறும் என்றும், மிகக்கடுமையாக உழைத்தால் குறைந்தது 10 தொகுதிகளிலாவது வரும் சட்டசபைத் தேர்தலில் வென்றுவிடலாம் என்றும் பாமகவின் நலன்விரும்பிகள் தெரிவிக்க அதைச் சோதிக்கும் சோதனைக் களமாக் இந்த பென்னாகரத்தை எடுத்துக்கொள்ளப் போகிறாராம் மருத்துவர் அய்யா.

இந்த இடைத்தேர்தலில் வென்றால் அடுத்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவாம். அல்லது அதிருப்தியிலே இருக்கும் இடதுசாரிகள், வைகோ மற்றும் சில ஜாதி லட்டர் பேடுகள், ஜாதி விசிட்டிங் கார்டுகளை சேர்த்துக்கொண்டு மூன்றாவது அணி அமைக்கக் கூடத்திட்டமாம். அதனால் தான் தடாலடியாக கோ.க மணியின் மகனார் தமிழ்க்குமரனை நிறுத்தி வெள்ளோட்டம் பார்க்கத்தயாராகி விட்டாரம் மருத்துவர் அய்யா. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என அறிவிப்பும் செய்துவிட்டார். நமது கேள்விகள் 2. ஒன்று, காடுவெட்டி குருவுக்கே கைகாட்டிய மக்கள் தமிழ்க்குமரனுக்கு வெற்றி தருவார்களா? இரண்டு மூன்றாவது அணி கூட்டணியில் விசயகாந்தையும் ஆட்டத்துக்கு சேத்துக்குவியலா?
தப்பியோடிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்:
பிரியாணி சாப்பிட்டுட்டு வருவதற்குள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். 2000 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்ற தாக்குதலில் கைது செய்து ஆறு வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டு தண்டனை முடிந்த நிலையில் கஷ்டப்பட்டு பிடித்த மீன் துள்ளி குதித்து ஆற்றிலேயே விழுந்தது போல பாகிஸ்தானுக்கு நாடு கடத்த தயாரான நிலையில் தங்களுக்கு கண்பார்வை மங்குவதாக கூறி மருத்துவ சிகிச்சைக்கு போன 3 பேரும் அங்கிருந்து மறுபடியும் இந்தியாவிற்குள்ளேயே எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். வரும் 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாட இருக்கும் நிலையில் இந்த டேஞ்சர் பார்ட்டிகளை மீண்டும் இந்தியாவிற்குள்ளேயே அனுப்பிவைத்த இவர்களை என்னவென்று சொல்வது? தண்டனை முடிந்ததும் அவர்களை விரட்டி அடிக்காமல் அவர்களுக்கு வைத்தியம் பார்த்த நம்ம அதிகாரிகளை என்னவென்று சொல்வது? இன்னம் கொஞ்ச நாள்ல தீவிரவாதிகள் காவல்துறை கண்களில் மண்ணை அள்ளிக்கொட்டிவிட்டு எஸ்கேப் என்று செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மஹாராஷ்டிர மாநிலம் செம்பூர் என்ற இடத்தில் நிழலுலக தாதா சோட்டாராஜனின் கூட்டாளிகள் நடத்திய புத்தாண்டு விருந்தில் குத்தாட்டம் போட்டு குப்புற கவிழ்ந்த காவல் அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போனமா வந்தமான்னு இல்லாம புல்லா சரக்கடிச்சிட்டு அங்கிருந்த நடன தாரகைகளுடன் குத்தாட்டம் போட்டு கும்மாளம் அடிக்க, ஆஹா நம்ம காவல் துணை ஆணையாளரும், உதவி ஆணையாளரும் என்னா போடு போடறாரு என செல்போனில் அதைப் படமெடுத்து புளுடூத் வழியாக பரவி கடைசியில் அவர்களை கமிசன் முன்னிலையில் நிறுத்திவிட்டது. ஆடிய ஆட்டத்திற்கு கொஞ்ச நாளைக்கு ஓய்வு எடுத்துக்குங்க என அவர்களை சஸ்பென்ட் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது மஹாராஷ்டிர அரசு. என்ன தான் நாட்டுக்கு போலீஸா இருந்தாலும் வீட்டுக்கு அவங்க குடிமகன்கள் தானே?
எவனுக்கும் பயப்படமாட்டோம்: ராஜபக்சே :
ராஜபக்சே, பொன்சேகா ஆகியோரின் பகையால் புதைந்து போன ஏகப்பட்ட ரகசியங்கள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெள்ளைவாகன கடத்தல் சம்பவம் பற்றியும், அதிலே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 4000 தமிழர்களில் 1000 பேரின் பெயர் பட்டியலும் வெளியாக அதிர்ந்து போனது ராஜபக்சே அரசு. அத்தோடு வன்னிக்களத்தின் இறுதிப்போரில் சரணடைந்த புலிகளை கொடூரமாக சுட்டுக்கொன்ற செய்தியும் அதிலே சம்மந்தப்பட்டவர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல் இருக்கிறார் ராஜபக்சே. அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் வீணாக செலவு செய்த கோடிக்கணக்கான அரச செலவுகள் பற்றிய பட்டியலும் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் பொன்சேகாவின் சதி என்றும் தான் யாருக்கும் பயப்படப் போவதில்லை என்றும் வெற்றி எனதே எனவும் வீரக்கோசங்களை எழுப்பிவருகிறார் இந்த வீரசிம்மன்.

குழப்பம் தீராத தமிழ்தேசிய கூட்டமைப்பு:
யாரை ஆதரிப்பது என இன்னமும் குழப்பத்தில் இருக்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு. நிச்சயம் ராஜபக்சேவுக்கு ஆதரவு கிடையாது என்றாலும் பொன்சேகாவை எப்படி ஆதரிப்பது எனவும் யோசித்து வருகிறதாம். இந்த நிலையில் தமிழர்களின் ஆதரவை விக்ரமபாகு கோரியிருந்தாலும் அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே! தேர்தலுக்கும் இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில் தங்கள் ஆதரவை விரைவில் அறிவிக்கும் அவசர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது ததேகூ. ஆதரவு நிச்சயம் பொன்சேகாவுக்குத்தான் எனவும் சில தகவல்கள் கசிகின்றன.

2009 ல் திவாலான தமிழ் சினிமா உலகம்:
இதுவரை இது போன்ற ஒரு நிலையை தமிழ்சினிமா கண்டதேயில்லை என ஆகிவிட்டதாம் 2009. நல்ல லாபம் சம்பாதித்த படங்கள் பட்டியலில் பத்து படமும், ஓரளவு லாபம் சம்பாதித்த படங்களில் பத்து படங்களும் மட்டுமே இருக்கிறதாம். திருட்டு டிவிடி மட்டுமே பிரச்சனையாக இருந்த காலம் போய் இப்போது இண்டெர்நெட்டிலும் படங்கள் துல்லியமாக வெளியிடப்படுவதால் இப்போது தமிழ்த்திரையுலகிற்கு கடந்த ஆண்டு மட்டும் 155 கோடிக்கு மேல் நஷ்டமாம். பழையபடி கருப்பட்டி காய்ச்ச போகலாமா என பல தயாரிப்பாளர்களும் மூட்டைகட்டி கிளம்ப இருக்கிறார்களாம். இனிமேல் பெரிய கம்பெனிகளும், டிவி கம்பெனிகளும், என்.ஆர்.ஐ களும் மட்டுமே படம் தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கோடம்பாக்கத் தகவல் தெரிவிக்கிறது.

ஹோமம் வளர்த்த நாத்தீக நடிகர்:
அந்த பிரபலமான நாத்தீக நடிகர் தன் கொள்கை பற்றி எப்போதுமே குழப்பிவருவார். இந்த நிலையில் சென்ற வருடத்தில் கடைசி மாதத்திற்கு முந்தைய மாதம் தன்னுடைய வீட்டில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பிரம்மாண்டமாக ஹோமம் வளர்த்ததாக ஒரு கமுக்கத் தகவல் கசிகிறது. இவரின் மேடை பேச்சுகளின் குறுந்தகடுகள் இறை மறுப்போர் கழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த செயலை அறிந்த ஆளை வாரும் ஏரியா நாத்தீக தொண்டர்கள் தங்கள் தலமைக்கு தகவல் தெரிவித்து வருகிறார்களாம். எனவே அவரின் குறுந்தகடுகள் இனிமேல் இவர்களின் நிகழ்ச்சிகளில் விற்பனை செய்யப்படுமா என்பது அவர்களின் முடிவுகளில் தான் தெரியும்.
ஒன்றே சொல் :
என்னைப் பார் யோகம் வரும். சலவைத் தொழிலாளியைப் பார்த்து சிரித்தது கழுதை
(இது வெறும் நகைச்சுவையேயன்றி யாரையும் குறிபிடுவது அல்ல)
உலக காவல்துறையினர் மாநாடு:
அமெரிக்க போலீஸ் : குற்றம் நடந்து 24 மணி நேரத்தில் குற்றம் பற்றிய முழுவிபரம் மற்றும் குற்றவாளி யார் எனத் தெரிந்துவிடும்.
ஸ்காட்லாந்த் போலீஸ்: குற்றம் நடந்து 24 மணி நேரத்தில் குற்றம் பற்றிய முழுவிபரம் மற்றும் குற்றவாளி யார் எனத் தெரிந்துவிடும்.
இந்தியக் காவல்துறை: குற்றம் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே குற்றம் பற்றிய முழுவிபரம் மற்றும் குற்றவாளி யார் என எங்களுக்குத் தகவல் வந்துவிடும்.
அறிவிப்பு: மேற்கண்ட வீடியோவின் தயாரிப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்..,


// அதனால் தான் தடாலடியாக கோ.க மணியின் மகனார் தமிழ்க்குமரனை நிறுத்தி வெள்ளோட்டம் பார்க்கத்தயாராகி விட்டாரம் மருத்துவர் //
இவர் மகனை நிறுத்தி வெள்ளோட்டம் பார்க்க வேண்டியதுதானே? ஏன் காடுவெட்டி மகனை நிறுத்துகின்றார்?
// "நள்ளிரவு ஹோமம் வளர்த்த நாத்தீக நடிகர்" //
நான் வேற எதோன்னு நினைச்சுட்டேன்...
இன்றுதான் தங்களில் ஸ்விட்,காரம்,காபி சாப்பிட்டேன். மிக அருமை...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அட!!!!!!!!!!!
நெசமாவாச் சொல்றீங்க!!!!!
ராமதாஸ் செய்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஊரே ஒதுக்கி வச்சிருக்கும்போது யார் கூட கூட்டணி வைக்கமுடியும், நீங்களே சொல்லுங்க.
இலங்கையில் யார் வந்தாலும் இழந்தது திரும்ப கிடைக்கப்போவதுமில்லை. எஞ்சி இருப்பவர்களுக்கு பாதுகாப்பும் இல்லை. இதுதான் நிதர்சனம்.
இந்தியக் காவல்துறை: குற்றம் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே குற்றம் பற்றிய முழுவிபரம் மற்றும் குற்றவாளி யார் என எங்களுக்குத் தகவல் வந்துவிடும்
ENNATHAAN THERINJAALUM.. MONEY KUDUTHTHU ETHUVUM SEYYALAAM......
எப்போதும் போல சூப்பர்
//இராகவன் நைஜிரியா said...
// அதனால் தான் தடாலடியாக கோ.க மணியின் மகனார் தமிழ்க்குமரனை நிறுத்தி வெள்ளோட்டம் பார்க்கத்தயாராகி விட்டாரம் மருத்துவர் //
இவர் மகனை நிறுத்தி வெள்ளோட்டம் பார்க்க வேண்டியதுதானே? ஏன் காடுவெட்டி மகனை நிறுத்துகின்றார்?//
அண்ணே! அவரு தான் எம்பி ஆயிட்டாருல்ல. மறுபடி எப்படி போவார்?
// இராகவன் நைஜிரியா said...
// "நள்ளிரவு ஹோமம் வளர்த்த நாத்தீக நடிகர்" //
நான் வேற எதோன்னு நினைச்சுட்டேன்...//
நீங்க என்ன நெனச்சீங்கன்னு எனக்குத் தெரியுமே
//வேலன். said...
இன்றுதான் தங்களில் ஸ்விட்,காரம்,காபி சாப்பிட்டேன். மிக அருமை...
வாழ்க வளமுடன்.
வேலன்.//
நன்றி அய்யா தொடர்ந்து வாங்க
//துளசி கோபால் said...
அட!!!!!!!!!!!
நெசமாவாச் சொல்றீங்க!!!!!//
உண்மைதாங்க கோபாலண்ணே!
//S.A. நவாஸுதீன் said...
ராமதாஸ் செய்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஊரே ஒதுக்கி வச்சிருக்கும்போது யார் கூட கூட்டணி வைக்கமுடியும், நீங்களே சொல்லுங்க.
இலங்கையில் யார் வந்தாலும் இழந்தது திரும்ப கிடைக்கப்போவதுமில்லை. எஞ்சி இருப்பவர்களுக்கு பாதுகாப்பும் இல்லை. இதுதான் நிதர்சனம்.//
கரெக்ட் நவாஸ் நீங்க சொல்றதையும் ஏத்துக்கலாம்
//Anonymous said...
இந்தியக் காவல்துறை: குற்றம் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே குற்றம் பற்றிய முழுவிபரம் மற்றும் குற்றவாளி யார் என எங்களுக்குத் தகவல் வந்துவிடும்
ENNATHAAN THERINJAALUM.. MONEY KUDUTHTHU ETHUVUM SEYYALAAM......//
அண்ணாச்சி! உங்களுக்கு சரியா புரியலைண்ணு நெனக்கிறேன்
//ஷாகுல் said...
எப்போதும் போல சூப்பர்//
எப்போதும் போல நன்றீ
மகனை நிறுத்தி வெள்ளோட்டம் பார்க்க வேண்டியதுதானே?