Sep 30, 2009

பழசை மறந்து போன ஜெயலலிதா!!!

நிஜாம் கான் @ 9:30 PM

வேற வேலையே இல்லையா என கேட்க வைக்கும் அளவுக்கு தினசரி ஏதாவது ஒரு போராட்டம்,ஆர்ப்பாட்டம் என அதிமுகவினரை வறுத்து எடுக்கிறார் வறட்சித்தலைவி சாரி பொரட்சித்தலைவி ஜெயலலிதா. அதிலும் சென்னை சார்ந்த போராட்டம் என்றாலே அதிலே சேகர்பாபுவும், கலைராஜனும் தான் தலைமை எனவும் அறிவித்து விடுகிறார். என்ன காரணம்? சேகர்பாபுவுக்கும், கலைராஜனுக்கும் காவல்துறையின் உயர்மட்டமே பயப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி மேற்கண்ட இருவரும் எதற்கும் துணிந்தவர்கள்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்றாலே யார் அது? என்று கேட்கும் ஜெயலலிதா ஏதோ தேவையான நேரத்தில் கறிக்குழம்பிற்கு கருவேப்பிலை சேர்ப்பது போல அவ்வப்போது அவரின் பெயரை சொல்லிக் கொள்கிறார். அதையன்றி அங்கே எம்ஜிஆருக்கு துளியளவும் மரியாதை இல்லை. ஒரு ஆரோக்கியமான எதிர்கட்சி தலைவராக இதுவரை ஜெயலலிதா என்ன செய்தார்? இத்தனை போராட்டங்கள் அறிவிக்கிறார். ஆனால் அவர் எதிலுமே கலந்து கொள்வது இல்லை.சட்டசபை கூட்டத்தொடருக்குக் கூட எதோ ஒரு மூன்றாம் நபர் போல வந்து வம்பை இழுத்து விட்டுச் செல்கிறார்.

சும்மா கெடந்த அதிமுகவினரை இப்போது தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நிதம் ஒரு போராட்டம் என்று சொல்லி பெண்டு நிமித்துகிறார். அதிலே துளியும் கூட‌ மக்கள் நலன் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்திலுமே திமுகவின் தலைமையையும் அதன் தலைவர்களையும் மிகக் கடுமையாக தாக்கி விமர்சிக்க மட்டுமே ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவர் எதையுமே கண்டு கொள்ளவில்லை. அவர் எதையெல்லாம் அப்போது கண்டுகொள்ளவில்லையோ இப்போது அதையெல்லாம் செய்யச் சொல்லி போராட்டம் நடத்துகிறார்.

ஒரு காலத்தில் நல்ல நிலையில் போய்க் கொண்டிருந்த ஜெயா டிவி செய்திகள் இப்போது சப்பென்றாகி விட்டது. 7.30க்கு துவங்கும் செய்தியில் அம்மாவின் அறிக்கையை ஒரு புள்ளி,கமா விடாமல் படித்து முடிக்க 7.50 ஆகிவிடுகிறது. அப்பறம் எங்கே மற்ற செய்திகளைச் சொல்ல? அதிலும் திமுக என்று வரும் இடங்களில் சாதாரணமாக படித்தால் அடுத்த நிமிடம் வாசிப்பாளருக்கு டிஸ்மிஸ் ஆர்டர் கையிலே வந்து விடும். அதை கவனத்தில் கொண்டு மைனாரிட்டி திமுக என்று தான் படிக்க வேண்டும்.

நாதஸ்வரம் வாசிப்பவர் முன் நின்று கொண்டு நார்த்தங்காய் தின்பது போல வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி மைனாரிட்டி மைனாரிட்டி என சொல்லிச் சொல்லி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொள்கின்றனர் ஜெயா குழுவினர்.

சமீபத்தில் நடந்த போக்குவரத்து தொழிற்சங்க போனஸ் பேச்சுவார்த்தையில் அரசு 20% அறிவித்தது. ஆனால் அண்ணா தொழில்சங்கத்தினர் 40% கேட்டு வெளி நடப்பு செய்தனர். இதுவும் அம்மாவின் ஆசியோடு தான்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அன்னிக்கு முதல்வராக இருக்கும் போது வெறும் 11% க்கு மேல் ஒரு பைசா பேராது, என வலுக்கட்டாயமாக பேச்சுவார்த்தையே கிடையாது என்ன வேணுமினாலும் செஞ்சிக்கங்கடா! என சூளுரைத்ததும், தீபாவளி சமயம் என்று கூடப் பாராமல் ஓட்டுனர்கள் ஸ்டிரைக் செய்ததும், தீபாவளிக்கு போக்குவரத்து முழுமையாக தடைபட்டதும், நான் சொன்னது தான்டா சட்டம் என , ஒன்றுமே தெரியாதவர்களை வெறும் லைசன்ஸ் இருந்தா மட்டும் போதும் என்ற ரீதியில் பயிற்சி ஓட்டுனர்களைப் போட்டு சமாளித்ததும், அதிலே ஒரு பஸ் இராமநாதபுரம் அருகே முழுமையாக முங்கிப் போனதும்,உயிருக்கு பயந்த மக்கள் தனியாரை நாடியதும், அந்த நேரத்தைப் பயன்படுத்தி தனியார் பேரூந்துகள் கொள்ளையடித்ததும் என அடுக்கடுக்கான விசயங்கள் அண்ணா தொழிற்சங்கத்துக்கும், அதிமுக தலைவிக்கும் இப்போது நினைவுக்கு வரவில்லையா?

திமுகவின் ஆட்சியை மட்டுமே குறை சொல்லி காலந்தள்ளும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்சியை தாங்கள் அடகுவைத்திருக்கும் கும்பலிட‌மிருந்து இன்னும் மீட்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை. இப்படியே காலம் தள்ளிக்கொண்டிருந்தால் கொஞ்ச நாட்களில் அந்த மாபியா கும்பல் கட்சி மொத்தத்தையும் கடலில் பிள்ளையார் கரைப்பதைப் போல கரைத்து விடும். அந்த நாள் வெகுவிரைவில் இல்லை.கவனமாக இருந்தால் கட்சியையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.

already seen this

3 Response to "பழசை மறந்து போன ஜெயலலிதா!!!"

  1. உடன்பிறப்பு said...

    அடிச்சு ஆடுங்க பாஸு

  2. நிஜாம் கான் said...

    @உடன்பிறப்பு

    வாங்க தல. எப்படி இருக்கிறீங்க. ரொம்ப நாளாச்சி. கருத்துக்கு நன்றிகள்.

  3. Kolipaiyan said...

    நண்பரே, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. மக்கள் ஒன்றும் மாக்கள் அல்ல என்பதனை ராமதாஸ் தற்போது புலம்புவது போல, விரைவில் ஜெ.வும் புரிந்துகொள்வார்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,