Sep 30, 2009

இன்று வரை புரியாத புதிர்

— நிஜாம் கான் @ 1:53 AM

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.

விழாவிலே முக்கியமாக 8 தீர்மானங்கள் நிறைவேற்றப் ‍பட்டன.

அந்த எட்டிலும் மிக முக்கியமான ஒன்று தான் தமிழகத்திலே அகதிமுகம்களிலே வாழும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றியதாகும். இந்த இடத்திலே நாம் சிந்திக்க வேண்டியது யாதெனில் அகதிகளுக்கு தமிழகத்திலே குடியுரிமை தேவையா என்பது பற்றியது தான்.

காரணம் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்திலே வாழும் நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழ‌ர்களின் நிலையை ஒப்பிடும் போது அங்கே கொடூரன் ராஜபக்சேவின் முள்வேலி முகாம்களே தேவலாம் என்ற நிலை ஏற்படுகின்றது. தன் சொந்தம் விட்டு பந்தம் விட்டு இருந்த நாட்டை விட்டு இனி அங்கே வாழ இயலாது என, உள்ளதையாவது காத்துக் கொள்வோம் என நம்பி தமிழகம் வரும் அந்த பாவப்பட்ட மக்கள் இங்கே எப்படி நடத்தப் படுகிறார்கள் தெரியுமா?

திருடர்களை விட,கொலைகாரர்களை விட மிகமிகக் கேவலமாக அவர்கள் நடத்தப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை. ஒரு நாட்டை விட்டு மறு நாட்டிற்கு அகதிகளாக வருவது என்ன அவ்வளவு குற்றமா? இந்த தமிழகத்தின் அகதிகள் முகாம்களின் காவலர்கள் என்னவோ அவர்களின் அப்பன் வீட்டுச் சொத்தை விற்று அவர்களுக்குச் சோறு போடுவது போல என்னிக்கொண்டுள்ளார்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களில் வாடும் தமிழர்களின் நிலையை எதிர்த்துக் குரல்கொடுக்கும் தமிழக அமைப்புகள் ஒரு நாளாவது இங்குள்ள முகாம்களுக்குச் சென்று பார்த்ததுண்டா? ஒரு முறை சென்று பார்த்தால் தெரியும் அவர்களின் துயர்.

கிராமங்களிலே நாம் கண்டிருப்போம், ஒரு மாட்டின் கழுத்தில் ஒரு நீண்ட கயிற்றைக் கட்டி அதை மேய விட்டிருப்பார்கள். அந்த மாடு நினைத்துக் கொள்ளும் நம் எஜமான் நம்மை மிகச்சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார் என்று, ஆனால் அந்த மாட்டின் எஜமானனுக்குத் தெரியும் அதன் எல்லை எவ்வளவு என்று. அதே கதை தான் தமிழக முகாம்களிலும். அனைத்தையும் இழந்து அவர்கள் ஒரு படகிலேறி வந்து ஏதாவது ஒரு திட்டிலே இறக்கிவிடப் பட்டு பல நாள் அந்த திட்டிலே குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் பட்டினி கிடந்து கடைசியாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் சென்று அவர் நிதானமாக அனுமதி பெற்று தன் படை பட்டாளங்களுடன் வந்து குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் அந்த மக்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து கரையிலே தள்ளுவார்.

4 நாள் பட்டினி கிடந்த அவர்களுக்கு உடனடியாக உணவளிக்காமல் துவங்கும் நீண்ட‌ கீயூ வரிசை விசாரணை. அப்பா யாரு அம்மா யாரு ? எந்த ஊரு? சொத்தென்ன? நிலமென்ன? எத்தன வருசமா இருக்கிறீர்? அடச்சீ! மனிதாபிமானமற்ற பாவிகளா! தங்கள் குடும்பத்தையும் உறவையும் குண்டுக்கு பலி கொடுத்து வந்தவர்களிடம் என்னடா விசாரனை வேண்டியிருக்கிறது. அதுவும் அங்கே வரும் கூட்டத்தில் வரும் வயசுப் பெண்கள் நிலை மிகப் பரிதாபம். அவர்களுக்கு புக்மார்க் வைக்கப் பட்டு அவர்கள் சீரழிக்கப் படுகிறார்கள். அதுபோல இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் செத்துப்போன பிணத்தில் நகை திருடுபவர்களைப் போல. அந்த மக்கள் கொண்டு வரும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் பொருளையும் கூட லாவிக் கொள்வார்கள்.

ஆனால் அனைத்து முகாம்களும் இதுபோல,அனைத்து பணியாளர்களும் இதுபோல இருப்பதில்லை. அதிலும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இதுவரை பாதிக்கப் பட்ட மக்கள் யாரும் புகார் செய்யவில்லை. காரணம் புகார் அவர்களது வளாகச் சுவரை விட்டு வெளியே தாண்டாது. மீறினால் அடி உதை. ஆக நம் நாட்டில் இருக்கும் முகாம்களுக்கும் அண்ணன் ராஜபக்சே முகாமுக்கும் அப்படி ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆக அந்த பாவப்பட்ட பிறவிகளின் துயர்போக்க தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்பதே எல்லோரின் ஆவலும். வெறும் தீர்மானத்தோடு நின்று விடாமல் அதை முழு மூச்சாக நிறைவேற்றி அந்த மக்களின் மனதிலே ஒரு நிம்மதியை உண்டாக்கி அவர்களையும் மனிதர்களாக அங்கீகரிக்க எல்லாரின் சார்பாகவும் தலைவர் கலைஞர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

புலம்பெயர்ந்தவர்களை அகதிகள் என குறிப்பிடும் சொல் எங்கிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம் இது ஒரு கெட்ட சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது. அந்த மக்களை அகதிகள் என்று சொல்லித் திட்டுவதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். எனவே அகதி என்ற வார்த்தை கூட அவர்களைத் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தி விடுகிறது. எனவே அந்த வார்த்தையையும் அற்வே தவிர்த்தல் நலம். எதுவுமே இல்லாமல் நம் மண்ணை நம்பி வந்த மக்களை நாம் வாழ வைப்பது தானே முறை. ராஜஸ்தான் மாநிலமே தமிழக‌த்தில் குடியிருக்கும் போது அவர்களுக்கு எல்லா உரிமையும் வழங்கப் படும் போது நம் தமிழர்களுக்கு மட்டும் எல்லாம் புறக்கணிக்கப் படுவது ஏன் என்‍பது தான் இன்று வரை எனக்குப் புரியாத புதிர்.

already seen this

3 Response to "இன்று வரை புரியாத புதிர்"

  1. வால்பையன் said...

    அடக்கொடுமையே!

  2. நிஜாம் கான் said...

    @வால்பையன்

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றிண்ணே!

  3. விரும்பி said...

    இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வரும் அகதிகள் படும் துன்பத்தை படம் பிடித்ததைப்போல் வெளிப்படுத்தியமை நன்று. அவர்கள் அகதிகளாக அல்லாமல் ஏதிலிகளாக கையாளப்படுகின்றனர் என்பது வெளிப்படுகின்றது

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,