Sep 9, 2009

உடல் ஊனமுற்றோர் சங்கத்திற்கு ஒரு கேள்வி?

நிஜாம் கான் @ 2:10 PM

நான் கடவுள் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஓரளவு வெற்றியடைந்தது தெரிந்ததே! ஆர்யா மற்றும் பூஜா நடிக்க இயக்குனர் பாலாவின் மூன்றாண்டு கடும் உழைப்பால் வெளியாகியிருந்த படத்தில் ஊனமுற்றவர்களை இழிவுபடுத்தியிருப்பதாக ஊனமுற்றோர் சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு நிலுவையில் இருக்கிறது. இயக்குனர் பாலாவிற்கு சம்மன் அனுப்பப் பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவர் வீட்டு வாசல் முன் மேற்படி செய்தியை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றுத்தான் எனக்கு அந்தப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சட்டென வழக்கு நினைவுக்கு வரவே சரி அப்படி என்னதான் இழிவு படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்த்துவிடுவோமே என அமர்ந்து காட்சிகள் நகர நகரத்தான் அந்த வழக்குக்கும் அந்த திரைப்படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என புரிய ஆரம்பித்தது. அதாவது உடல் ஊனமுற்றவர்களை கடத்திவந்து அவர்களை பிச்சையெடுக்க வைத்து அதை தொழிலாக செய்யும் கொடூரன் ஒருவனின் கதைதான் நான் கடவுள்.

ஒரு காலத்தில் சினிமா என்றாலே குடும்பத்தோடு சென்று பார்த்த காலங்கள் சென்று சிம்பு,எஸ்.ஜே சூர்யா போன்ற இழிபிறவிகளால் தற்சமயம் சத்தமில்லாமல் தனியாக அல்லது நண்பர்களுடன் மட்டும் சென்று பார்க்கும் நிலையில் பாலா போன்ற இயக்குனர்களின் வரவால் தான் தமிழ்சினிமாவின் தரம் கொஞ்சமாவது நிலைத்து நிற்கிறது எனலாம். இந்த நிலையில் இது போன்ற தேவையற்ற விளம்பர வழக்குகள் எஞ்சியிருக்கும் சில இயக்குனர்களையும் பொட்டியைக் கட்டிக்கொண்டு ஊருக்குச்செல்ல வைத்து விடுமோ என வருந்த வேண்டியதிருக்கிறது.

இந்தப் படத்தில் நாம் எங்குமே காணமுடியாத மற்றொரு கோணத்தை மிகச்சிறப்பாக படம்பிடித்திருக்கும் சிறப்பு பாலாவை மட்டுமே சாரும். பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்களின் வாழ்க்கையின் மறுபுறத்தை அவர்களோடு அவர்களாக தங்கி ,தூங்கி புதிய விசயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் பழம்தின்று கொட்டை போட்ட மகா நடிகர்களே பல சமயங்களில் ஓவர் ஆக்டிங்க் செய்யும் போது சினிமா தொழில் நுட்பம் பற்றி எதையுமே அறியாத, அதிலே பிச்சைக்காரர்களாக நடித்திருக்கும் உண்மை பிச்சைக்காரர்கள் எப்படித்தான் இவ்வளவு அற்புதமாக நடித்தார்களோ தெரியவில்லை. அத்தனையுமே கொஞ்சம்கூட செயற்கைத் தனமின்றி மிகவும் இயற்கையாக அமைந்துவிட்டது தான் இப்படத்தின் சிறப்பு.இங்கு தான் பாலா பலிச்சிடுகிறார். ஊனமுற்றவர்களெல்லாம் பிச்சைக்காரர்கள் அல்ல. அதேபோல பிச்சைக்காரர்களெல்லாம் ஊனமுற்றவர்கள் அல்ல என இப்படத்திலே மிகத்தெளிவாக காட்டியிருந்தும் கூட ஊனமுற்றோர் சங்கத்தினருக்கு இது புரியாததேனோ?

உடல் ஊனமுற்றோர் சங்கம் பாலாவின் மீதும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீதும் தொடுத்துள்ள வழக்கு தேவையற்றது என சமானியர்கள் நமக்கே தோன்றும் போது அந்த வழக்கை விசாரித்து ஒத்திப் போடும் மேதகு நீதியரசர்களுக்கு ஏன் தெரியவில்லை? அவர்கள் ஒரு முறை இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தீர்ப்பளிக்கலாம். இளையராஜாவின் இனிய இசையில் மதுபாலகிருஷ்ணனின் (தகவல் நன்றி: செந்தாரப்பட்டி பெத்துசாமி) மயக்கும் குரலில் "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" என்ற பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் மிகமிக அற்புதம். இப்படத்தின் பெரிய பலமே அந்தப் பாடல் தான்.

பாலா சேது படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து அவரது படம் நந்தா. அடுத்தது பிதாமகன் என அனைத்துப் படங்களிலும் சமூகத்திற்கும் அரசுக்கும் ஒரு செய்தியை சொல்லிவரும் பாலாவின் படைப்புகளுக்கு இது போன்ற இழுவை விளம்பர வழக்குகள் மூலம் பங்கம் வந்துவிடக்கூடாது என்பது தான் நமது ஆவலும் ஆசையும்.

already seen this

14 Response to "உடல் ஊனமுற்றோர் சங்கத்திற்கு ஒரு கேள்வி?"

  1. சென்ஷி said...

    //பாலா சேது படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து அவரது படம் நந்தா. அடுத்தது பிதாமகன் என அனைத்துப் படங்களிலும் சமூகத்திற்கும் அரசுக்கும் ஒரு செய்தியை சொல்லிவரும் பாலாவின் படைப்புகளுக்கு//

    இதுவரைக்கு இந்த மூணு படத்துல என்ன செய்தி கொடுத்திருக்கார் பாலா. :-(

    நான் பார்த்தவரைக்கும் எதையும் கண்டுபிடிக்க முடியலை. விளக்கமா சொல்லுங்களேன்!

  2. நிஜாம் கான் said...

    சேதுவிலே தூய்மையான காதல், நந்தாவிலே மழைத்துளிக்கு இணையான தூய்மையுடைய தாயின் பாசத்திற்கு ஏங்கும் மகன், பிதாமகனிலே பிணத்தோடு வாழ்ந்தவனையும் மாற்றும் நட்பு. இது என் கண்ணில் மட்டுமே பட்டது. மற்றவர் கோணங்கள் வேறுமாதிரியாக இருக்கலாம். நன்றி சென்ஷி கருத்துக்கும் வருகைக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  3. உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

    புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

  4. வால்பையன் said...

    விளம்பரபிரியர்கள் இம்மாதிரி அடிக்கடி கேஷ் போடுவதுண்டு!

    சென்ஷி செய்தி சொன்னாத்தான் சினிமாவா!?, அவரு எதோ தெரியாம சொல்லிட்டாரு விடுங்க!

  5. வால்பையன் said...

    செய்தி!

    சேது:
    எப்படி மெண்டலாகி சாவது!

    நந்தா:
    எப்படி அம்மா கையில் சாவது!

    பிதாமகன்:
    எப்படி நண்பனால் சாவது!

    ஆக மொத்தம் சாவது!

  6. வால்பையன் said...

    யார் கடவுள்:
    எப்படி சாமியார் கையில் சாவது!

    சாவு ரொம்ப பிடிக்கும் போல பாலாவுக்கு!

  7. செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

    தல, ‘பிச்சைப் பாத்திரம்’ பாட்டைப் பாடியது ஜெசுதாஸ் இல்லை. மது பாலகிருஷ்ணன். மற்றபடி, விமர்சனம் அருமை.

  8. ஆர்வா said...

    பாலாவின் திரைப்படங்களில் ஒரு உணர்வு நிலை சார்ந்த விஷயங்கள் தூக்கலாகவே இருக்கும். அது எல்லாருக்கு புரியாது. சினிமாவை சினிமாவை பார்க்கறவங்களுக்கும், சினிமாவை தொழிலா பார்க்கறவங்களுக்கும், அதை ஒரு பொழுதுபோக்கா பார்க்கறவங்களுக்கும், அதை ஒரு கலையா பார்க்கறவங்களுக்கும், அதை ஒரு தவமா நினைக்குறவங்களுக்கும், நிறையா வித்தியாசம் இருக்கு. மிக வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள். தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள்.

  9. தமில்லன் said...

    தமிழ்த் தாத்தா
    (கலைஞர் படம்)

    அப்போ உ.வே.சாமிநாதய்யர் யாருங்கோ ???????

  10. நிஜாம் கான் said...

    // உலவு.காம் (ulavu.com) said//

    நன்றி உலவு.காம்.முயற்சிப்போம்.

  11. நிஜாம் கான் said...

    //வால்பையன் said...
    செய்தி!

    சேது:
    எப்படி மெண்டலாகி சாவது!

    நந்தா:
    எப்படி அம்மா கையில் சாவது!

    பிதாமகன்:
    எப்படி நண்பனால் சாவது!

    ஆக மொத்தம் சாவது!//

    ஆகா அரும! நம்ம வாலண்ணே பார்வையே தனி தான். தொடர்ந்து கலக்குங்கண்ணே!

  12. நிஜாம் கான் said...

    //செந்தாரப்பட்டி பெத்துசாமி said...
    தல, ‘பிச்சைப் பாத்திரம்’ பாட்டைப் பாடியது ஜெசுதாஸ் இல்லை. மது பாலகிருஷ்ணன். மற்றபடி, விமர்சனம் அருமை.//

    அண்ணே! தகவலுக்கு நன்றிண்ணே! அந்த சந்தக்குரலோன் யேசுதாஸூன்னு நெனச்சிட்டேன். மாற்றிவிட்டேன்.

  13. நிஜாம் கான் said...

    //கவிதை காதலன் said...
    பாலாவின் திரைப்படங்களில் ஒரு உணர்வு நிலை சார்ந்த விஷயங்கள் தூக்கலாகவே இருக்கும். அது எல்லாருக்கு புரியாது. சினிமாவை சினிமாவை பார்க்கறவங்களுக்கும், சினிமாவை தொழிலா பார்க்கறவங்களுக்கும், அதை ஒரு பொழுதுபோக்கா பார்க்கறவங்களுக்கும், அதை ஒரு கலையா பார்க்கறவங்களுக்கும், அதை ஒரு தவமா நினைக்குறவங்களுக்கும், நிறையா வித்தியாசம் இருக்கு. மிக வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள். தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள்.//

    உங்களுடைய கோணமும் அருமை சார்.தொடர்ந்து வாங்க. மிக்க நன்றி.

  14. நிஜாம் கான் said...

    // தமில்லன் said...
    தமிழ்த் தாத்தா
    (கலைஞர் படம்)

    அப்போ உ.வே.சாமிநாதய்யர் யாருங்கோ ???????//

    நமக்குத் தெரிந்து தலைவர் கலைஞர் தான். நன்றி! அது என்னங்க "தமில்லன்"???????

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,