1959 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி டில்லியில் ஒரு சிறிய ஸ்டூடியோவில் வைத்து ஆரம்பிக்கப் பட்ட தூர்தர்ஷனுக்கு இன்று வயது 50. சர்வசாதாரணமாக 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நமது தூர்தர்ஷனோடு சேர்ந்து நாமும் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
முதலிலே தேசிய ஒளிபரப்பு முதல் அலைவரிசை (சேனல் 1) தான் துவக்கப் பட்டது. அந்த சேனல் 1 காலையில் தன் ஒளிபரப்பைத் துவக்கி இரவு முடித்துக் கொள்ளும். முழுக்க முழுக்க ஹிந்தி நிகழ்சிகளை மட்டுமே ஒளிபரப்பி வந்த அந்த தூர்தர்ஷன்1 படிப்படியாக மாநிலங்களுக்கும் தன் நேரத்தை பகிர ஆரம்பித்தது.
அந்த வகையில் நம் தமிழுக்கு உதயமாகியது தான் தூர்தர்ஷன் 5 வது அலைவரிசை. நிகழ்சிகள் என் நினைவில் “வயலும் வாழ்வும்” என்ற நிகழ்ச்சி தினசரி 7 மணிக்கு ஒளிபரப்பாகும். அதன் அருமை(வை) அன்றைக்குத் தெரியாமலேயே போய்விட்டது. தினசரி 7.35 மணி முதல் 8.00 வரை ஒரு தொடர் நாடகம். 7.30க்கு தலைப்புச் செய்திகள் பிறகு 8.30 முதல் 9 மணிவரை செய்திகள். செவ்வாய்கிழமைகளில் 7 மணிமுதல் 8 மணிவரை ஒரு மணி நேர நாடகம், புதன்கிழமை கடிதம் படிக்கும் எதிரொலி. இதிலே புதன்கிழமை எதிரொலியின் இறுதியிலே வரும் வார திரைப்படம் அறிவிப்பார்கள்.

அதைக் கேட்பதற்காக தவமாய் தவமிருந்து அந்த எதிரொலியைப் பார்த்துவிட்டு என்ன படம் என அறிந்து கொண்டு அதை ஸ்கூல் முழுவதும் பரப்புவது தான் அன்றைய பிரதானமான ஒரு வேலையாக இருந்தது., வியாழக்கிழமை திரைமலர்,வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும்,சனிக்கிழமை ஹிந்தி திரைப்படம். சனி இரவு முன்னோட்டம். வரும் வார நிகழ்சிகளின் அனிவகுப்பு. ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு காத்தாடி ராமமூர்த்தி,பாண்டு,மனோ நடித்த பஞ்சு பட்டு பீதாம்பரம், காலை 10 மணிக்கு அனைவரும் விரும்பிப் பார்த்த ராமாயணம் மற்றும் மஹாபாரதம் என பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தது தூர்தர்ஷனின் 1வது மற்றும் 5வது அலைவரிசை நிகழ்ச்சிகள்.
கண்மணிப்பூங்கா, காண்போம் கற்போம்னு கல்வி நிகழ்சிகளும் பிரபலம்.நீங்காத அன்றைய நிகழ்வுகளின் அணிவகுப்பில் மிக முக்கியமாக கே.பாலச்சந்தரின் "ரயில் சினேகம்", SV சேகரின் "வண்ணக்கோலங்கள்,ஒய்.ஜி.மகேந்திரன் நடிச்சு "துப்பறியும் சாம்பு, பாண்டியன் நடித்த மண்வாசனை மற்றும் தடங்களுக்கு வருந்துகிறோம் என நினைவில் நீங்காத நிறைய நிகழ்சிகள் (விடுபட்டதை தயவுசெய்து பகிர்ந்து கொள்க).

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 க்கு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில வருடங்களே ஆன அதரப் பழசு அட்டுத்திரைப்படம் என தன் பயணத்தை தொடர ஆரம்பித்தது தூர்தர்ஷன். சனிக்கிழமைகளில் ஹிந்திப் படம் பார்க்காத கண்களே அன்றைக்கு லேது (வேற வழி). ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டால் மாலை 4 மணிக்கே எங்கள் ஊர் பஞ்சாயத்து ஆபிஸ் திடலில் நண்பர்கள் சகிதம் துண்டு விரித்து அமர்ந்துவிடுவோம். 4.30 மணிக்கு அந்தப் பஞ்சாயத்து போர்டு கிளார்க் (அன்றைய கிளார்க் இன்றைய கலெக்டருக்குச் சமம். அவ்வளோ அலம்பல் செய்வார்) வந்ததும் நாங்கள் ஓடிச்சென்று அவரை வரவேற்று அவரின் சைக்கிளை தள்ளிச்சென்று ஓரத்தில் வைப்போம். அதன் சீட்டுக்கு அடியில் இருக்கும் ஒரு பிட்டுத் துணியை எடுத்து அந்த சைக்கிளை சுத்தமாகத் துடைத்து வைப்போம்.
இதே நேரத்தில் எங்கள் நண்பர்கள் யாராவது அவருக்கு டீ வாங்கச் சென்று விடுவார்கள். 4.45க்கு அந்த அலுவலகத்தில் இருக்கும் பெரிய டேபிளை எடுத்து பஞ்சாயத்து போர்டு வராண்டாவில் வைப்போம். பின்னர் அவர் தன் பெல்டில் இருந்து ஒரு சாவிக்கொத்தை எடுத்து ஒரு அறையைத்திறப்பார். அதற்குள் சுத்தமான துணி போட்டு மூடப்பட்ட அந்த கால “டைனோரா டிவி” இருக்கும். அதை 4 பேர் சேர்ந்து தூக்கி வந்து டேபிளில் வைப்போம். இந்த நேரம் மீட்டிங்கிற்கு வரும் மக்கள் கூட்டம் போல கொஞ்சமாக மக்கள் வந்து அமர ஆரம்பிப்பார்கள். டிவியை வைத்த பிறகு உள்ளிருந்து அவர் UMS ஆண்டெனா பூஸ்டரை எடுத்து வந்து அதிலிருந்து கனெக்சனைக் கொடுப்பார்.

டிவியை ஆன் செய்தால் வெள்ளைப் புள்ளியாக வரும். உடனே அந்த ஊரிலேயே மிக ஜீனியஸான அந்தக் கிளார்க் ஒரு சிகெரெட்டை பற்றவைத்துக் கொண்டு அந்த பூஸ்டரையும், டிவி டியூனரையும் திருகு திருகு என திருகிவிடுவார். அப்போதும் சேனல் வராது. உடனே எங்கள் செட்டில் ஒரு பையனை கட்டிடத்தின் மேலே ஏற்றி விடுவார். அவன் அங்கு சென்று ஆண்டெனா கம்பியை அந்தப் பக்கம் இந்தப் பக்கமாக திருகுவான், உடனே சேனல் கிடைத்துவிடும். அதன் பின்னர் அந்த பஞ்சாயத்து போர்டின் பிரசிடென்ட் வருவார். அவருக்கு மட்டும் ஒரு சேர் போடப்படும்.
5.30 க்கு படம் துவங்கும். 7.30 மணிக்கு தலைப்புச்செய்திகள் வரும். அது தான் அனைவருக்கும் இடைவேளை. மூச்சா போகிறவர்கள் மூச்சா போவார்கள். பஞ்சாய்த்து ஆபிஸ் வாசலில் பட்டானிக்கடலை, நிலக்கடலை வியாபாரம் நடக்கும். பின்னர் 7.40 க்கு படம் மீண்டும் துவங்கி 8.30 க்கு நிறைவடையும். 8.30 க்கு செய்தி ஆரம்பித்து 9 மணிக்கு முடியும். திரும்பிப் பார்தால் அந்த பஞ்சாயத்து போர்டு கிளார்க் மட்டும் தான் மிச்சமிருப்பார். அவரே டிவியைத் தூக்கி உள்ளே வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். இது தான் அன்றைய தூர்தர்ஷன் ரசிகர்களின் வாழ்க்கை முறை.
மனதின் ஓரத்தில் புதைந்து கிடக்கும் சில விளம்பரங்கள். வாசிங் பவுடர் நிர்மா, கோல்ட் ஸ்பாட்,ரெடிமணி ஷாப், டைனோரா டிவி, சாலிடர் டிவி, காம்ப்ளான், சன்ட்ராப் சன்பிள்வர் ஆயில் என இன்னமும் அது நினைவுகளில் ஊசலாடுகிறது.

செய்தி வாசிப்பில் திருமதி சோபனா ரவி, திருமதி பாத்திமா பாபு, திரு.ராமகிருஷனன், திரு.வரதராஜன், திரு.நிஜந்தன் போன்றவர்கள் மிகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
இப்படி மக்களோடு மக்களாக தன் பயணத்தை நடாத்திக்கொண்டிருந்த தூர்தர்ஷன் 5வது அலைவரிசை பிறகு பொதிகை என பெயர் மாற்றம் கண்டு டிஜிடல் தரத்தில் 24 மணி நேர ஒளிபரப்பாக மாறியது.

இப்போது தூர்தர்ஷனின் அணிவகுப்பில் மொத்தம் 32 சேனல்கள் இருக்கின்றன.

கேபிள் டிவியின் ஆதிக்கத்தால் தூர்தர்ஷன் சொந்தமாக DD Direct என்ற பெயரில் DDH சேவையைத் துவக்கி இன்றும் அதற்கென தனிக்கூட்டத்தை வைத்திருக்கிறது தூர்தர்ஷன்.

என்ன தான் 50 வயதைக் கடந்தாலும் அதிலே இன்னமும் ஏதோ ஒரு குறை இருப்பது போலத் தான் தெரிகிறது. மற்றபடி அந்த நாளின் வாழ்க்கை திரும்புமா என முடியாத ஒரு எதிர்பார்ப்புடன் 50 வது பொன்விழாவைக் கொண்டாடும் தூர்தர்ஷனுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
இந்த மணம் மயக்கும் இசையை ஒரு முறை பார்த்தும் கேட்டும் மகிழுங்களேன்!


எத்தனை எத்தனை ஞாபகங்கள்...தூர்தர்ஷன் செய்தி ஒலியை மறக்க முடியுமா ???
கல்லூரியில் இண்டஸ்ரியல் விஸிட்டுக்கு தூர்தர்ஷன்க்கு தான் கூட்டி சென்றார்கள்.அங்கும் பழைய நினைவுகள்..
செகண்ட் சேனல் என்றழைக்கப்பட்ட தூர்தர்ஷன் 2ல் நான் ரசித்த தமிழாக்க தொடர்கள்:
ஜுனூன்
சீ ஹாவ்க்ஸ்
ஹிந்துஸ்தானி
திருவாளர் திருமதி
பாரு கண்ணா காரு ..( தேக் பாய் தேக்)
சூப்பர் ஹியூமன் சாமுராய்
மாயாவி
ஜங்கிள் புக்
அப்புறம், ஒளியும் ஒலியும் ..சூப்பர் ஹிட் முகாபுலா..
பழைய டிடி விளம்பரங்களை பார்க்க யூடிப்பை நாடுக.......!!!
Happy 50 years for DD !!!
பழைய ஞாபகங்களை கிளறி விட்டதற்கு நன்றி நிஜாம் !!!
//"ஆயம்மா அல்ல தாயம்மா" //
படித்தேன்..கலக்கிட்டீங்க..பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்.பாருங்கள்.
மறக்கமுடியா நினைவுகள்..
Good post. Pls also read my post about this function. URL: http://blogpaandi.blogspot.com/2009/09/50.html
ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்காகக் காத்திருக்கும் நாளை மறக்க முடியுமா?
பழைய ஞாபகங்களை கிளறி விட்டதற்கு நன்றி நிஜாம்
// அ.மு.செய்யது//
மிக்க நன்றி சையது! பின்னூட்டங்கள் அருமை. அதனுடன் மேலும் சில ஞாபகங்கள் கொடுத்ததற்கு நன்றிகள்.
// பீர் | Peer said...
மறக்கமுடியா நினைவுகள்..//
வருகைக்கு நன்றி பீர்.தொடர்ந்து இணைந்திருங்கள்
//blogpaandi said...
Good post. Pls also read my post about this function. URL: http://blogpaandi.blogspot.com/2009/09/50.html//
Thanks blogpandi. Stay tuned
// goma said...
ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்காகக் காத்திருக்கும் நாளை மறக்க முடியுமா?//
நிச்சயம் உண்மை. கருத்துக்கு நன்றி goma
// PEACE TRAIN said...
பழைய ஞாபகங்களை கிளறி விட்டதற்கு நன்றி நிஜாம்//
கருத்துக்கு நன்றி PEACE TRAIN . தொடர்ந்து இணைந்திருங்கள்
செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி அவர்களைப்
பற்றிய செய்தி; இங்கே வாங்க:
http://nizampakkam.blogspot.com/2009/09/aayirammalarkalpaniyil.html
அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் இந்தி நிகழ்ச்சிகள் அதிகம் ஒளிப்பரப்பாவதை கிண்டலடித்து நிறைய ஜோக்ஸெல்லாம் ஆ.வி. குமுதத்தில் வரும்.
ஆனாலும் எனக்கு பிடித்த இந்தி நிகழ்ச்சி 'குல் குல்ஷன் குல்ஃபாம்' -
இந்த கஷ்மீரில் எடுக்கப்பட்ட இந்த நாடக வடிவம் டிவிடியில் கிடைத்தால் வாங்குவதற்கு தயாராக உள்ளேன்.
இயன்றால் தகவல் தரவும்
பதிவுக்கு நன்றி
அஹா அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....அப்பொழுது நல்ல தொழில் நுட்ப வல்லுனர்கள் இருந்தனர்...
அதனால் தூர்தர்ஷனில் தரம் இருந்தது.... 1990 வரை ஓம் நமசிவாய, ஜெய் ஹனுமான், சக்திமான், என டாப் கியரில் போய் கொண்டு இருந்தது.....அவர்களிடம் தான் உயர்தர தொழில் நுட்ப காமிராக்கள் சொந்தமாக உள்ளது....சொந்த ஸ்டூடியோ வேறு....இருந்து இயக்குனர்கள் வயதானவர்களாக இருப்பதால் அவர்களுக்கு புதிதாக எதுவும் யோசிக்க முடிவதில்லை....
இன்று வரை அடுத்து வரவது என பவர் பாயிண்ட் சிலைட் போட்டு தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்....
நீங்கள் தவறவிட சில நல்ல நிகழ்சிகள்.....சுரபி , டர்னிங் பாயிண்ட், கிரேசி மோகனின் நாடகங்கள், திரை மலர், ரங்கோலி,
http://www.youtube.com/watch?v=DLlVFxZrkoQ&feature=player_embedded