ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமலஹாசன் மற்றும் மோகன்லால் இணைந்து மிரட்டும் பிரம்மாண்டத் திரைப்படம் உன்னைப்போல் ஒருவன். இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் இத்திரைப் படத்தின் டிரைலர்கள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் சக்கை போடு போட்டுக் கொண்டுள்ளன. நொடிக்கு நொடி பரபரப்பு என விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் அந்தப் பரபரப்பு உண்மையா என்பது படம் வெளியான பிறகு தான் தெரியவரும்.
என்ன தான் கதை?
ஹிந்தியிலே நசுருதீன் ஷா நடித்து தாயாரித்த தி வெட்னஸ் டே திரைப்படத்தின் மறுபதிப்பு தான் இந்த உன்னைப்போல் ஒருவன்.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தினைச்சேர்ந்தவர் நசுருதீன். சமூகத்திலே நடக்கக் கூடியஅவலங்களை கண்டு மணம் வெதும்பக்கூடயவர். ஆனால் அவரால் அதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாத அளவிற்கு அமைந்துள்ளது வழக்கமான நடுத்தர வர்க்க இயலாமை. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் விதமாக ஒரு அதிரடி பயங்கரத் திட்டம்வகுக்குகிறார் நசுருதீன். அத்திட்டத்தில் யாரையும் சேர்க்காமல் ஒன்மேன் ஆர்மியாக தனியாக செயல்பட முடிவுசெய்கிறார்.

ஒரு நாள் ஆர்டிஎஸ் வெடிப்பொருட்கள் உள்ள ஒரு டிராவல் பேக்குடன் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று அங்கேயிருக்கும் ஆய்வாளரிடம் மிகவும் அப்பாவியாக தன்னுடைய பர்ஸ்தொலைந்துவிட்டதாக கம்ப்ளைண்ட் கொடுக்கிறார். வழக்கம் போல மிக காவல்துறையினர் மிகமிகஅலட்சியமாக நடந்துகொள்கின்றனர். அருகேயிருக்கும் ஒரு காவலரிடம் கழிவறைஎங்கேயிருக்கிறது எனக் கேட்டு அங்கு சென்று வாஷ்பேசனின் கீழ்ப் பகுதியில் தான் கொண்டு வந்தவெடிகுண்டு டிராவல் பேக்கினை மறைத்து வைக்கிறார். அதன் பிறகு காவல் நிலையத்திலிருந்துவெளியேறும் அவர் நேராக வேலை பாதியில் நிற்கும் ஒரு பெரிய கட்டிடத்திற்குச்செல்கிறார் .அங்கிருந்து தன்னிடம் இருக்கும் லேப்டாப் மற்றும் இணையக் கருவிகள் மூலம் விதவிதமானசிம்கார்டுகளைப் பயன்படுத்தி சிட்டி கமிஷனருக்குத் தொடர்பு கொண்டு மாநகரின் முக்கிய 5இடங்களில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுக்கிறார். அது மட்டுமின்றி தொலைக்காட்சிசேனலகளுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்துகிறார்.

இது யாரோ கிளப்பும் புரளி என எடுத்துக் கொள்ளும் கமிஷனரிடம் மீண்டும் தொடர்பு கொண்டுமேற்படி காவல் நிலையத்தில் முதல்குண்டு பை இருப்பதாகவும் அதை எந்த ஒரு சாமானியனால்செய்யமுடியாது என்றும் அதுவே தன்னை நம்புவதற்கு சாம்பிள் எனவும் தகவல் கொடுக்க , அந்தகுறிப்பிட்ட காவல் நிலையதை சோதனை செய்யும் காவல்துறை அங்கேயிருந்த வெடிகுண்டுபையை கண்டுபிடித்து அது உண்மை தான் என கமிஷனருக்குத் தகவல் கொடுக்கிறது.அதிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. நசுருதீனின் தொலைபேசி டிரேஸ் செய்ய முயற்சிமேற்கொள்ளப் பட்டு அது தோல்வியில் முடிகிறது. இறுதியில் நசுருதீனிடம் என்ன கோரிக்கைஎன கேட்க அதற்கு அவர் கொடுக்கும் பதில் ஒட்டு மொத்த காவல்துறையுமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.

தமிழிலே வெளியாக இருக்கும் இப்படத்தில் நசுருதீன் நடித்த வேடத்தில் கமல்ஹாசனும்,கமிஷனராக மோகன்லாலும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அதிகபட்சம் கமலுக்கு நடிப்பு என்பது அந்த பில்டிங் மேல் உக்கார்ந்து மோகன்லாலுடன் தொலைபேசியில் பேசுவது மட்டுமாகத்தான் இருக்கும். மற்றபடி கமலின் வழக்கமான திரைப்படங்களைப் போல இதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் மோகன்லால் மற்றும் காவல்துறையின் அதிரடிகள் மற்றும் இன்வெஷ்டிகேசங்கள் இதிலே அதிகம் எதிர்பார்க்கலாம். இசையைப் பொருத்தவரை மிக பிரம்மாண்டமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.ஆனால் இசை சுருதிகமலாம்.சுருதியின் இசைக்கு "லக்" இருக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்து ஒளிப்பதிவு. சாதாரணமாக கமலஹாசன் திரைப்படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். அதிலும் இந்தப் படம் ஒளிப்பதிவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அனைத்து காட்சிகளையும் டிஜிட்டல் முறையில் படமாக்கியிருக்கிறார்கள். மற்றபடி தி வெட்னஸ்டே படத்திற்கும் இதற்கும் வேறு அதிகமான வேற்றுமை இருக்க வாய்ப்பில்லை.
ஆக உன்னைப்போல் ஒருவன் நமக்குள் நிறைவானா என்பது விரைவில் தெரிந்து விடும்.


படத்தின் பெயர் - உன்னைப்போல் ஒருவன்
இந்தியில் பாட்டுக்கள் கிடையாது. இங்கே 'நிறைய;.
இல்லையா?
எல்லாம் சொல்றதுக்கு முன்னாடி படத்தோட தலைப்ப சரி பார்த்திருக்கலாம்.
நட்புடன்,
ராஜ்.
/சரவணகுமரன்//
//தருமி//
//ராஜாதி ராஜ்//
எல்லாம் செய்து கடைசியில் தலைப்பை எப்படிக் கோட்டைவிட்டேன் என எனக்கே தெரியவில்லை. மன்னிக்கவும் தகவல்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.