வெற்றிகரமாக நான்காம் ஆண்டிலே அடியெடுத்து வைத்திருக்கும் உலகத்தமிழர்களின் இல்லத்திரை மக்கள் தொலைக்காட்சி முழுக்க முழுக்க தமிழுக்காகவே ஆரம்பிக்கப் பட்ட ஒரு தொலைக்காட்சி. அதனால் தான் என்னவோ மக்கள் மத்தியிலே தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருந்தாலும் வர்த்தக ரீதியாக வெற்றியடைய இயலவில்லை. புதைந்து கிடக்கும் பழந்தமிழின் மேன்மையைச் சொல்லும் இத்தொலைக்காட்சி துவக்கப் பட்ட நேரத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் மக்கள் தொலைக்காட்சியில் என்னென்ன இடம்பெறும் என்னென்ன இடம்பெறாது என்று ஒரு நீண்ட பட்டியலே இட்டார். அதன்படி தனியார் மருத்துவ விளம்பரங்கள்,மத சம்பந்தமான நிகழ்சிகள், டெலிசாப்பிங் விளம்பரங்கள் ஆகியவற்றோடு முக்கியமாக திரைப்படங்களின் வாடையே இருக்காது என அறிவித்திருந்தார்.
எத்தனையோ தொலைகாட்சிகள் களத்தில் நின்று எகிறியடித்தாலும் தங்களுக்குள்ளே போட்டிபோட்டு கவுண்டவுன் செய்து கொண்டாலும் அவை எதிலுமே கலந்து கொள்ளாமல் தனக்கென தனி பாதை அமைத்து தனித்து முதலிடம் வகித்தது மக்கள் தொலைக்காட்சி. இதை லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு மிகத்தெளிவாக எடுத்துக் கூறியது.
இத்தனை காலமும் சாதரண கேபிளிலும், சுமங்கலி குழும சன் டைரக்ட் மற்றும் இந்திய அரசின் பிரசார் பாரதி டிடி டைரக்ட் வழியில் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் மக்கள் தொலைக்காட்சி, மிக சமீபத்தில் துவங்கப்பட்டு தற்சமயம் இந்தியாவின் இரண்டாவது டிடிஎச் சர்வீசாக மாறியுள்ள ரிலையன்ஸ் குழுமத்தாரின் பிக் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகவில்லை. காரணம் மருத்துவர் அய்யாவிற்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் இருந்த லடாய் தான். ரிலையன்ஸ் பிரஸ் சூப்பர் மார்க்கெட்டை மிக பிரம்மாண்டமாக எதிர்த்த அய்யா ராமதாஸ் பலவிதமான போராட்டங்களை நடத்திருந்தார். அதிலே முக்கியமானது தான் அந்த நிறுவன வாசலில் நின்று கொண்டு பொருள் வாங்க வருவோரின் காலைப் பிடித்து கெஞ்சும் போராட்டம்.

ஆனால் காய்கறி வாங்கிவிட்டு கார்டு தேய்க்கும் ஏகோபித்த மக்களின் ஆதரவால் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டது ரிலையன்ஸ்.

தமிழகத்தைப் பொருந்தவரை சன் டைரக்டுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துவிட்ட பிக் டிவியின் வாடிக்கையாளர்கள் அதிலே மக்கள் தொலைக்காட்சி இல்லாதததை பெரும் குறையாகவே நினைத்து வந்தனர். பெரும்பாலானோர் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தினை அழைத்து தங்களது குறையைப் பதிவுசெய்தனர். இதன் விளைவாக இப்போது மக்கள் தொலைக்காட்சி பிக் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்து விட்டது இது அனைவரின் மத்தியிலும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.கு:மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழாவிற்கு நான் எழுதிய வாழ்த்து மற்றும் ஆலோசனை மடலைப் படிக்க இங்கே அழுத்தவும்.


TataSkyல மக்கள் தொலைக்காட்சி வரலையே!
// ராஜா | KVR said...
TataSkyல மக்கள் தொலைக்காட்சி வரலையே!//
விரைவில் வரும். (வெளிய சொல்லிக்காதீங்க, சத்தமில்லாம மாத்திட்டேன்)
அதுவும் குட்டையில் விழுந்துவிட்டது நிஜாம்....
i like china china aasai pgm in makkal tholaikachi, it is different pgm.
// காரணம் மருத்துவர் அய்யாவிற்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் இருந்த லடாய் தான். //
இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது...ரிலையன்ஸ் ஃபெரெஷ் மூத்த அம்பானியான முகேஷ் அம்பானியின் குழுமத்தை சார்ந்தது. பிஃக் டிவி சின்ன அம்பானியின் குழுமத்தை சேர்ந்தது. சகோதரர்கள் பரம எதிரிகளாகிவிட்ட நிலையில் நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுககான சாத்தியங்கள் குறைவே....வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.
தமிழுக்காய் குரல் கொடுக்கும்
மக்கள் தொலைக்காட்சிக்காய்
நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள்.
ஆனால், இந்த இம்சை அரசர்கள்
பற்றித்தான் பயமாய் இருக்கிறது.
புகைப்படங்கள் அருமை.
//தண்டோரா ...... said...
அதுவும் குட்டையில் விழுந்துவிட்டது நிஜாம்..//
இல்லண்ணே! சில பொருளாதாரச் சிக்கல்கள் அதை இழுத்துச் செல்கிறது. விரைவில் மீண்டுவரும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!
// nanrasitha said...
i like china china aasai pgm in makkal tholaikachi, it is different pgm.//
எனக்கும் சின்னச் சின்ன ஆசை ரொம்ப பிடிக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!
டவுசர் பாண்டி...
//இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது...ரிலையன்ஸ் ஃபெரெஷ் மூத்த அம்பானியான முகேஷ் அம்பானியின் குழுமத்தை சார்ந்தது. பிஃக் டிவி சின்ன அம்பானியின் குழுமத்தை சேர்ந்தது. சகோதரர்கள் பரம எதிரிகளாகிவிட்ட நிலையில் நீங்கள் குறிப்பிடும் நிகழ்வுககான சாத்தியங்கள் குறைவே....வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.//
பாண்டி சார்! என்னத்த குடும்பம் பிரிஞ்சாலும் குழுமம் ஒன்று தான். இது உண்மையான செய்திதான். காரணம் பிக் டிவி ஆரம்பிக்கும் போது அதிலே மக்கள் தொலைக்காட்சி இடம்பெறாது என பேச்சுவார்த்தைக் குழுவிடம் அய்யா சொன்னது உண்மை.
//NIZAMUDEEN said...
தமிழுக்காய் குரல் கொடுக்கும்
மக்கள் தொலைக்காட்சிக்காய்
நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள்.
ஆனால், இந்த இம்சை அரசர்கள்
பற்றித்தான் பயமாய் இருக்கிறது.
புகைப்படங்கள் அருமை.//
நன்றி நிஜாம். தொடர்ந்து இணைந்திருங்கள்.
நல்லதொரு அலசல்
//அன்புடன் மலிக்கா said...
நல்லதொரு அலசல்//
நன்றியக்கா! தொடர்ந்து இணைந்திருங்கள்.