இஸ்லாமிய மாதங்களில் ரபியுல் அவ்வல் மாதம் 13 ஆம் நாள் மீலாது நபி என்ற பெயரில் முகமது நபி(ஸஸ்) அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முஸ்லீம்கள் சிலர் இந்த வேலையை பரம்பரை பரம்பரையாக செய்துவருகின்றனர். இவர்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தமிழக அரசும் ஏற்கனவே நிறைந்து கிடக்கும் விடுமுறைகள் போதாது என இதற்கும் ஒரு நாள் விடுமுறையை அறிவித்து இதை ஒரு விழாவாக அங்கீகரித்து விட்டது. இன்றைக்கு இஸ்லாமிய இல்லங்களில் கறி சாப்பாட்டுடன் கூடிய கொண்டாட்டங்கள் நடைபெறும். இனிப்புகள் வாங்கப்பட்டு அனைவருக்கும் வினியோகித்து இந்த தினம் மிக மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் பிறந்த நாடான சவூதி அரேபியாவிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளிலோ இன்றைக்கு அரசு விடுமுறையும் கிடையாது, மீலாது நபியும் கிடையாது. மீலாது நபி என்றால் அவர்கள் என்னவென்று கேட்பார்கள். காரணம் முஸ்லீம்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பண்டிகைகள் மொத்தமே இரண்டு தான். ஒன்று ரம்ஜான் மற்றொன்று பக்ரீத். இது தவிர தமிழகத்திலே கொண்டாடப்படும் நாகூர், ஏர்வாடி கந்தூரிகள், சந்தனக்கூடுகள் , மற்றும் ஏகப்பட்ட கழுசடை கருமாந்திரங்கள் எல்லாமே இங்கிருப்பவர்கள் தங்கள் வசதிக்காகவும் சுயலாபத்திற்காகவும் திட்டமிட்டே உருவாக்கிக் கொண்டவையாகும்.

ரபியுல் அவ்வல் மாதமான இம்மாதத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள் என்பது இவர்களின் வாதம். அதைத்தான் இந்த அறிவிலிகள் இன்றைக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறார்கள். முகமது நபிகளின் பிறப்பைப் பொருத்தவரை அவர் பிறக்கும் போதே நபியாக பிறக்கவில்லை. தன்னுடைய 40 வது வயதில் தான் அவர் நபியாக அறிவிக்கப்படுகிறார். கன்னித்தாய் மரியாளுக்கு பிறந்த ஈசா தான் பிறக்கும் போதே நபியாகவும் மற்றும் விதவிதமான அற்புதங்களுடனும் நாள் அறிவிக்கப்பட்டு பிறந்தார். அவர் பிறக்கும் போதே அற்புதங்களுடன் பிறந்ததால் அவருடைய பிறந்த நாளை குறித்து வைப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால் முகமது அவர்களின் பிறப்பை குறித்து வைப்பதற்கோ நினைவு வைப்பதற்கோ அவரின் பிறப்புகள் அற்புதமாகவோ அறிவிக்கப்பட்டோ நிகழவில்லை. ஆடுகள் மேய்த்தும் வியாபாரம் செய்தும் தன் வாழ்நாட்களை கழித்த முகமது நபியவர்களுக்கு 40 வது வயதுக்குப் பின்னர் 63ஆம் வயது வரை 23 ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக இறைவசனங்கள் கிடைக்கப்படுகின்றன. நபியவர்கள் தன்னுடைய 63வது வயதில் மரணமடைகிறார்கள். அவர் மரணமடைந்த பிறகு தான் அவர்களின் வாழ்க்கை நடைமுறைகள் தொகுக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி அரபி மொழியில் அன்றைக்கு காலண்டர் இருந்ததே தவிர வருடம் குறிப்பிடப்படவில்லை. ஏதாவது ஒரு சம்பவத்தை வைத்தே வருடத்தை குறிப்பிட்டு வந்தார்கள். உதாரணமாக 5 ஆம் தேதி, முகரம் மாதம் (1ஆம் மாதம்) புயலடித்த வருடம் என வருடத்திற்கு எண்ணிக்கை இல்லாமல் அந்த வருடத்தில் நடந்த ஏதாவது சம்பவங்கள் அடிப்படையிலேயே வருடம் குறிக்கப்பட்டு வந்தது. இது கொஞ்சம் கடினமாக இருந்ததால் வருட எண்ணிக்கை வேண்டும் என்ற அடிப்படையில் நபித்தோழர்கள், நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு பெயர்ந்து வந்த(ஹிஜ்ரத்) வருடத்தை அடிப்படையாக வைத்து ஹிஜ்ரி என்ற ஆண்டு உருவாக்கப்படுகிறது. அதுகூட நபியவர்கள் இறந்து 3 வருடங்கள் கழித்து தான் உண்டாக்கப்படுகிறது. நபியவர்கள் பெயர்ந்து வந்து 16 வருடங்கள் கழிந்துவிட்டதால் இஸ்லாமிய ஆண்டின் துவக்கமே 16 வது வருடம் என தான் ஆரம்பிக்கப்பட்டது.. ஆக மேற்கண்ட செய்திகளிலிருந்து நபியவர்கள் பிறந்த நாளை குறித்துவைப்பதற்கு எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லை.

ஆனால் நபியவர்களின் இறுதி வாழ்க்கை முறைகள் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களோடு வாழ்ந்த தோழர்களின் வாயிலாக பதிவுசெய்யப்பட்டன. அந்த வகையில்
இன்றைய தினம் நபியவர்களுக்கு பிறந்த நாள் இல்லை இறந்த நாள் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலர் நபிகள் நாயகம் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரேதினம் எனவும் சொல்கின்றனர். ஆக எப்படி நோக்கினாலும் இன்றைய நாள் கொண்டாட்டத்திற்கோ, விடுமுறைக்கோ, பண்டிகைக்கோ உகந்த நாள் அல்ல. அப்படியே இருந்தாலும் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் எந்த வகையிலும் அனுமதியும் இல்லை. ஆக இது முழுக்க முழுக்க திணிக்கப்பட்ட ஒரு தினம் மட்டுமே.
இன்றைய தினத்தில் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முஸ்லீம்கள் அது நபிகள் நாயகம் அவர்களின் இறப்பிற்காக மனம்மகிந்து கொண்டாடுகிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது முக்கியமாக, எப்படி மக்கள் சாதாரணமாக கொண்டாடிய வினாயகர் சதுர்த்தியை சங்பரிவார விசமிகள் தங்களின் அரசியல் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தி ஊர்வலம் விட்டு, மசூதிகளுக்குள் செருப்பை வீசி, பட்டாசைக் கொழுத்திப்போட்டு அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி நெருப்பை எரிய வைத்து அதனால் தங்களின் அரசியல் வாழ்வை பிரகாசமாக்கி கொண்டார்களோ, அதே போல இந்த மீலாது விழாவையும் அரசியலாக்க சில காலங்களாகவே முயன்று வருகிறார்கள் சில இஸ்லாமிய அடிவருடி லட்டர்பேடு (முஸ்லீம் லீக், தேசியலீக், இந்திய தேசியலீக் எல்லாமே லட்டர்பேடுகள் தான்) கட்சிகள் சென்னை போன்ற பகுதிகளில் பிரம்மாண்ட ஊர்வலம் ஏற்பாடு செய்கிறார்கள். அதிலும் இஸ்லாமிய பெயர் தாங்கி விசமிகள் பலர் கலந்து கொண்டு தேவையற்ற கோசங்களை எழுப்பி சங்பரிவார கும்பல்களுக்கு இணையாக மததுவேசத்தை தூண்டும் வகையில் இவர்களும் நடந்து கொள்கிறார்கள். ஆக இதுபோன்ற துவேச ஊர்வலங்கள் எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி தடைசெய்யப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் அது நாட்டின் மதஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்காமல் மக்களை
பாதுகாக்க முடியும் . அடுத்து இந்த ஊர்வலம் ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டமாக மாறும். மேற்படி கட்சிகள் அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட்டு வாங்குவதற்காக வேண்டி அங்கே தங்களின் கூட்டனி(?) தலைவர்களை அமரவைத்து நுரை பொங்கப்பொங்க அவர்களுக்கு சோப்பு போடுவார்கள். இதற்குப் பெயர் தான் மீலாது விழா.

உலகத்தலைவர்களிலேயே மிகமிக எளிமையாக வாழ்ந்து காட்டியவர்கள் முகமது நபியவர்கள். வளம்மிக்க ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தும் அவர்களின் வீட்டில் சாப்பிட உணவு இருக்காது. தன் கையால் விறகு வெட்டி அதை விற்று தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்கள். சில நேரங்களில் அவர்களின் உணவு சில பேரீச்சம் பழங்களும் தண்ணீரும் தான். அதுகூட பலநாட்களில் கிடைக்காது. சாப்பாடு இல்லை என்பதற்காகவே நோன்பு வைத்தார்கள். அவர்கள் வீற்றிருக்கும் சபைக்கு புதிதாக வரும் நபர்கள் யார் இங்கே முகமது? என கேட்கும் அளவிற்கு ஆடையிலும் ஆட்சியிலும் எளிமையை பறைசாற்றினார்கள். விலங்குகளை விடவும் கேவலமாய் ஜாதியிலே கீழாய் இருந்த அடிமைகளுடனும் கைகோர்த்து நடந்தார்கள். செல்வம் மிக்க அரச கஜானாவிலிருந்து தன் குடும்பத்திற்காக எதையுமே எடுத்துக்கொள்ளவில்லை. அத்தோடு தன் குடும்ப வாரிசுகளுக்கு அரசின் நிதியுதவிகள் ஹராம்(தடை) என்றார்கள். தன்னுடைய போர் கவசத்தை சில படிகள் கோதுமைகளுக்காக ஒரு யூதரிடம் அடகுவைத்து கடைசிவரை அதை மீட்க முடியாமலேயே மரணித்தார்கள்.
அப்படிப்பட்ட ஒரு உயரிய தலைவரின் பெயரிலே நடத்தப்படும் இந்த விழாக்கள் முழுக்க முழுக்க அவரை இழிவுபடுத்தவேயாகுமே தவிர சிறப்பாக ஆகாது. நபிகளின் பெயரைச்சொல்லி விழா எடுத்து தங்கள் தலைவர்களுக்கு ஐஸ்கட்டி மழையபிசேகம் செய்து ஒரு சீட்டுக்காக நாக்கை தொங்கப்போட்டு திரியும் இதுபோன்ற கேவலமான அரசியல்வாதிகளால் உண்டாக்கப்பட்ட இந்த மீலாது விழாவும் தேவையில்லை,விடுமுறையும் தேவையில்லை!


அப்புள்ள நிஜாம் அவர்களே...
சுருக்கமான தெளிவான அவசியமான இடுகை. எப்போதுதான் இந்த 'மிலாடி முஸ்லிம்கள்' அறிவு தெளிவு பெறுவார்களோ....
வெற்று பாராட்டுதல்களையும், சோப்பு மழையையுமே பெரிதும் விரும்பும் அரசியல்வியாதிகளுக்கு தன் நபியையே காணிக்கையாக்க துணியும் இந்த போலி முஸ்லிம்கள் சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட வேண்டும்.
'மீலாது விழா' என்ற இந்த மூட நம்பிக்கையை ஊக்குவித்து துணை புரியும் அரசையும் அறிவூட்டி திருத்த மற்றவர்கள் முயல வேண்டும். 'இதற்கு விருமுறை விட்டுத்தான் ஆவேன்' என்று அரசு அடம்பிடித்தால், ரமளானின் கடைசி நாளுக்கோ, அரபா நாளுக்கோ விடுமுறை விடச்சொல்லி அரசை கேட்டுக்கொள்ளலாம். அதாவது நோன்பு வைக்கும் முஸ்லிம்களுக்கு மிகுந்த பயனாய் இருக்கும்.
ஜஸாகல்லாஹ்.
முதலில் முஸ்லீம்கள் அறிய வேண்டிய கருத்துகள்.
இல்லாத ஒன்றை இஸ்லாத்தில் நுழைத்து விட்டார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் பிறந்த நாடான சவூதி அரேபியாவிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளிலோ இன்றைக்கு அரசு விடுமுறையும் கிடையாது, மீலாது நபியும் கிடையாது.////இங்க அபுதாபி,துபைல leave விடுவாங்க
மிக அருமையான கருத்தும் விளக்கமும் நிஜாம். அரசியல் சாக்கடை புகாத இடமே இல்லைதான். மதம் உட்பட:(
அஸ்லாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்தஹூ. மிகவும் தேவையான பதிவு. கண்டிப்பாக இந்திய இஸ்லாமியர்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படி நாம் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினால் நாம் அல்லாவுக்கு இணை வைத்தவர்களாக ஆகி விடுவோம்.
இஸ்லாமை பொறுத்தவரை நமக்கு இரண்டே இரண்டு பண்டிகைகள் மட்டுமே. அவை ரம்ஜான் பெருநாள் மற்றும் பக்ரித் பெருநாள். இஸ்லாத்தில் பிறந்த நாள், இறந்த நாள், கல்யாண நாள், வீடு குடிபுகும் நாள், பயண விருந்து போன்ற வீண் விரய அல்லாவுக்கு இணை வைக்கும் விழாக்களுக்கு துளியும் இடமில்லை இதை இஸ்லாமியர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் இல்லையேல் நஷ்டவாளிகளாக வேண்டியது தான். அஸ்லாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்தஹூ.
//உலகத்தலைவர்களிலேயே மிகமிக எளிமையாக வாழ்ந்து காட்டியவர்கள் முகமது நபியவர்கள். வளம்மிக்க ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தும் அவர்களின் வீட்டில் சாப்பிட உணவு இருக்காது. தன் கையால் விறகு வெட்டி அதை விற்று தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்கள். சில நேரங்களில் அவர்களின் உணவு சில பேரீச்சம் பழங்களும் தண்ணீரும் தான். அதுகூட பலநாட்களில் கிடைக்காது. சாப்பாடு இல்லை என்பதற்காகவே நோன்பு வைத்தார்கள். அவர்கள் வீற்றிருக்கும் சபைக்கு புதிதாக வரும் நபர்கள் யார் இங்கே முகமது? என கேட்கும் அளவிற்கு ஆடையிலும் ஆட்சியிலும் எளிமையை பறைசாற்றினார்கள். விலங்குகளை விடவும் கேவலமாய் ஜாதியிலே கீழாய் இருந்த அடிமைகளுடனும் கைகோர்த்து நடந்தார்கள். செல்வம் மிக்க அரச கஜானாவிலிருந்து தன் குடும்பத்திற்காக எதையுமே எடுத்துக்கொள்ளவில்லை. அத்தோடு தன் குடும்ப வாரிசுகளுக்கு அரசின் நிதியுதவிகள் ஹராம்(தடை) என்றார்கள். தன்னுடைய போர் கவசத்தை சில படிகள் கோதுமைகளுக்காக ஒரு யூதரிடம் அடகுவைத்து கடைசிவரை அதை மீட்க முடியாமலேயே மரணித்தார்கள்.//
படிக்கப்படிக்க வியப்பாக இருக்கு. இப்போதைய அரசியல்'வியாதி'களின் நடவடிக்கையை இவரோடு ஒப்பிட்டுப் பார்க்கணும்:(
தேவையற்ற விழாக்கள் இப்போ பலவிதங்களில் வந்துருக்கு.
நல்ல இடுகை!
நல்ல பதிவு.... நல்ல தகவல்.....
நீங்கள் போடும் குறளுக்கு விளக்கமும் தேவை...
//வகையில் தமிழக அரசும் ஏற்கனவே நிறைந்து கிடக்கும் விடுமுறைகள் போதாது என இதற்கும் ஒரு நாள் விடுமுறையை அறிவித்து இதை ஒரு விழாவாக அங்கீகரித்து விட்டது. //
இந்திய அரசும் இன்னாளில் விடுமுறை அறிவிக்கிறது.
வட நாட்டில், பூவைப்போட்டு, பத்தி சாம்பிராணி போட்டு மசூதிகள் தொழுகை நடத்துகிறார்கள்.’
இது இந்துமதத்தின் தாக்கத்தால் வந்தது.
எவ்வளவுதான் கண்டித்தாலும், மதக்கொள்கைகளை எடுத்துசொல்லப்பட்டாலும்,
இப்படிப்பட்ட இந்துமதத்திலுருந்து வரும் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன.
அஃதில் ஒன்றுதான், மீலாது நபிக்கு விடுமுறை.
அரசாங்கம் மதத்தில் நுணுக்கங்களைப் பற்றி கவலைப்படாது.
முசுலீம் மதத்தலைவர்கள் (இந்தியாவிலுள்ள்) விடுமுறை விடாதே என்றால் கேட்டுக்கொள்ளும்.
ஆயினும், அவர்களிடம் 50:50 ratio போய்விடுமே எனக்கேட்கும்.
புரிகிறதா?
இரு பண்டிகை விடுமுறை மட்டுமே என்றால், ஏன் எங்களுக்கு மட்டும் இரண்டே இரண்டு நாட்கள்; அவர்களுக்கு பத்துக்கு மேற்பட்ட நாட்கள் என்பார்கள்.
யாரோ ஒருவர் இங்கு எழுதியதைப்போல, மீலாது நபிக்கு விடுமுறை வேண்டவென்றால், மாறாக மற்ற நாட்கள் சிலவற்றை இசுலாமியத்தலவர்களிடம் கேட்டு அரசு விட்லாம்.
நினைவிருக்க்ட்டும். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்கள் பட்டிய்ல போடுவது பிற தலைவர்களிடன் கலந்தாலோசித்தே போடுவார்கள்.
கிருஷ்ணர் பிறந்த நாளுக்கும், ராம நவமிக்கும், மகாவிரர் பிறந்தநாளுக்கும், ஏசு பிறந்த நாளுக்கும், குருநானக் பிறந்தா நாளுக்கும் அரசு விடுமுறைவிட்டு அந்தந்த மதத்தினரை குஷி படுத்தும்போது (ஓட்டுக்காக), மீலாது நபிக்கு ஏன் விடுமுறை விடக்கூடாது
என்பது என் வாதமல்ல.
அரசின் வாதம்.
தங்கள் பதிவுக்கு நன்றிகள்..
East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.
Have a look at here too..
Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
ஜக்குபாய் படத்தின் வில்லன் பெயர் என்ன என்று தெரியுமா? ஹமீத் அன்சாரி. இந்த் பெயர் கேள்வி பட்ட மாதிரி இருக்கா? .... அதாங்க நம்ம துணை ஜனாதிபதியின் பெயர்... நல்ல வேலை அந்த வில்லன் பெயர் அப்துல் கலாம்னு வைக்கலே :(
நல்ல பதிவு. ஓமன்,அமீரகம் போன்ற நாடுகளில் விடுமுறை விட்டாலும் இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாட்டவர்களே கொண்டாடுகிறார்கள்.
ஆம், தேவையில்லா விடுமுறை.
இஸ்லாமியர்கள் இந்த மீலாது நபி ஊர்வலம் போவதை முதலில் நிறுத்த வேண்டும். வீண்வீம்புக்காக நடத்தி, அதன்மூலம் சாதிப்பது என்ன?
//mohamed ashik said...
வெற்று பாராட்டுதல்களையும், சோப்பு மழையையுமே பெரிதும் விரும்பும் அரசியல்வியாதிகளுக்கு தன் நபியையே காணிக்கையாக்க துணியும் இந்த போலி முஸ்லிம்கள் சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட வேண்டும். //
நிச்சயமாக..,
//, ரமளானின் கடைசி நாளுக்கோ, அரபா நாளுக்கோ விடுமுறை விடச்சொல்லி அரசை கேட்டுக்கொள்ளலாம். அதாவது நோன்பு வைக்கும் முஸ்லிம்களுக்கு மிகுந்த பயனாய் இருக்கும்//
அது அரசியலாகி அறிவிக்கப்பட்டு விட்டதால் இனி மாற்றுவது சிரமமே! இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அனாச்சாரங்கள் முற்றிலுமாக தடைசெய்யப்பட வேண்டும். நன்றி ஆசிக் தங்கள் கருத்துக்கு.
//சுல்தான் said...
ஜஸாகல்லாஹ்.
முதலில் முஸ்லீம்கள் அறிய வேண்டிய கருத்துகள்.
இல்லாத ஒன்றை இஸ்லாத்தில் நுழைத்து விட்டார்கள்.//
உண்மைதான் சுல்தான் ஜி. கருத்துக்கு நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்.
//shabi said...
ஆனால் நபிகள் நாயகம் பிறந்த நாடான சவூதி அரேபியாவிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளிலோ இன்றைக்கு அரசு விடுமுறையும் கிடையாது, மீலாது நபியும் கிடையாது.////இங்க அபுதாபி,துபைல leave விடுவாங்க//
தகவலுக்கு நன்றி ஷபி! தகவலுக்கு நன்றி ஷபி! துபையில் விடுமுறைதானாம். அங்கேயும் அதிகமாக நம்ம ஆட்கள் தானே இருக்கிறார்கள்.
//வானம்பாடிகள் said...
மிக அருமையான கருத்தும் விளக்கமும் நிஜாம். அரசியல் சாக்கடை புகாத இடமே இல்லைதான். மதம் உட்பட:(//
அண்ணே! மதம் உட்படன்னு பட்டும் படாம சொல்லிடீங்க. இன்னிக்கு (ஜாதி)மதம் மட்டும் தான் அரசியலின் அச்சாரமே.
//MohamedBismillah said...
அஸ்லாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்தஹூ. மிகவும் தேவையான பதிவு. கண்டிப்பாக இந்திய இஸ்லாமியர்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படி நாம் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினால் நாம் அல்லாவுக்கு இணை வைத்தவர்களாக ஆகி விடுவோம். //
வ அலைக்கும் சலாம் முகமத். கருத்துக்கு நன்றி! மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்தட்டும்.
//துளசி கோபால் said...
படிக்கப்படிக்க வியப்பாக இருக்கு. இப்போதைய அரசியல்'வியாதி'களின் நடவடிக்கையை இவரோடு ஒப்பிட்டுப் பார்க்கணும்:(//
சகோதரர் துளசி கோபால்! முகமது நபிகளின் வாழ்க்கை பற்றி நான் சொன்னது வெறும் 0.1 % மட்டுமே! இன்னும் எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன. அவர் சபைக்கு வரும் போது யாரும் எழுந்து நிற்க கூடாது, அவர் காலில் யாரும் விழக்கூடாது என ஏகப்பட்ட விசயங்கள் இருக்கின்றன. முகமது நபிகள் அவர்கள் தான் திருமணம் செய்த பெண்களைத் தவிர வேறு எந்தப் பெண்ணின் விரலையும் கூட சீண்டியதில்லை. அவ்வளவு கண்ணியமாக நடந்து கொண்டார்கள். அவருடைய பேரன் ஹூசைன் சிறுபிள்ளையாக தவழும் போது ஒரு தடவை பள்ளிவாசலில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பேரிச்சம் பழம் ஒன்றை எடுத்து வாயிலே போட்டுவிட்டார். அதைக் கண்ட நபிகள் நாயகம் அந்த சிறு பிள்ளையின் வாயில் விரலை விட்டு அந்த பேரீச்சம் பழத்தை எடுத்து விட்டார் என ஏகப்பட்ட விசயங்கள் இருக்கிறது. ஓய்வாக இருக்கும் போது கூகிள் வழி தேடிப்பாருங்கள். அவரைப் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும்.
//malar said...
நல்ல பதிவு.... நல்ல தகவல்.....
நீங்கள் போடும் குறளுக்கு விளக்கமும் தேவை...//
நன்றி மலர். குறல் விட்ஜெட் உலகம். நெட் வழங்குகிறார்கள். அதிலே பொருள் இல்லை. இருந்தாலும் நான் முயற்சி செய்கிறேன்.
//Jo Amalan Rayen Fernando saiட்...//
ஆச்சரியமாக இருக்கிறது சகோதரர் அமலன் பெர்னான்டோவின் கருத்துக்கள். நான் எவ்வளவோ எதிர்கேள்விகள் வரும் என எதிர்பார்த்தேன். நன்றி
//இல்யாஸ் said...
ஜக்குபாய் படத்தின் வில்லன் பெயர் என்ன என்று தெரியுமா? ஹமீத் அன்சாரி. இந்த் பெயர் கேள்வி பட்ட மாதிரி இருக்கா? .... அதாங்க நம்ம துணை ஜனாதிபதியின் பெயர்... நல்ல வேலை அந்த வில்லன் பெயர் அப்துல் கலாம்னு வைக்கலே :(//
பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விசயம் இல்யாஸ். ஆனால் இந்த செய்தி முன்பே கிடைத்தது. இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தீவிரவாதி என்று சொல்லி அலுத்துவிட்டது போலும். அதுதான் இப்போது கடத்தல்காரன் என்கிறார்கள்.அதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அது அந்த படத்துக்கு விளம்பரமாக அமைந்துவிடும். தற்கொலை செய்து கொள்பவனை நாம் ஏன் தள்ளி கொல்ல??
// ஷாகுல் said...
நல்ல பதிவு. ஓமன்,அமீரகம் போன்ற நாடுகளில் விடுமுறை விட்டாலும் இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாட்டவர்களே கொண்டாடுகிறார்கள்.//
ஆமாம் ஷாகுல். கருத்துக்கு நன்றி! ஒரு சின்னக் கேள்வி. உங்கள் பெயர் ஷாகுல் மட்டும் தானா? அல்லது ஷாகுல் ஹமீதா? பதில் தரவும்.
// ஹுஸைனம்மா said...
ஆம், தேவையில்லா விடுமுறை.
இஸ்லாமியர்கள் இந்த மீலாது நபி ஊர்வலம் போவதை முதலில் நிறுத்த வேண்டும். வீண்வீம்புக்காக நடத்தி, அதன்மூலம் சாதிப்பது என்ன?//
கருத்துக்கு நன்றி ஹுசைனம்மா! எல்லாம் அரசியல் தான்
//Tech Shankar said...
தங்கள் பதிவுக்கு நன்றிகள்..
East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.
Have a look at here tஒஒ..//
நன்றி சங்கர் ! தொடந்து வாங்க.
akaa nijamukku vizunthu vittathu wahabi muththirai.saththiyaththai sonnaal kidaippathu wahabi endra peyar.
//உங்கள் பெயர் ஷாகுல் மட்டும் தானா? அல்லது ஷாகுல் ஹமீதா? பதில் தரவும்.//
ஷாகுல் ஹமீது தான் நிஜாம். ஷாகுல் ஹமீது என்ற பெயரை வைக்க கூடாது என சிலர் சொன்னர்கள் அதனால் தான் ஷாகுல் என்று சுருக்கிக் கொண்டேன்.
//Barari said...
akaa nijamukku vizunthu vittathu wahabi muththirai.saththiyaththai sonnaal kidaippathu wahabi endra peyar.
//
அன்பு Barari, நான் ஒரு காலத்தில் சுன்னத் ஜமாத்தின் தீவிர அனுதாபி. பிஜே குழப்பம் விளைவிக்கிறார் என நானும் சொல்லிவந்தேன். களியக்காவிளை விவாதத்தை முழுமையாக பார்த்த போது தான் விளங்கியது யார் திருந்த வேண்டும் என்று. நான் திருந்திவிட்டேன். சேக் அப்துல்லா ஜமாலியும்,மேலை நாசரும்,அவர்களின் கூட்டமும் இன்ஷாஅல்லாஹ் விரைவில் திருந்திவிடுவார்கள்.
// ஷாகுல் said...
ஷாகுல் ஹமீது தான் நிஜாம். ஷாகுல் ஹமீது என்ற பெயரை வைக்க கூடாது என சிலர் சொன்னர்கள் அதனால் தான் ஷாகுல் என்று சுருக்கிக் கொண்டேன்.//
அல்ஹம்துலில்லாஹ்..,அதற்காகத்தான் கேட்டேன் ஷாகுல்.
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
(thanks:
http://tamilislam25.blogspot.com/2010/02/blog-post_8551.html)
m
m
m
..................!!!!!!!!!
அவசியமான பதிவு.. இது போல் நிறைய எழுதுங்கள்!
Good eye opening Article. Congrats!
//UFO
தியாவின் பேனா
தமிழ் பிரியன்
Abdul Azeez //
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்
அப்புள்ள நிஜாம் அவர்களே...
சுருக்கமான தெளிவான அவசியமான இடுகை. எப்போதுதான் இந்த 'மிலாடி முஸ்லிம்கள்' அறிவு தெளிவு பெறுவார்களோ....