Feb 23, 2010

மயிர் நீப்பின் வாழா கவரிமான் - தோழர் உ.ரா.வரதராசன்

— நிஜாம் கான் @ 3:30 PM

வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான தோழர் வரதராச‌ன் அவர்கள் உயிர்நீத்த செய்தி உண்மையில் நம்மை கலங்க வைக்கிறது. தோழர் வரதராசன் அவர்களின் வாழ்வு மிக எளிமையாகவே இருந்து, எளிமையாகவே முடிந்து விட்டது. கம்னியூஸ்டு தோழர்களைப் பொருத்தவரை எந்தவிதமான பிரதிபலனும் இன்றி பொதுப்பிரச்சனைகளுக்கு போராடுவார்கள் என்பது நாம் எல்லாரும் அறிந்ததே! என் தந்தையும் இன்றுவரை ஒரு கம்னியூசவாதி என்பதால் நான் இதை அழுத்தமாகவே பதிகிறேன். காரணம் அதிகபட்சமாக எந்த கம்னியூசவாதியின் உள்ளத்திலும் சுயநலன் இருக்காது என்பது நான் உணர்வுப்பூர்வமாக தெரிந்து கொண்ட உண்மை. அடக்குமுறைகள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கம்யூனிசவாதிகள் களம் காணுவார்கள். சொல்லப்போனால் தன் குடும்பத்திற்காக உழைப்பதை விட மற்றவர்களுக்காக அதிகமாக‌ உழைப்பார்கள். அவர்களுக்கு மேடைகள் தேவையில்லை. ஒலிவாங்கி தேவையில்லை. நாம் நடந்து செல்லும் தெருவில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொண்டை கிழியக் கத்திக்கொண்டு இருப்பார்கள் சிறப்பு பேச்சாளர்கள். ஆனால் அவர் பேசுவது யாருக்காகவோ என நாம் சம்பந்தமில்லாமல் சென்றுகொண்டிருப்போம்.

இதேபோன்ற ஒரு எளிமை வாழ்க்கை வாழ்ந்து பொதுஉடமைக்காக தன்உடமையைக் கருத்தில் கொள்ளாத தோழர் உ.ரா வரதராசன் இந்த அவர்களின் எதிர்பாரா மரணம் நம்மை கலங்கவைத்து விட்டது. தன்னுடைய கணவனால் கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண்ணிற்கு சட்டப்பூர்வமான உதவிகளைச் செய்து வந்த விவகாரம் அவரின் குடும்பத்திலே புயலாய் வீசிவிட்டது. இது கட்சித்தலைமையின் காதுவரை போக‌ இவரை மத்தியக்குழு பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து வைத்தது தலைமை. இந்த தொடர் பிரச்சனையால் தன் நிம்மதியைத் தொலைத்த தோழர் உ.ரா.வரதராசன் கடந்த பிப் 11 ஆம் தேதி தன் வீட்டிலிருந்து வெளியேறி எங்கேயோ சென்றுவிட்டார். இதே நாட்களில் கட்சியின் மாநிலக்குழு கூட்டமும் நடைபெற்றதால் அதில் அவர் பங்கேற்காமல் இருக்கவே அவரைத் தேடும் பணி தீவிரமாகியது. இந்த நிலையில் அவரைக் காணவில்லை என அவரது மனைவி சென்னை கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் கட்சி அலுவலகத்திற்கு தோழர் வரதராசன் எழுதிய இரண்டு கடிதங்கள் வந்தன. அதிலே ஒரு கடிதத்தில் "என் உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களிடம் சேர்த்துவிடவும் எனவும், தனக்காக தனது மகள் வாங்கித்தந்த லேப்டாப்பை தீக்கதிர் நாளிதழ் அலுவலகத்திற்கும், தனது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை கட்சிக்கும்,தன்னுடைய புத்தகங்களை கட்சி நூலகத்திற்கும் சேர்ப்பித்து விடுங்கள் எனவும் எழுதியிருந்தார்.

அவரது இரண்டாவது கடிதத்தில் "மயிர் நீப்பின் வாழா கவரிமான், அன்னார் உயிர் நீப்பின் மானம் வரின்" தற்கொலை செய்து கொள்பவன் கம்னியூஸ்டே அல்ல என்றும் கட்சிப்போராட்டத்தில் எத்தனையோ இடர்பாடுகளைத் தாங்கிய நான் குடும்பப் போராட்டத்தில் நிலைகுலைந்து விட்டேன்" எனவும் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதம் கிடைத்தவுடன் கட்சியினரும், குடும்பத்தினரும் தேடுதலை தீவிரப்படுத்தினார்கள்.

அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெளிவாக குறிப்பிட்டிருந்ததால் தேடும் பணி தீவிரமாகியது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி போரூர் ஏரியில் இருந்து ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டு அது ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேதக்கிடங்கிலே வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 8 நாட்கள் கழித்து தான் அந்த மீட்கப்பட்ட சடலம் தோழருடையதாய் இருக்குமோ என சந்தேகத்தின் அடிப்படையில் அதை அடையாளம் காட்ட குடும்பத்தினரும், சக தோழர்களும் அழைக்கப்பட்டனர். ஒரு பிரபலமான நபர் தொலைந்து போய் விட்டதாக உலகம் முழுவதும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் போரூர் டிவிசன் காவல்துறையினருக்கு மட்டும் இந்த தகவல் கிடைக்கவில்லையோ என தான் நினைக்கத்தோன்றுகிறது. பொதுஉடமையாய் போராடிய தோழர் கிட்டத்தட்ட 8 நாட்கள் அனாதை பினமாய் இருந்துள்ளார் என்பது நெஞ்சை பிழிவதாக உள்ளது. எத்தனையோ போராட்டங்களை தைரியமாய் களம் கண்ட தோழர், மிசா காலத்திலே மிக தைரியமாக செயல்பட்ட தோழர் கடைசியிலே தன் வளர்ப்பு மகனால், தன் சக தோழர்களால் கூட அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்து விட்டார் என்பது எவ்வளவு கொடுமை.

தன்னோடு பணிபுரிந்த சக தாழ்த்தப்பட்ட தோழியருக்கு மறுவாழ்வு அளித்து தன் குடும்ப நலனை விட பொதுநலனை உயிராய் கருதி தன் காலம் முழுவதும் போராட்டமும் ஆர்ப்பாட்டமுமாய் வாழ்ந்த தோழர் உ.ரா. அவர்களின் இந்த முடிவு யாருக்குமே இனி நேரக்கூடாது. தற்கொலை செய்து கொள்வது கொடும் பாவம் என தெரிந்ததால் தான் தன்னுடைய கடிதத்தில் "தற்கொலை செய்து கொள்பவன் கம்னியூஸ்டே அல்ல" என எழுதியிருக்கிறார். அதையெல்லாம் தாண்டி அவரின் விரக்தி நிலை கம்னியூச சித்தாந்தத்தை வென்றுவிட்டது. மயிர் நீப்பின் வாழா கவரி மான் எனச்சொல்லி மீளா இடத்திற்குச் சென்றுவிட்ட அன்னார் சாந்தி பெற பிரார்த்திப்போம்.

already seen this

7 Response to "மயிர் நீப்பின் வாழா கவரிமான் - தோழர் உ.ரா.வரதராசன்"

  1. vasu balaji said...

    ஆம். நிஜாம்.ஒரு உன்னதமான அரசியல்வாதிக்கு இப்படி ஒரு முடிவு அவலம். :(

  2. இராகவன் நைஜிரியா said...

    அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

  3. goma said...

    This comment has been removed by the author.
  4. goma said...

    அவர் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்

    February 23, 2010 8:00 P

  5. ஷாகுல் said...

    வருத்தமான செய்தி. கட்சி அவசரபட்டு விட்டது.

  6. பனித்துளி சங்கர் said...

    வருந்துகிறேன் !
    பகிர்வுக்கு நன்றி . !

  7. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் //
    //இராகவன் நைஜிரியா//
    // goma//
    //ஷாகுல் //
    //♫ ♪ …..♥ பனித்துளி சங்கர்//

    அனுதாபம் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,