Feb 18, 2010

பச்ச,மஞ்ச,பிங்க்,கருப்புத் தமிழன்

நிஜாம் கான் @ 6:26 PM

இன்னும் எத்தனை கலர் சொன்னாலும் தமிழனின் உண்மையான நிறம் வெள்ளை தான். யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம். யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். தமிழனின் எதார்த்தம் இதுவே! இவன் மட்டும் அடக்குமுறைகளை அனுசனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு எதிராக கேள்வி கேட்டால் அது இறையாண்மைக்கு கேடாகிவிடும். இவன் வாழும் ஊரில் யார் வேண்டுமானாலும் வாழலாம். எந்த மொழி பேசினாலும் கண்டுகொள்ள மாட்டான். ஆனால் இவன் வேறு ஊரில், வேறு நாட்டில் வாழ்வது மிகவும் சிரமம். அப்படி வாழ்ந்தாலும் தன் மொழியை மறைத்து வாழுமிடத்தின் மொழி பேசி வாழ்கிறான்.

எங்களுக்கு தண்ணீர் கொடுங்கள், எங்களுக்கு வரும் தண்ணீரைத் தடுக்காதீர்கள் என இவன் கூறினால் அது யார் காதுகளிலும் எட்டாத புலம்பல். இவனை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். ஆனால் இங்கிருந்து மணல், பால், காய்கறி, மின்சாரம் போன்றவற்றை நாங்கள் தரமாட்டோம் என மறுத்தால் அது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் என உச்ச நீதி மன்றமே தீர்ப்பளிக்கும்.அந்த பொருட்களின் வரத்துக்கு எந்த விதமான தடையுமே விதிக்காது தன் மூச்சைப் பிடித்து அதற்காகப் பாடுபடும்.

எங்கள் மீனவர்களை எதிரி நாட்டு ராணுவத்தினர் அடிக்கிறார்கள் என்றால் அதைக் கண்டிக்க ஆள் இருக்காது. அதைக் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். மாறாக நீ கரையைத் தாண்டி மீன் பிடிக்காதே, அப்படி பிடித்தால் 9 லட்ச ரூபாய் அபராதம் என உத்தரவு போடுவார்கள். ஆனால் அந்த‌ நாட்டு மீனவர்கள் சிக்கினால் அவர்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து நன்றாக சாப்பாடு போட்டு கைச்செலவுக்கும் காசு கொடுத்தும் அனுப்பி வைப்பார்கள். இதனாலேயே சில அதிகாரிகளைக் கூட அந்த நாட்டு மீனவர்கள் கடத்திச் சென்றுவிடுவார்கள்.

இனப்படுகொலையில் சிக்கியவர்கள் தமிழர்கள் என்பதால் அதை யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள், மாறாக இங்கிருந்து நிறைய உதவிகளைச் செய்வார்கள். கர்நாடகாவிலும், கேரளாவிலும் தமிழர் பகுதிகள் தனியாக அடையாளமிடப்படும். ஏதாவது பிரச்சனை வந்தால் சொந்த மக்களுக்கு தீங்கு நேராமல் மற்றவைகள் நொறுக்கப்படும். அண்டை மாநிலங்களில் பயந்து பயந்து நுழையும் நம்ம ஊர் பேரூந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும், அதிலே பயணம் செய்யும் தமிழர்கள் தாக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் ஊர் பேரூந்துகளுக்கு முழுபாதுகாப்பு கொடுத்து ஒரு சிறுகீறல்கள் கூட விழாமல் பாதுகாப்பாய் அனுப்பிவைக்கப்படும். அவர்களுக்குள் ஒரு சண்டையென்றால் கூட நம்ம ஊர் பேரூந்து கொழுத்தப்படும். ஆனால் அந்த நிலையிலும் அவர்கள் ஊர் பேரூந்து பாதுகாப்பாய் வந்து செல்லும்.

நமது ஊரில் எந்த மாநிலத்தவர் யார் வேண்டுமானாலும் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கான பாதுகாப்பும் உத்தரவாதமும் இங்கே உண்டு. ஆனால் ஒரு தமிழன் வேறு எந்த மாநிலத்திலும் சென்று கடை வைத்தாலும் அதற்கு பாதுகாப்பு இருக்காது. நமது ஊரில் கடை வைத்திருக்கும் அவர்கள் அவர்களின் தாய்மொழியில் பெயர்பலகை வைக்கலாம். ஆனால் அவர்கள் ஊரில் கடைவைத்திருக்கும் தமிழர்களின் பெயர்பலகை அந்த மொழியில் தான் இருக்கவேண்டும். அவர்கள் ஊரில் கடை நடத்தும் தமிழர்கள் அங்கிருக்கும் ரவுடிகளுக்கு மாமூல் கட்ட வேண்டும். ஆனால் நமது ஊரில் கடை நடத்துபவர்கள் யாருக்கும் மாமூல் கட்டத்தேவையில்லை.

அவர்கள் ஊரில் ஒரு தமிழன் பிரச்சனை செய்தால் நியாயம் இவன் பக்கம் இருந்தாலும் இவனுக்கு சாதகமாய்ப் பேச யாருமே வரமாட்டார்கள். ஆனால் நமது ஊரில் எந்த நாட்டுக்காரனுக்கு பிரச்சனை என்றாலும் நம்மக்கள் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள். அவர்கள் ஊர்களில் இருக்கும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் லோ பேண்டில் தமிழ்ச்சேனல்களைத் தருவார்கள். ஆனால் நமது ஊர் கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் பிரைம் பேண்டில் அவர்களின் சேனல்களைத் தருவார்கள்.

தெலுங்கானாவில் பெல் நிறுவனத்தின் தேர்வுகளுக்காகச் சென்ற தமிழ் மாணவர்கள் அடித்து விரட்டப்பட்ட செய்திகள் இன்றைக்கு ஒன்றும் புதிது அல்ல என்பதற்காகத் தான் மேற்சொன்ன உதாரணங்கள். ஆக எல்லா இடத்திலும் தமிழர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். நாதியற்ற மக்களாய் தமிழர்கள் மாறிவிட்டார்கள் என்பதற்கு மேற்சொன்ன உதாரணங்களே சான்றுகள். ஆனால் சுட்டுப்போட்டாலும் மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போன்ற மொழி வெறி மற்றும் மதவெறி என்றைக்குமே தமிழர்களைத் தீண்டிவிடாது. ஏன்னா எப்பவுமே தமிழன் தமிழன் தான்.

already seen this

4 Response to "பச்ச,மஞ்ச,பிங்க்,கருப்புத் தமிழன்"

  1. டக்கால்டி said...

    Thalaippai paarthu etho comedy matter nu vanthen...

    Aana romba serious aana matter simple aaga solli irukkeenga...

  2. vasu balaji said...

    நாமதான் வந்தாரை வாழ வைக்கும்னு மார்தட்டியே சலிச்சிப் போனோமே. அதான் அவனவன் மணடையில தட்டுறான்.:(

  3. நிஜாம் கான் said...

    //டக்கால்டி said...
    Thalaippai paarthu etho comedy matter nu vanthen...

    Aana romba serious aana matter simple aaga solli irukkeenga...//

    நன்றி டகால்டி! தொடர்ந்து இணைந்திருங்கள்.

  4. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    நாமதான் வந்தாரை வாழ வைக்கும்னு மார்தட்டியே சலிச்சிப் போனோமே. அதான் அவனவன் மணடையில தட்டுறான்.:(//

    நன்றி அண்ணே! தொடர்ந்து இணைந்திருங்கள்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,