Feb 21, 2010

இது கதையல்ல..கருப்பு சரித்திரம்

தன்னை இளைய தலவலியாக மாற்ற விஜய் என்னென்ன செய்தாரோ அதே பார்முலாவை பயன்படுத்தியே தன்னை எல்லாரும் தல என சொல்ல வேண்டும் என்ற அஜீத்தின் முயற்சி வெற்றியடைந்தது. இளைய தளபதி என சொல்வதைக் கேட்கும் போது வரும் எரிச்சல் யாராவது தல என்று சொல்லும் போதும் கூட‌ இப்போதும் வந்துவிடுகிறது. இவனுங்களா பட்டத்த சூட்டிக்கிட்டு அத பிரபலப்படுத்த செய்ற வெளம்பர அக்கப்போருகள் தாங்கமுடியாது. இந்த வகையில் வந்த வீரத்தளபதி, சின்னத்தளபதி என எல்லாமே தலைவலிகள் தான். சினிமாவின் அந்தக்காலம் தொட்டு இந்தக் காலம் வரை யாராவது இரு கதாநாய்கர்கள் இடையே லடாய் தொடர்ந்து கொண்டே இருக்கும். டி.ஆர் மஹாலிங்கம் Vs பாகவதர், எம்ஜியார் Vs சிவாஜி, ரஜினி Vs கமல், விஜய் Vs அஜீத். இதிலே முன்னவர்கள் கொஞ்சம் நாகரீகத்தோடு நடந்து கொண்டார்கள். ஆனால் இப்போது இருப்பவர்கள் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு குழாயடிச் சண்டை போடவும் தயார். இது ஏன் சம்பந்தம் இல்லாத மேட்டருன்னு தோனுதா? விளக்கம் கடைசியா வருது.,

விஜய்யின் பின்புலம் தன்னுடைய அப்பாவோடு வந்தவர். ஷகிலாவை மிஞ்சும் குடும்பப் பாங்கான படங்களில் நடித்து கூலிக்கு ஆள்வைத்து சினிமாவை ஓட்டி தன்னை ஒரு தளபதியாக மாற்றிக்கொண்டார். ஐந்து சீன் லட்சியம்,ரெண்டு சீன் நிச்சயம் என்ற தோரணையில் விஜய் படத்துக்கு மக்கள் படையெடுத்தார்கள். ஆனால் அஜீத்தின் பின்புலம் கொஞ்சம் வீக். ஹீராவைத் தொற்றிக்கொண்டு அதன் மூலம் அறிமுகமாகியும் சரியான வாய்ப்புகள் அமையாமல் அமர்களம் வரை நொண்டியடித்தவர் அஜீத். அதன்பிறகு சரியான படங்களைத் தேர்வு செய்து நடித்து இன்றைக்கு முன்னனி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.

அஜீத்தை பொருத்தவரை யார் வம்புக்கும் போகமாட்டார் என கோடம்பாக்கத்தில் ஒரு டாக் இருக்கிறது. அது மட்டுமின்றி எந்தஒரு பொதுவிழாவிலும் கலந்து கொள்ளவும் மாட்டார், எந்த ஒரு பத்திரிகைக்கோ, தொலைக்காட்சிக்கோ செவ்வியளிக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் சமீபத்தில் திரைத்துறையினர் சேர்ந்து முதல்வருக்கு நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அஜீத் விழாக்குழுவினர் தங்களை மிரட்டித்தான் கலந்து கொள்ளப் பணிக்கிறார்கள் என போட்டுடைக்க, எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றிய கதையாக அங்கிருந்த ரஜினியும் எழுந்து நின்று கைதட்ட உண்டானது பிரச்சனை. அதெப்படி முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் இவர் எப்படி பேசலாம் என்று. அஜீத்தின் கருத்திலே தவறு இல்லை. ஆனால் அது சொல்லப்பட்ட இடம் தான் தவறான இடம். அதாவது முதல்வருக்கு பாராட்டு விழா என அறிவித்து விட்டு அங்கே வந்து நின்றுகொண்டு எங்களை மிரட்டுகிறார்கள் என்று சொன்னது முதல்வர் மத்தியிலே விழா கமிட்டியாளர்களை அவமானப்படுத்துவது போன்ற செயலாகும். இது முதல்வரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் இதை முதல்வர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அத்தோடு இந்த பிரச்சனை தீர்ந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர்.

ஆனால் மதுரையில் அடிவாங்கியவன் மானாமதுரையில் வந்து கத்தியது போல நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜாக்குவார் தங்கம் வழியாக அந்தப் புகை மீண்டும் ஊதப்பட்டது. அஜீத் சினிமாவில் மட்டுமே வில்லனாக நடிக்கட்டும், நிஜத்திலும் நடிக்க வேண்டாம் என்று ஜாக்குவார் சொல்ல பிரச்சனை தீப்பிடித்தது. அத்தோடு குகநாதன் "நீ சாப்பிடறதெல்லாம் தமிழன் காசு ஆனால் தமிழனுக்காக போராட்டம் நடத்தினால் வரமாட்டியா" என மறுமுனைத் தாக்குதல் நடத்த இப்போது பிரச்சனை பற்றி எரிகிறது. அதுமட்டுமின்றி யாருக்குமே செவ்வி கொடுக்காமல் இருந்த அஜீத், முதல்முறையாக கலைஞர் தொலைக்காட்சிக்கு கொடுத்த‌ செவ்வியும் இந்த வகையைச் சார்ந்தது தானா? அதையும் மனதில் வைத்து தான் அஜீத் அவ்வாரு பேசினார் என்றும் யாரோ சிலர் தகவலை பரப்பிவிட அது முதல்வர் காது வரை சென்றுவிட்டது. பிரச்சனை பூதாகரமாவதை உணர்ந்த அஜீத் முதல்வரை சந்தித்து தான் அன்றைக்கு மேடையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். அந்த இடத்தில் முதல்வரின் ரியாக்சனை நாம் தொலைக்காட்சியிலே பார்க்க முடிந்தது. ஆனால் அந்தப்பக்கம் ஜாக்குவார் தங்கம் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் முயற்சிகள் நடந்ததில் அஜீத்தின் டச்சப் பாய் முதற்கொண்டு சிக்கியதால் இதிலே அஜீத்தின் முழுதூண்டுதல் இருப்பதாகவே புகார் அளிக்கப்பட்டது. ஜாக்குவார் வீட்டின் மீது கல்லெறிந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்காததால் என்ன தல'கணம் என அனைவருமே கொதித்தெழுந்தார்கள். பெப்ஸி, விநியோகஸ்தர் சங்கம், திரைப்பட உரிமையாளர் சங்கம் போன்றவை அதிரடி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

அஜீத் தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவரின் திரைப்படங்களை திரையிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.இதற்கிடையில் அனைத்து திரைப்பட சங்கத்தினரும் இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பர் தியேட்டரில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவருமே கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

· கடந்த பிப்ரவரி 6 ம் தேதி முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத்தின் பேச்சு திரைத்துறையினர் அனைவரையும் புண்படுத்தி விட்டது. எனவே அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

· அஜீத்தின் பேச்சுக்கு எழுந்து கைதட்டிய ரஜினிகாந்தின் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்றதாகும். எனவே ரஜினிக்கு எங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம். அஜீத் மற்றும் ரஜினிக்கு ரெட்கார்டு போடுவதாக நாங்கள் முடிவெடித்திருந்தோம் ஆனால் நடிகர் சங்கம் தலையிட்டு கோரிக்கை வைத்ததால் அது கைவிடப்பட்டது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அஜீத் ஆதரவாளர்கள் தன்னை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியாதாக ஜாக்குவார் தங்கம் புகார் அளித்துள்ளார். தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமே ஜாதி பெயரைச் சொல்லி திட்டி இழிவுபடுத்தினார்கள் என நாம் செய்திகளைப் படித்திருப்போம். ஆனால் தன்னையும் ஜாதி சொல்லித் திட்டியதாக ஜாக்குவார் தங்கம் நாடார் புகார் கொடுத்திருப்பது புதுமையாகத் தான் இருக்கிறது. ஆகமொத்தத்தில் ஜாதி என்பதே இழிவு தான் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் ஜாக்குவார். பார்க்கலாம் அகில இந்திய நாடார் சங்கத்தலைவரும் நடிகர் சங்கத்தலைவருமாகிய சரத் என்னச் செய்யப்போகிறார் என்று.

ரஜினியின் அரசியல் பிரவேசம் நமத்துப்போன பிறகு விஜய்யின் ஆட்டம் ஆரம்பமாகியது. 2011 நம்ம கையிலே என சொல்லாமல் சொல்லிவந்தார். ஆனால் அது வெறும் புஸ்வானம் எனத் தெரிந்து நிம்மதியடைந்தது அரசியல் வட்டாரம். இந்த நிலையில் தன் படங்களில் வார்த்தைக்கு வார்த்தை தல, தல என சொல்லிச்சொல்லியே தலைகணத்தை அஜீத்துக்கு ஏற்றிவிட்டார்கள். அந்தக் கணம் தான் முதல்வரின் முன்னிலையில் இப்படிபேச தூண்டியது என கோடம்பாக்க வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இந்தப் பிரச்சனையைப் பெரிதாக்கி அஜீத்தை சிக்கவைத்ததில் இளைய தலவலிக்கு முக்கியப்பங்கு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. காரணம் தனக்கு நெருக்கமான தலமையின் தயாரிப்பு வட்டாரம் மூலம் தான் இந்த செய்தி பரவியதாகவும் தெரிகிறது.

அரசியலை சீண்டுவது என்பது புலிவாலைப் பிடித்த மாதிரி. பிடித்தால் அவ்வளவு தான் அதை விட்டால் அது நம்மை காலி செய்துவிடும். புகழ்ச்சிக்கு மயங்குகிறவன் தனக்குத்தானே குழிபறித்துக் கொள்கிறான் என்ற பழமொழி இருக்கிறது. அதனால் இது போன்ற மாயப்புகழ்ச்சி வலியிலிருந்து அஜீத் வெளியேற வேண்டும். என்ன தான் இருந்தாலும் அஜீத் செய்தது தவறு தான். அந்த தவறுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கலாம். ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் அதை விட கடுமையான தண்டனையாக‌ அஜீத்தை தனி அறையில் பூட்டி அவர் நடித்த அசல் படத்தை 10 முறை பார்க்க வைக்கலாம்.

இந்த வீடியோ போனஸ்:

already seen this

17 Response to "இது கதையல்ல..கருப்பு சரித்திரம்"

  1. vasu balaji said...

    எல்லாத்துலயும் ஜாதிய கலந்துட்டா பாலிடிக்ஸ் பண்ணிடலாம்.

  2. ஷாகுல் said...

    வாரம் ஒரு பாராட்டு விழா! அதற்க்கு எல்லாரும் வந்து வாழ்த்தனும். இது உங்களுக்கே ஓவரா இல்ல! அஜீத் சொன்னதில் எந்த தவறும் இல்லை. கூப்பிட்டால் வரனும் வராவிட்டால் மிரட்டுவோம் என சொன்னரே ஒருவர். அவ்ர் விழாவுக்கே வராத விசயகாந்த மிரட்டுனார. ங்கொய்யால் நசிக்கிருவாங்கல்ல..

  3. ஷாகுல் said...

    ஏண் அவங்களுக்கு உரிமை இல்ல. வாரம் ஒரு விழாவுக்கு செல்ல கலைஞருக்கு வேண்டுமானால் அலுக்கமல் இருக்கலாம். ஆணால் வாரா வாரம் ஒருவரை புகழ்ந்து கொண்டு இருக்க முடியாது. புகழ்ச்சிக்கு அடிமை அஜீத் அல்ல நம்ம் தலைவர்தான். தன் மரியாதையை தானே கெடுத்துக் கொள்கிறார். தூண்டிவிட்டு அஜீத்தை வழிக்கு கொண்டுவர. இனியும் தமிழ் நாடு உருப்படும்.?

  4. thiyaa said...

    நீங்கள் கூடத்தான் மிரட்டும் தோரணையில் பத்தி எழுதியதாக நாளை கூறலாம் கவனம். ஹா... ஹா... ஹா... ஹா...இதெப்பிடியிருக்கு.........

  5. Selvakumar said...

    அஜித் கூறியதில் எவ்வித தவறுமில்லை. புகழ்ச்சி அடிமையாகி பழகிப்போன கலைஞரே இந்நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர்களைப்பற்றி ஒரு காட்டமான அறிக்கைவிடவில்லையா. அதிகாரம் கையிலிருப்பதால் தன்னைத்தான் சொல்லுகிறானோ என்று வழக்கமான சாணக்கிய விளையாட்டில், மாபியா பலத்தையும் சேர்த்து மிரட்டி, மன்னிப்பு கேட்க வைத்திருப்பதால், எம்ஜிஆரின் ஆவிப்பிடியிலிருந்து அவர் அகலவில்லையென்றே தோன்றுகிறது. இனி ஒரு எம்ஜிஆர் வந்து இவரை தொடர்ந்து ஆட்சிக்குவரமுடியாது கலங்கடிக்கப்போவதுமில்லை. கலைஞர் சினிமாக்கார பயம் நீங்கி முதலில் அந்த வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும். இல்லையென்றால் நாளை கருணாஸுக்கு கூட அவர் இந்தகைய மிரட்டல் கலையை உபயோகிக்க வேண்டும்.

  6. Selvakumar said...

    நடிகர்களை சீண்டுவது என்பது புலிவாலைப் பிடித்த மாதிரி (எம்ஜிஆரைப்போல்). பிடித்தால் அவ்வளவு தான் அதை விட்டால் அது நம்மை காலி செய்துவிடும். புகழ்ச்சிக்கு மயங்குகிறவன் தனக்குத்தானே குழிபறித்துக் கொள்கிறான் என்ற பழமொழி இருக்கிறது. அதனால் இது போன்ற மாயப்புகழ்ச்சி வலியிலிருந்து கலைஞர் வெளியேற வேண்டும். என்ன தான் இருந்தாலும் கலைஞர் செய்தது தவறு தான். அந்த தவறுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கலாம். ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் அதை விட கடுமையான தண்டனையாக‌ கலைஞரை தனி அறையில் பூட்டி அவர் கெடுத்த 'உளியின் ஓசை' படத்தை 1 முறை பார்க்க வைக்கலாம்.

  7. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    எல்லாத்துலயும் ஜாதிய கலந்துட்டா பாலிடிக்ஸ்//

    ஜாதியும், பாலிடிக்ஸூம் நகமும் சதையும் போல அண்ணே! அதை யாராலும் பிரிக்க இயலாது.

  8. நிஜாம் கான் said...

    //ஷாகுல் said...
    வாரம் ஒரு பாராட்டு விழா! அதற்க்கு எல்லாரும் வந்து வாழ்த்தனும். இது உங்களுக்கே ஓவரா இல்ல! அஜீத் சொன்னதில் எந்த தவறும் இல்லை. கூப்பிட்டால் வரனும் வராவிட்டால் மிரட்டுவோம் என சொன்னரே ஒருவர். அவ்ர் விழாவுக்கே வராத விசயகாந்த மிரட்டுனார. ங்கொய்யால் நசிக்கிருவாங்கல//

    நல்ல கருத்து ஷாகுல்! சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்.

  9. நிஜாம் கான் said...

    //தியாவின் பேனா said...
    நீங்கள் கூடத்தான் மிரட்டும் தோரணையில் பத்தி எழுதியதாக நாளை கூறலாம் கவனம். ஹா... ஹா... ஹா... ஹா...இதெப்பிடியிருக்கு.........//

    ஆகா! தியாகிட்ட கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கனுமோ???

  10. நிஜாம் கான் said...

    // Selvakumar said...
    அஜித் கூறியதில் எவ்வித தவறுமில்லை. புகழ்ச்சி அடிமையாகி பழகிப்போன கலைஞரே இந்நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர்களைப்பற்றி ஒரு காட்டமான அறிக்கைவிடவில்லையா.//

    திரு.செல்வக்குமார். உங்கள் கருத்தையும் மதிக்கிறேன். நல்ல விசயங்கள் இருக்கின்றன. ஆரோக்கியமான,விரசமில்லாத,கண்ணியமான எல்லாக் கருத்துமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை தான். ஆனால் சரியான கருத்து எது என்பதில் தான் பிரச்சனையே! தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றீ!

  11. இராகவன் நைஜிரியா said...

    ஜாதியும், அரசியலும் மட்டுமல்ல... சினிமாவும் அதில் கலந்துடுச்சுங்க. சினிமாவில் இருப்பவர்கள் புகழ்ந்தால், அப்படி ஒரு மகிழ்ச்சி.

    ரெட் கார்ட் போடப் படும் என்று சொல்லிகிட்டு இருக்காங்களே... ஏன் போட மாட்டேங்கிறாங்க... யாரும் போட மாட்டாங்க..

    பத்திரிகைகளுக்கு நல்ல தீனி அவ்வளவுதான். இப்போ வலைப்பூக்களும் ...

  12. shabi said...

    ். ஐந்து சீன் லட்சியம்,ரெண்டு சீன் நிச்சயம்/////....முடியல...சி(ற)ரிப்பான வரிகள்

  13. V.Sathish Kumar said...

    ajith is a superman

  14. நிஜாம் கான் said...

    //இராகவன் நைஜிரியா said...

    ரெட் கார்ட் போடப் படும் என்று சொல்லிகிட்டு இருக்காங்களே... ஏன் போட மாட்டேங்கிறாங்க... யாரும் போட மாட்டாங்க..

    பத்திரிகைகளுக்கு நல்ல தீனி அவ்வளவுதான். இப்போ வலைப்பூக்களும் ...//

    அண்ணன் கணிப்பு எப்பவுமே சரியா இருக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம்.

  15. நிஜாம் கான் said...

    //shabi said...
    ். ஐந்து சீன் லட்சியம்,ரெண்டு சீன் நிச்சயம்/////....முடியல...சி(ற)ரிப்பான வரிகள்//

    நன்றி ஷபி! தொடர்ந்து இணைந்திருங்கள்

  16. நிஜாம் கான் said...

    // V.Sathish Kumar said...
    ajith is a supeர்மன்//

    நன்றி சதீஷ்! தொடர்ந்து இணைந்திருங்கள்

  17. Unknown said...

    பதிவுலக பட்டறிவாளர்களே!! உங்களுக்கு ஒரு அரசியல் விடுகதை
    பதிலிடுங்கள் பின்னுட்டத்தில் ,எங்கள் தலமைக்குழாம் சார்பில் உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன்

    களம் :தமிழரசியல் பிப்ரவரி 2010 வரை

    கேள்வி :ஒன்று
    கருவறுக்க காத்திருக்கும் பேய்காமன் யார் ?

    ௧.திருலங்கா
    ௨.நோண்டிய
    ௩.ச்சீனா
    ௪.ஒமேரிக்கா

    கேள்வி :இரண்டு
    அங்கே கடைசி கோவணத்துன்னடையும் ஆட்டையைப்போட துடிக்கும் நாட்டமை யாரார் ?

    ௧.திருலங்கா
    ௨.நொண்டியா
    ௩.டச்சீனா
    ௪.ஓமெரிக்கா

    கேள்வி :மூன்று
    வேலியில் போவதையெல்லாம் மடியில் விட்டுக்கொண்டு (வாரிசுகளுக்காக),தல கொதிக்க குருமாவை (விட்டு) கேட்பவன் யாரார் ?

    ௧.சாணக்கிய சொட்டையன்
    ௨.துணைபதி
    ௩.மொழகிரி
    ௪.கோமா.நாராயணன்

    கேள்வி :நான்கு
    வாங்கியதற்கு அதிகமாக கொதிக்கும் குருமா யார் ?
    (சொட்டையன் சூத்திலே அடிச்சாலும் என்னை நல்லவேன்னு சொன்னான்டா ,ஊஉ ,,,,,, )
    ௧.தேறுமா
    ௨.டக்குவார் டங்கம்
    ௩.தன்னியரசு
    ௪.தல

    ஒன்றுக்கு மேற்ப்பட்ட பதில்கள் பொருந்தி வருமாகில் அல்லது சீருக்கு பொருள் தெரியாவிட்டால்
    நீங்கள் அரசு போட்டித்தேர்வு எழுத தகுதியற்றவர்
    முற்றுணர்ந்த அறிஞர்களே நீங்கள் பின்னுட்டத்தில் பின்னி பெடலெடுக்கலாம் .

    டிஸ்கி :உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன் !!
    இந்தப்போட்டியில் வரும் சொல்லாடல் அனைத்தும் எமது கற்பனையே
    யாரையும் துன்புறுத்த அல்ல !!!!!!!!!

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,