டாப் 1 : ஒரு கைதியின் டைரி
ஒரு காட்டில் சுற்றித்திரியும் இரண்டு நரிகள் அங்கிருக்கும் ஆடுகளைக் கொன்று தங்களை பெரிய ரவுடிகளாகக் காட்டிக்கொள்கின்றன. திடீரென இரண்டு நரிகளுக்குமிடையில் யார் பெரியவன் என்ற போட்டி வர பலப்பரீச்சையில் இறங்குகின்றன. அதிலே வெற்றியடைந்த ஒன்று மற்றொன்றை போட்டுத்தள்ள திட்டமிட்டு அதன் மீது சாவைப் பங்குபிரிக்கும் பழைய வழக்குகளைப் போட்டு உள்ளே தள்ளி கதையை முடிக்க நினைக்கிறது. கடைசியில் என்ன என்பதை பொருத்திருந்து பாருங்கள். போட்டியிட்டு தோல்வியடையும் நரி வேடத்தில் பொன்சேகா நடித்துள்ளார். பரிதாபமான கதாபாத்திரம். அடுத்த காட்சி என்னவென்று அவருக்கே தெரியாமல் கதையை நகர்த்தியுள்ளது அற்புதம்.

டாப் 2 : வேட்டையாடு விளையாடு
எல்லா பாவத்திலும் பங்கெடுத்த நண்பன் ஆட்சியிலும் பங்கு கேட்க, பொருக்க முடியாத நாயகன் அவனின் கதையை முடிக்க நினைத்து அவன் தன்னைக் கொல்ல சதி செய்ததாகச் சொல்லி அவனை உள்ளே தள்ளி அவனுடைய கதையை முடிக்க நினைக்கிறான். அதற்காக அவன் போடும் சூழ்ச்சித் திட்டங்கள் தான் கதையே! ஒரு கைதியின் டைரி படத்திலும் இதே படத்தின் சாயல் இருப்பதால் மஹிந்தா நடித்த வேட்டையாடு விளையாடி இந்த வாரம் இரண்டாம் இடத்தில்.

டாப் 3: தாலி காத்த காலி'யம்மன்
தமிழச்சிகளின் தாலியை கீரைக்கட்டாய் கொத்திப்பிடித்த போது மகிழ்ச்சியடையும் நாயகி தன் தாலிக்கே தடங்கல் வரும் போது இந்தியாவில் வீற்றிருக்கும் சானியாஅம்மனை நோக்கி தன் தாலியை காக்க போராடுகிறார். ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா என நாயகி பாடும் பாடல் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. தாலிகாத்த காலி'யம்மன் இந்த வாரம் 3வது இடத்தில்

டாப் 4: அண்ணன் ஒரு கோயில்
அப்பாவிகளை அடித்தே பெரிய ரவுடி என பெயர் வாங்கிவிட்ட தன் தம்பி தேர்தல் களத்தில் நிற்க, அவனது அண்ணனோ தேர்தல் வேலைகளைப் பார்ப்பதை விடுத்து தப்பிக்கும் வேலைகளைப் பார்த்து ஆங்காங்கே சுரங்கம் தோன்டுகிறான். நெஞ்சுவலி வந்துவிட்டதாக அடிக்கடி சிங்கப்பூருக்குப் பறந்து சென்று வாடகைக்கு வீடு தேடுவது அருமை. இறுதியில் தம்பியே வென்றுவிட நிம்மதியடைகிறான் இந்த அண்ணன். அண்ணன் ஒரு கோயிலென்பேன் என மஹிந்தா பாடும் பாடல் முனுமுனுக்க வைக்கிறது. இந்த வாரம் 4 வது இடத்தில் தம்பி.

டாப் 5: எங்க ஊரு காவக்காரன்
எல்லாருக்கும் நான் தான் காவக்காரன் எனச்சொல்லிக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போட்டுக்கொடுத்து சண்டையை மூட்டிவிட்டு கடைசியில் தன் வியாபாரத்தை மேலோங்கச் செய்யும் வேலையைச் செய்யும் பாணியில் வந்திருக்கும் படம் தான் எங்க ஊரு காவக்காரன். ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள் மாறினாலும் குணம் மாறாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்தப் படத்தின் கருப்புக்கதாநாயகன். இந்த வாரம் 5வது இடத்தில்.

டாப் 6: ஒருவன்
யாரை ஆதரிக்கிறார் என வெளியே சொல்லாமல், தன் குழுவிற்கும் கட்டுப்படாமல் ஏதோ ஒன்றை நோக்கி காய் நகர்த்தி விட்டு இன்றைக்கு எல்லாத்தையும் இழந்து தனியாய் நிற்கிறார் இந்த நாயகன். பாவம் யார் சொல் கேட்டாரோ? ஒத்தையாய் நிற்கும் ஒருவன் இந்த வாரம் 6ஆம் இடத்தில்

டாப் 7: ஊமை விழிகள்
எவ்வளவு தான் முயன்றாலும் அதை யாரும் கண்டு கொள்ளாமல் போக வேறுவழியில்லாமல் நடப்பது நடக்கட்டும் என எத்தனை காலமானாலும் பொருத்திருக்கும் நாயகனின் கதை. ஊமை விழிகள் இந்த வாரம் 7 வது இடத்தில்

டாப் 8: தெய்வத்தாய்
இன்ஸ்டென் ஈழ தேவதையாய் களமிறங்கி எலக்சனைக் குறிவைத்து ஈழப்பொடி தூவி காய் நகர்த்திப் பார்த்தும் கதைக்கு ஆவாமல் உக்கார்ந்து விடும் தேவதையைப் பற்றிய படம் தெய்வத்தாய். இந்த வாரம் 8 வது இடத்தில்

டாப் 9: அன்னை ஓர் ஆலயம்
அன்னை என்ன சொன்னாலும் அதைக்கேட்டு அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டும் தலைப்பாகைக் கதாநாயகனின் கண்ணீர் காவியம் தான் இந்த அன்னை ஓர் ஆலயம். இந்த வாரம் 9 வது இடத்தில்.

டாப் 10: கை கொடுக்கும் கை
படத்தின் கதை பலமுறை அலசி காயப்போட்டு விட்டதால் எல்லாருக்கும் கதை தெரிந்திருக்கும். கை கொடுக்கும் கை இந்த வாரம் 10 வது இடத்தில்.


பட வருசைகள் அருமை
ha ha dhool
கோத்தபாய அண்ணன் தம்பி அல்ல
மிக அருமை. அற்புதமான கற்பனை...தொடரட்டும்..
good thoughts
//nanrasitha said...
பட வருசைகள் அருமை//
நன்றி நான்ரசித்த.., தொடர்ந்து இணைந்திருங்கள்
//ஆகீல் முசம்மில் said...
கோத்தபாய அண்ணன் தம்பி அல்ல//
சத்தமில்லாம மாத்திட்டேன். நன்றி முசம்மில் தெரியப்படுத்தியதற்கு..,
//திகாஷ் said...
மிக அருமை. அற்புதமான கற்பனை...தொடரட்டும்..//
நன்றி திகாஷ்..தொடர்ந்து வாங்க
அபுஅஃப்ஸர் said...
good thoughts
நன்றி அபுஅஃப்ஸர்.. தொடர்ந்து இணைந்திருங்கள்
ஆஹா இது நல்லாருக்கு நிஜாம்:)). கதையெல்லாம் சூப்பர்
:)))
ஐயா, வரிசை 7க்கு, படமும் தலைப்பும் டக்கரா கொடுத்துட்டு, மேட்டர மாத்திப்புட்டீங்களே!!! தமிழன் புத்திசாலி, அவனே தெரிஞ்சிக்குவான்..
7ஐ தவிர மத்த மேட்டர்ல்லாம் சூப்பர்
ஆஹா! டாப் 10 வேறயா? அருமை!
//வானம்பாடிகள் said...
ஆஹா இது நல்லாருக்கு நிஜாம்:)). கதையெல்லாம் சூப்பர்//
நன்றியண்ணே! தொடர்ந்து வாங்க
//gulf-tamilan said...
:)))//
Thanks gulf-tamilan
//குரு said...
ஐயா, வரிசை 7க்கு, படமும் தலைப்பும் டக்கரா கொடுத்துட்டு, மேட்டர மாத்திப்புட்டீங்களே!!! தமிழன் புத்திசாலி, அவனே தெரிஞ்சிக்குவான்..
7ஐ தவிர மத்த மேட்டர்ல்லாம் சூப்பர்//
சில குறைகள் இருக்கத்தான் செய்யும் குரு சார்...
// ஷாகுல் said...
ஆஹா! டாப் 10 வேறயா? அருமை!//
நன்றீ சாகுல் தொடர்ந்து வாங்க