Feb 15, 2010

கற்பழிப்பு தினமாக மாறும் காதலர் தினம்

நிஜாம் கான் @ 8:26 PM

கிபி 270 ஆம் ஆண்டு ரோமாபுரியை ஆட்சிபுரிந்து வந்த 2ஆம் கிளாடி என்பவன் ஒரு வித்தியாசமான உத்தரவைப் பிறப்பித்தான். அதாவது இனிமேல் யாருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது தான் அந்த கட்டளை. காரணம் திருமணம் செய்தவர்கள் தங்கள் குடும்ப நினைப்பிலேயே இருப்பதால் போர்களத்தில் சிறப்பாகப் போரிடுவதில்லை என்பது அவனது எண்ணம். அதையும் மீறி திருமணம் செய்தால் அவர்களை சிறையிலடைத்து மரண தண்டனையை அளித்தான் கிளாடி. இந்த முட்டாள்த்தனமான தீர்ப்பை வாலண்டைன் என்ற ஒரு பாதிரியார் எதிர்த்தார். அத்தோடு மட்டுமின்றி நிறைய ரகசியத் திருமணங்களைச் செய்தும் வைத்தார். இதைக் கேள்விப்பட்ட கிளாடி அவரை சிறையிலடைத்து பிப்ரவரி 14 ஆம் தேதி கல்லால் அடித்துக் கொன்றான் என்பது வரலாறு.

ஆக நன்மையைச் செய்த ஒரு பாதிரியாரின் இறப்பை, இன்றைக்கு லாட்ஜிலே ரூம் போட்டுக் கொண்டாடும் தினமாக மாற்றி விட்டது நவீன கலாச்சாரம்.. இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தை கெடுத்து அவர்களுக்கு வெட்டிச்செலவு வைத்து அத்தோடு ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்தியக் கலாச்சாரத்தை கூண்டோடு அழிக்க அன்னிய ஆதிக்க சக்திகளால் சமீபகாலங்களில் நுழைக்கப்பட்டது தான் இந்த வாலண்டைன் டே என்ற காதலர் தினம். லாட்ஜ்களிலும், ஹோட்டல்களிலும் ரூம் போட்டு இளம் பெண்களை தாயாக்கும் ஒத்திகையை நிகழ்த்துவதும் இந்தக் காதலர் தினத்தில் தான்.

காதலர் தினத்திலே மட்டும் ரோஜாக்கள், வாழ்த்து அட்டைகள், செல்போன் ரீஜார்ஜ்கள் என கத்தை கத்தையாக தீபாவளி ஸ்பெசல் டாஸ்மாக் வியாபாரம் போல வியாபாரிகள் கல்லாக்கட்டி விட, நமது தனியார் தொலைக்காட்சிகளும் அன்றைய தினத்தை உயர்த்திப் பிடித்து சிறப்பு நிகழ்ச்சிகளை அள்ளிப்போட்டு அதை ஒரு முக்கிய விழாவாக மாற்றிவிட்டன. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட பணமிருந்தால் போதும். காதலர் தின சிறப்பு அழகிகளை அழைத்துக் கொண்டு தேவைப்பட்ட இடங்களுக்கு சுற்றிவரலாம். அதற்கு குறைந்த பட்சக் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு மேல் இதர விசயங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் தனி. இப்படித்தான் போய் கொண்டிருக்கிறது காதலர் தினம். காதலர்கள் என்ற பெயரில் ஆங்காங்கே கண்டெய்னர் டிரைலர் லாரிகளை போல கோர்த்துக் கொள்பவர்கள் மெரீனா கடற்கரையில் திரையரங்குகளிலும் அடிக்கும் லூட்டி சொல்லிமாளாது.

தங்களை சினிமாவில் வரும் கதாநாயகனாக, கதாநாயகிகளாக எண்ணிக்கொண்டு கற்பனை வாழ்க்கை வாழ்பவர்கள் இந்தப் பட்டியலில் அதிகம். சினிமாவில் வரும் காதலர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு எப்படி வேண்டுமானால் நடிக்கக் கூடியவர்கள். அவர்களைத் தங்களின் காதலுக்கு ரோல் மாடலாக நினைத்துக் கொண்டு அன்றைக்கு தங்கள் கற்பைத் தொலைப்பவர்கள் அதிகம் பேர்.இந்தக் கேடு போதாதென்று பச்சை கலர் உடையணிந்து திரிபவர்களையும் காணலாம். தாங்கள் பச்சையானவற்றிக்கு தயார் என நம்பர் பிளேட் போர்டு போல தங்களை வெளிப்படுத்திக் கொண்டு அன்றைக்கே களம் கண்டு விடும் ஆண்களும் பெண்களும் அதிகம். காதலர் தினம் சமுதாய கேவலத்தின் உச்சமாய் வர வர அதிகமாகிக் கொண்டே வருவது தான் குறிப்பிடத் தக்கது. முன்பெல்லாம் பிப் 14 மட்டுமே கொண்டாடி வந்த இந்த கருமாந்திர தினம் இப்போது பிப்ரவரி 7 முதல் 14 வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படுகிறது.

புதுவருடத்திற்கு அடுத்த படியாக விபசார அழகிகளும், சினிமா துணை நடிகைகளும் இந்த வாரத்தில் பிசியாகிவிடுவார்களாம். காதலர் தினம் கற்பு பறிபோகும் தினமாக மாறிவருவதை பற்றி யாருமே கவலை கொள்வதாகத் தெரியவில்லை. சாதாரணமாக நாட்களை விட காதலர் தினத்திற்கு காண்டம் விற்பனையும், கருத்தடை மாத்திரை விற்பனையும் 20 % அதிகரிப்பதாக இந்தச் செய்தி கூறுகிறது. இப்படியே இந்த நவீன கலாச்சாரம் நீடித்தால் அடுத்து விபச்சாரிகள் தினம், ஓரினச்சேர்க்கையாளர்கள் தினம் என ஏகப்பட்ட தினங்கள் உண்டாக்கப்பட்டு விடுவதை வரும் முன் காப்பதே சிறந்தது.

already seen this

10 Response to "கற்பழிப்பு தினமாக மாறும் காதலர் தினம்"

  1. goma said...

    என்னமோ நடக்குது உலகத்திலே

  2. vasu balaji said...

    மன்னிக்கணும் நிஜாம். தீக்குச்சியை வைத்து வீட்டைக் கொளுத்தும் சிலருக்காக தீக்குச்சியை குறை சொல்வது நியாயம் எனத் தோன்றவில்லை. கலாச்சாரம் என்பது தொடர்ந்த மாற்றங்களுக்கு உட்பட்டது. நல்லவை அல்லவை சேரத்தான் செய்யும். நேற்றைய நல்லவைகள் இன்றைய அல்லவைகளாக தோன்றலாம். ஆயின், தவறான நோக்கத்துடன் ஒரு உன்னதமான கொண்டாட்டம் பயன்படுத்தப்படுவது நம் நாட்டில்தான். சரியான புரிதலின்றி வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்துவது யார் குற்றம்? இவர்களை எதிர்க்கிறேன் எனக் கிளம்பியிருக்கும் கோஷ்டி இன்னும் மோசமானது. இந்தியக் கலாச்சாரம் என்னவென்றே தெரியாது. அயல்நாட்டுக் கலாச்சாரத்தைப் புரிதலுக்கான முயற்சியும் கிடையாது. காதலர் தினத்தில் மட்டும்தானா இந்த அத்துமீறல் நடக்கிறது? கூட்டத்தில் மாட்டமாட்டோம் என்று வெளிப்படையாக வருவார்கள். அவ்வளவுதான்.:)

  3. மாயாவி said...

    அப்படீன்னா, காதலர் தினத்தில் மட்டும்தான் காதலர்களோட அத்துமீறல் நடக்குதா.
    எந்தநாளும்தான் நடக்குது.

    காதலர்கள அப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளுறதே கலாச்சார காவலர்கள்தான்.

  4. குழலி / Kuzhali said...

    //இந்த நவீன கலாச்சாரம் நீடித்தால் அடுத்து விபச்சாரிகள் தினம், ஓரினச்சேர்க்கையாளர்கள் தினம் என ஏகப்பட்ட தினங்கள் உண்டாக்கப்பட்டு விடுவதை வரும் முன் காப்பதே சிறந்தது
    //
    so what? விபச்சாரிகள் இருக்கலாம் ஆனால் விபச்சாரிகள் தினம் மட்டும் இருக்கக்கூடாதா? விபச்சாரிகள் இருக்கலாமா என்று கேட்பதற்காக அனைத்து பாலியல் தொழிலாளிகளையும் கல்லால் அடித்து கொன்றுவிடலாமென தீர்ப்பு எழுதிவிடாதீர்கள்... ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு தினம் இருக்கட்டுமே அதனாலென்ன? இலஞ்சம் வாங்கும் ஒரு சமூகத்தால் விளையாத கேடு, அடுத்தவன் காசுக்கு ஆசைப்படும் ஒரு சமூகத்தால் விளையாத கேடு பொறுப்பற்ற ஒரு சமூகத்தால் விளையாத ஒரு கேடு என்ன ஓரினச்சேர்க்கையாளர்களால் இந்த சமூகத்துக்கு விளைந்துவிடப்போகிறது... ரீ புரொடக்சனுக்கும் மேலான மக்கள் தொகை தான் இருக்கிறதே...

  5. VISA said...

    அய்யா அந்த கற்பு கற்புன்னு சொன்னீங்களே....அப்படி என்றால் என்ன?
    டென்னிஸ் வீராங்கனையை போலீஸ் அதிகாரி வேலன்டைன்ஸ் டே அன்றைக்கா கற்பழித்தார்?

  6. நிஜாம் கான் said...

    // goma said...

    என்னமோ நடக்குது உலகத்திலே//
    நன்றி கோமா.. தொடர்ந்து இணைந்திருங்கள்

  7. நிஜாம் கான் said...

    //வானம்பாடிகள் said...
    இவர்களை எதிர்க்கிறேன் எனக் கிளம்பியிருக்கும் கோஷ்டி இன்னும் மோசமானது. இந்தியக் கலாச்சாரம் என்னவென்றே தெரியாது. அயல்நாட்டுக் கலாச்சாரத்தைப் புரிதலுக்கான முயற்சியும் கிடையாது. காதலர் தினத்தில் மட்டும்தானா இந்த அத்துமீறல் நடக்கிறது? கூட்டத்தில் மாட்டமாட்டோம் என்று வெளிப்படையாக வருவார்கள். அவ்வளவுதான்.:)//


    அண்ணே! இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரம் கலாச்சாரம் எந்த நிலையிலும் கெட்டுவிடக்கூடாது.

  8. நிஜாம் கான் said...

    //மாயாவி said...

    அப்படீன்னா, காதலர் தினத்தில் மட்டும்தான் காதலர்களோட அத்துமீறல் நடக்குதா.
    எந்தநாளும்தான் நடக்குது.

    காதலர்கள அப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளுறதே கலாச்சார காவலர்கள்தான்.//

    நிச்சயமாக மாயாவி! நாம் காதலர்தினத்தினை எதிர்க்கவில்லை. ஆனால் அதைப் பயன்படுத்தி நடத்தப்படும் அனாச்சாரங்களையும் வியாபாரங்களையும் தான் எதிர்க்கிறோம்.

  9. நிஜாம் கான் said...

    // குழலி / Kuzhali said...
    இலஞ்சம் வாங்கும் ஒரு சமூகத்தால் விளையாத கேடு, அடுத்தவன் காசுக்கு ஆசைப்படும் ஒரு சமூகத்தால் விளையாத கேடு பொறுப்பற்ற ஒரு சமூகத்தால் விளையாத ஒரு கேடு என்ன ஓரினச்சேர்க்கையாளர்களால் இந்த சமூகத்துக்கு விளைந்துவிடப்போகிறது... ரீ புரொடக்சனுக்கும் மேலான மக்கள் தொகை தான் இருக்கிறதே...//
    உங்கள் கருத்தை மதிக்கிறேன் குழலி . அதே நேரம் எல்லை மீறல்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

  10. நிஜாம் கான் said...

    // VISA said...

    அய்யா அந்த கற்பு கற்புன்னு சொன்னீங்களே....அப்படி என்றால் என்ன?
    டென்னிஸ் வீராங்கனையை போலீஸ் அதிகாரி வேலன்டைன்ஸ் டே அன்றைக்கா கற்பழித்தார்?//

    கருத்துக்கு நன்றி விசா! ஒரு சிறிய திருத்தம் டென்னிஸ் வீராங்கனை மீது பாலியல் முயற்சி மட்டுமே நடந்தது. அன்று செய்தாலும் என்று செய்தாலும் தவறுகள் தண்டனைக்குள்ளாக வேண்டியதே!

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,