பாட்டி சொன்ன கதை போல கரைந்ததடா என் நாடும்,
கணவுகளிலும் நல்ல நினைவுகளிலும் கண்டு வந்தோம்
காலங்காலமாய், செம்மண் கண்டீரே வையகத்தில் !
இதுவரை கருமண் கண்டதுண்டா?
காணுங்கள் எங்களின் நாட்டிலே! மண் கூட கருகிப்போய்
இன்னமும் தன் நிலை மாறாமல். தண்ணீர் பாய்ச்சிய எந்
தேசம் சென்னீரால் கழுவின கயவனின் கரங்கள். காண முடியாது
இது போன்ற சோகங்களை இனியும்.

பறவைகள் பறக்காத ஊராகிப் போணோமே! மீண்டு வந்த பறவைகள்
கூட கூடு கட்ட மரங்களின்றி மறுதிசை நோக்கி மறைந்து விட்டன.
பிச்சைக்காரர்களை கண்டிராத என் தேசம் இன்று முழுமையுமே
பிச்சைக்காரகளாய் கையேந்தி!
குண்டுகளின் ஓசைகளோடும் குருவிகளின் பாஷைகளோம் நடந்து வந்த
நாங்கள், இன்று நிசப்த இடுகாட்டினிலே இரக்கமற்ற இதயக்காரனின்
இரும்புச்சிறையிலே. சுற்றிலும் வேலி போட்ட சிறைக்குள்ளே சுற்றி நின்று
சுற்றம் விசாரிக்கிறோம்.
சிங்கக் கொடி'யவனின் சிறைக்குள்ளே சிறகொடிந்த சிறவிகளாய்
சிரிப்பென்பதை சிந்தைக்குள் புதைத்து சிரிக்கின்றோம், சிங்களத்
தொலைக்காட்சி ஒளிப்படக் கருவிக்கு. கருவிக்கொண்டிருக்கிறொம் இந்த
கொடுமை என்றைக்கு ஒழியுமென.
வாலருந்த பல்லிக்கு மீண்டும் முளைக்குமடா அதன் வால்-ஆனால்
காலருந்த என் பிள்ளைக்கு மீண்டு திரும்புமா அவன் கால்? ஏன்
இந்த அவலம்? நாதியற்ற தமிழெரென்பதாலா? அல்லது நீதிகளின்
கண்கள் மங்கி மக்கிப் போனதாலா?
சீரழிந்த என் நாட்டின் சிறப்புகள் எங்கே? சுற்றிலும் ஓடிப்பாய்ந்த நதிகளின்
தூய்மை எங்கே? சில்லென வீசும் அந்த மருந்துவாடைக் காற்றெங்கே? எம்
மக்கள் கொஞ்சி மகிழ்ந்த மகிழம் மரமெங்கே? என் தந்தை பயிர்செய்த எங்
குடும்பத்தின் நிலமெங்கே?
எங்கேயடா போனது என் தேசம்? ஈழம் என்று பெயரிட்ட மண்ணிலே ஓலம்.
என் வாழ்க்கையின் இறுதி நாளையும் இதற்குள்ளே கழித்து விடுவேனா?
அல்லது நான் கணவு கண்ட என் தேசம் மீண்டு பெறுவேனா? என்று
தனியும் இந்த சுதந்திரத் தாகம்?
என்று விலகும் எங்கள் அடிமையின் மோகம்?


No Response to "செம்மண் கண்டீரே! கருமண் கண்டதுண்டா?"
Post a Comment