
இத்தனைக் காலமும் இருந்துவந்த தமிழர் கன்னடர் மொழிவிரோதம் காரணமாக கடந்த 18 வருடங்களாக பெங்களூரு மாநகரத்திலே நிறுவப்பட்டு திறக்கப்படாமல் இருந்த குறலோன் வள்ளுவனின் சிலை நீண்ட இழுபறிக்கு பிறகு தலைவர் கலைஞர் அவர்களின் தீவிரமுயற்சியால் அல்லது பிடிவாதத்தால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது கருநாடகத்திலே வள்ளுவர் சிலையையும், தமிழகத்திலே கன்னடக் கவிஞர் சவர்க்ஞரின் சிலையையும் திறக்க இரு மாநில அரசுகளும் முடிவுக்கு வந்துள்ளன. அந்தவகையிலே இந்த ஒப்பந்தமானது சிலைகள் திறப்பதற்கு மட்டுமல்ல, இனி வரும் காலங்களில் அங்கே வாழுகின்ற தமிழ்மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது போலவுமே காட்சியளிக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வந்தாரை வாழ வைக்கும் தமிழினமும் தமிழ் நாடும். எக்காலத்திலும் யாருக்கும் விரோதமாக செயல்படாது. ஆனால் கருனாடகா அப்படியல்ல. ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் அடுத்த நிமிடம் அங்கே வாழும் தமிழன் தாக்கப்படுகின்றான், அவனுடைய சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன். தமிழகத்திலிருந்து இயக்கப் படும் பேரூந்துகள் காவல்துறையின் பேராதரவோடு உடைத்து நொருக்கப்படுகின்றன.இது போன்ற காலகட்டத்தில் பெங்களூரூவில் தமிழ்ச்சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை கடந்த 18 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இது குறித்து முதல்-அமைச்சர் தலைவர் கலைஞர் மேற்கொண்ட முழு முயற்சியின் காரணமாக அந்த சிலையை நாளை (9/08/2009 ஞாயிறு) திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரூவில் திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டுமென்றால் சென்னையில் கன்னட கவிஞர் சவர்க்ஞர் சிலையை திறக்க வேண்டும் என்று கருநாடக அரசு நிபந்தனை விதித்தது.இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
அதன்படி நாளை 9-ந் தேதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும், வருகிற 13-ந் தேதி வியாழக்கிழமை சென்னையில் சவர்க்ஞர் சிலையும் திறக்கப்பட உள்ளன. ஆக இந்த ஒரு நல்லிணக்க விழா தொடந்து அனைத்து விசயங்களிலும் நிலை பெற தலைவர் கலைஞர் முழு முயற்சியும் மேற்கொள்ள வேண்டும் என நாம் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.


Karunanithi is Katti koduppavan,Karuna father, thenmozy is prostitute.now sleep with Minister Raja.
இவன் சிலையை திறந்தோன்ன நம்ம காவிரி பிரச்சினை தீர்ந்துடும்.
போங்கடா நீங்களும் உங்க லாஜிக்கும்