Aug 30, 2009

ரமலான் மாதத்தில் குழப்பங்கள் ஏன்?

— நிஜாம் கான் @ 2:10 PM

வளம் மிக்க ரமலான்

ஏழைகளின் கொடும்பசியை வசதியுள்ளவர்களும் உணர்ந்து அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பது தான் இந்த புனிதம் மிகு ரமலானின் நோக்கம் ஆகும். இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடமையாக்கப் பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாக நோன்பு நோற்க வேண்டும். நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தொலைத்தூர பயணிகளுக்கு இந்த ரமலான் நோன்பிலே விதிவிலக்கு உண்டு. ஆனால் இந்த மாதத்தில் நோன்பை விட்டவர்கள் அதற்குப் பரிகாரமாக அடுத்த ரமலானுக்குள் அதை நோற்றுவிட வேண்டும்.

ஏன் குழப்பம்?:

நபிகள் நாயகம் அவர்கள் பிறை பார்த்துத் தான் நோன்பினைத் துவக்குவார்கள். அதேபோல பிறை பார்த்து தான் நோன்பு காலத்தினை முடித்துக்கொள்வார்கள். அதனால் தான் நோன்பு துவங்குவதும் ரமலான் பெரு நாள் கொண்டாடப் படுவதும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உதாரணம் நமது இந்தியாவில் காலை 7 மணி எனில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் காலை 9.30, துபாயில் காலை 5.30, சவூதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் காலை 4.30, லண்டனில் அதிகாலை 2.30, அமெரிக்காவில் இரவு 7 மணி என நாட்டுக்கு நாடு நேரம் வித்தியாசப்படுவதால் நாள் துவக்கம் மற்றும் முடிவு ஆகியவையும் மாறுபடுகிறது. அதனால் தான் பல நாடுகளில் நோன்பு துவங்குவதும், பெரு நாள் கொண்டாடப்படுவதும் மாறுபடுகிறது.

எப்படி நோன்பு?:

காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்பு வரை அதாவது பஜ்ர் தொழுகை எனப்படும் அதிகாலைத் தொழுகைக்கு அழைப்பு சொல்லும் வரை உண்ணலாம், பருகலாம். இதற்கு சஹர் உணவு என்று பெயர். சஹர் உணவு உண்ணுவது என்பது விதவிதமாக பல பிரம்மாண்டமான அயிட்டங்களை வைத்து ரவுண்டு கட்டுவது என பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். சாதரணமாக மற்ற நேரங்களில் என்ன சாப்பிடுவார்களோ அதே தான் சஹர் நேரத்திலும் சாப்பிடுவார்கள். நகர ஹோட்டல்களில் சஹர் சாப்பாடு என்றாலே தினமும் மட்டனும் சிக்கனும் என எழுதப்படாத விதியை வகுத்து தங்கள் வியாபார யுக்தியைப் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் கிராமங்களைப் பொருத்தவரை சஹர் சாப்பாடு என்பதில் முக்கியமாக தயிர், அரிசி வடகம், மாங்காய் ஊறுகாய், கொத்தவரங்காய் வற்றல் போன்றவை தான் பிரதானமாக இடம் பிடித்து இருக்கும். ஆனால் தற்சமயம் எல்லா இடங்களிலும் சப்பாத்தி தான் அதிகமாகத் தெரிகிறது. காரணம் வேற என்ன சக்கரை வியாதி தான்.

நோன்பு திறப்பு:

நீ நோன்பு திறக்க எந்த சாவியை பயன்படுத்துவாய் ?என என் நண்பர்கள் கேலியாக கேட்பது உண்டு. இந்த நோன்பு திறப்பு என்பது நோன்பு துறப்பு என்ற வார்த்தையின் மறுவல். அதாவது நோன்பினை விட்டுவிடுவது. அதாவது சூரியன் முழுவதும் மறையும் நேரத்தில் உண்ண ஆரம்பிக்கலாம். நோன்பு திறப்பை பலரும் ஒரு சடங்காக செய்வது தான் வருத்தத்திற்குரியது. பொதுவாக பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பது சிறப்பு. அங்கே கிடைக்கும் நோன்பு கஞ்சியில் வெந்தயம்,பூண்டு ஆகியவை கலந்திருப்பதால் உடல் சூட்டுக்கு அது சிறந்தது. பேரீத்தம் பழமும், தண்ணீரும் கொண்டு நோன்பு திறப்பது தான் சிறப்பாகும்.எதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் கொண்டு நோன்பு திறக்கலாம். நோன்பு காலங்களில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் குல்லாவை மாட்டிக்கொண்டு இப்தார் விருந்தில் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி குடிப்பது அவர்களின் அரசியல் தூண்டிலேயன்றி வேறில்லை..,

ஜக்காத்:

தன் பிந்தைய ஒரு வருடத்தின் மொத்த வருமானத்தில் இரண்டரை சதவிகிதம் கணக்கிட்டு அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும். உங்களிடம் ஒருவர் குதிரையில் வந்து தர்மம் கேட்டாலும் அவருக்கு நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்பது நபிகளாரின் வாக்கு. இந்த ஜகாத் பணத்தை முஸ்லீம்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என்ற தவறான கருத்துக்கு இடமேயில்லாமல் யார் வந்து கேட்டாலும் அவர்கள் ஏழைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குரியதை வழங்குவது தான் இம்மாதத்தின் சிறப்பு. ஒருமுறை வழங்கிவிட்ட அசையா சொத்திற்கு மீண்டும் வழங்க வேண்டியது இல்லை. உதாரணமாக ஒருவனிடம் 10 ஆடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டால் அதற்குரிய கணக்குத்தொகையை இந்த வருடம் வழங்கவேண்டும். அடுத்த வருடம் அது ஈனும் குட்டிகளுக்கு மட்டும் கணக்கிட்டு வழங்கினால் போதுமானது.

ஒருவேளை அந்த ஆடுகளை அதிக மதிப்பை வைத்து இந்த வருடத்தில் விற்று இருந்தால் அந்த அதிகபட்ச தொகையை மட்டும் கணக்கிட்டால் போதுமானது ஆகும்.

தொழுகையை நிலை நாட்டி ஜகாத்தினை வழங்குங்கள் என்பது திருமறை வசனம்.

இந்த புனித மிகு ரமலான் மாதம் நம் மக்கள் அனைவரின் மத்தியில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் உண்டாக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்போம்.

already seen this

8 Response to "ரமலான் மாதத்தில் குழப்பங்கள் ஏன்?"

  1. கிளியனூர் இஸ்மத் said...

    ரமலான் மாதத்தின் சிறப்பை அழகா சொல்லிருக்கீங்க... ரமலான் வாழ்த்துக்கள்

  2. நிஜாம் கான் said...

    //கிளியனூர் இஸ்மத் said...
    ரமலான் மாதத்தின் சிறப்பை அழகா சொல்லிருக்கீங்க... ரமலான் வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜி. இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

  3. அதிரை அபூபக்கர் said...

    ரமலான் மாதத்தின் சிறப்பை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள்.. மாசா அல்லாஹ்

  4. படகு said...

    \\தொழுகையை நிலை நாட்டி ஜகாத்தினை வழங்குங்கள் என்பது திருமறை வசனம்.

    இந்த புனித மிகு ரமலான் மாதம் நம் மக்கள் அனைவரின் மத்தியில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் உண்டாக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்போம்.\\
    ரமலான் மாதத்தின் சிறப்பை அழகா சொல்லிருக்கீங்க... ரமலான் வாழ்த்துக்கள்.

  5. நிஜாம் கான் said...

    // அதிரை அபூபக்கர் //

    // படகு //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

  6. புதுப்பாலம் said...

    நல்லதோர் விளக்கம். ரமலான் வாழ்த்துக்கள்.

    =இஸ்மாயில் கனி

  7. நிஜாம் கான் said...

    புதுப்பாலம் said...
    நல்லதோர் விளக்கம். ரமலான் வாழ்த்துக்கள்.

    =இஸ்மாயில் கனி//


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

  8. அன்புடன் மலிக்கா said...

    ரமலான் மாதத்தின் சிறப்பை
    விளக்கிய சொல்லியது வெகு சிறப்பு

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,