Mar 31, 2010

சாருவும் குமுதமும் பின்னே நக்கீரனும்

நித்யானந்தா செய்த வேலைக்கு இலவச இணைப்பாக அவரின் கொ.ப.செ சாருவை பதிவுலகம் அடித்து துவைத்து தொங்கப் போட்டுவிட்டது எல்லாரும் அறிந்ததே!. இதற்கு மேல் சாரு பற்றியோ சாமியார் பற்றியோ நாம வேற எழுதனுமா என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சாரு அவர்கள் குமுதம் ரிப்போர்டரில் எழுதிவரும் சரசம்,சல்லாபம்,சாமியார் என்ற தொடர் பரபரப்பாக வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. தொடர் எழுதும் சாரு, தான் ஒரு அப்பாவி போலவும், தனக்கு எதுவுமே தெரியாதது போலவும், மற்றவர்களைப் போல தானும் ஏமார்ந்து விட்டது போலவும் எழுதிவருவதை பார்க்கும் போது இந்தப் பதிவை நிச்சயம் இடவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. காரணம் கும்பலாய்த் திருடியவர்களில் ஒருவன் மாட்டிக் கொண்டவுடன் அவனை பொதுமக்கள் அடிக்கும் போது அவர்களோடு சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாய் அடிக்கும் வேலையைத் தான் சாருவும்,குமுதமும் இப்போது செவ்வனே செய்து வருகிறார்கள்.

நாம் சிலரைப் பார்த்திருப்போம். தவறு செய்யும் வரை அவன் கூடவே இருந்துவிட்டு அவன் மாட்டிக்கொண்டவுடன், நான் அப்பவே அவனிடம் சொன்னேன் இப்படி செய்யாதே,அப்படி செய்யாதே என்று. எனக்கு அப்பவே தெரியும் இங்க ஏதோ தப்பு நடக்குது என்று. எனக்கு அப்பவே பட்சி சொன்னது என்பதைப் போல உளறிக்கொட்டி தன்னை அந்த தவறிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முயலுபவனைப் போலத் தான் இருக்கிறது சாருவின் எழுத்துக்கள். இவருக்கு அப்பவே தெரியுமாம். ஆசிரமத்துக்கு வரும் பெண்களை வசியம் செய்து அவர்களை தங்கவைத்து விடுகிறார்கள் என்று. அங்கே இருக்கும் வசதியான வீட்டு அழகுப் பெண்களை மயக்கித் தான் பிரம்மச்சாரினியாக‌ தங்கவைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் சாரு, இவ்வளவு விசயங்கள் தெரிந்தும் அதை ஏன் முன்பே வெளியே கொண்டு வரவில்லை? இதுவும் ஒரு குற்றம் தானே? ஐந்தே வருடத்தில் ஐந்தாயிரம் கோடியை குவித்த சுவாமிஜியின் சுரண்டல்கள் இவருக்கு முன்பே தெரிந்திருந்தும் அதை ஏன் வெளிப்படுத்தவில்லை? குற்றாலத்தின் அருகே ஒரு மர்மக்குகையில் அமைந்துள்ள ஒரு குளத்தில் 4 அழகுப் பெண்களுடன் நித்யானந்தா நிர்வாண ஜலக்கிரீடையில் ஈடுபட்ட விசயத்தை முன்பே தெரிந்த சாரு அதை ஏன் அன்றைக்கே வெளிப்படுத்தவில்லை? இது போன்ற குற்றச்சாட்டுகளை நித்தி மீது இப்போது அடுக்கிக்கொண்டே போகும் சாரு, ஏன் இவற்றையெல்லாம் முன்பே வெளியே கொண்டுவரவில்லை. அல்லது தன் பிரச்சாரத்தையாவது நிறுத்தியிருக்கலாமே! இதற்கெல்லாம் பிறகு தானே தன் மனைவி அவந்திகாவை அங்கே தங்குவதற்கு அனுமதித்தார். இதெல்லாம் எந்த கணக்கில் வருகிறது?

ரமணா படத்தில் பட்டாளத்தார் விஜயனிடம் எஞ்சினீயர் சொல்லுவார், அந்த இடத்தில் பாலம் கட்டுவதால் நாம் கட்டிய அப்பார்ட்மெண்ட் இடிந்து போக வாய்ப்பிருக்கிறது என்று. அதற்கு விஜயன் அந்த அப்பார்ட்மெண்டில் என் குடும்பமே இருந்தாலும் நான் கவலையே படமாட்டேன், எனக்கு பிஸினெஸ் தான் முக்கியம் என்று சொல்லுவார். அதைப்போல இதையும் எடுத்துக் கொள்ளலாமா?

இந்த பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தவுடன் ஜூவிக்கு பேட்டி கொடுத்த போது நித்யாவை தாக்கு தாக்கு என தாக்கிவிட்டு இறுதியிலே "மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்" என முடிந்திருந்தார். இதிலே யாரை மாமா என குறிப்பிடுகிறார் ? இந்த விசயம் வெளியானவுடன் நித்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சாருவைத் தாக்கி எழுதியவர்களா? அல்லது நித்யா ஒரு காமுகன் என முன்பே தெரிந்தும் அவனுக்காக கடவுளைக் கண்டேன் என தொடர் பிரச்சாரம் செய்த அவரையேவா?

இப்படியாக எனக்கு எல்லாமே முன்னரே தெரியும்.ஆனாலும் நான் அவருக்காக பிரச்சாரம் செய்துவந்தேன் என வெளிப்படையாக ஒப்புக்கொள்வதைப் போல இருக்கிறது அவரின் எழுத்துக்கள். பார்க்காலாம் இன்னும் என்னவெல்லாம் எழுதுவார் என்று.

அடுத்தது குமுதம். சாருவின் வாயாலேயே மஞ்சல் பத்திரிகை என புகழாரம் சூட்டிக்கொண்ட இதழ். இன்றைக்கு மாமாவும் மஞ்சலும் இணைந்து நித்யாவின் மீது மண்வாறி தூற்றுகிறார்கள். ஒரு இரண்டு ரூபாய் பல்பொடி விளம்பரத்திற்கே அதன் நம்பகத் தன்மைக்கு நிர்வாகம் பொருப்பல்ல என போடும் பதிப்பகத்தார் நித்யானந்தாவை விதவிதமாக படம் பிடித்து அவனுக்கு இலவச விளம்பரத்தைத் தேடித்தந்தார்கள். புத்தகத்தில் இடம்பெறும் செய்திகளுக்கு கம்பெனி பொருப்பேற்காது என பொத்தாம் பொதுவாக ஏதோ ஒரு பக்கத்தில் கட்டம் கட்டி பூதக்கண்ணாடி கொண்டு தேடக்கூடிய எழுத்துக்களில் எழுதியிருப்பார்கள். ஆனால் இன்றைக்கு நித்யாவைப் பற்றிய எதிர் செய்திகளை தனக்கு சம்பந்தமேயில்லாத மாதிரி விதவிதமாக‌ அள்ளி வழங்குகிறார்கள் குமுதம் குடும்பத்தார். நாளை இந்த விசயம் மறைந்த பிறகு யாருடனோ போட்டி என வந்துவிட்டால் மீண்டும் இன்னொரு சாமியார் எழுதும் தொடரை வெளியிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

ஒரு பைனான்ஸ் கம்பெனிக்கு விளம்பரம் செய்தவர்கள், அவன் அடித்த கொள்ளையிலே பங்குபெற்றவர்கள் அவன் பூட்டி விட்டு ஓடிவிட்ட பிறகு அய்யய்யோ கொள்ளைக்காரன் எல்லாரையுமே ஏமாற்றிவிட்டானே என்று சொல்லுவது போல அமைந்தது தான் குமுதம் கடைசியாக‌ வெளியிட்ட அறிக்கை. மகஇக, தொமுஎசவின் வீரியமிகு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தான் குமுதம் அந்த அறிக்கையையே வெளியிட்டது. அத்தோடு எரிகிற வீட்டில் பிடுங்குகிறது மிச்சம் என்பது போலத்தான் கதவைத்திற காற்று வரட்டும் என எழுதியவர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற நிலையெடுத்து இப்போது சரசம்,சல்லாபம்,சாமியாரை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து நக்கீரன். ஏசி அறையில் உக்காந்து யோசித்து யோசித்து விதவிதமான கற்பனைகளை விற்று கல்லா கட்டும் நக்கீரனுக்கு இந்த சாமியார் மேட்டரில் அடித்து ஜாக்பாட். டிரைலரை மட்டும் வெளியிட்டு முழுவீடியோவைக் காண சந்தாதாரர் ஆகுங்கள் என நீலப்படம் காட்டி ஒரே நாளில் பல லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறது நக்கீரன். முன்னர் சந்தன வீரப்பன் இருந்த போது அவனைப் பேட்டி எடுத்து அதலே தங்களுடைய கற்பனை மசாலாவைக் கலந்து 50 வாரம் வரை வெளியிட்ட அந்த எழுத்துக் கவர்ச்சி எல்லாருக்கும் தெரிந்ததே! ஆசிரியர் வீரப்பனை சந்திக்கச் செல்லும் அந்த பாதையில் நடந்த நிகழ்வை மட்டுமே 10 வாரத்திற்கு ஓட்டும் இவர்களின் வியாபார யுக்தி தினத்தந்தியில் வரும் கன்னித்தீவைப் போல... பாம்பு வந்தது, பல்லி வந்தது, புலிவந்தது, கரடி வந்தது என கரடி விட்டு கடைசியாக 11வது வாரம் தான் இவர்கள் வீரப்பனின் இடத்தை அடைந்ததாக தங்களின் சுய‌ கற்பனை குதிரையை ஓடவிட்டு சம்பாதித்தார்கள். வீரப்பனின் மறைவுக்குப் பிறகு வியாபாரம் டல்லடிக்கவே செக்ஸ் விசயங்களில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தது நக்கீரன். நித்யானந்தா குறித்த செய்திகள் ஓரளவிற்கு அடங்கிவிட்ட நிலையில் இப்போது சாருவை வைத்து குமுதம் ரிப்போர்டர் எழுத ஆரம்பிக்க அதற்கு போட்டியாக இவர்கள் போன வாரம் ஏந்திய ஆயுதம் தான் மிக மிக மோசமானது.

முஸ்லீம்களை வம்புக்கு இழுத்தால் அது பெரிய பப்ளிசிட்டி ஆகும் என நினைத்த நக்கீரன் போன வாரம் நித்யானந்தா செய்திகளோடு "நான் தான் நபிகள் நாயகம்" என தலைப்பிட்டு ஒரு கட்டம் கட்டியது. அதிலே நான் தான் இயேசுவாக, நபிகள் நாயகமாக வந்தேன் என நித்யானந்தா கூறிக்கொள்வாராம் (கவனிக்க கூறிக்கொள்வாராம்) என இவர்களாகவே ஒரு கற்பனை செய்தியை பிரசுரிக்க‌, கொதித்தெழுந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இந்த செய்தி குறித்து நக்கீரனிடம் விசாரித்தனர். அதற்கு நக்கீரன் குழுவினர் இந்த செய்தியை நித்யானந்தா பேசியதாக யாரோ சொன்னதாக நம்பப்படுவதாக கருதப்படுவதாக ஏதேதோ உளற உடனடியாக நக்கீரன் அலுவலக முற்றுகையை அறிவித்து நக்கீரனையும் அதன் ஆசிரியரையும் நார் நாராக கிழித்து விட்டனர். உனக்கு விளம்பரம் தேவைப்பட்டால் வேறுமாதிரி எழுது என ஏகப்பட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க உடனடியாக தன் தளத்தில் மன்னிப்பை ஓடவிட்டது நக்கீரன்.

ஆக இவர்களைப் போன்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சம்பாதிக்கக் கூடியவர்கள் பத்திரிகையாளர்கள் என்ற பெயரிலும் எழுத்தாளர்கள் என்ற பெயரிலும் உளவிக்கொண்டு தான் இருப்பார்கள். எதுவரை? என்றைக்கு ஒருவன் பெட்டிக்கடையில் தொங்கும் விளம்பர பேப்பரில் செக்ஸ் என்ற வார்த்தையைப் பார்த்தும் அந்த பத்திரிகையை காசு கொடுத்து வாங்காமல் அதை சட்டை செய்யாமல் செல்கிறானோ அதுவரை.

already seen this

17 Response to "சாருவும் குமுதமும் பின்னே நக்கீரனும்"

  1. vasu balaji said...

    என்றைக்கு ஒருவன் பெட்டிக்கடையில் தொங்கும் விளம்பர பேப்பரில் செக்ஸ் என்ற வார்த்தையைப் பார்த்தும் அந்த பத்திரிகையை காசு கொடுத்து வாங்காமல் அதை சட்டை செய்யாமல் செல்கிறானோ அதுவரை.//

    இது இதுதான் உடனடியாகச் செய்யவேண்டியது.அருமை நிஜாம்

  2. ஷாகுல் said...

    அருமை.

  3. வால்பையன் said...

    அந்த புத்தகமெல்லாம் வாங்குவிங்களா!?

  4. ராம்ஜி_யாஹூ said...

    I like charu's writing but do not like his double standard.

    In Tamilnadu he needs Kanimozi akka's support for his book release or book sale. but when he went Delhi , he spoke that the governance in Tamilnadu is very poor, law and order is not in order.

  5. shiva said...

    If a man falls down everyone jumps over him without analysing the truth.So this is world.this kumudam make millions of samiyaru and now making another million in his down fall.the same thing the tamil nadu news papers are doing in the sri lankan tamil issue.Forecasting the survival of LTTE leader.Kumudam,Nakeeran and other news papers are doing the same thing.

  6. நிஜாம் கான் said...

    // வானம்பாடிகள் said...
    என்றைக்கு ஒருவன் பெட்டிக்கடையில் தொங்கும் விளம்பர பேப்பரில் செக்ஸ் என்ற வார்த்தையைப் பார்த்தும் அந்த பத்திரிகையை காசு கொடுத்து வாங்காமல் அதை சட்டை செய்யாமல் செல்கிறானோ அதுவரை.//

    இது இதுதான் உடனடியாகச் செய்யவேண்டியது.அருமை நிஜாம்//

    நன்றியண்ணே! தொடர்ந்து வாங்க‌

  7. நிஜாம் கான் said...

    //ஷாகுல் said...
    அருமை.//

    நன்றி சாகுல்! தொடர்ந்து வாங்க‌

  8. நிஜாம் கான் said...

    //வால்பையன் said...
    அந்த புத்தகமெல்லாம் வாங்குவிங்களா!?//

    கண்டிப்பா வாங்க மாட்டேன்.....,

    அப்டின்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க. வாலண்ணே! சாருவுக்கு அதிகமா சூட்டை ஏத்துன முதல் 15 பேரில நீங்க தான் நம்பர்1.

  9. நிஜாம் கான் said...

    //ராம்ஜி_யாஹூ said...
    nice post, thanks
    //

    நன்றியண்ணே!

  10. நிஜாம் கான் said...

    // ராம்ஜி_யாஹூ said...
    I like charu's writing but do not like his double standard.

    In Tamilnadu he needs Kanimozi akka's support for his book release or book sale. but when he went Delhi , he spoke that the governance in Tamilnadu is very poor, law and order is not in orடெர்.//

    அவங்கள விடுங்க. முஸ்லீம் லீக் தலைவன் காதர் முகைதீனே நித்யா சீடிகளை வெளியிட்ட போட்டோ ஆதாரம் இருக்கு. அவர‌ மாதிரி சீட்டுப் பொருக்கிகள் இருக்கும் வரை ஒரு நித்யா அல்ல. 100 நித்யா வருவான்.

  11. நிஜாம் கான் said...

    //shiva said...
    If a man falls down everyone jumps over him without analysing the truth.So this is world.this kumudam make millions of samiyaru and now making another million in his down fall.the same thing the tamil nadu news papers are doing in the sri lankan tamil issue.Forecasting the survival of LTTE leader.Kumudam,Nakeeran and other news papers are doing the same thing.
    //
    நிச்சயமாக சிவா! உங்கள் கருத்து நியாயமானது, எப்படியோ ஊடகங்கள் வியாபார நோக்கமின்றி செயல்பட வேண்டுமென்பதே என் கருத்து

  12. அப்துல்மாலிக் said...

    //என்றைக்கு ஒருவன் பெட்டிக்கடையில் தொங்கும் விளம்பர பேப்பரில் செக்ஸ் என்ற வார்த்தையைப் பார்த்தும் அந்த பத்திரிகையை காசு கொடுத்து வாங்காமல் அதை சட்டை செய்யாமல் செல்கிறானோ அதுவரை.//

    அப்போதான் 3 4 புக்குனு வாங்குவாங்க.

    இப்போவெல்லாம் செக்ஸ் பற்றி எதுவந்தாலும் (பிளாக் முதல்கொண்டு) மக்கள் மொய்க்கும் காலமிது

    நல்ல பதிவு

  13. Sharah said...

    Great Comments...
    Clearly Analysed Congrats

  14. அமைதி அப்பா said...

    இவர்கள் திருந்துவார்களா...?
    இந்த நேரத்தில் அவசியமான பதிவு,
    நன்றி.

  15. முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

    குமுதம் , நக்கீரன்.. சாரு..எல்லாம் விஷப்பூச்சிகள்..
    நல்ல பதிவு சார்..

  16. நிஜாம் கான் said...

    // Spice said...
    Great Comments...
    Clearly Analysed Congrats//

    //அமைதி அப்பா said...
    இவர்கள் திருந்துவார்களா...?
    இந்த நேரத்தில் அவசியமான பதிவு,
    நன்றி.//

    //பட்டாபட்டி.. said...
    குமுதம் , நக்கீரன்.. சாரு..எல்லாம் விஷப்பூச்சிகள்..
    நல்ல பதிவு சார்..//

    கருத்துக்கு நன்றி நண்பர்களே! தொடர்ந்து இணைந்திருங்கள்

  17. சிநேகிதன் அக்பர் said...

    மிக நல்ல இடுகை.

    கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையவை.

    //என்றைக்கு ஒருவன் பெட்டிக்கடையில் தொங்கும் விளம்பர பேப்பரில் செக்ஸ் என்ற வார்த்தையைப் பார்த்தும் அந்த பத்திரிகையை காசு கொடுத்து வாங்காமல் அதை சட்டை செய்யாமல் செல்கிறானோ அதுவரை.//

    என்னைக்கு அந்த ஆசையே வரலையோ அன்னைக்கு வாங்க மாட்டான்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,