Mar 16, 2010

சுவாமிஜி “Scandal” நித்யானந்தா

Scandal என்ற வார்த்தைக்கு அபகீர்த்தி, அவதூறு, அவமானம் என பல அர்த்தங்கள் உண்டு. இதிலே எந்த அர்த்தத்தை சுவாமி நித்யானந்தா விசயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது சரியாக விளங்கவில்லை. வன்னிப் போர் முடிவுற்ற சமயம் அங்கே பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள படையினர் கொடூரமாக சுட்டுக்கொள்ளும் வீடியோவை சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய போது இலங்கை ஊடகங்கள் அந்த காட்சி இலங்கை அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றன என செய்திகள் வெளியிட்டன. ஆக இந்த Scandal வார்த்தையைப் பொருத்தவரை அதிகபட்சம் அவதூறு என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தப்படுகிறது. நித்யானந்தாவின் வீடியோக்கள் இந்த வார்த்தையைத் தாங்கித்தான் வெளியாகின்றன.

அதனால் தான் என்னவோ சுவாமிஜி அவர்கள் இன்னமும் தைரியமாக எதிர்வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறார்.. சந்தன வீரப்பன் வரிசையாக ஆடியோ கேசட் வெளியிட்டதைப் போல சுவாமிஜி தற்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சுவாமிஜி ரஞ்சிதா வீடியோ விவகாரத்தைப் எல்லாருமே நம்புகிறார்களா என்றால் அதுதான் இல்லை. வழக்கமாக சுவாமிஜியை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள் மட்டுமே இந்த விவகாரங்கள் குறித்து பெரிதுபடுத்தி எழுதிவருகிறார்கள். அவர்கள் தவிர்த்து சுவாமிஜியின் வழக்கமான பக்தர்கள் யாருமே அதை நம்புவதாக இல்லை. காரணம் நம் மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு தான் நித்யானந்தா போன்ற டுபாகூர்கள் தங்களை கடவுளாக அறிவித்துக் என்ன சோதனை வந்தாலும் அதைச் சமாளித்து பூசிமெழுகி விடுகிறார்கள் .

சமீபத்தில் சுவாமிஜி வெளியிட்ட வீடியோவில் அவரின் பேச்சிலே ஆத்திரம் கொப்பளிப்பதைக் காணலாம். தான் என்னவோ அப்பாவி போன்றும் ஆனால் சமூகவிரோதிகள் அவரின் ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள் எனவும் எதுவுமே நடக்காதது போல அறிக்கை விட்டிருக்கிறார். ரஞ்சிதா அந்த ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தது உண்மை, அவருக்கு பணிவிடை செய்தது உண்மை என அனைத்தையும் ஒப்புக்கொள்ளும் சுவாமிஜி , அந்த பலான காட்சி மட்டும் கிராபிக்ஸ் என்று சொல்லும் இமாலய காமெடியை ஜெட்டிக்ஸ் பார்க்கும் குழந்தை கூட ஒப்புக்கொள்ளாது. அதே நேரம் அது வேறு ஏதாவது நடிகையாக இருந்தால் கூட கிராபிக்ஸ் என ஏற்றுக்கொள்ளலாம்.குற்றவாளிக்குக் கொடுக்கப்படும் சந்தேகத்தின் பலனை (Benefits of Doubts) தனக்கு கொடுக்கவேயில்லை என மாறிமாறி கூறியிருக்கிறார். இதற்கு மேல் பலனைக் கொடுத்து யாரை ஏமாற்றத்திட்டமிடுகிறார் என்பது தெரியவில்லை.

ஏழைக்கு 1 ரூபாய் தர்மம் செய்யாத கோடீஸ்வரன்களும், மாசாமாசம் துண்டு விழும் பட்ஜெட் போடும் நடுத்தர வர்க்கமும் இந்த காமுகனை அருகிலே சென்று பார்க்க 5000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டுமாம். வலிகளை குணமாக்குகிறேன் என்ற பெயரில் தன் மனைவியின் கால்களை தடவிக்கொடுக்கும் அற்புதக்காட்சிகளை 25,000 கட்டி அருகிலே இருந்து பார்த்த கணவன்களும் உண்டு. நித்யானந்தாவின் ஆஸ்ரமத்திலே தியானம் முடிந்த பிறகு அவர் நடத்தும் கட்டிப்பிடி வைத்தியம் குறித்தும் தகவல்கள் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன. கணவன் முன்னிலையில் மனைவியை கட்டிப்பிடித்து ஆசி வழங்கும் கேவலங்களும் நடந்தேறியுள்ளன. எல்லாம் தெரியும் என சொல்லும் இவனிடம் ஒரே கேள்வி! கண்களை மூடிக்கொண்டும் தன்னால் வெளியே நடப்பதைப் பார்க்க இயலும் என சொல்லும் இந்தக் காவிப்பொருக்கியால் ஏன் தன் அறையில் பொருத்தப்பட்ட காமிராவை பார்க்கமுடியவில்லை. இவனுக்கு மறைவானதை அறியும் திறன் இருந்தால் இது மட்டும் எப்படி தப்பியது. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அவனுக்கு எதிர்ப்பு காட்டி போராடுபவர்களை சமூகவிரோதிகள் என்கிறான். காரணம் அவனுக்கு இன்னமும் இருக்கும் பணபலமும், எவ்வளவு ஆதாரங்களுடன் சொன்னாலும் நம்பாத அப்பாவி சனங்களும் இருக்கும் வரை இவன் போன்ற சாமியார்களின் புகழைக் கெடுக்க யாராலும் முடியாது.

தான் ஒரு சமூகசேவகர் எனச்சொல்லும் இந்த சொகுசு சாமியாருக்கு உண்மையான சமூகசேவகர் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியுமா தெரியாதா? அன்னை தெரசா அவர்கள் இறந்த பிறகு அவரின் சொத்துக்கள் ஒரு மாற்று சேலையும், ஒரு பிளாஸ்டிக் வாளியும் தான். ஆனால் இவன் போன்ற சாமியார்களின் சொத்து மதிப்புகளை அளவிடவே முடியாது. ஏசி இல்லாமல், பஞ்சுமெத்தை இல்லாமல் தூங்கவே மாட்டார்கள் இந்த முற்றும் துறந்தவர்கள். நித்யானந்தாவை மன்னிக்கலாம். ஆனால் அதற்கு பகரமாக அவன் தன்னிடம் இருக்கும் இரண்டு ஆயிரம் கோடி சொத்துக்களையும் ஏழைகளிடம் ஒப்படைத்து விட்டு ஏதாவது ஒரு கோயிலில் தங்கி அங்கு கிடைக்கும் பிரசாதங்களை உண்டு அங்கேயே தங்கி மக்களுக்கு சேவை செய்வானா? இதை அவனிடம் மட்டுமல்ல, சமூக சேவை சொகுசு சாமியார்கள் யாரிடம் கேட்டாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காரணம் சொகுசு வாழ்க்கையில் பழகிவிட்ட அவர்கள் இனி சாதாரண வாழ்க்கைக்கு மாறுவது முடியவே முடியாது.

கையை ஒரு சுழற்று சுழற்றி அதிலிருந்து தங்க மோதிரமும், தங்க செயினும் எடுக்கும் பகவான் சாய்பாபாவின் அற்புதங்களைப் புகழாத வாய்களே இல்லை! பின்னர் எதற்கு கோலாரிலே தங்கக்கிணறு? எதற்கு கஷ்டப்பட்டு அதைத்தோண்டி எடுத்து காய்ச்சி வடித்து சிரமப்படவேண்டும். பகவான் சாய்பாபாவை உக்காரவைத்து தினமும் ஒரு 100 கிலோ மதிப்புள்ள ரெடிமேட் தங்க நகைகளை வரவழைத்து அதை வாரிவழங்கினால் உலகத்திலே பொருளாதாரத்திலே நாம் தான் நம்பர் ஒன்னாக இருப்போம். டாலர்களும்,ஈரோக்களும்,தினார்களும் இந்திய ரூபாய்க்கு எதிரான மதிப்பை கணக்கிட்டுக் கொண்டிருக்கும். அதுவேண்டாம், தன் கோடீஸ்வர பக்தர்களுக்கு மட்டும் நகைகளை வாரி வழங்கும் பகவான் ஏழைகளுக்கு வழங்கமாட்டார். அவ்வாறு தினமும் ஆஸ்ரமத்திற்கு வரும் ஏழைகளுக்கு ஆளுக்கு ஒரு பவுனில் மோதிரமோ,செயினோ தொடர்ந்து வழங்கினால் அவரின் பொருளாதாரம் மண்ணைக் கவ்வி விடும்.

சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பகவான், அமைச்சர் துரைமுருகனுக்கு மாயாமாய் வரவழைத்து ஒரு மோதிரம் கொடுத்ததும், உசாரான துரைமுருகன் பாபாவிடம் கலைஞருக்கும் ஒரு மோதிரம் கேட்க பேதியாகிய பகவான் திடீரென சுதாரித்து கலைஞர் கையில் அண்ணா போட்ட மோதிரம் இருக்கிறதே! பின்னர் எதற்கு நான் தரவேண்டும் என அசடுவழிய மழுப்பியதே அவர் செய்வது சித்துவேலை என்பதற்கு உதாரணமாகும். பகவான் சாய்பாபாவை விட சித்து வேலைகள் தெரிந்த பி.சி.சர்க்காரை வெறும் மாஜிக் கலைஞராக மட்டுமே பார்த்த நம்மக்கள் சாய்பாபாவை மட்டும் பகவானாக்கி விட்டார்கள். அதற்கு காரணம் சர்க்கார் அணிந்தது ஜொலிக்கும் உடைகள், பாபா அணிந்தது காவிஉடைகள். இப்போது மாஜிக் கலையில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நடிகர் அலெக்ஸூம் காவிஉடைக்கு மாறினால் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

கடவுளின் இடைத்தரகர்களை கடவுளாக்கும் பக்தி ஒருவனை முட்டாளாக்கும் போது இது போன்ற டுபாகூர்கள் முளைத்துக்கொண்டு தான் இருப்பார்கள். மக்கள் திருந்தாத வரை இவர்களை ஒழிக்கவே முடியாது.

கொசுரு செய்தி:

நித்யானந்தா கும்பமேளாவில் இருப்பதெல்லாம் சுத்தப்பொய் என்கிறார்கள் சில ஊடகவியலாளர்கள். நித்யானந்தா தன்னுடைய ஆத்ம சீடரான ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது இருக்கும் அவருடைய பாதுகாப்பிலே இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

already seen this

23 Response to "சுவாமிஜி “Scandal” நித்யானந்தா"

  1. vasu balaji said...

    கேஸ் மாறினதும் ஸ்டே கிடைச்சதுமே கொஞ்சம் குடைஞ்சது. இப்படி போகுதா மேட்டரு. அப்ப ரைட்டு:)

  2. இராகவன் நைஜிரியா said...

    ஏமாறகின்றவன் இருக்கின்ற வரையில் ஏமாற்றுகின்றவன் இருப்பான்.

    சாமியார்களை நம்பி எவ்வளவுதான் மோசம் போனாலும், திருந்தவே மாட்டாங்கப்பா நம்ம ஆளுங்க.

  3. வால்பையன் said...

    இந்த பதிவுக்கு எதிர் ஓட்டளித்து இன்னும் நித்தியானந்தரின் ப(க்)தர்கள் மாறவில்லை என்று நிறுபித்திருக்கிறார்கள்!

    அவர்கள் மனைவிமார்களை நித்தியானந்தரின் ஆராய்ச்சிக்கு அனுப்புவார்களோ!?

  4. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    //ஒரு விழாவில் கலந்து கொண்ட பகவான், அமைச்சர் துரைமுருகனுக்கு மாயாமாய் வரவழைத்து ஒரு மோதிரம் கொடுத்ததும், உசாரான துரைமுருகன் பாபாவிடம் கலைஞருக்கும் ஒரு மோதிரம் கேட்க பேதியாகிய பகவான் திடீரென சுதாரித்து கலைஞர் கையில் அண்ணா போட்ட மோதிரம் இருக்கிறதே! பின்னர் எதற்கு நான் தரவேண்டும் என அசடுவழிய மழுப்பியதே அவர் செய்வது சித்துவேலை என்பதற்கு உதாரணமாகும்.//
    -நல்ல காமெடி!
    //மாஜிக் கலைஞராக //
    //மாஜிக் கலையில் //
    'முன்னாள் கலைஞராக' என்பதுபோல் ஒரு பொருள் தருகிற்து.
    'மேஜிக் கலைஞராக' என்று போடலாமே?
    விரிவான அலசல்!

  5. K.MURALI said...

    ///வால்பையன் said...

    இந்த பதிவுக்கு எதிர் ஓட்டளித்து இன்னும் நித்தியானந்தரின் ப(க்)தர்கள் மாறவில்லை என்று நிறுபித்திருக்கிறார்கள்!

    ###அவர்கள் மனைவிமார்களை நித்தியானந்தரின் ஆராய்ச்சிக்கு அனுப்புவார்களோ!?###///
    இந்த வார்த்தை ரொம்ப அதிகம்.
    ஆக மைனஸ் ஓட்டு போடுகிறவர்கள் எல்லாம் பொண்டாட்டியை கூட்டி கொடுப்பவர்களா? :(
    மன்னிக்கவும் நீங்கள் எத்தனை முறை அதுபோல் செய்து இருக்கிறீர்கள்.

    பின்குறிப்பு:1.எனக்கு ஓட்டளித்து பழக்கமில்லை.
    2.எனக்கு கடவுளின் இடைதரகர்களிடம் நம்பிக்கையில்லை.
    என்னுடைய பின்னூட்டம் உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

  6. வால்பையன் said...

    @ முரளி

    நாத்திகர் என்று கூறி கொண்டிருந்த சேஷாசலம் இஸ்லாமிராக மாறியதால் நீங்களும் மாறுவீர்களா என கேட்கலாம்!
    ஒருவேளை நான் சேஷாசலத்துக்கு ஆதரவாக பேசினால்!

    இங்கே எதிரொலி நித்தியானந்தனின் குட்டுகளை உடைக்கிறார்! மேலும் மேலும் இதே மாதிரியான ஏமாற்றுகாரர்கள் மக்களை ஏமாற்றுவதை கண்டிக்கிறார், அதற்கு ஒருவர் எதிர் வாக்களித்தார் அதற்கு அர்த்தம் எதிரொலியின் கருத்து எதிர் கருத்து கொண்டுள்ளார்!

    அதாவது சாமியாராக இருப்பது அல்லது சாமியாருக்கு அல்லகையாக இருப்பது, அவருக்கு பணிவிடை செய்வது அல்லது அவரது ஆராய்ச்சிக்கு துணை புரிவது! நித்தியானந்தரின் லேட்டஸ்ட் ஆராய்ச்சி என்னவென்று தெரியும் தானே!

    நான் எதுக்கு புண்பட போகிறேன்! ஆராய்ச்சிக்கு ஆள் அனுப்பியவர்கள் தான் புண்பட்டு மருந்து தடவி கொண்டிருப்பார்கள்!

  7. ஜிஎஸ்ஆர் said...

    நாம் எத்தனை ஆதரங்களோடு மக்களுக்கு எடுத்துரைத்தாளும் அதை உணர்ந்தும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நாளில் அவன் லீலைகள் மறந்து மீண்டும் அவனிடமே ஆசிர்வாதம் வாங்க சென்றுவிடுவார்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

  8. திவ்யாஹரி said...

    //கடவுளின் இடைத்தரகர்களை கடவுளாக்கும் பக்தி ஒருவனை முட்டாளாக்கும் போது இது போன்ற டுபாகூர்கள் முளைத்துக்கொண்டு தான் இருப்பார்கள். மக்கள் திருந்தாத வரை இவர்களை ஒழிக்கவே முடியாது.//

    சரியாய் சொன்னீங்க..

  9. நிஜாம் கான் said...

    @//வால்பையன்//
    @//K.MURALI//

    வால் அண்ணனின் கருத்து கொஞ்சம் கடினமானது தான் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். வால் அண்ணன் சார்பாக மேற்கண்ட அந்த வாசகத்திற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். அதேநேரம் இந்த இடுகைக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிருக்கும் எதிர்ஓட்டுக்கள், எதிர்கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அப்படி எல்லாருமே ஒத்துப்போய் விட்டால் நாட்டில் பிரச்சனையே இருக்காதே! எனவே எதிர்கருத்து உள்ளவர்கள் தாராளமாக மிகச்சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வெளியிட வும், எதிர் ஓட்டுப்போடவும் அவர்களுக்கும் உரிமையுண்டு. நன்றி!

  10. நிஜாம் கான் said...

    @//வானம்பாடிகள் said...

    கேஸ் மாறினதும் ஸ்டே கிடைச்சதுமே கொஞ்சம் குடைஞ்சது. இப்படி போகுதா மேட்டரு. அப்ப ரைட்டு:)//
    அண்ணே! நம் மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து இது போன்றவர்களிடம் கொண்டு போய் கொட்டுவது தான் பரிதாபம்.

  11. நிஜாம் கான் said...

    @//இராகவன் நைஜிரியா said...

    ஏமாறகின்றவன் இருக்கின்ற வரையில் ஏமாற்றுகின்றவன் இருப்பான்.

    சாமியார்களை நம்பி எவ்வளவுதான் மோசம் போனாலும், திருந்தவே மாட்டாங்கப்பா நம்ம ஆளுங்க.//

    அண்ணே! சாமியார்களும் பைனான்ஸ் கம்பெனியும் ஒன்னுதான். அவர்களின் வியாபாரம் தொடந்து கொண்டுதான் இருக்கும்.

  12. நிஜாம் கான் said...

    @//NIZAMUDEEN said...

    //மாஜிக் கலைஞராக //
    //மாஜிக் கலையில் //
    'முன்னாள் கலைஞராக' என்பதுபோல் ஒரு பொருள் தருகிற்து.
    'மேஜிக் கலைஞராக' என்று போடலாமே?
    விரிவான அலசல்!//

    நிச்சயம் அடுத்த இடுகைகளில் இந்த வார்த்தைகளைத் தவிர்த்துக்கொள்கிறேன் நிஜாம். என்ன ரொம்ப நாளா ஆள காணோம்? பிசியா?

  13. நிஜாம் கான் said...

    @//ஜிஎஸ்ஆர் said...

    நாம் எத்தனை ஆதரங்களோடு மக்களுக்கு எடுத்துரைத்தாளும் அதை உணர்ந்தும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நாளில் அவன் லீலைகள் மறந்து மீண்டும் அவனிடமே ஆசிர்வாதம் வாங்க சென்றுவிடுவார்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்//

    முற்றிலும் உண்மை அண்ணா! நம் மக்களை சென்டிமெண்டால் ஏமாற்றுவது மிகச்சுலபம். கருத்துக்கு நன்றி!

  14. நிஜாம் கான் said...

    //திவ்யாஹரி said...
    //கடவுளின் இடைத்தரகர்களை கடவுளாக்கும் பக்தி ஒருவனை முட்டாளாக்கும் போது இது போன்ற டுபாகூர்கள் முளைத்துக்கொண்டு தான் இருப்பார்கள். மக்கள் திருந்தாத வரை இவர்களை ஒழிக்கவே முடியாது.//

    சரியாய் சொன்னீங்க..//

    கருத்துக்கு நன்றி திவ்யாஹரி! தொடர்ந்து இணைந்திருங்கள்

  15. ஷாகுல் said...

    மல்கோத்ராவுடன் உரையாடும் வீடியோவில் ஆசிரம நிலத்தைப் பற்றி கேட்கும் போது அவர் கோபபடுவார் பிறகு அழுவது போல முகம் வைத்திருப்பார். அவர் ஆராய்ச்சி பன்னுனாராம். Ph.D காகா ஆராய்ச்சி பன்னுனா அத வீடியோ எடுத்து வெளிய வுடுறாங்களே?

  16. நிஜாம் கான் said...

    // ஷாகுல் said...

    மல்கோத்ராவுடன் உரையாடும் வீடியோவில் ஆசிரம நிலத்தைப் பற்றி கேட்கும் போது அவர் கோபபடுவார் பிறகு அழுவது போல முகம் வைத்திருப்பார். அவர் ஆராய்ச்சி பன்னுனாராம். Ph.D காகா ஆராய்ச்சி பன்னுனா அத வீடியோ எடுத்து வெளிய வுடுறாங்களே?//

    கருத்துக்கு நன்றி ஷாகுல்! தொடர்ந்து இணைந்திருங்கள்.

  17. சக்திவேல் .சி said...

    mutrum thuranthavar allava athanalthan munthanaiyai thiranthu vittar

  18. சக்திவேல் .சி said...

    முற்றும் துறந்தவர் அல்லவ அதனால் முந்தானையை திறந்துவிட்டார்

  19. உடன்பிறப்பு said...

    கூடிய விரைவில் உங்கள் ஜிமெயில் ஹேக் செய்யப்படலாம் எதற்கும் கவனமாக இருக்கவும்

  20. வால்பையன் said...

    எனக்கும் அந்த தொந்தரவு இருக்கிறது!

    எல்லாம் வல்ல சுவாமிஜி நித்தியானந்தருக்கு எனது பாஸ்வேர்டு தெரியாதா என்ன!?

    ஒரே குஷ்டமப்பா!

  21. நிஜாம் கான் said...

    //சக்திவேல் .சி said...
    முற்றும் துறந்தவர் அல்லவ அதனால் முந்தானையை திறந்துவிட்டார்//

    கருத்துக்கு நன்றி சக்திவேல்! தொடர்ந்து இணைந்திருங்கள்

  22. நிஜாம் கான் said...

    // உடன்பிறப்பு said...
    கூடிய விரைவில் உங்கள் ஜிமெயில் ஹேக் செய்யப்படலாம் எதற்கும் கவனமாக இருக்கவும்//

    அண்ணே! மெயிலத்தான் ஹேக் செய்யலாம். நம்மள ஹேக் செய்ய முடியாதுல‌. இது போனா அடுத்தது.

  23. நிஜாம் கான் said...

    //வால்பையன் said...
    எனக்கும் அந்த தொந்தரவு இருக்கிறது!

    எல்லாம் வல்ல சுவாமிஜி நித்தியானந்தருக்கு எனது பாஸ்வேர்டு தெரியாதா என்ன!?

    ஒரே குஷ்டமப்பா!//

    வாலண்ணனுக்கு சுவாமிஜிகிட்ட யாராவதுஒரு டோக்கன் போடுங்களேன்!

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,