ஒரு இருபத்தைந்தாண்டுகள் பின்னே கொஞ்சம் நினைவுகளைச் சுழற்றலாம்.
தொலைபேசிகள் எங்கள் ஊர் பக்கம் தலைவைக்காத காலம் அது. எங்கள் தொலைதொடர்பை பொருத்தவரை எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு போஸ்ட் ஆபிஸ் மட்டும் தான். அந்த நேரம் தபால் பெட்டிகளும் தபால்காரரும் தான் தகவல் பரிமாற்ற கருவிகள். சிவப்பு பெயிண்ட் அடிக்கப்பட்ட போஸ்ட் பெட்டிகள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கும். அதிலே வெள்ளை எழுத்துக்களில் திறப்பு நேரம் நண்பகல் 11 மணி என ஆரம்பித்து அடுத்தடுத்த ஒவ்வொரு பெட்டிக்கும் 5 நிமிடங்கள் கூடிக்கொண்டே போகும். ஊரின் கடைசிப் பெட்டியில் மதியம் 1.30 என எழுதியிருக்கும். அத்தனை பெட்டிகளிலும் உள்ள தபால்களையெல்லாம் எங்க ஊரு தபால்காரர் பெரிய மூட்டையில் கட்டி தன் சைக்கிளில் வைத்து போஸ்ட் ஆபிஸ் நோக்கி எடுத்துச்செல்வார்.

ஒவ்வொரு பகுதியில் இருந்தும் சேகரிக்கப்பட்ட தபால்கள் கொண்டுவரப்பட்டு மொத்தமாக கொட்டப்படும். பின்னர் ஊர் வாரியாக மாவட்ட வாரியாக தபால்கள் பிரிக்கப்பட்டு தனித்தனி சாக்குப்பைகளில் போட்டுக்கட்டி சீல் வைப்பார்கள். ஒவ்வொரு திசையிலும் செல்லும் பேரூந்துகளில் இந்த மூட்டைகள் ஏற்றிவிடப்படும். இவ்வாறாக நான் பெட்டியில் போட்ட கடிதம் அன்றைக்கு மாலை மாவட்ட தலைநகர் நோக்கி பயணப்படும். அதேபோல அன்றைக்கு மாலை அந்த வழியாக வரும் தனியார் பேரூந்துகள் போஸ்ட் ஆபிஸ் அருகிலே நிறுத்தப்பட்டு எங்கள் ஊருக்கு வந்த மூட்டையை தூக்கி வீசுவார்கள்.அந்த மூட்டைகள் பிரிக்கப்பட்டு நாளைக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்கள் தனித்தனியாக பிரிக்கப்படும்.
நான் எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு ஒரு கடிதம் அனுப்பினால் எங்கள் ஊரில் இருந்து திருச்சி வரை பஸ்ஸில் பயணித்து, பின்னர் ரயிலில் ஏறி சென்னைக்கு செல்லும்.இவ்வாறாக நான் அனுப்பிய கடிதம் ஒவ்வொரு ஊராய் சென்று சேர குறைந்தபட்சம் இரண்டு நாட்களும் அதிகபட்சம் ஒருவாரமும் (தமிழகம் மட்டும்) ஆகிவிடும். சில நேரங்களில் ஒரு மாதம் கூட ஆகலாம். பல நேரங்களில் அது வழிதவறிப் போய்விடும். ஆக ஒரு செய்தியைக் கேட்டு பதில் பெற எனக்கு ஆகிய காலஅளவு குறைந்தபட்சம் 14 நாட்கள் அல்லது 1 மாதம். இதெல்லாம் சாதாரண விசயங்களுக்கு சரி. ஒரு அவசரமாக இருந்தால்? அதுதான் தந்தி சேவை. அந்தக் காலத்தில் தந்தி என்றாலே அது யாராவது செத்துப்போனால் மட்டுமே பயன்படுத்துவது என்று தான் எல்லாரும் தெரிந்து வைத்திருந்தார்கள். நான் அப்போது நாலாம் வகுப்போ,ஐந்தாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்தேன். வெளியூரிலிருந்து எங்கள் பள்ளியில் பணிபுரிந்த எங்கள் வகுப்பு ஆசிரியர் ஒருநாள் என்னை அழைத்தார். என் மீது அவருக்கு நல்ல பிரியம் இருந்தது
" நிஜாம், இந்தா 5 ரூபாய். போஸ்ட் ஆபிசுக்குப் போய் ஒரு தந்தி கொடுத்திட்டு வா"
நான் பதறியடித்துக் கேட்டேன்
"யார் சார் தவறிட்டது"
அவர் முகம் சட்டென மாறியது. கோபமா சிரிப்பா என தெரியவில்லை.
"ஏன்டா தந்தின்னா சாவுக்கு மட்டும் தான் கொடுக்கனுமா? போடா போயி போஸ்ட்மேனுக்கிட்ட 3 அப்டின்னு சொல்லு. 3 ரூபாய் 50 காசு வாங்குவார், இந்தா அட்ரெஸ்" என காசைக் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு போஸ்ட் ஆபிஸ் நோக்கி நடந்தேன். ஒரே குழப்பம். அது என்னடா 3 ? அங்கே ஓரளவு கூட்டம் நின்றது. வரிசையில் நின்று போஸ்ட் மாஸ்டர் அருகில் சென்று 3 என்று சொன்னேன். உடனே அவர் ஒரு பாரத்தை கொடுத்து இதை ஃபில் பண்ணு என்றார். நானும் அனுப்புனர், பெருனர் மட்டும் எழுதி அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி பொருளடக்கம் என்ற இடத்தில் 3 என எழுதி என்னிடம் மீதி சில்லரையைக் கொடுத்தார். நான் அவரிடம்
"சார் 3 ன்னா என்ன?"
"3 ன்னா ஹேப்பி மேரீட் லைப்புன்னு அர்த்தம்"
"அதெப்படி 3 க்கு ஹேப்பி மேரீட் லைப் வரும்"
"அங்க பாரு"
அவர் காட்டிய இடத்தில் அங்கே ஒரு அட்டை கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தது. அதிலே
1. ஸ்டார்ட் இம்மிடியட்லி (Start Immediately)
2..3..4.. என 9 வரை உள்ள எண்களுக்கு ஒவ்வொரு வரி எழுதியிருந்தது. நான் மீண்டும் அவரிடம்
"சார் 3 ன்னு எழுதுறதுக்கு பதிலா ஹேப்பி மேரீட் லைப்புன்னு முழுசா எழுதினா என்ன?"
" அப்படி எழுதுனா ஒரு எழுத்துக்கு 50 பைசா" என்றார்.
ஓஹோ! இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா என ஒரு விசயத்தை தெரிந்துகொண்ட திருப்தியுடன் நடையைக் கட்டினேன்.
(ஹேப்பி மேரீட் லைப் 3ஆம் நம்பரா அல்லது 8ஆம் நம்பரா என்பது சரியாக நினைவுயில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்)
இப்போது நான் கொடுத்த இந்த தந்தி எதிர்முனைக்கு எவ்வாறு போகும்? முன்பு தந்தி மெசின் என்று ஒன்று இருந்ததாம். அதிலே இந்த முனையில் இருப்பவர் நாம் கொடுத்த தகவல்களை வைத்து அதிலே இருக்கும் ஒரு கம்பியைத் தட்டுவாராம். அது ஒரு சங்கேத மொழி என்றார்கள். அது எதிர்திசையில் இருப்பவருக்கும் புரிந்து அதை பேப்பரில் எழுதி தபால்காரரிடம் கொடுத்து அவசரமாக பட்டுவாடா செய்வார்களாம். அதிலே சிலதுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு கல்யாண வாழ்த்துக்களுக்கு பதில் ஸ்டார்ட் இம்மிடியட்லியாகவும் போய்விடுமாம். அதைப்பார்த்து அவசர அவசரமாக கிளம்பிவருபவர்களும் உண்டு. பின்னர் போஸ்ட் ஆபிஸ்கள் தோறும் தொலைபேசிகள் கொண்டுவரப்பட்டன. அப்போது தந்தி சேவை சற்று எளிமையாகப்பட்டது. சரியான தந்தி தகவல்கள் சேர்க்கப்பட்டது. ஆனாலும் முகவரிகள் மாறிவிடும். யாருக்கோ போக வேண்டிய சாவுத்தகவல் யாருக்கோ சென்று விடும். இந்த தொலைதொடர்பு அலட்சியம் அன்றுமுதல் இன்று வரை போஸ்ட் ஆபிஸ்களில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

தொலைபேசிகள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்த போது தந்திகளின் சேவை குறைந்தது. குறைந்த பட்சம் ஒரு ஊரில் ஒரு வீட்டிலாவது தொலைபேசி இருக்க அது ஊருக்கே சேவையானது. PP நம்பர் எனச் சொல்லுவார்கள். அப்போது போஸ்ட் ஆபிஸ் சேவையோடு டெலிபோன் எக்சேஞ்ச் சேவையும் துவக்கப்பட்டது. எங்கள் ஊரில் இருந்து மெட்ராசுக்கு பேச வேண்டுமானால் அதை டிரங்க் கால் என்பார்கள். எங்கள் ஊரில் இருந்து எங்கள் மாவட்ட எக்சேஞ்சுக்கு போன் செய்து மெட்ராஸ் நம்பரைச் சொல்ல வேண்டும். அவர்கள் மெட்ராஸ் எக்சேஞ்சுக்கு போன் செய்து அந்த நம்பரைச் சொல்லுவார்கள். பின்னர் மெட்ராஸ் எக்சேஞ்சினர் அந்த நம்பரைப் பிடித்து வைத்துக் கொண்டு மாவட்டத்திற்கு லிங்க் கொடுப்பார்கள். மாவட்டம் எங்களைத் தொடர்பு கொண்டு பேசச் சொல்லுவார்கள். ஒரு 5 நிமிடம் டிரங்கால் பேச 100 முதல் 150 ரூபாய் வந்துவிடும். தொலைப்பேசிகள் வரத்து அதிகமாக அதிகமாக தபால் நிலையங்களுக்கு வேலையே இல்லாமல் போனது. தினமும் வந்து பெஞ்சி தேய்த்து காபி குடித்து தினமணி பேப்பர் படிப்பது மட்டுமே வேலையாகிப்போனது. 3 ரூபாய் ஸ்டாம்ப் வாங்க 5 ரூபாய் கொடுத்தால் (இப்போதும்) சில்லரை இருக்காது.

அப்போது தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது.எவன்டா கண்டுபுடிச்சான் என புலம்பவைக்கும் வகையில் குபீரென களத்தில் குதித்தது செல்போன்கள். இப்போது அமெரிக்காவையா, அண்டார்டிகாவையா, அமேசான் காடுகளையா எங்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள 5 நொடிகள் போதும். நம் மக்கள் ஒவ்வொருவக்கும் ஒரு நம்பர் உண்டு. ஒவ்வொருவரின் சட்டை பாக்கெட்டுகளும் செயற்கைக் கோளோடு கண்ணுக்குத் தெரியாத கம்பியால் கட்டப்பட்டிருக்கிறது. ஹாலில் டிவி பார்க்கும் கணவன் சமயக்கட்டில் இருக்கும் மனைவியை செல்லில் தொடர்பு கொண்டு காபி கேட்கிறான். சிக்னலில் பிச்சையெடுப்பவர்களும் செல்போன் வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் கோடீஸ்வரர்களும்,ஐ.டியிலும் பெரிய அலுவலகங்களிலும் வேலை செய்பவர்கள் மட்டுமே பயன்படுத்திய இந்த செல்போன் இப்போது விவசாயிகள், பூசாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள்,மீனவர்கள், டிரைவர்கள், கூலிவேலை செய்பவர்கள் என அனைவருக்குமே செல்போன் இப்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
இந்த செல்போன்களின் அபரிமித வளர்ச்சி போஸ்ட் ஆபிஸ்களை இன்னமும் திவாலாக்கியது.பளீர் என சிவப்பாய் மின்னிய தபால் பெட்டிகளை இப்போது எங்கு தேடிலும் கானோம்.இங்கே கொடுக்கும் SMS அடுத்த நொடியில் எதிரிலே டெலிவரியாகி விடுகிறது. அந்த அளவிற்கு வேகமும் துல்லியமும். ஆனால் இப்போது ஒரு வெளிநாட்டு கால் பேச ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 20 ரூபாய் வரை சார்ஜ் செய்யப்படுகிறது. இதோ இப்போது உலகம் சந்திக்க காத்திருக்கும் அடுத்த மாற்றம் VOIP (Voice over Internet Protocol). இப்போது சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மேட்டர் விரைவிலே சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். அப்படி அறிவிக்கப்பட்டு அது புழக்கத்தில் வந்தால் நம் வீட்டு கம்ப்யூட்டர் வழியாக உலகத்தின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ள குறைந்தபட்சம் 10 பைசா தான் செலவு வரும். இது சட்டப்பூர்வமாக்கப்பட்டால் நம்ம ஊரு தொலைதொடர்பு துறை மட்டுமல்ல, உலகத்தின் தொலைதொடர்பு வருமானம் அம்பேலாகிவிடும். இந்த VOIP ஐ சோதிக்கும் முகமாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் தனி செயற்கை செலுத்த பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. சென்போன் வந்து லேண்ட்லைனுக்கு மூடுவிழா நடத்தியது. VOIP வந்து விட்டால் போதும் செல்போனுக்கு மட்டுமல்ல உலக தொலைதொடர்பு துறையின் வருமானத்திற்கும் சேர்த்து மூடுவிழா நடத்திவிடும்.
மனிதன் இவ்வளவு அறிவு சாதனங்களையும் தன் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஆன்மீகம் என்று வரும்போது மட்டும் அறிவைப் பயன்படுத்துவதை மறந்துவிடுகிறான். இந்த தொலைதொடப்பு மாற்றங்கள் போலவே கடவுளைத் தொடர்புகொள்ள வழிகாட்டும் போலித்தரகர்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்வதை கண்கூடாகக் காணமுடிகிறது. ஒரு SMS எவ்வாறு எதிர்முனையில் டெலிவரி ஆகிறது என சிந்திக்கும் மனிதன், தன் போன்ற ஒரு மனிதன் தன்னை கடவுள் என்று சொன்னால் அதை துளியும் சிந்திக்காமல் அவனை கும்பிட ஆரம்பிக்கிறான். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே எந்த ஒரு தடையும் இல்லை. கடவுளைத் தொடர்புகொள்வதற்கு தன் மனம் என்ற சாதனம் தவிர வேறு எதுவுமே தேவையில்லை என நினைத்தால் போதும் போலிகள் தானே ஒழிந்துவிடுவார்கள்.


பழைய நினைவுகளும் புது மாற்றங்களும்.
முன்பு தந்தி என்றாலே துக்க செய்திதான் இல்ல:(
புதிய மாற்றங்களால் பல நேரம் நன்மை பலநேரம் தீமை..
அருமையான விளக்கத்துடன் கூடிய கட்டுரை நிஜாம்..
நேரம்கிடைக்கும்போது என்னுடைய ”இனியபாதையில்” பார்க்கவும் http://fmalikka.blogspot.com
பழைய விடயத்தை ஞாபகப்படுத்தினீர்கள். தந்திக்காரரைக் கண்ட உடனே அழுதவர்களைக் கூடக் கண்டுள்ளேன். அப்போ வந்தது. துக்க செய்தியே!
இந்த 3 விடயம்- புதிய அரிய தகவல்; சொல்லுக்குக் குறிப்பிட்ட காசு என்பதே இலங்கையிலும் இருந்தது.
இப்போ எங்கும் தொலைத் தொடர்பு வளர்ந்துள்ளது;அதனால் கடிதம் எழுதும் பழக்கமே முற்றாக
அன்றுப்போய் விட்டதோ எனும் நிலையாகியுள்ளது.தந்தி இல்லை எனலாம்.
கடைசியில் கடவுள் விடயத்தில் ஏமாறும் நம் மனிதர் பற்றிய முத்தாய்பு அருமை.
இதில் இருந்து விடுதலையாகனாலே உண்மையான முன்னேற்றம்.
அருமையான விவரங்களோடு அழகான பதிவு.தபால்துறை முடங்க முக்கிய காரணமான தனியார் கொரியர் சர்வீஸ் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
//ராஜ நடராஜன் said...
பழைய நினைவுகளும் புது மாற்றங்களும்.//
நிச்சயமாக சார்!
// முன்பு தந்தி என்றாலே துக்க செய்திதான் இல்ல:(//
ஆமாம். அதுவும் கிராமப்புறங்களுக்கு சொல்லவே வேண்டாம். கருத்துக்கு நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்.
//அன்புடன் மலிக்கா said...
புதிய மாற்றங்களால் பல நேரம் நன்மை பலநேரம் தீமை..
அருமையான விளக்கத்துடன் கூடிய கட்டுரை நிஜாம்..
நேரம்கிடைக்கும்போது என்னுடைய ”இனியபாதையில்” பார்க்கவும் http://fmalikka.blogspot.com
//
நன்றி மலிக்கா! பார்த்தேன் . அட்னென்சும் போட்டுவிட்டேன்.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பழைய விடயத்தை ஞாபகப்படுத்தினீர்கள். தந்திக்காரரைக் கண்ட உடனே அழுதவர்களைக் கூடக் கண்டுள்ளேன். அப்போ வந்தது. துக்க செய்தியே!
இந்த 3 விடயம்- புதிய அரிய தகவல்; சொல்லுக்குக் குறிப்பிட்ட காசு என்பதே இலங்கையிலும் இருந்தது.
இப்போ எங்கும் தொலைத் தொடர்பு வளர்ந்துள்ளது;அதனால் கடிதம் எழுதும் பழக்கமே முற்றாக
அன்றுப்போய் விட்டதோ எனும் நிலையாகியுள்ளது.தந்தி இல்லை எனலாம்.
கடைசியில் கடவுள் விடயத்தில் ஏமாறும் நம் மனிதர் பற்றிய முத்தாய்பு அருமை.
இதில் இருந்து விடுதலையாகனாலே உண்மையான முன்னேற்றம்.//
நன்றி யோகன். இந்த 3ஆம் நம்பர் விசயம் இன்னும் நம்மில் பலருக்குத் தெரியவாய்ப்பு இல்லை. நிச்சயம் விரைவில் முன்னேற்றம் பெறும்.
//துபாய் ராஜா said...
அருமையான விவரங்களோடு அழகான பதிவு.தபால்துறை முடங்க முக்கிய காரணமான தனியார் கொரியர் சர்வீஸ் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.//
கொரியரை நான் மறந்தேவிட்டேன் ராஜா. நினைவுபடுத்தியதற்கு நன்றி! செய்திகளே இல்லை என காத்து வாங்குதே என்று அவசர நினைவில் எழுதியதால் விடுபட்டு விட்டது. நன்றி ராஜா. தொடர்ந்து வாங்க
//நம் மக்கள் ஒவ்வொருவக்கும் ஒரு நம்பர் உண்டு. ஒவ்வொருவரின் சட்டை பாக்கெட்டுகளும் செயற்கைக் கோளோடு கண்ணுக்குத் தெரியாத கம்பியால் கட்டப்பட்டிருக்கிறது. //
எவ்வளவு கடினமான விஷயத்தை
இவ்வளவு சிம்பிளாகச் சொல்லி
விட்டீர்களே! இன்னும், கம்ப்யூட்டரில்
கண்டு பேசுவது பற்றி, (பேசிக் கொண்டே
பார்ப்பது பற்றி) எக்ஸ்ட்ரா ஒரு வரி
சேர்த்திருக்கலாம்.
அண்ணே இந்த் வாய்ப் கால் இல்லை என்றால் எங்க மாதிரி ஆளுங்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
அது இருப்பதால் தான் நானெல்லாம் கொஞ்சமாகவேணும் நம்ம ஆளுங்க கூட பேச முடியுதுங்க..
இங்க செல்போன் சார்ஜ் ரொம்ப ஜாஸ்திங்க ..
இப்படிக்கு நிஜாம்.., said...
//NIZAMUDEEN said...
//நம் மக்கள் ஒவ்வொருவக்கும் ஒரு நம்பர் உண்டு. ஒவ்வொருவரின் சட்டை பாக்கெட்டுகளும் செயற்கைக் கோளோடு கண்ணுக்குத் தெரியாத கம்பியால் கட்டப்பட்டிருக்கிறது. //
எவ்வளவு கடினமான விஷயத்தை
இவ்வளவு சிம்பிளாகச் சொல்லி
விட்டீர்களே! இன்னும், கம்ப்யூட்டரில்
கண்டு பேசுவது பற்றி, (பேசிக் கொண்டே
பார்ப்பது பற்றி) எக்ஸ்ட்ரா ஒரு வரி
சேர்த்திருக்கலாம்.//
வாங்கண்ணே! VOIP ல் அதுவும் ஒரு வகை தான்.
//இராகவன் நைஜிரியா said...
அண்ணே இந்த் வாய்ப் கால் இல்லை என்றால் எங்க மாதிரி ஆளுங்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
அது இருப்பதால் தான் நானெல்லாம் கொஞ்சமாகவேணும் நம்ம ஆளுங்க கூட பேச முடியுதுங்க..
இங்க செல்போன் சார்ஜ் ரொம்ப ஜாஸ்திங்க ..//
நிச்சயமா அண்ணே! அது விரைவில் சட்டப்பூர்வமாயிடும்.
எங்கியோ ஆரம்பிச்சி எங்கியோ கொண்டு வந்து முடிச்சிட்டீங்க!
கடைசில இப்பிடி முடிப்பீங்கனு நான் எதிர்பாக்கல. :)))))))
எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? VOIP சட்ட பூர்வமா கிடைக்க ஆரம்பித்து ஒரு மாமாங்கம் ஆகிறது! உதாரணமாக TATA Indicom ல் நிமிடத்துக்கு 1 ரூபாயில் உலகில் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். Sify தனி பூத்களே நிறுவியுள்ளது.
வாழ்த்துத் தந்திகளுக்குத்தான் எண்கள் உண்டு. Start immediatelyக்கெல்லாம் கிடையாது!
// என்.ஆர்.சிபி said...
எங்கியோ ஆரம்பிச்சி எங்கியோ கொண்டு வந்து முடிச்சிட்டீங்க!//
நன்றி என்.ஆர்.சிபி. தொடர்ந்து இணைந்திருங்கள்
//ஷாகுல் said...
கடைசில இப்பிடி முடிப்பீங்கனு நான் எதிர்பாக்கல. :)))))))//
நன்றி சாகுல்! தொடந்து வாங்க
// சரவணன் said...
எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? VOIP சட்ட பூர்வமா கிடைக்க ஆரம்பித்து ஒரு மாமாங்கம் ஆகிறது! உதாரணமாக TATA Indicom ல் நிமிடத்துக்கு 1 ரூபாயில் உலகில் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். Sify தனி பூத்களே நிறுவியுள்ளது.
வாழ்த்துத் தந்திகளுக்குத்தான் எண்கள் உண்டு. Start immediatelyக்கெல்லாம் கிடையாது!//
நண்பர் திரு சரவணன் நீங்கள் VOIP சட்டப்பூர்வமாகி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது என சொல்கிறீர்கள். டாடா இன்டிகாம் வந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டதா என எனக்குத் தெரியவில்லை. இந்த வாய்ஸ் புரோட்டோ கால்கள் இன்றைக்கும் சட்டவிரோதமாகத்தான் பயன்படுத்தப் படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை. நீங்கள் சொல்வது போல 1 ரூபாய்க்கு ஐஎஸ்டி கால் என்றால் பிஎஸ் என் எல் எப்பவோ படுத்திருக்கும். நான் இங்கே குறிப்பிடும் வாய்ஸ் கால்கள் PC to Phone.
உதாரணமாக ஜம்ப்லோ,வாய்ஸ்கால்,பிரீகால்,கேஎஸ்ஏ போன் என ஏகப்பட்ட நிறுவனங்கள் சட்டவிரோதமாகத்தான் இயங்குகின்றன. அதை சட்டப்பூர்வமாக்கினால் 10பைசா அளவிற்கு கொண்டுவரலாம் என்பது தான் இந்த இடுகையில் சாராம்சம். சட்டப்பூர்வமாக இயங்குவதாக நீங்கள் சொல்லும் Voice Protocol குறித்து நான் சொல்லவில்லை. யாராவது வளைகுடா,ஐரோப்பிய வாசகர்கள் மேற்கண்டவை பற்றி திரு சரவணனுக்கு தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !
//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !//
நன்றி திரு.சங்கர்,.தொடர்ந்து இணைந்திருங்கள்