நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் இருக்கும் மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூடிய மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் திடீரென்று மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது சரமாரியாக கல் எறிந்தனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த கடுமையான கல்வீச்சின் காரணமாக மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தின் மேற்புற கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. அலுவலகத்தின் முதல்தளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. சில ஊழியர்கள் காயம் அடைந்தனர். தாக்குதல்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சிலர் உள்ளே நுழையும் முயற்சியில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஓரளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே உள்ளே நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்வாறு தடுக்கப்படாமல் இருந்திருந்தால் பெரிய விபரீதங்கள் நடந்திருக்கும்.

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போய்விட்ட தோழர் உ.ரா. வரதராசன் அவர்கள் போரூர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் எழுதியதாகக் கூறப்படும் இரண்டு கடிதங்கள் கட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த செய்தியை எல்லா பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பு செய்தன. மற்ற தொலைக்காட்சிகள் இந்த செய்தியை தற்கொலை என குறிப்பிடாமல் மரணம் என்ற ரீதியில் செய்தி ஒளிபரப்பின. ஆனால் மக்கள் தொலைக்காட்சி மட்டும் தற்கொலை என தலைப்புச் செய்தி போட்டு ஒளிபரப்பியது. காவல்துறையினரும் இது தற்கொலை என்ற ரீதியிலேயே தங்கள் விசாரனையைத் தொடங்கினார்கள். இதற்கு வலுசேர்க்கும் விதமாக கம்னியூஸ்டு கட்சியினரும் பேசிவந்தனர். அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை ஆதாரமாகவும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோழர் உரா அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.
இந்த அறிக்கையில் தோழர் உரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கபட்டிருந்தது. தோழர் உராவின் கழுத்தில் வட்டவடிவில் இரத்தம் கட்டி இருந்தாதாலும், அவரின் மூச்சுக்குழாய் நசுங்கி இருந்ததாலும், யாரோ அவரின் கழுத்தை கயிற்றால் இருக்கி கொலை செய்திருக்கலாம் என அந்த அறிக்கை தெரிவித்தது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. அனைத்துச் சேனல்களும் இதை செய்தியாக வெளியிட மக்கள் தொலைக்காட்சி மட்டும் அத்தோடு சேர்த்து இன்னொன்றையும் சொன்னது. அதாவது கட்சித்தலைமையில் இருந்து அடுத்த மாநிலச் செயலாளர் பதவிக்கு விரைவில் தோழர் உரா அவர்கள் பரிந்துரை செய்யப்பட இருந்ததாகவும், அந்த பதவியின் மீது ஆசை கொண்ட யாரோ தான் அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிட்டது. ஆனால் கட்சித் தலைமை இதை மறுத்தது. அவர் தற்கொலை தான் செய்துகொண்டார் என மீண்டும் தங்கள் கருத்தை உறுதிப்படுத்தியது. மக்கள் தொலைக்காட்சியின் இந்த செயலால் கட்சித்தொண்டர்கள் வெகுண்டெழுந்தார்கள். மக்கள் தொலைக்காட்சி தங்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி அதை எதிர்த்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கிளம்பிய தொண்டர்கள் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தை சூறையாடிவிட்டார்கள்.

இந்த நிலையில் மக்கள் செய்திகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று வெளியாகிய ஜூனியர் விகடனில் "உள்ளத்திலும் காயம் கழுத்திலும் காயம்" என்ற தலைப்பில் இதுகுறித்த ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியானது. அவர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள் தோழர் உரா அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகத்தை உறுதிப்புத்துகிறது. இது குறித்து நேற்றைய ஜூனியர் விகடனில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள்
1) தோழர் உரா அவர்களின் கழுத்தில் கயிற்றால் இறுக்கியதற்கான ரத்தக்கட்டு காயம் வந்தது எப்படி?
2) தான் இறந்த பிறகு தன் உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்குத் தரவேண்டும் என கடிதம் எழுதி வைத்தவர் எவ்வாறு தற்கொலை களமாக தண்ணீரைத் தேர்ந்தெடுப்பார்? தண்ணீரில் மூழ்கி இறப்பவரின் உடல் அழுகும் நிலை ஏற்பட்டு எதற்குமே பயன்படாமல் போய்விடும் என்பது தோழர் உராவிற்கு தெரியாதா?
3) நன்கு நீச்சல் தெரிந்த தோழர் உரா எவ்வாறு நீரில் மூழ்கி இறந்தார்? அதுமட்டுமின்றி உராவுக்கு நீச்சல் தெரியாது என்றும், அவர் ஏரியில் மூழ்கி இறந்துவிட்டார் என்றும் அவரது குடும்பத்தினர் சொல்லிவருவது ஏன்?
4)அவர் எழுதியதாக கூறப்படும் இரண்டு கடிதங்களையும் 12 ஆம் தேதியே கட்சியினரிடம் ஒப்படைத்து விட்ட பிறகு அவர்கள் காவல்துறையில் அதை கொடுப்பதற்கு ஏன் தாமதப்படுத்தினார்கள்?
5)மிக முக்கியமாக தோழர் உரா அவர்கள் எங்கு சென்றாலும் சட்டை அணியாமல் செல்லவே மாட்டார். அவ்வாறு இருக்கையில் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடலில் வெறும் பனியன் மட்டுமே இருந்தது எப்படி?
என தோழர் உரா அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் திரு.ராஜேந்திரன் இது குறித்த இரண்டு அறிக்கைகளும் கிடைத்த பிறகே விசாரணை துவக்கப்படும் என தெரிவித்தார்.

மக்கள் செய்திகள் வெளியிட்ட அதேபோன்றதொரு செய்தியைத் தான் ஜூனியர் விகடனும் வெளியிட்டுள்ளது. அதிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் மக்கள் செய்திகளில் இவ்வளவு தெளிவாக எடுத்துக்காட்டிய ஆதரங்களை கட்சியினர் மறுத்து அறிக்கை விட்டதும், அத்தோடு தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதும் மற்றவர்களுக்கு இந்த செய்திகுறித்த சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக அமைந்துவிட்டது.ஆக ஊடங்கள் யூகங்களின் அடிப்படையில் இல்லாமல் சில சந்தேகங்களை வெளியிடும் போது அல்லது ஆதாரப்பூர்வமான செய்திகளை வெளியிடும் போது சம்பந்தப்பட்டவர்கள் அதை ஜனநாயக ரீதியாக சட்ட ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அறவழியில் போராட்டங்கள் செய்யும் கம்னியூஸ்டு கட்சியினர் அந்த மரபை அறவே மீறி மக்கள் அலுவலகம் மீது நேற்றைக்கு நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அவர்களிடமும் பத்திரிகை இருக்கிறது. அவர்களும் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகத் தான் இருக்கிறார்கள். அவர்களும் ஊடகவியலாளர்களே! அவர்களுக்கும் இதே போன்ற ஒரு தாக்குதலை யாராவது நடத்தினால் அதுதான் சரி என ஒப்புக்கொள்வார்களா என தெரியவில்லை.


தமிழகத்தில் மீண்டும் ஒரு வன்முறைக் கலாச்சார கல்லின் கட்டடம் வலுவடைவதற்கு எனது கண்டனங்கள்.
இதெல்லாம் நல்லதற்கில்லை. இவர்களுக்குத் தேவையான போது ஊடகங்கள் தேவை. பாதகமென்றால் வன்முறையா?
வானம்பாடிகள் said...
இதெல்லாம் நல்லதற்கில்லை. இவர்களுக்குத் தேவையான போது ஊடகங்கள் தேவை. பாதகமென்றால் வன்முறையா?
March 7, 2010 6:20 PM
//
இதுதான் என் கருத்தும்
நம்மவர்களின் கொள்கையே இதுதானே,உண்மையை ஒத்துக் கொள்வதில்லை
//ராஜ நடராஜன்//
//வானம்பாடிகள்//
//தியாவின் பேனா //
//உருத்திரா //
// RAJA//
அன்பான கருத்துக்கு நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்..